இந்திய அரசாங்கம் இலங்கைப் படையினருக்கு தொடர்ச்சியாக பயிற்சிகளை வழங்கும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சீனா அல்லது வேறு நாடுகளில் படையினருக்கு பயிற்சி அளிக்கும் திட்டம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சீனாவை விடவும் இந்தியா மீது இலங்கையின் பார்வை விசாலமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் தமிழகத்தில் இலங்கையர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வருத்தமளித்த போதிலும், இந்தியாவையோ அந்நாட்டு மக்களையோ இலங்கையர்கள் எதிர்க்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுதந்திரத்திற்கு பின்னர் இந்தியா அல்லது பாகிஸ்தானிலேயே படையினருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா இலங்கைப் படையினருக்கு தொடர்ச்சியாக பயிற்சிகளை வழங்கும் என்பதில் திடமான நம்பிக்கைக் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
வீங்கிப்பெருத்து வல்லரசாகப்போகும் இந்தியாவுக்கு கீழே சூம்பிசுருங்கி இலங்கை இருந்தால் இந்தியாவுக்குதானே கேவலம்