எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவியேற்பு வைபவத்தில் சீனா ஜனாதிபிதியின் தூதுவர் ஒருவர் விசேட அதிதியாக கலந்து கொள்ளவுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கொங்லி தெரிவித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
அதே வேளை தேசிய மக்கள் காங்கிரஸின் நிலையியல் குழுவின் உதவித் தலைவரான சாங் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாகவும், அவர் நவம்பர் 17 முதல் 20 வரை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அம்பாந்தோட்டை துறைமுக ஆரம்ப வைபத்திலும் சாங் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை இலங்கை அரசின் இராணுவ முக்கம்களை அமைப்பதற்கும் சீனா உதவிபுரிவதாக பரவலான செய்திகளையும் ஊடகங்கள் வெளியிருகின்றன. குறிப்பாக யாழ்ப்பாணம் பலாலி இராணுவ முகாம் ஊடகப் பிரிவினை ஆதாரம் காட்டி நிரந்தர இராணுவ முகாம்களை அமைப்பதற்கு சீன அரசு உதவி புரிவதாகவும் செய்திகள் வெளியாகின்றன.
ஏதாவது ஒரு அதிகாரத்துடன் இணைந்து அவர்களுக்குச் சேவை செய்வதன் ஊடகவே எம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற சுய சார்பற்ற அடிமை மனோபாவத்தைக் கொண்ட ஒரு பகுதியினர் சீனப் பூச்சாண்டியைக் காட்டி இந்தியாவை தமிழர்களுக்குச் சார்பாக அழைக்கின்றனர்.
வெளியுறவிற்கான பலமான அடித்தளத்தையும், வெளிவிவகார உளவுப் பிரிவொன்றையும் கொண்ட மிகச் சில நாடுகளின் வரிசையில் இந்தியாவும் ஒன்று. தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டத்தைச் சீர்குலைப்பதற்கென்றே 1980 களில் இந்தியா விடுதலை இயக்கங்களுக்கு இராணுவப் பயிற்சியை வழங்கிற்று. போராளிக் குழுக்கள் தமக்கிடையே மோதிக் கொள்வதற்கும் புலிகள் ஏகத்துவமாக உருவாகுவதற்கும் இந்திய அரசின் பின் புலம் பிரதான காரணமாக அமைந்திருந்தது,
கட்டுக்கோப்பான இராணுவக் குழு ஒன்றே தமிழர்களுக்கான தனி நாட்டைப் பெற்றுக்கொள்ளப் போதுமான முன் நிபந்தனை என்று முழுமையாக நம்பிய பிரபாகரன் என்ற அப்பாவி மனிதனை அசுர பலத்துடன் வளர்த்தெடுத்த கைங்கரியத்தையும் அதே பிரபாகரனை முள்ளிவாய்க்காலில் ஆயிரக் கணக்கான மக்களோடு கொலை செய்த கோரத்தையும் இந்திய அரசே திட்டமிட்டது.
90 கள் வரை இந்திய வெளிவிவகாரக் கொள்கை என்பது போராளிக் குழுக்களை பலமடையச் செய்து இலங்கை அரசை மிரட்டுதல் என்பதாகவே அமைந்திருந்தது. அமரிக்கா சோவியத் ரஷ்யா என்ற இரு துருவ வல்லரசு உலகில் இந்தியாவின் சோவியத் சார்பு நிலையிலிருந்து அதன் வெளியுறவுக் கொள்கையும் பிராந்தியப் பாதுகாப்பு நலன்களும் வரைவு செய்யப்பட்டன. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமரிக்க நலன்கள் இந்திய அரசின் பாதுகாப்பு நலன்களுக்கு முரண்பட்டிருந்த அந்தக் காலப்பகுதியில் சோவியத் சார்பு வெளியுறவுக் கொள்கைக்கு தனது பிராந்திய நலன்களை உட்படுத்திக்கொண்டது இந்தியா.
தனது தேவைக்கும் அதிகமான சந்தையைக் கொண்டிருந்த நாடு இந்தியா. அதன் பொருளாதர நலன்களை விட இராணுவ நலன்களே முக்கியத்துவம் அடைந்திருந்த 90 களுக்கு முற்பட்ட காலப்பகுதி, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்திய – ரஷ்யப் பாதுகாப்பு நலன்களுக்கு இலங்கை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது.
சோவியத்தின் வீழ்ச்சியும், இந்தியப் பெரு முதளாளிகளின் அபார வளர்ச்சியும் இந்திய அரசின் பொருளாதர நலன்கள் பாதுகாப்புடன் இணைந்து கொண்டன. ஐரோப்பியப் பொருளாதாரத்தின் வீழ்ச்சியும் ஆசியச் சந்ததையின் செயற்கையான வளர்ச்சியும், சில மேல்தட்டுப் பொருளாதரப் பயங்கரவாதிகளை உருவாக்கியது. இந்திய ஆட்சியையும் தெற்காசிய அரசியலையும் தீர்மானிக்கும் நிலைக்கு இவர்களின் வளர்ச்சி அமைந்துள்ளது.
இயல்பாக வளர்ச்சியடைந்த ஐரோப்பியப் பொருளாதாரம் சரிந்து விழும் போது அதனைக் கைப்பற்றிக்கொள்வதற்கும், தமது எல்லைக்குள் நிலை நாட்டுவதற்கும் இந்திய சீன அரசுகள் இணைந்து கொள்கின்றன.
இந்த இரு நாடுகளிடையேயான போட்டி என்பதற்கும் அதிகமாக இணைவு என்பதே இரு நாடுகளுக்கும் அதிக பலன் தருகின்றது. இதனைத் தான் ஆசியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி என்கிறார்கள். ஆசியப் பொருளாதாரம் என்பது தேசிய அரசுகளின் வளர்ச்சி அல்ல; முழுமையான உலகச் சுரண்டல் முறை. இதன் கொடூரத்திற்கு எதிராக இந்தியாவில் மட்டுமல்ல சீனாவிலும் மக்கள் போராடுகிறார்கள். ஆபிரிக்க நாடுகள் வரை சீனப் பொருளாதர சுரண்டல் எல்லை விரிவடைந்துள்ளது. அங்கும் அடக்கப்படும் மக்கள் சீனப்பொருளாதாரத்திற்கு எதிராகப் போராடுகிறார்கள்.
ஐரோப்பாவின் வீழ்ச்சியை ஏகாதிபத்தியங்கள் எதிர்கொள்ள முடியாத நிலையை எட்டியுள்ளன. அங்கும் மக்கள் போராடுகிறார்கள். இந்தப் போராட்டங்களை உலக உழைக்கும் மக்களின் ஒருங்கிணைவாக உருமாற்றும் சக்தி ஒடுக்கப்படும் தேசிய இனமான தமிழ்ப் பேசும் தேசிய இனங்களுக்கு உண்டு என்பதில் உறுதிகொள்ள வேண்டும்.
நாம் ஒரு அதிஅகாரத்தை இன்னொரு அதிகாரத்திற்கு எதிராகப் பயன்படுத்துவதாகக் கனவுகண்டு தோற்றுப் போயிருக்கிறோம். புதிய உலக அரசியல் மாற்றத்தில் அதிக பலம் பெற்றிருப்பவர்கள் ஒடுக்கப்பட்டும் மக்களே என்பதை இன்று உலகமெங்கும் நடைபெறும் எழுச்சிகளும் அவற்றின் வெற்றிகளும் இனம்காட்டுகின்றன.
இலங்கையில் மக்களை அழிப்பதற்கும், இலங்கை அரசைப் போர்க் குற்றச்சாட்டுக்களிலிருந்து பாதுகாப்பதற்கும் இந்திய – சீன அரசுகள் இணைந்தே செயற்பட்டிருக்கின்றன. ஆனல் மத்திய இந்தியாவில் அதன் இதயத்தின் மீது இன்னும் உறுதிகுலையாமல் போராடும் மாவோயிஸ்டுக்களை இந்திய இராணுவத்தால் அழிக்க முடியவில்லை. இந்தியாவின் டாட்ஜீலிங் மலைகளின் மறுபுறத்தில் கூப்பிடு தூரத்தில் இருக்கின்ற நேபாள மக்கள் போராடி வெற்றி கண்டிருக்கிறார்கள். சீனா கூட எதிர்க்கப்பட வேண்டிய வல்லரசாகவே அவர்கள் அறிவித்துப் போராடி வென்றார்கள் என்றால் நமது தோல்விக்குக் காரணத்தைப் புரிந்துகொள்ள வேறு உதாரணங்களே தேவையற்றவை.
இந்தியாவிற்கு எதிராக சீனாவையும், சீனாவிற்கு எதிராக இந்தியாவையும் பயன்படுத்துவோம் என்ற தன்னம்பிக்கையற்ற, அடிமை மனோபாவத்திலிருந்து நாம் விடுபட்டாகவில்லை. இந்த இரண்டு எதிரிகளும் இணைந்து கொத்துக் கொத்தாக மக்களை அழித்த பின்பும் இவர்களை நம்பக் கோருவது அப்பாவித்தனம் மட்டுமல்ல கேலிக்குரியதாகும்.
சீனாவையும், இந்தியாவையும், ஐரோப்பாவையும், அமரிக்காவையும் நண்பர்களாகக் கருதுவதன் எதிர்வினையாக நாம் போராடும் மனிதாபிமானமுள்ள மக்களிடமிருந்து அன்னியப்பட்டிருக்கிறோம். நாம் அவர்களின் எதிரியின் பக்கம் சார்ந்தவர்கள் என்று தான் இது வரை கூறியிருக்கிறோம்.
நேர்மையோடு நாம் ஒடுக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் எமக்கு உதவ முன்வருகின்ற, எமது போராட்டத்தைத் தமது நலன்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளாத போராடும் ஒடுக்கப்பட்ட ஏனைய மக்களோடு இணைந்து இனியாவது இணைந்து கொள்ளவேண்டும்.
சீனன் நமக்கு சினேகிதன் ஆக முடியாது அவனது நூடிலஸ் போல,மாட்டு பிரைட் ரைஸ், பண்டி பிரைட் ரைஸ் என்றூ எதையும் நாம் சாப்பிடுவதில்லை.அவனுடைய பாம்பு தின்னும் ஊருக்குப் போய் நடுமுறீ தின்னவும் நாயைக் கொன்றூ விருந்து போடவும் நம்மால் முடியாது.பிரபாகரன் எனும் அப்பாவி மனிதன்,ஒன்றூமே தெரியாத பாப்பாவின் விளயாட்டை ரசிக்காமல் அதிகமாய் இன்வோல்வ் ஆகி தமிழன் அழிந்து தெருவில் நிற்பதற்கு இந்தியாவா காரணம்?மூன்றூ புத்தகம் ஒரு நாளீல படித்த தலைவரால் உலகில் என்ன நடக்கிறது எனத் தெரியாமல் போனது ஏன்?பம்பர விளயாட்டு வினையாயிற்றூ இப்போது புலம்புறது வாழ்க்கையாயிற்றூ.இனியாவது மகிந்தவின் கோமாளீக் கூத்தை ரசித்து நம்பியாரின் வில்லன் விளயாட்டக் காட்டினால்தான் விமோசனம்.சம்பந்தர் அய்யா காட்டுற திசை இந்தியாவெனில் அந்த திசையில் பயணீப்போம்.இந்தியா நமது இனிய நண்பன் 20/20 கிரிக்கெட் போல.
சம்பந்தர் அய்யா 20/20 கிரிக்கெட்டும் அடிப்பாரோ?
என்ன விளையாட்டெல்லாம் காட்டுகிற மனிசன் இதையும் விடுமா?
சிந்திக்கத்தூண்டும் விடயங்கள்.
வல்லரசுகளில் யாரும் தமிழரின் நண்பர்களுமல்ல, எதிரிகளுமல்ல.
அரசுகளுக்கிடையிலான முரண்பாடுகளைப் பயன்படுத்தும் விளையாட்டு ஒடுக்கப்பட்ட இனங்களுக்குக் குறுகிய கால நன்மை தந்தாலும் சில காலத்திலேயே அது தீமையாகி விடும். வல்லரசுகளுடன் சூதாடுவது மிக ஆபத்தானது.
தமிழ் மக்களின் நண்பர்கள் உலகின் போராடும் ஒடுக்கப்பட்ட மக்களே. இது நமக்கு இன்னமும் சரிவர விளங்கவில்லை.
இக் கட்டுரை அவ் விவாதத்துக்குப் பயனுள்ள பங்களிக்க வேண்டும்
இலங்கை அரசு தன் கேந்திர முக்கியத்டுவத்தை வைத்து வியாபாரம் செய்கிறது. விளைவு, முழுநாடும் தன் இறைமையை இழக்கும் ஆபத்துத் தான்.
சீனா வராவிட்டால் சரி / இந்தியா வராவிட்டால் சரி எனும் அணுகுமுறைகள் மூர்க்கத்தனமானவை.
“வல்லரசுகளில் யாரும் தமிழரின் நண்பர்களுமல்லஇ எதிரிகளுமல்ல.”
நண்பர்களல்ல என்பது சரிதான். எதிரிகளல்ல என்று எப்படிச் சொல்லலாம். ஒடுக்கப்படும் மக்களின் நலன்களிற்கு வல்லரசுகள் எப்போதுமே எதிரானவையே. காலத்திற்குக் காலம் அவை தமது நலனிற்காக – தமது நலனிற்காக – யாரைப் பயன்படுத்த (பயன்பட அல்ல) முடிவு செய்கின்றனவோ அவர்களிற்கு நண்பன் போல வேடமிட்டுக் கொள்ளும்.
voter,
நன்றி
உங்களை நான் மறுக்கவில்லை.
நான் சொல்ல முனைந்தது தமிழரை இலக்கு வைக்கும் எதிரிகள் என்ற கண்ணோட்டத்தில் கூறப்ப்பட்டு வருவதை மறுத்தே.
மற்றப்படி, எந்த மேலாதிக்கமும் எல்லா ஒடுக்கப்பட்ட மக்களதும் இனங்களதும் எதிரியே.
எமக்கு நண்பர்கள் கிடைக்காவிட்டாலும் எதிரிகளை குறைத்து கொள்வோம்.
இந்த உலகில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் கிடையாது இது தனிமனிதருக்கும் பொருந்தும்.சிறிய நாடுகளோ சிறுபான்மை இனங்களோ சார்பு நிலையற்று நிலைத்திருப்பதென்பது ஒரு போதும் சாத்தியமில்லை என்பதை வலராறு தெளிவாக உணா்த்துகிறது,சிங்கள அரசு சார்ந்து நின்றிருக்காவிட்டால் போரை வென்றிருக்கமுடியாது,பாலஸ்தீனியா்கள் கமாஸாக இருந்தாலும் பிஎல்ஒவாக இருந்தாலும் தனித்து நிற்கமுடியவில்லை அமேரிக்க இல்லாமல் பி.எல்.ஒ சமாதான பேச்சுக்கு போகமுடியாத நிலையே காணப்படுகிறது தனியே நேபாளத்தின் மாவோயிஸ்ட்களை முன்னிறித்தி ஏனைய போராட்டங்களையும் நோக்குவது அா்த்தமற்றது அவா்களுக்குப்பின்னால் யார் இருக்கின்றார்கள் என்பது யாருக்கும் தெரியாது.
புலிகள் அழிக்கப்பட்டபோது பாலஸ்தீன தலைவா் அபாஸ் ராயபக்சவிற்கு வாழ்த்துச்செய்தி அனுப்பினார் அவா் சிலவேளை கமாஸ் உடன் அவா்களை ஒப்பிட்டிருக்கலாம் ஆனால் ஒரு விடுதலைக்காக போராடுகின்ற இனத்தின் தலைவா் இன்னொரு விடுதலைக்காக போராடும் இனத்தை மதிக்கவில்லை என்றே எண்ணத்தோன்றுகிறது. ஒவ்வொரு போராட்டமும் வித்தியாசமான சூழ்நிலைகளை கொண்டுள்ளன அதில் வல்லரசுகளின் நலனும் சார்ந்தே உள்ளது ஆகையால் சாராமல் விடுதலை என்பது பகல் கனவாகவே முடியும்.
முதலாவதாக, அபாஸ் அமரிக்காவின் அடிமை.
அப்படி இல்லாவிட்டாலும், யாரும் நமக்காக இரங்கும் படி நமது தலைமைகள் பாதிக்கப்பட்ட யாருக்காகவாவது இரங்கியிருக்கிறார்களா?
நல்ல கட்டுரை. கூடவே சிவாவின் பின்னூட்டமும் . மேலும் எண்பதுகளின் ஆரம்பத்தில் இயக்கங்களுக்கு இந்தியா பயிற்சி கொடுக்க ஆரம்பித்த காலத்தில் அல்லது அதற்கு சற்றுமுன்னதாக இந்தியாவில் தங்கியிருந்த சிறுசிறுகுற்றசெயல்களில் ஈடுபட்ட சமூகவிரோத தன்மையுடைய இலங்கை தமிழ் இளையோர் சிலருக்கும் (இயக்கங்களுக்கு வெளியில்) பயிற்சி கொடுத்து நாட்டிற்கு அனுப்பியது. இவர்களுக்கு இ.உளவுத்துறையால் மாதாந்தம் ச்ம்பளம் வழங்கப்பட்டு வந்தது. பலர் இலங்கையில் கைது செய்யப்பட்டார்கள். இவர்களுக்கு வழங்கப்பட்ட பணி பொதுமக்கள் இலக்கு உட்பட்ட நாசகாரவேலைகள்தான். முதன்முதலில் டொலர்பாம்,கென்ற் பாம் போன்ற குடியேற்றக்கிராமங்களிலும், அனுரதபுரத்திலும் சிங்கள பொதுமக்கள் புலிகளால் படுகொலை செய்யப்பட்டபோது வெளிப்படையாக கண்டித்த இயக்கங்களை அவர்களின் தொடர்பாளர்களான றோ உத்தியோகதர்கள் ” நீங்களும் ஒண்டும் செய்யாமல் ஏதாவது செய்து கொண்டிருக்கிறவர்களை ஏன் கண்டிக்கிறீர்கள்” என செல்லமாக கடிந்துகொண்டார்கள். இந்திய இராணுவத்தின் சிப்பாய்களாக செயல்படுவோம் என தெரிவித்த ரெலோவையும், கொள்கையடிப்படையில்( சோவியத்தின் பிராந்திய ந்ண்பன் இந்தியவென்பதால் அதுமுற்போக்கு அணி) இந்தியாவை ஆதரித்த ஈ.பி.ஆர்.எல்.எவ் யும் இந்தியா கைவிட்டது. தனக்குரிய சரியான அடியாளாக புலிகளை அடையாளம் கண்டது. புலிகளும் பிரபாகரனும் இந்திய மேலாதிக்கத்தை கொள்கையடிப்படையில் எதிர்த்தவர்களல்ல. இந்தியாவின் கடிநாயாக( ஏக கடிநாயாக) தாங்கள் மட்டுமே இருக்க விரும்பினார்கள். இவ்வாறான கடிநாயின் தேவை இல்லாதுபோனபின் புலிகளின் முடிவுக்கு இந்தியாவே உறுதுணையானது. தொண்ணூறுகளின் இறுதியிலிருந்து இலங்கையின் மோட்டார்வாகன சந்தையில் எண்பது வீதத்தை கையகப்ப்டுத்தியிருக்கின்றது. இது சிறு உதாரணம்.
அதலபாதாலத்தில் போய் கொன்டிருந்த இலங்கை பொருலாதாரத்தை தாங்கிப்பிடித்தவர்கல் இந்த முதலாலித்துவ அதிகாரமையத்தினரெ, பெருவாரியன மக்கல் இந்த அதிகாரமையத்திமனர்டு முரன்பட்டவர்கலாகவே வால்கிரார்கல்.அந்தமுரன்பாடுகல் போராட்டங்கலை வலத்தெடுக்கின்ரன.இதில் தேசியவிடுதலை போராட்டமும் கூர்மையடைகின்ரது.அதிகார மையங்கலுக்கு எதிராக வலத்தெடுக்கப்படவென்டிய போராட்டம் அவர்கலின் ஆதரவை வேன்டினிட்பது இயலாமையின் வெலிப்பாடேயாகும்.
தெற்காசிய மண்டலட்தில் இந்தியாவை எதிக்காமல் எந்த விடுதலையும் அடைய முடியாது. விடுதலை இயக்கட்தின் பலத்திற்Kஏற்ப இந்தியாவின் எதிரிகளை பயன்படுத்துவதே சரியான உத்தியாகும்.
திரும்ப திரும்ப இந்தியா அதன் எதிரிகள் இருவ்ரையும் சமமாக வைத்து, ஒன்று முற்றிலும் பயன்படுத்துவதைநிராகரிப்பது அல்லது இருவரையும் பயன்படுத்தநினைப்பது, என்ற செக்குமாட்டு சிந்தனையிலிருந்து வெளிவருவது மிகமுக்கியமானது ஆகும்.