இலங்கை இனப்பிரச்சனைக்கு “சர்வதேச அரசுகளை” நம்பியிராமல் இலஙகை அரசு அமைத்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்குபற்றி இணக்கமான தீர்வைக் காணுமாறு இலங்கைகான இந்தியத் தூதுவர் அசோக் காந்தா வலியுறுத்தியுள்ளார். தமிழ்ப் பேசும் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை அழிப்பதில் “சர்வதேசம்” என்று அழைக்கப்படும் உலகின் ஒடுக்குமுறை அரசுகள் அனைத்திலும் அதிகமாக இந்திய அரசே முனைப்புக்காட்டி வந்துள்ளது பல ஆயிரம் மக்களின் அழிவிற்கும் தேசியவிடுதலைப் போராட்டம் நிர்மூலமாக்கப்பட்டதற்கும் பிரதான சரவ்தேசக் காரணி இந்திய அரசே.
இன்று பல்தேசிய நிறுவனங்களின் நலனுக்காக இந்தியா முழுவதும் மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதும் வளங்கள் சுரண்டப்படுவதும் இந்திய அரசின் புதிய ஆக்கிரமிப்பு முகத்தை மக்களுக்கு கோரமாக அறிமுகப்படுத்தியது. இதன் ஒரு பகுதியாக அழிக்கப்படக் கூடிய நிலையில் காணப்பட்ட தேசிய விடுதலைப் போராட்டத்தின் இருப்பு இந்திய அரசிற்குத் தேவையற்றுப் போனது. இதன் ஒரு பகுதியாக வன்னிப் படுகொலை திட்டமிட்டு நடத்தப்பட்டது. அதன் மறு பகுதி நில ஆக்கிரமிப்பும் வளங்களைச் சுரண்டுதலும் ஆகும். சிங்கள பௌத்த பேரினவாதம் நில ஆக்கிரமிப்பிற்குப் பொருத்தமானதாகக் கருதும் இந்திய அரசின் நட்பு சக்திகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மகிந்த ராஜபக்ச குடும்ப அரசும் இனம் காணப்பட்ட நிலையில் இந்திய அரசு இந்த இரண்டு சக்திகளதும் உள் முரண்பாட்டைத் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இலங்கை அரசிற்கும் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையேயான உள்முரண்பாடு பகை கொண்டதாகத் தோற்றமளிக்கும் நேச முரண்பாடு என்பதை இந்தியத் தூதுவர் வேறு வகையில் கூறியுள்ளார்.
May be he should read, Assignment Colombo, by Jothindra Dixit. I never bothered to read that anyway.
தங்களையும், மேற்குலகையும் நம்ப வேண்டாமென நேரடியாகச் சொல்கிறார் இந்தியத் தூதுவர்.
உங்களின் உரிமைகளைக் கொடுங்களென்று சிங்களத்தை அச்சுறுத்த எம்மால் முடியாது என்பதை நாகரீகமாகக் கூறியுள்ளார்.
இந்தியா இல்லாமல் தீர்வு இல்லை என்போருக்கு இது சமர்ப்பணம்.
மேற்குலகைப் பிடித்து தீர்வினைப் பெறலாம் என்று கனவு காணும் சில புலம் பெயர் அமைப்புக்களுக்கும் இது சமர்ப்பணம் .
ஈழத்தமிழ் மக்களைப் பொறுத்தவரை இந்தியாவும்,சீனாவும் ஒன்றுதான்.
சீன தேசம் எம்மைப் பற்றி கவலைப்படுவதில்லை.
இந்தியாவானது கவலைப்படுவது போல் காட்டி , சிங்களத்தை தாங்கிப் பிடிக்கிறது.
அசோக் காந்தாவின் கூற்றில், இன்னமும் அமெரிக்க-இந்திய பனிப்போர் இலங்கையில் இருப்பதையே உறுதிப்படுத்துகிறது. சர்வதேசத்தை நம்ப வேண்டாம் என்று அவர் சொல்வது இதைத்தான்.
சர்வதேச அரசியலில் இந்தியா, சீனா, மேற்கத்திய அரசுகளின் நல்ன்களுக்கு இடையிலான போட்டிகளுக்கான பகடைக்காயாக மட்டுமே இலங்கை விடுதலைப் போராட்டம் பயன்படும்.
இதனை மாற்ற வேண்டுமாயின் உலகிலுள்ள போராடும் மக்களோடு நாம் இணைய வேண்டும். அவைதான் எமது நட்புச் சக்திகள்.
இலங்கைத்தமிழர் விடயத்தை இலங்கை எப்பவோ இந்தியாவிடம் குத்தகைக்கு கொடுத்துவிட்டது.
மக்களை பார்வையாளராய் வைத்து பிரச்னையை தீற்க்கிரம் என்னும் பேர்வழியாய் சம்பந்தன் அன் கோவும் செயல்பட ஆரம்பித்துவிட்டது.
சம்மந்தன்ர மிட்டாயை சம்பந்தமில்லாமல் ஒருவன் பிடுங்க,அதை கேட்கவந்த காந்தா சம்மந்தனை பார்த்து சமாதானமாய் போ..என்று சொல்லும் காந்(தீய)ப்போதனைதான் இது.
Sarath Fonseka and Gothapa Rajapakse had once told Sampanthan at Mannar that the soldiers have guns in their hands. Sampanthan said, Pillayan, in a very peculiar way at the Devanayagam Hall Batticaloa. I thought that he must be Jaffna Vellalar.
There is now a regular Indian Army Cantonment at Coimbatore. The Southern Command is at Kaniyakumari, They had the Madras Regiment stationed at Nainy, Allahabad, Uttar Pradesh. One Indian Army Officer once said that they do not seem to be running out of ammunition.