இந்தியாவில் பாலியல் தொழிலை பலனளிக்கும் வகையில் தடைசெய்ய அரசாங்கத்தால் இயலவில்லை என்கிற ஓர் நிலையில், பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்குவது பற்றி இந்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அந்நாட்டின் உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கினால் அது பாலியல் தொழிலாளிகளுக்கு புனர்வாழ்வு கிடைக்க உதவும் என்றும், பெண்கள் பாலியல் தொழிலுக்காக சட்டவிரோதமாக கடத்தப்படுவதைத் தவிர்க்க உதவும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்தியாவில் சிறுமி ஒருத்தி பாலியல் தொழிலுக்காக கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அரசு சாரா உதவி அமைப்பு ஒன்று தொடுத்திருந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.
இந்தியாவில் விபச்சாரம் சட்டப்படி குற்றமென்றாலும், இந்தியாவெங்கும் பாலியல் தொழில் வெகுவாக நடந்துவரவே செய்கிறது.
BBC
அது எப்படியப்பா முடியும் நமது கலாச்சாரம் என்ன ஆவது எல்லாருகும் தெரியாம செய்தா தப்பு இல்லப்பா தெரிஞசா மானம் மரியாதை எல்லாம் என்ன ஆவது. அது அப்படித்தான் எதாவது சொல்லிக்கிடிருக்கும். விடுங்கப்பா பொட்டைப் புள்ளய்ங்களைப் பத்தி அதுவும் எவனொ பெத்த புள்ளய்ங்க தனே என்னய்க்குநம்ம வேட்டுக்கு வருதோ அப்ப பத்துக்கலாம். வான்ங்கய்யா மானாட மயிலாட பாக்கலாம்.