மானாட மயிலாட தமிழ் நாட்டு புரோகிராம் நடந்த கையோடு இந்திய அரசு இலங்கையில் நடத்திய புரோகிராம் வடமாகாண தேர்தல். தமிழ் நாட்டுக்கு மோடி காலடி வைக்கும் அதே நேரம் ஈழ மோடி அதே தாடியோடும் பொட்டோடும் பப்பாவில் ஏற்றப்பட்ட வெற்றி சுப்பிரமணியையும் குளிர வைத்திருக்கிறது. மன்மோகனை இலங்கை வந்து கொமன் வெல்த்தில் கலந்து கடாசுமாறு விக்னேஸ்வரன் அழைத்திருக்கிறார். வன்னியில் இனப்படுகொலை நிகழ்ந்த போது பிபிசி தமிழோசையில் சிதம்பரம் மகிழ்ந்தது மாதிரியே இப்போது தேசியக் கூட்டமைப்பின் வெற்றியிலும் மகிழ்ந்து போயிருப்பதாக அறிக்கை விட்டிருக்கிறார்.
சோளனின் 2 கிகாபைட் மெமறி பிளாஷ் பக்கில் போனால், 83 ஆம் ஆண்டு ஆமிக்காரனை அடித்ததில் மகிழ்ந்து போய் உத்திரப் பிரதேசத்தில் இராணுவப் பயிற்சி வழங்கி ரத்தமும் சதையுமாய் ஈழத்தை மாற்றிய இந்திய எசமான் சுருள் சுருளாக நினைவில் வந்து போகிறான்.
அப்ப இந்தியாவை நம்பாதே என்று சொன்னவங்களை மேலையும் கீழையும் ஏற இறங்க லுக்கு விட்ட அதே தேஸ்ய வாதிகள் இப்ப விக்கி தலைமையில் நடந்த சுனாமியில் அடிப்பட்டு டெல்லியில் கரை ஒதுங்கியுள்ளார்கள்.
தோற்றுப் போன ஒட்டுண்ணி தவராசாவும் ஈழப் பிரச்சனையில் துட்டுப் பார்த்த டக்ளஸ் குழுவும் மன்மோகனை அழைத்திருந்தால் மன்மோகனே கண்டுகொண்டிருக்க மாட்டார். இப்போது மக்கள் ஆதரவோடு விக்னேஸ்வரன் அழைத்திருக்கிறார்.
தவராசா மக்கள் ஆதரவில்லாமல் செய்திருக்கக்கூடிய அதே வேலையை இப்போ விக்கி செய்திருக்கிறார்.
தமிழ் நாட்டு அரசியல்வாதிகளை ‘வாயை மூடு’ என்று தாடியைத் தடவாமலே விக்கி சொன்னபோது புல்லரித்துப் போன சோளன் இப்போ சுப்ரமணியையும், நாச்சியப்புவையும், சிதம்பரத்தையும் திருப்பதியையும் வாயை மூடு என்று ஏன் சொல்லவில்லை என்று மூளையைப் போட்டுக் கசக்கிக்கொண்டிருக்கிறான். இந்த மேட்டுக்குடி ரேசன் காட்டுகள் எல்லாம் இன்ப்படுகொலையை ஆதரித்த அருவருப்புக்கள் என்பது அரசியல் தெரியாத விக்கிக்கு எப்படி தெரியப் போகிறது. அப்பாவி அப்பாவி….
எனக்கு அரசியல் தெரியாது சட்டம் மட்டும் தான் தெரியும் என்று விக்கி சொன்ன போதே சோளனுக்கு சந்தேகம். அரசியலை இந்திய நாசமறுத்த அரசாங்கத்தின் தலையில் ஒப்படைத்துவிட்டு சட்டத்தை உள்ளங்கையில் வைத்து உரசுகிறார் என்று..
இந்து பேப்பரில் ராசபக்சவோடு பேசி ஈழம் பிடிக்கிறம் என்று விக்கி பேட்டி கொடுத்துவிட்டு யாழ்ப்பாணத்தில் பனை வடலிக்குப் பின்னால மறுப்பறிக்கை விடும் போதே இது இந்தியாவின் அரசியல் என்று விளங்கிப்போச்சு. இனி அரசியல் தெரியாமல் இந்துப் பேப்பரில எப்படி மறுப்பறிக்கை விடுவது என்று அரசியல் ஆய்வாளர்கள் வேறு ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள்.
இதுவரைக்கும் கம்பன் கழக கூட்டத்துக்கு மட்டும் தமிழ் நாடு சென்று வந்த விக்னேஸ்வரன் இனிமேல் கழுத்தறுப்புக் கழகக் கூட்டத்திற்கும் இந்தியா செல்லும் பொன்னான வாய்ப்புக் கிட்டிய வவ்வாலாக இந்தியாவோடு ஒட்டியிருக்கிறார்.
உயிர்களோடு விளையாடுகிறோம் என்று தெரியாமலே விக்கிக்கு வாக்குப்போடுங்கள் என்று அறிக்கை விட்ட புலம் பெயர்ந்த அரசியல் தலைகள் தமிழ் நாட்டு மக்களிடமிருந்தும் புலம் பெயர் மக்களிடமிருந்தும் ஈழத் தமிழர்களைத் தனிமைப்படுத்தி இந்திய இலங்கை அரசுகளிடம் சரணடையச் சொல்லியிருக்கிறார்கள். பொல்லுக் குடுத்து அடிவாங்குகிறது என்பதன் பொழிப்பு இப்போதான் சோளனுக்கு தெள்ளத் தெளிவாக விளங்கியுள்ளது.
சதாம் ரைப் அரசியல் கோமாளி ஜெயா மாமியை நம்பிய தேசிய வாதிகளின் பார்வை இப்போது இனக்கொலையாளி மோடியின் தாடி மீது திரும்பியுள்ளதால் அடுத்த மாவீரர் தினம் வரைக்கும் பிழைப்பு ஓட்ட வாய்ப்புக் கிடைத்துள்ளது என்னவோ உண்மைதான்.
தேர்தலுக்கு முதல் இந்து மத குருக்களைக் கூப்பிட்டு விக்கி நடத்திய யாகத்தின் பலனால் அல்ல மக்களின் போர்க்குணத்தாலும் எதிர்ப்புணர்வாலும் வென்றிருக்கிறார். வெற்றி நல்ல செய்தியை சொல்லியிருக்கிறது. ஆனால் எதிர்காலம் மனிதர்களை விழுங்கும் இரத்தக் காட்டேரிகளின் பிடியில்…
புலிகளின் கிளச்சுக்குள் (clutch) இருந்ததால் சுயாதீனமாகச் செயற்படாத கூட்டமைப்பு இப்போது சுயாதீனமாக செயற்பட ஆரம்பித்துள்ளது என்று பேட்டிகொடுத்த விக்னேஸ்வரன் இந்தியாவின் பிடியில் இருக்கிறோம் என்பதை சொல்ல மறந்துவிட்டார். அரசியல் தெரியாமல் சட்டம் மட்டும் தெரிந்தால் வந்த வினையோ?
இனப்படுகொலையை சந்தித்து குத்திக் குதறப்பட்ட பின்னும் உரிமை தான் வேண்டும் என்று உறுதிகொண்ட சமூகம் மகிந்த குடும்பத்தையும் இந்திய கொலைகார அரசையும் அதன் ஏஜண்டுகளையும் எதிர்கொள்ளும். சோளன் பிடரியில் அடித்து சத்தியம் செய்கிறான்!
பயப்படாதீா்கள் சோளன், மக்கள் எல்லாவற்றிலுமே தெளிவாக இருக்கின்றவரை எந்த மல்லனாலும் எதையும் செய்துவிடமுடியாது என்று நான் நம்புகிறேன் நீங்களும் அப்படி நம்பிக்கொண்டு செயலை ஆரம்பிக்கவிடுங்கள் சில போலிக்கம்யூனிஸ்ட்டுகள் போல எதுவும் நடக்கமுன்பு அய்யோ குய்யோ என்று கதறாது நிம்மதியாக இருக்கப்பழகுங்கள்.
உந்த்த கத்தரிக்கா கதையை எல்லாம் விட்டுபோட்டு யாப்பாணத்தை சிங்கப்பூராக்கப் பாருங்கோ. எல்லாம் சரிவரும். அபிவிருத்தி மட்டும் தான் ஒரே வழி. வெளிநாடுகளில இருக்கிற ஒவ்வொரு மனுசனும் 100 டொலர் போட்டாலே வடக்கு நீயோர்க்காகும்.
“யாழ்ப்பாணத்தை சிங்கப்பூராக்கப் பாருங்கோ. எல்லாம் சரிவரும். அபிவிருத்தி மட்டும் தான் ஒரே வழி. வெளிநாடுகளில இருக்கிற ஒவ்வொரு மனுசனும் 100 டொலர் போட்டாலே வடக்கு நீயுயோர்க்காகும்”
– இது சரி… ! ! !
90 களில் இலங்கையின்
ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றில் ஒருவர் ஒரு தகவல் எழுதியிருந்தார்
” வெளிநாடுகளில் அகதிகளாக உள்ள இலங்கைத் தமிழர்கள் தமது சொத்துகளைக் கொண்டு இலங்கை முழுவதையும் வாங்க முடியும்”
ஆனால் இன்றுநடந்தது என்வென்று உங்கள் அனைவருக்கும் தெரியும்.
புலிகளின் சொத்து ராஜபக்ஸ – கோதபய குடும்பத்திற்குப் போய்ச் சேர்ந்திருக்கின்றது
“ஒவ்வொரு மனுசனும் 100 டொலர் போட்டாலே வடக்கு நீயோர்க்காகும்.”
இது உண்மை. ஆனால் யாரிடம் கொடுப்பது.
ராஜபக்ஸ விடம் கொடுப்பதா கோதபயவிடம் கொடுப்பதா K P யிடம் கொடுப்பதா டக்ளசிடம் கொடுப்பதா கருணாநிதியிடம் கொடுப்பதா சோனியா – மன்மோகன் கூட்டணியிடம் கொடுப்பதா சம்பந்தனிடம் கொடுப்பதா வெளிநாடுகளிலுள்ள புலிகளின் ( 2009 க்கு முன்னைய) பிரதிநிதிகளிடம் கொடுப்பதா ஒபாமா விடம் கொடுப்பதா நாடுகடந்த அரசுக்குக் கொடுப்பதா மக்கள் அவைகளுக்குக் கொடுப்பதா …….யாரிடம் கொடுப்பது என்பதை யாராவது கூறுவீர்களா .
இவர்களில் சிலர் வேசியாடலை முன்னேற்றம் என்று எண்ணுபவர்கள் இலங்கையை பாங்காக் bankkok ஆக மாற்ற முடியும் என்று கூறுபவர்கள் காசிநோக்களையும் உல்லாச இரவுக் களியாட்ட விடுதிகளயும் நிர்மாணிப்பது அபிவிருத்தி என்று கூறுபவர்கள்
அபிவிருத்தி முன்னேற்றம் என்றால் என்ன என்பதற்கு நாம் வரைவிலக்கணம் கூறவேண்டும்
யாழ்பாணத்தில் சுண்ணாம்புக்கல் இருக்கின்றது என்பதற்காக 10 சிமெந்து தொழில்சாலைகளை நிர்மாணிப்பது அபிவிருத்தியா
எமக்குத் தேவை இனியொரு தரமான விமர்சனங்களை–சுய சிந்தனைகளைக் கொ டுத்துக் கொண்டிருக்கும் சில நல்ல மனிதர்கள்
ஆம் நாம் இனியொருவில் இதை ஆரம்பிக்கலாம்
“அரசியலை இந்திய நாசமறுத்த அரசாங்கத்தின் தலையில் ஒப்படைத்துவிட்டு சட்டத்தை உள்ளங்கையில் வைத்து உரசுகிறார்”
– தலையிலா காலடியிலா…???
“பொல்லுக் குடுத்து அடிவாங்குகிறது”
– பொல்லுக் குடுத்து அடிவாங்குகிறது இல்லை பொல்லையும் வாங்கி எம்மை நாமே அடித்துக் கொள்வது
–
“கூட்டமைப்பு இப்போது சுயாதீனமாக செயற்பட ஆரம்பித்துள்ளது”
– Joke of this era
“இந்தியாவின் பிடியில் இருக்கிறோம்”
– அப்போ இவ்வளவு நாளும் யாருடைய பிடியில் இருந்தோம்…???
“அரசியல் தெரியாமல் சட்டம் மட்டும் தெரிந்தால் வந்த வினையோ”
– சட்டம் மட்டும் தெரிந்தாலும்… தேர்தலுக்கு முன் இராணுவ முகாம்களை மூடுவென் என்றும் தேர்தலின் பின் மாவீரர் இல்லங்கள் அதே இடங்களில் மீள் அமைக்கப்படும் என்றும் அறிக்கை விடுவாரா…??? சட்டப்படி இதெல்லாம் சாத்தியமா…???
“மக்கள் எல்லாவற்றிலுமே தெளிவாக இருக்கின்றவரை”
– என்னத்தில் தெளிவாய் இருக்கிறார்கள்… உணர்ச்சிப் பேச்சுக்களில் மயங்குவதில் தெளிவாக இருக்கிறார்களா…???
தொணணூறுகளின் இறுதியில் இந்தியாவால் கொண்டு வரப்பட்ட மாகாண சபைகளை தமிழ் மக்கள் வாக்குப் போட்டு ஏற்றுக் கொண்டு விட்டார்கள். அதே மாகாண சபைகளுக்காக நின்றவர்களை தேடித் தேடி சுட்டழிக்கும் போது தமிழ் சமூகம் மெளனமாய் இருந்து விட்டது. இலங்கை அரசுக்கு இணையாக வதைத்தெடுத்த புலியின் பிரதிநிதி அனந்தி எழிலனையும் தனது சகோதரன் அமைச்சராக வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக சதிகள் செய்து (சுகு அணியினருக்கு கூட்டமைப்பில் இடம் கிடைக்க விடாமல் ) தனது சகோதரனை நிறுத்திய சுரேஸ் பிறேமச் சந்திரனையும் மக்கள் அதிகாரக் கட்டிலில் அமர்த்தியுள்ளார்கள். இந்த மாகாண சபைக்காக தங்கள் உயிர்களை இழந்தவர்களுக்கு ஒரு மரியாதையும் இல்லையா? அப்போதே இந்த மாகாண சபை அதிகாரங்களை ஏற்றிருந்தால் இத்தனை அழிவுகள் வந்திருக்குமா? இங்கு யார் துரோகிகள்? வாக்களித்த மக்களா? மக்களுக்காக என்று நம்பி உயிர்களை பறி கொடுத்தவர்களா?
• “யாப்பாணத்தை சிங்கப்பூராக்கப் பாருங்கோ”.
யாழ்பாணம் மாத்திரம் சிங்கப் பூராகுதல் என்பது அல்லது சிங்கபூராக்க கோருதல் தமிழ் தேசிய அரசியல் போசுவோரின் அரசியல் மடமை அல்லது தமிழ் தேசிய அரசியலை சிதைத்தழிக்க விரும்போவோரின் அரசியல் விவேகமாகும்.
• “யாரிடம் கொடுப்பது என்பதை யாராவது கூறுவீர்களா?”
நீங்கள் மேலே கேள்வி எழுப்பிய எவரிடமும் கொடுக்க முடியாது.
எத்தகைய அரசியல் நோக்கமும் அற்ற (உண்மையில் அரசியல் நோக்கம் இருக்க வேண்டும்) புலி …புலி…, தேசியம் …தேசியம்…, அபிவிருத்தி …அபிவிருத்தி …எனக் கத்தும் சில பல அல்லக்கைகளின் கைகளில் அவர்களின் அரசியலில் கலக்காத ஒரு அமைப்பு வங்கி அமைப்பு முறையில் செயல் பட்டால் அல்லது செயல் படவைத்து அவற்றில் 100 டொலர் வைப்புச் செய்து அப்பணத்தில் அபிவிருத்தி செய்ய முடியும்.
இல்லையேல் புலம் பெயர் நாடுகளில் புலிமுகத்தோடு எச்சி பணம் பொறுக்கி அல்லக்கைகள் பெரும் பணத்தையும் அசையும் அசையா சொத்துக்களையும் கோவில் கடைகள் என பல வணிக நிறுவனங்களையும் முடக்கிய பாவிகளையும் உள்ளிருத்த வேண்டி வரும். இவர்களை தூர விலக்கி எட்ட இருக்க வைத்து, சந்தர்ப்ப வாதிகளை இனங்கண்டு, அல்லது அவர்களால் பாதிப்பு ஏற்ட்படாதவாறு பார்த்து கொள்ளல் வேண்டும்.
• “அதே மாகாண சபைகளுக்காக நின்றவர்களை தேடித் தேடி சுட்டழிக்கும் போது தமிழ் சமூகம் மெளனமாய் இருந்து விட்டது.”
அதே மாகாண சபைகளுக்காக நின்றவர்கள் மக்களையும் மற்றவர்களையும் தேடி தேடி ஏன் தேடாமலும் தெருவில் போய் வந்தோரையும் அழித்த போதும், வதைத்தபோதும் மக்கள் பேசாமலே இருந்தனர். யார் யாரை நோக தமிழன் தன் தலைவிதியை நோவதை தவிர.
குமாரு! மக்கள் சரியாத்தான் வாக்களிச்சு இருக்காங்க. வென்றவங்கதான் எதோ குழம்புறாங்க. டெல்லிக்கு காவடி தூக்க தொடங்கிட்டாரு உங்க வித்துவான் விக்கினேஸ்வரன். பெருமாள் ஒரிசாவுக்கு ஓடினாரூ .விக்கி கொழும்புக்கு ஓடுவாரு.மக்கள் பாவம் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடிவிடுவார்கள் குமாரு. இப்ப தீயா வேல செய்யணும் குமாரு. அவரு எல்லாம் செய்வாரு என்னு மானாட மசிலாட பார்க்கக்கூடாது குமாரு.
ஐயா கனவான்களே ! முள்ளி வாய்க்கால் போர் நடக்கும் போதெல்லாம் உங்கள் ராச தந்திரங்களை எல்லாம் எங்கு ஒழித்து வைத்திருந்தீர்கள். நீங்கள் இலங்கை குடியுரிமை உள்ளவர்களாக இருந்தால் இங்கு வந்து உங்கள் அரசியலை நடத்தலாமே! நீங்கள் உண்மையான ஒரு புரட்சிகாரனாக இருந்தால் சே குவேராவைப் போல ……… சிங்களவர்கள் பயப்படுகிறார்கள் விக்கியை பார்த்து ……அவர்களை விட சில தமிழர்கள் சேறு வாரி இறைப்பது அதிகமாக இருக்கிறதே !!!!! இது பொறாமையா அல்லது சிங்களவர்களுக்கு ஆதரவு வழங்கும் ஒரு வழியா ? அரசியல் வகுப்பெடுக்கும் எல்லா வித்துவான்களும் ஈழத்துக்கு வந்தாலே விக்கியை போன்றவர்களுக்கு இடமேது தயவு செய்து வாருங்கள். உங்களால் தனிய நின்று கூட தமிழ் ஈழம் என்று சொல்ல துணிவு இருக்குமா என்று விளங்கி கொள்வீர்கள்.