இந்தியாவை எத்தனை முறைதான் உடைப்பீர்கள் என்று மத்திய அரசின் புதுப் பிக்கப்படும் எரிசக்தி அமைச்சர் பரூக் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
தெலுங்கானாவில் டிஆர்எஸ் கட்சி நடத்திய வன்முறைப்போராட்டங் களுக்கு அடிபணிந்த மத்திய அரசு தெலுங்கானா மாநிலம் அமைக்கச் சம்மதித்தது. அதையடுத்து ஆந்திர சட்டமன்றத்தில் மாநிலத்தைப் பிரிப்பது குறித்து தீர் மானம் நிறைவேற்ற வேண்டும்.
நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பரூக் அப்துல்லா பேசியபோது இக்கேள்வியை எழுப்பினார். சிறு மாநிலங்கள் அமைவதை நான் எதிர்ப்பவன்; இப்போதும் எதிர்க்கிறேன் என்று அவர் கூறினார். தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு அளித்த ஒப்புதல்கள் பல மாநிலங்களில் பிரி வினை ஆதாரங்களை உசுப்பி விட்டுள்ளது.
மேற்குவங்கத்தில் இருந்து கூர்க்காலாந்து மாநிலம், மகாராஷ்டிராவில் இருந்து விதர்பா மாநிலம், உத்தரப்பிரதேசத் திலிருந்து மூன்று புதிய மாநிலங்களை அமைத்தல் என்று பல்வேறு வகையான புது மாநிலங்களை அமைக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளன.
திங்களன்று நிருபர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர், இரண் டாவது மாநில சீரமைப்பு ஆணையம் அமைக்க வேண் டிய தேவையில்லை என்று கூறினார்.
ஆனால், தற்போது இரண்டாவது மாநில சீரமைப்பு ஆணையம் அமைக்கப்படு வதை எதிர்க்கவில்லை என்று காங்கிரசின் மற்றொரு செய்தித் தொடர்பாளர் சகீல் அகமது கூறியுள்ளார்.