மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தன் பதவியை தக்க வைத்துக் கொள்ள நடந்த பவானிபூர் இடைத்தேர்தலில் பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தோல்வியடைந்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார். ஆனாலும் அவர் முதல்வராக பதவியேற்றுக் கொண்டதால் பதவியேற்று 6 மாத காலத்திற்குள் சட்டமன்ற தொகுதி ஒன்றில் போட்டியிட்டு வெல்ல வேண்டும் என்ற நிலையில் பவானிபூர் தொகுதியில் போட்டியிட்டார்.கடந்த செப். 30ஆம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதுபோலவே ஜங்கிபூர் மற்றும் சமஸ்ர்கஞ் ஆகிய தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை அங்கு நடைபெற்றது. சுற்று வாக்குகள் எண்ணக்கையில் மம்தா பானர்ஜி தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். இதேபோல் ஜங்கிபூர் மற்றும் சமஸ்ர்கஞ்ச் தொகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிக வாக்குககள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருந்தனர்.
இந்நிலையில் மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தான் போட்டியிட்ட பவானிபூர் தொகுதியில் அமோக வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளார் பிரியங்கா திப்ரேவாலை விட 58,832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பிரியங்கா திப்ரேவால் 26,320 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.