இந்தியாவில் மூன்றாவது அலை அக்டோபர் மாதம் பரவும் என தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு ஒன்றிய அரசை எச்சரித்துள்ளது. இந்தியாவில் இரண்டாவது அலையின் வேகம் இப்போதுதான் குறைந்து வருகிறது. தமிழகத்தில் செப்டம்பர் மாதம் முதல் தேதியன்று பள்ளிக்கூடங்கள், திரையங்கங்களை திறக்க அரசு அனுமதியளித்துள்ளது.
50% இருக்கைகளுடன் திரையரங்கங்களும், 9,10,11,12 என நான்கு வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் அக்டோபர் மாதம் கொரோனா மூன்றாவது அலை பரவும் என தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது. மூன்றாவது அலைத் தொற்றில் அதிக அளவு குழந்தைகள் பாதிக்கப்படலாம் என்ற செய்திகள் பரவியிருந்த நிலயில், குழந்தைகள் அதிக அளவு பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு அறிவியல் காரணங்களோ, மருத்துவக் காரணங்களோ நிரூபிக்கப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டியுள்ள மேலாண்மைக் குழு. ஆனாலும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆக்சிஜன் பற்றாக்குறை மரணங்கள் இரண்டாம் அலையில் உருவான நிலையில் சடலங்களை முறையாக கையாளாமல் கங்கை நதியில் வீசி எரிந்தமை உலகம் முழுக்க சர்ச்சைகளை உருவாக்கியது. முன்றாவது அலையில் ஆக்சிஜன், வெண்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ், அவசர சிகிச்சைப் பிரிவுகளில் தாரளமான படுக்கைகள், மருத்துவ ஊழியர்கள் என உஷார் நிலயில் இருக்க வேண்டும் என அரசுக்கு மேலாண்மை வாரியம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.