வலதுசாரி அமைப்புகள் என்னைக் குறி வைத்து தாக்கியபோது இந்திய அரசியல் தலைவர்கள் , அறிவுஜீவிகள் மற்றும் கலைஞர்கள் மவுனம் காத்தார்கள் என்று மனமொடிந்த வேதனையோடு பிரபல ஓவியர் எம்.எப். ஹுசேன் கூறினார்.
சர்வதேசப் புகழ்பெற்ற 95 வயது ஓவியர் எம்.எப். ஹுசேன் கத்தார் அரசு அளித்த குடியுரிமையை ஏற்றுக் கொண்டார். இந்திய குடியுரிமையை அவர் துறக்கவுள்ளார். அவருடைய ஓவியங்களில் இந்துக் கடவுள்களை அவர் அவமானப்படுத்தினார் என்று இந்து மதவெறி அமைப்புகள் அவர் மீது தாக்குதல் தொடுத்தன. அவருடைய கண்காட்சிகளை நாசப்படுத்தினர். அவர் மீது பல நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்தனர். இதனால் அவர் நாட்டைவிட்டு வெளியேறி கத்தாரிலும் , இங்கிலாந்திலும் மாறிமாறி வாழ்ந்து வருகிறார்.
கேரளாவை மையமாகக் கொண்டு செயல்படும் ‘கல்ப் மத்யமாம்’ இதழின் டோகா பதிப்புக்கு ஹுசேன் பேட்டியளித்தார். “நான் இந்தியாவை இன்னும் நேசிக்கிறேன். ஆனால்இ இந்தியா என்னை விரும்பவில்லை. வேதனை நிறைந்த மனதோடு இதை நான் கூறுகிறேன்” என்றுஅவர் பேட்டியில் கூறியுள்ளார். கத்தார் குடியுரிமையை ஏற்றுக் கொண்ட பின் ஹுசேன் அளிக்கும் முதல் பேட்டி இது.
சங்பரிவாரங்கள் என் னைத்தாக்கிய போது அனைவரும் மவுனம் காத்தார்கள். எனக்காகப் பேச யாரும் முன்வரவில்லை. இந்திய மக்களில் 90 சதவீதம் பேர் என்னை நேசிக்கிறார்கள் என்பதை அறிவேன். சில அரசியல்வாதிகள் உள்ளிட்ட 10 சதவீதம் பேர் என்னை வெறுக்கிறார்கள் என்று அவர் கூறினார்.
இந்தியாவை ஆண்ட அரசுகள் என்னைக் காக்கவில்லை என்று அவர் கூறினார். நான் வெளிநாட்டில் தஞ்சம் கொண்டபோது யாரும் என்னை அழைக்கவில்லை. இப்போது ஒரு நாடு குடியுரிமை கொடுத்தவுடன் திரும்ப வருமாறு அழைக்கிறார்கள். என்னைப் பாதுகாக்க மறுத்த அரசியல் தலைமையை நான் எப்படி நம்புவது. இந்தியாவில் எனக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்ற உத்தரவாதம் உண்டா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
கடந்த மே மாதம் வந்த ஒரு செய்தியின் படி ஓவியர் பத்மஸ்ரீ எம்.எப்.ஹுசேன் வாழ்க்கை திரைப்படமாககிறதாகவும், அவரது மகன் ஓவாய்ஸ் இத்திரைப்படத்தை தயாரிப்பதாகவும், தன் தந்தை வேடத்தில் நடிக்க பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனை தேர்ந்தெடுத்திருக்கிறார் என்றும், இசை அமைக்க ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவுக்கு சந்தோஷ் சிவன் எனவும் அறியப்படுகிறது.
தொண்ணூறு வயதிற்கு மேலும் இன்னும் சுறுசுறுப்பாக, படங்கள் வரையும் ஹுசேனின் ஓவியங்கள் மட்டுமே அவருக்கு கோடிக் கணக்கான ரூபாய்களை சம்பாதித்துக் கொடுக்கின்ற நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் அவர் தனது 94வது பிறந்த நாளைக் (September 17, 1915) கொண்டாடிய அன்றைய தினம் நியூயார்க்கில் உள்ள சோத்பி ஏல மையத்தில் அவருடைய ஓவியம் ஏலத்திற்கு விடப்பட்டது, முதலில் குறைந்த விலையே நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஏலம் நடந்த மையத்திற்கு ஹூசேன் சென்ற பின்னர் ஏலத் தொகை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே போய், இறுதியில் ரூ. 1.6 கோடிக்கு அவருடைய படைப்பு ஏலம் போனது
இதே நேரம் இப்படியான விமர்சனங்களும் வருகின்றன,
“எல்லாருக்கும் முதலமைச்சரான கருணாநிதி ஏன் இந்து மதம் பற்றி மட்டும் விமரிசிக்கிறார் என்றால் அது அவருடைய மதம் என்று முட்டாள்தனமாக வாதிடுவார்கள், ஆனால் ஹுசேன் எதற்காக தன்னுடைய மதத்தை விட்டு பிறர் மத கடவுளை பற்றி இவ்வாறு படம் வரைய வேண்டும். இவர் மதத்தில் கடவுள் கிடையாதா, இருந்தால் அதை வரைந்து அவர் மதத் தலைவர்கள் பாராட்டை பெறலாமே!”
” இயற்கையில் பறவைகள்தான் ஆடை அணிந்துள்ளன. அவையும் பிறக்கும் பொது நிர்வாணமாகவே பிறக்கின்றன .மனிதன் மட்டும்தான் நிர்வாணத்தை ப்பற்றி அதிகம் கவலைப்படுகிறான். நிர்வாணம் மனதில் மட்டுமே!”
“ஆனால், கோடானுகோடி மக்களால் பக்தியுடன் பூஜிக்கப்படும் ஒரு மதத் தெய்வங்களை நிர்வாணமாக வரைந்தால், அது அவமதிப்பு & காயப்படுத்துதல் ஆகாதா நண்பரே. இதே ஹுசேனின் மனைவியையோ, மகளையோ மற்றொரு ஓவியர் நிர்வாணமாக வரைந்தால், இப்படியே இம்மனிதரும் ரசிப்பாரா? உண்மையில், இம்மனிதரின் குணத்துக்குத்தான் மதவெறி என்பது. வேற்று மத தெய்வங்களை இப்படி வரைந்துத்தான் பார்க்கட்டுமே. அடுத்த நிமிடம், இவரது தலை உடலுடன் ஒட்டியிருக்காது என்பது அனைவரும் அறிந்த உண்மை”…..இப்படியும் விமர்சிக்கிறார்கள்.
“எம்.எஃப். ஹுசைன் அவர்கள் தாராளமாக எந்த ஓவியங்கள் வேண்டுமானாலும் வரையலாம். அவரைத் தடுக்க யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது. நிற்க…… இந்துக்கள் புனிதமாகக் கருதும் பாரத மாதாவை நிர்வாணமாக்கும் சுதந்திரம் இந்து மதத்தில் உண்டு என்று அவர் கூறுகிறார். என் மதத்தில் சுதந்திரம் அதிகம் என்று அவர் கூறுவது எனக்கு சந்தோஷமே. ஆனால், இதே முஸ்லீம்கள் புனிதமாகக் கருதும் முஹம்மதை படமாக வரையக்கூட சுதந்திரம் அம்மதத்தில் இல்லை என்பதை ஏன் வெளிப்படையாக ஹுசைன் அவர்கள் ஒத்துக்கொள்வதில்லை ? இக்கேள்விக்கான விடையை அவரிடம் கேட்டாலும் நாங்களெல்லாம் இந்து தாலிபான்கள் ஆகிவிடுகிறோம் என்பது தான் இன்றைய நிலை”
“ Nothing is bad in being creative but the artists should not go for such artwork, which may hurt the sentiments of a segment of the society”
இப்படியும் தமது ஆதங்கங்களை வெளிப்படுத்துகிறார்கள்.
ஓவியர் எம்.எப்.ஹுசேனைப் பற்றி மறக்க முடியாத இரு விஷயங்கள்… இந்தி நடிகை மாதுரி தீட்சத்திற்கு பரம ரசிகரான இவர், அவரை வைத்து படமெடுத்திருக்கிறார். கோடிக் கணக்கில் சம்பாதிக்கும் இவர், 20 ஆண்டுகளுக்கு மேலாக கால்களில் செருப்பு, ஷூ அணிவதில்லை.
– அலெக்ஸ் இரவி
மேலும் அறிய:
Mother India
In February 6, 2006 issue, India Today, a national English weekly published an advertisement titled “Art For Mission Kashmir”. This advertisement contains a painting of Bharatmata (Mother India) as a nude woman posed across a map of India with the names of Indian States on various parts of her body. The exhibition was organised by Nafisa Ali of Action India (NGO) and Apparao Art Gallery.[25]
Organizations like Hindu Jagruti Samiti and Vishva Hindu Parishad (VHP) have protested persistently against Husain displaying the painting on the websites and even in exhibitions in north Europe. As a result, on February 7, 2006 Husain apologised and promised to withdraw the painting from an auction.[26][27]
The painting later appeared on Husain’s official website.
http://en.wikipedia.org/wiki/M._F._Husain
http://www.iloveindia.com/indian-heroes/mf-husain.html
இந்து மதம் என்றால் எவரும் எதையும் செய்யலாம் என இந்திய் ஜனயாக மரபையே அவமதித் ஓவியர் அவர் எத்தனை சிறந்த் ஒவியராக இருந்தாலும் பண்பில்லை எனில் சிறப்பை பெற முடியாது.