பிரித்தானியாவிலிருந்து இயங்கும் இனியொரு (inioru.com), lankanewsweb.com ஆகிய இரண்டு இணைய ஊடகங்கள் தாக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டமைக்கு சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
மேற்படி இரண்டு இணைய ஊடகங்களும் அவற்றின் இணைய வழங்கிகள் மீதான விசமத்தனமான தாக்குதல்கள் மூலம் முற்றாகச் செயலிழக்கச் செய்யப்பட்டன. இவ் ஊடகங்களில் வெளியான செய்திகளின் எதிரொலியாகவே இத்தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளதாக நம்பப்படுவதனால், இவற்றை கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் செயற்பாடுகளாவே கருத வேண்டியுள்ளது.
செய்தி ஊடகங்களை செயலிழக்கச் செய்வதன் மூலம் கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்த முயலும் செயற்பாடுகளை சர்வதேச தமிழ்ச் செய்தியாளர் ஒன்றியம் வன்மையாகக் கண்டிக்கிறது. இச்செயலில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, இதுபோன்ற தாக்குதல்களை நடைபெறாவண்ணம் பாதுகாப்பதற்கு உதவுமாறு சமூக அமைப்புகளையும், பொதுமக்களையும் கேட்டுக்கொள்கிறோம்.
Best regards,
Kugan Thambipillai
Secretary, Journalist
International Association of Tamil Journalists
www.iataj.org
பயங்கரவாதத்தின் ஒருபுறம் பணம். அறிவாளிகளையும் கொலையாளிகளையும் மறைக்கக்கூடியதும் பணமேயாகும்.
இவற்ரையெல்லாம் வெல்லக்கூடிய சக்தி பத்திரிகையாளர் செய்தியாளர்களிடமேயுள்ளது.
பத்திரிகையாளர்களையும், செய்தியாளர்களையும் யார் மிரட்டுகின்றார்களோ அவ்ர்களே பயங்கரவாதிகள். அவர்களிர்கு
சொந்தமான இனமும் பயங்க்ரவாதிகளின் கைகளிலேயே சிக்கியுள்ளது.
குறிப்பாக தமிழ் பத்திரிகையாளர்கழும், செய்தியாளர்கழும் முதலில்
ஒற்றுமையுடன் செயற்படுவதன் மூலமே தமிழினத்தின் ஒற்றுமைக்கு
வித்திட முடியும். தவறின் பயங்கரவாதிகளின் கைகளில்தான் தமிழினம்
தவிக்கும்.