ஜெனரல் சரத் பொன்சேக்கா பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும், அவரை அரசியல் ரீதியாக அழிப்பதற்கான ஒப்பந்தம் அரசாங்கத்தினால் சண்டே ரைம்ஸ் பத்திரிகையின் ஆலோசகராகப் பணியாற்றும் இக்பால் அத்தாஸிற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின்னர் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ச விற்கும் இக்பால் அத்தாஸிற்கும் இடையில் நடைபெற்ற இரகசியப் பேச்சுவார்த்தையின்போது இந்த ஒப்பந்தம் அத்தாஸிற்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பிரிகேடியர் கபில ஹெந்தாவித்தாரனவே இருவருக்கிடையிலான சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளார்.
சண்டே ரைம்ஸ் பத்திரிகையில் சரத் பொன்சேக்காவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அரசியல் கட்டுரை மற்றும் செய்திகளை எப்படி வெளியிட வேண்டும் என்பதை பிரிகேடியர் கபில ஹெந்தாவித்தாரன வாரந்தோறும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நாட்களில் இக்பால் அத்தாஸை தொடர்புகொண்டு தெளிவுபடுத்துவதாகவும் தெரியவருகிறது.
சண்டே ரைம்ஸ் பத்திரிகையின் பாதுகாப்பு பத்தி ஊடாக ஜெனரல் பொன்சேக்காவின் பாத்திரத்தை களங்கப்படுத்தும் முனைப்புக்கள் அரசாங்கத்தின் கட்டளையின்படியே நடைபெற்று வருகிறது.
எனினும், ஆச்சரியத்திற்குரிய விடயமென்னவெனில் கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் காலத்தில் இக்பால் அத்தாஸ் கொண்டிருந்த நிலைப்பாடாகும். அப்போது அவர் அடிக்கடி ஜெனரல் பொன்சேக்காவை சந்தித்ததுடன் தமது பத்திரிக்கை மற்றும் அரசியல் பத்திகளில் ஜெனரல் பொன்சேக்கா வெற்றிபெற வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதாகக் கூறிவந்தார்.
மக்கள் அலை பொன்சேக்கா பக்கம் இருப்பதை இக்பால் அத்தாஸின் பாதுகாப்பு மற்றும் அரசியல் கட்டுரைகளில் உறுதிப்படுத்தப்பட்டது. எனினும், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இக்பால் அத்தாஸிற்கும் பாதுகாப்புச் செயலாளருக்குமிடையில் புதுவிதமான நெருக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனடிப்படையில் சண்டே ரைம்ஸ் பத்திரிகையில் வெளியாகும் கட்டுரைகளும், செய்திகளும் கோதாபய மற்றும் கபில ஹெந்தாவித்தாரன ஆகியோரது தேவைக்கமைய வெளியாவதாக அறியக்கிடைத்துள்ளது.
-lankanews.
ஆஙகில புலமை இல்லாத மகிந்த கோதபாய இவரை விலைக்கு வாஙகிவிட்டார்கள்.
அத்தாஸ் மட்டுமா?
மனித உரிமைக்காரர் சிலருக்கும் பிரபல தகவல் நிபுணர் சிலருக்கும் ராணுவமே தகவல்களின் ஊற்றுக் கண்ணாக இருந்து பின்பு சிலருக்கு உறவு விடுபட்டு விட்டது.
நடுநிலை போல நல்ல வேடம் உன்டோ?