இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதச் செயல்களை முறியடிப்போம். இதில், எந்த சந்தேகமும் இல்லை.இவ்வாறு, சல்மான் குர்ஷித் கூறினார்.அவர் மேலும் பேசும்போது,
இந்தியாவில், இந்து பயங்கரவாதம் செயல்படுகிறது. மகாராஷ்டிரா மாலேகானில் நடந்த குண்டு வெடிப்பு மற்றும் பாகிஸ்தான் செல்லும், சம்ஜோதா எக்ஸ்பிரசில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கு, இந்து அமைப்புகளே காரணம் என, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறியிருந்தார்.இதற்கு, இந்து அமைப்புகளும், பா.ஜ.,வும், எதிர்ப்பு தெரிவித்துள்ளன. உள்துறை அமைச்சர் கூறியது, உண்மை தான். புலனாய்வு அமைப்புகள் நடத்திய விசாரணையில் தெரியவந்த உண்மைகளையே, அவர் கூறினார். புலனாய்வு அமைப்புகள், மத்திய அரசுக்கு தெரிவித்த தகவல்களை, உள்துறை அமைச்சர் என்ற முறையில், அவர் கூறினார்.இந்த பிரச்னையை திசை திருப்பும் வகையில், பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள், தேவையற்ற கருத்துக்களை கூறி வருகின்றன. என்னை பொறுத்தவரை, பயங்கரவாத அமைப்புகளுக்கு, எந்த மதமும் இல்லை; இதை தெளிவாகவே கூறுகிறோம்.இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதச் செயல்களை முறியடிப்போம். இதில், எந்த சந்தேகமும் இல்லை.இவ்வாறு, சல்மான் குர்ஷித் கூறினார்.
இதுவரை இந்தியாவில் செயற்பட்ட இந்து பார்பன பயங்கரவாதத்தைக் ஊக்கப்படுத்திய காங்கிரஸ் தேர்தல் நோக்கங்களுக்காக பா.ஜ.கவை எதிர்க்கின்றது. இந்தியாவின் மனிதகுல அவமானமான இந்துத்துவா பயங்கரவாதத்தை அழிக்கும் வரை இந்தியா ஒரு அங்குலம் கூட முன்னோக்கி நகரமுடியாது.