“இந்தியாவுடன் எழுந்த கருத்து வேறுபாடு இருபது வருடங்களாக அந்த நாட்டை எம்மிலிருந்து அகன்று நிற்க வைத்தது மட்டுமன்றி, எமக்கு எதிராகவும் செயற்பட வைத்தது என்ற வரலாற்றுப் பாடத்தை மறந்துவிடக் கூடாது” என்று கூறியிருப்பவர் சம்பந்தர். 80 களில் இருந்து இந்தியா அரசு தமிழ்ப்பேசும் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை சிறுகச் சிறுக அழித்து முள்ளிவாக்காலில் இரத்த ஆறாக ஓடவிட்ட வரலாற்றுப் பாடத்தை மறந்துவிட்டு மக்களிடம் வாக்குப் பொறுக்கிய தமிழரசுக் கட்சிக் கும்பல் நடத்திய மாநாட்டில் சம்பந்தன் கூறியிருக்கிறார்.
மேலும் உரையாற்றிய சம்பந்தன், இந்தியாவின் தலையீடு என்பது ஒரு தவிர்க்க முடியாத வரலாற்று நியதியாக எமது போராட்டத்தில் இடம்பெற்றது. எமது விருப்புக்கள் என்னவாக இருந்தாலும் இந்தியாவின் தேசிய நலன்களுக்கு ஒத்திசைவாக அமையாத எந்த ஒரு தீர்வையும் இலங்கைத் தீவில் பெற்றுவிடுவதை இந்தியா வரவேற்காது என்பதுவே இந்தியத் தலையீடு எமக்கு உணர்த்திய கட்டாயப் பாடமாக அமைந்தது என்றார்.
இந்தியத் தேசிய நலன் என்பது இந்தியாவில் வாழும் மக்களை ஒடுக்குவதிலிருந்து ஆரம்பமாகி அயல் நாடுகளில் இனப்படுகொலையைத் திட்டமிடுவது என்பது வரை நீண்டு செல்கிறது என்பதையும் சம்பந்தன் வசதியாக மறந்துவிடக் கோருகிறார்.
இந்தியத் தேசிய நலனும், சம்பந்தன் சார்ந்த அதிகார வர்க்கத்தின் நலனும், சிங்கள அதிகார வர்க்கத்தின் நலனும் ஒரு புள்ளியில் சந்திக்கிறது என்பதை சம்பந்தன் மக்களுக்கு அறிவித்திருக்கிறார்.
இந்த மூன்று நலன்களுக்கும் எதிரான தமிழ்ப் பேசும் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தின் நட்பு சக்திகள் இந்திய ஒடுக்கப்பட்ட மக்களும், சிங்கள உழைக்கும் மக்களும் என்பதை இரா.சம்பந்தன் சொல்லித் தருகிறார்.
I feel collectively we have failed to achieve the seperate country for the Tamils in Sri Lanka. The main factor in my opinion we have failed to understand the World Politics. Tamils had all the courage to take up Sri Lanka and we were wiped out in Mulliwaikal?? World stood and watched and even after three years we are crying foul. It is important that we understand the changing world and accept certain matters whether we like it or not and use this to our advantage. If we fail to do this we may not see a Tamil race in Sri Lanka.
Learn from Sinhalese, India was number one enemy fro them and how they are handling thier affairs. Let us think about what is the best option available for us at present.
அழித்தவனே எம்மை அணைப்பான். நல்ல சித்தாந்தம். இந்தியாவின் நலனைத் தெளிவாகப் புரிந்து வைத்துள்ள சம்பந்தன், தமிழ் மக்களின் நலனை அறிந்து கொள்ளவில்லை. வாக்குப் பொறிக்கிகளுக்கு அதற்கெல்லாம் எங்கே நேரம் கிடைக்கப்போகிறது.
தமிழரசு என்றால் என்ன? சமஷ்டி என்றால் என்ன? என்று அவர்களுக்கே தெரியாது. அது சரி…இந்திய தேசிய நலங்களுக்கு ஒத்திசைவான தீர்வு என்னவென்று இனியாவது கூறுங்கள் சம்பந்தன் ஐயா!.
மக்களின் அழிவு என்பது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி என்றால், நீங்கள் எதற்கு?. அந்த ஒடுக்கப்பட்ட மக்களைப் பிரநிதித்துவம் செய்யும் அருகதை உங்களுக்கு உண்டா? சொல்லுங்கள் சம்பந்தன் அவர்களே?
சர்வதேச சூழல் சாதகமாகத் திரும்பி வருகிறது என யார் ஏமாற்றப்பார்க்கிறீர்கள்? அது எமக்குச் சாதகமானதில்லை. வல்லாதிக்கவாதிகளுக்கே அது சாதகம்.
Indiana, USA. 1964. President Lyndon Baines Johnson. People of South Vietnam have bravely borne this brutal battle, We will choose life. The enemy has met its Master. Senior Lecturer in Zoology Mr. Venkatesh Lecthumanan, University of Oklahoma, Norman, Oklahoma, USA. and the Department of Zoology, University of Jaffna, Sri Lanka – Shri Lanka. E-mail: Noble@jfn.ac.lk
அட கேடு கெட்ட தமிழனே(நீ தமிழன்தானா?) வெட்கப்படுகின்றோம் வேதனைப் படுகின்றோம். உங்களைப் போன்ற மானம் கெட்ட பிறவிகளை சபையில் முன்நிறுத்தியதற்காக. இந்தியன் சிங்கள இனவெறி அரசுகளுக்கு ஒப்புறவாகவே கால காலம் செயற்பட்டான். அதன் ஒரு பகுதி தமிழரழிப்பு. பிரச்சனைகயளுக்கு முகம் கொடுக்த் தெரியாது இந்தியனின் காலடிக்குள் ஓடிப் போய் காலம் காலமாய் வீழ்ந்ததனால் தான் இன்றைக்கு தமிழருக்கு இந்த நிலை. தமிழர் இரத்தம் தோய்ந்த சிங்களக் கொடியேந்தி சரணடைந்தாகிவிட்டது. இனி தமிழர் இரத்தம் தோய்ந்த இந்திய நாசகால சக்கரத்தை தூகியாட்ட ஆயத்தமா? விளக்குமாற்றுக் கட்டைகளுக்கு நாம் தமிழர் பட்டுக் குஞ்சம் கட்டி அழகுபார்த்து விட்டோம். இனி அவர்கள் கதை கேட்டு அனுபவிக்க வேண்டியது தான்.
Colombo will become as important as New Delhi.