இந்தியாவில் கடந்த 12 ஆண்டுகளில் 2 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த 2008-ம் ஆண்டு மட்டும் 16 ஆயிரத்து 196 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின் றனர் என தேசிய குற்றவியல் பதிவு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தற்கொலை வளையமாக கருதப்படுகிற 5 மாநிலங்களான மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், கர்நா டகம், மத்தியப் பிரதேசம் ஆகியவற்றில் விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை 10 ஆயிரத்து 797 ஆகும். 2008-ம் ஆண்டில் நாட்டில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட எண்ணிக் கையில், 66.6 சதவீத தற் கொலைகள் இந்த 5 மாநிலங்களில் நடந்துள்ளன.
கடந்த 2007-ம் ஆண்டு (66.2 சதவீதம்) அளவைக் காட்டிலும் இது சற்று கூடுதலாகும்.
விவசாயிகள் தற்கொலையில் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இங்கு 3,802 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
ஆந்திரா மற்றும் கர்நாடகம் என இரு மாநிலங்களிலும் ஏற்பட்ட விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கையை விட மகாராஷ்டிரா விவசாயிகள் மரணம் 40 குறைவாகும். 2008-ம் ஆண்டில் நாட்டில் இறந்த 16 ஆயிரத்து 196 விவசாயிகள் எண்ணிக்கை முந்தைய ஆண்டை (2007) காட்டிலும் 436 குறைவாகும்.
கடந்த 1997-ம் ஆண்டு முதல் இதுவரை 1 லட்சத்து 99 ஆயிரத்து 132 விவசாயி கள் தற்கொலை செய்துள்ளனர்.
கடந்த 2003-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு 30 நிமிடத்திற்கு ஒரு விவசாயி வீதம் தற்கொலை செய்து வருகிறார். விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை ஆந்திரா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் மிக கூடுதலாக உள்ளது.
இம்மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை 604 ஆக உள்ளது. கடந்த 1997 முதல் 2002-ம் ஆண்டு வரை தற்கொலை மிகுந்த மேற்குறிப்பிட்ட 5 மாநிலங்களில் 55 ஆயிரத்து 769 விவசாயிகள் தற்கொலை செய்தனர். 2003-2008 கால கட்டத்தில் இம் மாநி லங் களில் 67 ஆயிரத்து 54 விவசாயிகள் தற்கொலை செய் தனர். சராசரியாக ஆண் டுக்கு 1900 விவசாயிகள் கூடுதலாக தற்கொலை செய் துள்ளனர்.
கடந்த 12 ஆண்டுகளில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 41 ஆயிரத்து 404 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.
உலகில் தற்கொலை கேரளாவில் அதிகம்
“உலகில் தற்கொலை செய்து கொள்பவர்களில், கேரளாவில் தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்’ என, மாநில சிறைத்துறை டி.ஜி.பி., டாக்டர் அலெக்சாண்டர் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கொல்லம், பி.எஸ்.என்.எல்., நடத்திய கருத்தரங்கில், சிறைத்துறை போலீஸ் டி.ஜி.பி., டாக்டர் அலெக்சாண்டர் ஜேக்கப் கூறியதாவது: தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை, உலகில் சராசரியாக, ஒரு லட்சம் பேரில் எட்டாகவும், இந்தியாவில் ஒன்பதாகவும், கேரளாவில் இது, 36 ஆகவும் உள்ளது.
கேரள மாநிலத்தில், ஆண்டுக்கு பத்தாயிரம் பேர், தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களில் 15 பேரில் ஒருவர் இறக்கிறார். அதாவது, ஒரு ஆண்டில் ஒன்றரை லட்சம் பேர், தற்கொலைக்கு முயலும்போது, பத்தாயிரம் பேர் இறக்க நேரிடுகிறது. ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள நூறுநாடு கிராமத்தில், அதிகளவு பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒரு ஆண்டில் சராசரியாக 65 பேர், இங்கு தற்கொலை செய்துள்ளனர்.
ஓர் மானிடனின் குமுறல்…..
ஆந்திராவில் 40நாட்களில் 21விவசாயிகள் தற்கொலை!
செய்தி: ”
ஆந்திர மாநிலம் தெலுங்கானா மற்றும் ராயலசீமா பகுதியில் பருவ மழையும் பொய்த்தது. மழையை நம்பி விவசாயம் செய்த விவசாயிகள் பலத்த ஏமாற்றமடைந்தனர். சிலர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த 40 நாளில் 21 பேர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டோன்சந்தா கிராமத்தை சேர்ந்த ஞீமண்ணா என்ற விவசாயி தூக்கில் தொங்கினார். ”
”
விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை ஆந்திர மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டியும் ஒப்புக் கொண்டுள்ளார். அனந்தஞீர் மாவட்டத்தில் 11 பேரும், அடில்லாபாத்தில் 4 பேரும், வாராங்கல் பகுதியில் 3 பேரும், மேடக் மாவட்டத்தில் 2 பேரும் தற்கொலை செய்து
கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.”
நன்றி! – (தினபூமி, 17/08/2009).
தலைப்பு செய்திகளாக தெரிவிக்க வேண்டிய சில செய்திகளை பெட்டி செய்தியாக பத்திரிக்கைகள் வெளியிடுகின்றன. தேர்தல், சினிமா போன்ற அக்கப்போர்களில் இந்த பெட்டிச் செய்திகள் நம் கண்ணில் இருந்து மறைந்து விடுகின்றன.
நிதி மூலதன கும்பல்களால் பங்குச் சந்தை சூறையாடப்பட்டு ஏதேனும் பிரச்சனையென்றால்.. அரசு மக்களின் பணத்தை பங்குச் சந்தையில் அள்ளிக் கொட்டுகிற இந்திய அரசு இந்த நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டேயிருப்பதை தெரிந்து கொண்டே மவுனம் காக்கிறது.
இன்றைக்கு விவசாயி சாகிறான் என்றால்… நாம் பட்டினி, பசியில் சாகப்போவதற்கு ஒரு முன்னறிவிப்பு. விவசாயியை காப்பாற்றினால்… நாம் பிழைத்தோம்.
எல்லாவற்றிகும் மனித நேயம் வேண்டும்!
மேலும் அறிய:
http://vidarbhacrisis.blogspot.com/2009/08/farmers-suicide-spiral-govt-should-wake.html
ஒரு லட்சம் ரூபாவுக்கு கார் குடுக்க வெளீக்கிட்டு டாடா இரண்டு லட்சம் ஏழை விவசாயிகலை கொன்றீருக்கிறான். இரண்டு பவுணீற்குநாம் வாங்கும் சேர்ட்ட்ல் இரண்டாயிரம் ஏழையின் இரத்தம் இருக்கிரது.