இந்தியாவில் இனப்படுகொலை நடக்க இருப்பதற்கான சூழல் நிலவுவதாக அமெரிக்காவில் இருந்து செயல்படும் இனப்படுகொலை கண்காணிப்பகத்தின் நிறுவனர் கிரோகரி ஸ்டேன்டன் தெரிவித்துள்ளார்.
புகழ் பெற்ற இந்திய ஊடகவியலாளர் கரன் தாப்பருடன் அவர் நடத்திய உரையாடலினூடாக இந்த தகவல் வெளியாகி உள்ளது.
சில வாரங்களுக்கு முன்னர் இனப்படுகொலை கண்காணிப்பக மையத்தின் நிறுவனம் ஸ்டான்டன் அமெரிக்க காங்கிரஸுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். “இந்தியாவில் இனப்படுகொலை நடப்பதற்கான சூழல் நிலவுவதால் இந்திய பிரதமர் மோடியை எச்சரிக்கும் விதமாக அமெரிக்க காங்கிரசில் தீர்மானம் நிறைவேற்றலாம்” என்று எழுதுகிறார். அதன் பின்னரே கரன் தாப்பர் இது தொடர்பான நேர்காணலை தி வயர் டிஜிட்டல் தளத்திற்காக செய்கிறார்.
இந்தியாவில் இனப்படுகொலை நடக்கலாம் என சுட்டிக்காட்டியிருக்கும் கிரோகரி ஸ்டான்டன் இதற்கு முன்னர் ருவாண்டா அதிபரையும் எச்சரித்தார். ஆனால் அவரது எச்சரிக்கையை ருவாண்டா அதிபர் புறந்தள்ளிய நிலையில் ஐந்து ஆண்டுகள் கழித்து 80 ஆயிரம் துட்சி இன மக்கள் கூட்டுக்களால் இனப்படுகொலைக்கு உள்ளானார்கள். அதில் தீவிரமாக பணியாற்றியவர் கிரோகரி ஸ்டான்டன். அவர் இந்தியாவில் இனப்படுகொலை நடப்பதற்கான பல காரணிகளை சுட்டிக்காட்டுகிறார்.
அறிகுறி-1 குடிமக்களை வேறுபடுத்திப் பார்ப்பது. குடிமக்களை நாம் அவர்கள் என்று பிரிப்பது. நாம் என்பது இந்துக்களையும் அவர்கள் என்பது முஸ்லீம், கிறிஸ்தவர்களையும் குறிப்பது.
அறிகுறி -2 அடையாளப்படுத்துவது முஸ்லீகள் என்றால் ஜிகாதிகள், திவீரவாதிகள், பயங்கரவாதிகள், லவ்ஜிகாத் செய்கிறவர்கள், கிறிஸ்தவர்கள் என்றால் மதமாற்றம் செய்கிறவர்கள் என அடையாளப்படுத்துவது.
அறிகுறி -3 பாகுபாடு காட்டுவது குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இருந்து முஸ்லீம்களை விலக்கி வைப்பது. வாக்காளர்களை தூய்மைப்படுத்தும் பெயரால் சிறுபான்மை மக்களின் வாக்களிக்கும் உரிமையின் மீது சந்தேகத்தை உருவாக்குவது.
அறிகுறி -4 மக்களை திரட்டுவது இந்துக்களின் எதிரி முஸ்லீம், இந்து மதத்திற்கும், இந்துக்களுக்கும் முஸ்லீம்களால் ஆபத்து என இந்துக்களை திரட்டுவது.
அறிகுறி- 5 போலிச் செய்திகள்
சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக போலிச் செய்திகளை பரப்புவது.
என பல விஷயங்களையும் சுட்டிக்காட்டுகிறார். சமீபத்தில் ஹரித்துவாரில் தர்ம சன்சாத் நிர்வாகி யதி நரசிங்கானந்த் சிறுபான்மை மக்களை அழித்தொழிப்பது தொடர்பாக உறுதி மொழி ஏற்றுக் கொண்டது. உட்பட பல நிகழ்ச்சிகளை சுட்டிக்காட்டி இப்படி ஒரு குற்றச்சாட்டு கூறப்படுகிறா என கரன் தாப்பர் கிரோகரியிடம் கேட்ட போது அவர் ஆணித்தரமாக அதை மறுத்தவர்.
20 ஆண்டுகள் இந்தியாவின் போக்கை தீர்மானித்த பின்னர் எச்சரிக்கும் நோக்குடன் இதை சொல்வதாகச் சொல்கிறார் கிரோகரி ஸ்டான்டன். குஜராத் இனப்படுகொலை முதல் இன்றைய தாக்குதல்கள் . அரசின் அணுகுமுறை உட்பட பலவற்றையும் கணக்கில் கொண்டே இதை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.