ஹரியானாவின் ஹிசார் பகுதியில் இருந்த mechanised infantry படையும், ஆக்ராவிலிருந்து Para Brigade படையும் தில்லிக்கு அருகே கொண்டு வரப்பட்டன.
இதில் mechanised infantry படை என்பது டேங்குகள், கவச வாகனங்களை உள்ளடக்கியது. லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே. சிங் தலைமையிலான இந்தப் படை ராணுவத்தின் மிக முக்கியமான 1 Corps தாக்குதல் படைப் பிரிவாகும். மதுராவை தலைமையகமாகக் கொண்ட இந்தப் படையின் ஹிசார் பிரிவு தில்லிக்கு 150 கி.மீ. தொலைவில் நிலை நிறுத்தப்பட்டது. டேங்குகளை கொண்டு செல்லும் 48 வாகனங்கள், ரஷ்ய தயாரிப்பான கவச வாகனங்கள் ஆகியவையும் தில்லிக்கு அருகே நிலை நிறுத்தப்பட்டன.
அதே போல ஆக்ராவை தலைமையிடமாகக் கொண்ட 50 Para Brigade என்ற படைப் பிரிவும் பல்வேறு ராணுவ விமானங்களில் தில்லிக்கு வந்திறங்கியது.
இந்தப் படைகளை தில்லிக்குக் கொண்டு வருவது குறித்து மத்திய அரசிடமோ, பாதுகாப்பு அமைச்சகத்திடமோ ராணுவம் தெரிவிக்கவில்லை. இந்தத் தகவல்களை மத்திய உளவுப் பிரிவான ஐபி தான் இரவோடு இரவாக மத்திய அரசின் பார்வைக்குக் கொண்டு சென்றுள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் ஆண்டனிக்கும் பிரதமருக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட உடனடியாக தில்லிக்கு வரும் வாகனங்களை தாமதப்படுத்தும் வேலையில் மத்திய அரசு இறங்கியது.
தீவிரவாதிகள் ஊடுருவல் இருப்பதாக ஒரு தகவலைப் பரப்பிவிட்டு, நெடுஞ்சாலைகள் மூலம் தில்லிக்கு வரும் அனைத்து வாகனங்களையும் சோதனையிடுமாறு தில்லி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து தில்லி போலீசார் பாதுகாப்பு சோதனைகளில் இறங்கி வாகனங்களை சோதனியிட ஆரம்பிக்கவே, தில்லிக்கு வரும் முக்கிய சாலைகள் அனைத்திலும் போக்குவரத்து தாமதமானது. இதன் மூலம் ராணுவ வாகனங்களின் அணிவகுப்பு தாமதமானது.
அதே நேரத்தில் மலேசியாவில் இருந்த பாதுகாப்புத்துறைச் செயலாளர் சசி காந்த் ஷர்மா உடனடியாக தில்லி திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். அவர் தில்லி திரும்பியவுடன் ராணுவ செயல்பாடுகளுக்கான டைரக்டர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே.செளத்ரியின் அலுவலகத்துக்கு வந்தார்.
அங்கு அவரிடம் இந்தப் படைகள் தில்லி நோக்கி வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, பாராசூட் படையினர் தில்லிக்கு வருவது எனக்குத் தெரியும். இது வழக்கமான பயிற்சி தான் என்று கூறியுள்ளார்.
அதே நேரத்தில் கவச வாகனப் படை ஏன் வந்தது என்பது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட, அவர் ராணுவத் தளபதியுடன் ஆலோசனை நடத்திவிட்டு அளித்த பதிலில், பனி நிறைந்த நாட்களில் படைகளை வேகமாக இடம் நகர்த்துவதற்கான பயிற்சிக்காகவே அவை தில்லிக்கு கொண்டு வரப்பட்டன என்று பதில் தந்துள்ளார்.
இதற்கிடையே பிரதமர் மன்மோகன் சிங்குடன் பாதுகாப்பு அமைச்சர் ஆலோசனை நடத்தியுள்ளார். இதையடுத்து இரு படைப் பிரிவுகளையும் உடனடியாக அவை கிளம்பிய இடத்துக்கே திரும்பிச் செல்ல பாதுகாப்புத்துறைச் செயலாளர் உத்தரவிட, தில்லியை நெருங்கிக் கொண்டிருந்த படைகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டன என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான செய்தியால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உளவுத்துறையை மேற்கோள் காட்டி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டு இருந்தது. ராணுவத்தின் 2 பிரிவுகள் ஆக்ராவில் இருந்து புறப்பட்டுச் சென்றதாகவும் உடனடியாக பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பிரதமருக்கு தகவல் கொடுக்கப்பட்டதாகவும் அதன் பிறகு அந்த ராணுவப் பிரிவுகள் தடுத்து நிறுத் தப்பட்டதாகவும் அந்த பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இதனை பிரதமர் மன்மோகன்சிங்கும், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணியும் திட்டவட்டமாக மறுத்து இருக்கிறார்கள். இந்த செய்தி பீதியை கிளப்புவதாகவும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.இந்த செய்திக்கு அடிப்படை எதுவும் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறினார். விசாகப்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராணுவ நடமாட்டம் வழக்கமான ஒன்று என்று அவர் குறிப்பிட்டார்.
ராணுவப் புரட்சி ஏற்பட இருந்ததாக வெளிவந்த பத்திரிகை செய்தி மக்களிடையே பெரும் பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது என்றும், எதிர்காலத்தில் ராணுவப் புரட்சி ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் தாங்கள் உறுதி அளிக்க முடியுமா என்று அவரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். ராணுவப் புரட்சி எதுவும் இல்லை என்று ஏ.கே.அந்தோணி கூறினார்.
பல்தேசிய நிறுவனங்களதும் ஏகாதிபத்தியங்களதும் நலன் சார்ந்து மாபியா நிறுவனங்கள் போன்று இயங்கும் அரசுகளதும் அதன் அடியாட்படையான அரசுகளதும் நிர்வாகத்தில் அனைத்தும் சாத்தியமானதே.
ARE YOU AFRAID? (rulling party)