21.12.2008.
பயங்கரவாதிகளின் ஊடுருவலில் இருந்து நாட்டை காப்பதற்காக இந்தியா வின் ஒட்டுமொத்த கடலோரப் பகுதியை யும், கடலோரப் பாதுகாப்புப்படையின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு ஆலோசித்துள்ளது. கடலோரம் முழுவதையும் ரேடார் கண் காணிப்பை பலப்படுத்தவும், மேலும் 9 இடங்களில் கடலோரப் பாதுகாப்பு படைத் தளங்களை அமைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மும்பையில் நடந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் கடல் வழி யாகவே நாட்டிற்குள் நுழைந்தனர்.
இதுதொடர்பான விசாரணைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, கடல் வழி யாக பயங்கரவாதிகள் ஊடுருவுவதை தடுப்பது குறித்து பாதுகாப்பு அமைச்சக மும், மத்திய உள்துறை அமைச்சகமும் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.
சனிக்கிழமை பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி தலைமையில் பாதுகாப் புத்துறையின் உயர் அதிகாரிகள் பங்கேற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில், கடலோரப் பாதுகாப்பை மேம்படுத்த பல்வேறு திட் டங்களுக்கு அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஒப்புதல் அளித்தார். கடலோரப் பாதுகாப் பிற்காக அதிநவீன கருவிகள், புதிய கண் காணிப்புக் கப்பல்கள், ரேடார்கள் ஆகிய வற்றை வாங்கவும் அமைச்சர் ஒப்புதல் அளித்தார்.
ஏற்கெனவே கடலோர பாதுகாப்புப் படையிடம் ஒரு மிகப்பெரிய கண்காணிப் புக் கப்பலும், அதில் 70 சிறிய மற்றும் பெரிய ரக படகுகளும் உள்ளன. மேலும், சில கப்பல்களை இந்தப் பணியில் ஈடுபடுத்துவது என்று மேற்கண்ட கூட்டத் தில் முடிவு செய்யப்பட்டதாக பாதுகாப் புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாட்டில் 7 ஆயிரத்து 500 கிலோமீட்டர் நீளமுள்ள ஒட்டுமொத்த கடலோர பகு தியிலும், தற்போதுள்ள 13 கடலோரப் பாதுகாப்பு மையங்களுடன் மேலும் 9 மையங்களை அமைப்பது என்றும், மேற்கு மற்றும் கிழக்கு கடலோரப் பகுதிகள் முழுவதையும் ரேடார் கண்காணிப்பின் கீழ் கொண்டு வருவது என்றும் முடிவு செய் யப்பட்டது. இதன் மூலம், இந்திய கடல் எல்லைக்குள் நுழையும் அனைத்து வித மான படகுகள் மற்றும் கப்பல்களின் நட மாட்டமும் பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்படும்.
இதுதவிர, கடலோரப் பாதுகாப் புப்படை, கப்பல் படை மற்றும் துறை முகங்கள் ஆகியவற்றுக்கு இடையே தக வல்களை பரிமாறிக் கொள்வதற்கான ஏற் பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
உள்துறை ஆலோசனை
இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சகமும் கடலோரப் பாதுகாப்பு குறித்து சனிக்கிழமை முக்கிய ஆலோசனை நடத்தியது. இந்த இரு அமைச்சகங்களின் ஆலோசனைகளையும் மத்திய அமைச்ச ரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.