இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா தொற்று வரும் என்பதை மோடி அரசு கண்டு கொள்ளவில்லை.கொரோனாவை வென்று விட்டோம் என்று மிதப்பில் இருந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலையில் பல்லாயிரம் பேர் அன்றாடம் மடிந்து வருகிறார்கள். சுமார் நான்காயிரம் பேர் அன்றாடம் மடிந்து வரும் நிலையில் மோடி அரசோ உருப்படியான எந்த நடவடிக்கைகளையும் இன்னும் எடுக்கவில்லை.
ஆக்சிஜன் விநியோகம், மருந்து விநியோகம், நிதி விநியோகம் என பாஜக ஆளும் மாநிலங்கள் ஆளாத மாநிலங்கள் என மிகுந்த பாரபட்சத்தோடு மத்திய அரசு நடந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் தடுப்பூசி ஏற்றுமதி கொள்ளை லாபத்திற்கு குடி மக்களிடமே தடுப்பூசியை விற்பது எனதனியார் கார்ப்பரேட்டுகளுடன் இணைந்து கொள்ளை லாபத்தை ஈட்டி வருகிறது பாஜகவும் அதனை ஆதரிக்கும் முதலாளிகளும்.
இந்நிலையில் ரஷ்யாவில் இருந்து கொரொனா தடுப்பூசியை இந்தியா இறக்குமதி செய்தது. இந்த மருந்துக்கு மோடி அரசு 5 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரியை விதித்தது. அத்தோடு ஒரு டோஸ் 995 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது. ரெட்டி இன்ஸ்டியூட் என்ற தனியார் நிறுவனத்திற்கு இந்த மருந்தை தயாரிக்கும் உரிமையை வழங்கியுள்ள இந்திய அரசு. இந்த மருந்தின் விலை ஜூலைக்குப் பின்னர் குறையும் குறையும் என்றும் சொல்கிறது.
ஆனால், உலகம் முழுக்க இந்த தடுப்பூசி இந்திய மதிப்பில் 732 ரூபாய்க்குத்தான் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இந்தியாவில் மட்டும் 5 சதவிகித ஜி.எஸ்.டி வரியோடு 995 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட இருக்கிறது. சர்வதேச சந்தையை விட 263 ரூபாய் அதிகமான விலை கொடுத்து இந்திய அரசு இந்த மருந்தை தயாரிக்கும் உரிமையை ரெட்டி இன்ஸ்டியூட்டிற்கு வழங்கியுள்ளது. இந்த விலை விலை உயர்வை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ்

இந்த கொரோனா சூழலிலும் இந்திய அரசு தனியார் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாகவே நடந்து கொள்கிறது.