**செந்தாமரைகள் சிலிர்த்துப் பூக்க வேண்டிய
அந்த சேற்று நிலத்தில்,
பெண் தாமரையே உன்னைப்
பிடித்துத் தள்ளியது யார்…?
மானமும் கானமும் வாழ்வெனக் கொண்ட மாதரசியே,
உன் துகிலைக் கிழித்துத் துப்பிய
அந்தத் துச்சாதனர்கள் யார்…?
**வெறி பிடித்த நாய்களின் நடுவே-
தாயே நீ, தனித்து விடப்பட்ட ஆட்டுக்குட்டியாய்…
விஷம் கொண்ட பாம்புகள் நடுவே-
அம்மா நீ ஆதரவற்ற அணிற் குஞ்சாய்…!
**நீ அசைத்து வந்த வெள்ளைக் கொடியா அது…?
அது, உன்னுடையதாகத்தானிருக்கும்! இல்லாவிட்டால்,
அந்த நேரத்தில் அவர்களுக்கேது அந்தத் துணி…???
**சரணடையச் சென்ற வேளையுந்தன்
சமாதானக் கொடியைப் பறித்து வைத்துவிட்டு-தம்
பாவக் கரங்களால்-கோர நகங்களால்
அவர்கள் உனது ஆடை கிழித்த பொழுதில்-
**உயிரிழந்தேனும் மானம் காக்கும்
உத்வேகத்தில் ஓடிப் போனாயோ,மகளே…?
சேற்றுக்குள் புதைந்தேனும்
செத்துவிடத் துணிந்தாயோ செல்வமே…?
**அது, ஆறாக இருந்திருக்கக் கூடாதா..?
உன்னை அடித்துச் சென்றிருக்குமே…!
சேறாகப் போனதனால் செயலிழந்து நின்றாயே…!!
**துரத்தி வந்த துஷ்டர் கரங்களில் சிக்கி -செம்
பருத்திப் பூவேநீ பாழ்பட்டுச் சிதைந்தனையோ…?
வருத்தி யுன்னையவர் வதைத்துக் குதறுகையில் -அதை
நிறுத்தும் வழியற்று நிலமதிரக் கதறினையோ…?
**ஐயோ..ஐயோ…!
**வன்னியின் மரங்களெல்லாம்
கண்ணீரைப் பொழிந்தனவோ..?
வானமது முழங்கியதோ…?
வண்ண மயில் முடங்கியதோ…?
**வாசப் பூக்களெல்லாம்
வாழ்விழந்து மாண்டனவோ…?
வற்றாத குருதிமுள்ளி
வாய்க்காலில் பாய்ந்ததுவோ..??
**எமதிளைய மகளே……!
உன்னுடைய மரணத்தில்
உலகின் மனசாட்சி உயிர் பெற்றிருக்கிறது…!
**போரில் இறந்த புலிகள் மீதும் படையினர் மீதும்
அனுதாபம் கொள்கிறோம்,
அவர்களும் மனிதர்கள் என்பதால்…!
**கொல்லப்பட்ட தமிழ்-முஸ்லிம்-சிங்கள
மக்கள் மீது
இன்னுமின்னும் இரக்கம் வருகிறது,
ஏதுமறியா அப்பாவிகள் அவர்கள் என்பதால்…!
**ஆனால், எம்மினிய சோதரியே இசைப்பிரியா…!
**உன் மீதும் உன்னைப் போன்று மாண்ட
ஏராளம் பெண்கள் மீதும்
எமது இதயங்களைப் பிளந்து
இரத்த வணக்கங்களைச் செலுத்துகிறோம்,
நீங்கள் காதகர்களாலும் காமுகர்களாலும்
சிதைத்தழிக்கப்பட்ட
கார்த்திகைப் பூக்கள் என்பதால்…!!
நன்றி உயர்திரு ஹமீது அவர்களே.
உங்களின் மனிதநேயம் உங்கள் எழுத்தில் தெரிகிறது
**கொல்லப்பட்ட தமிழ்-முஸ்லிம்-சிங்கள மக்கள் மீது
இன்னுமின்னும் இரக்கம் வருகிறது,
ஏதுமறியா அப்பாவிகள் அவர்கள் என்பதால்…!”
1)
உங்கள் ஒப்பாரியை பிரதியெடுத்து அதை கார்த்திகைப் பூக்களுடன் சேர்த்து விற்றுப் பணமாக்க பல பிழைப்பு வாதிகள் முயலலாம்
2)
கார்த்திகைப் பூவை விற்றுப் பணம் சேர்ப்பவர்களுக்கு உங்கள் கவிதையை — கவலையைக் காசாக்கத் தெரியாதா?
3)
இங்கு மனிதநேயமற்ற பலர் மனதைப் புண்படுத்தும் கருத்துக்களைக் கூறுவார்கள் அவற்றை தணிக்கைசெய்து “இனிஒரு” வெளியிட வேண்டாம் என்று தாழ்மையாக வேண்டிக்கொள்கின்றேன்
நல்லவர்கள் ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்ப்பதால் உலகில் பல அநியாயங்கள் நடக்கின்றன அவைகளை ஒருங்கிணைத்து மனிதநேயமுள்ள புதியதோர் உலகம் செய்ய விரும்பும் எங்கள் சிலருக்கு உங்கள் email முகவரி தேவைப்படுகின்றது தயவுசெய்து அதை இங்கு தெரியப்படுத்தவும்
அவலத்தை தந்தவனுக்கு அதை பல மடங்கு திருப்பித் தர முயற்சி செய்வோம்
Velu thamby க்சொன்ன மாதிரி சயனிடெ அடிxக்கிருக்டா இந்த பிரஷ்ஷினை இல்லயெ
உண்மைதான் உயர்வான வரலாற்றுப் போரை தீர்மானிப்பது
சோதனைகள்தான் சாதனைக்கான அடிப்படை
உன் மீதும் உன்னைப் போன்று மாண்ட
ஏராளம் பெண்கள் மீதும்
எமது இதயங்களைப் பிளந்து
இரத்த வணக்கங்களைச் செலுத்துகிறோம்,
நீங்கள் காதகர்களாலும் காமுகர்களாலும்
சிதைத்தழிக்கப்பட்ட
கார்த்திகைப் பூக்கள் என்பதால்…!!