இந்தியாவில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மிகப் பெரிய கோடீஸ்வர சைவ முதலாளி பங்கஜ் ஆஸ்வால்
. ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் 315 கோடி ரூபாய் செலவில் ஆடம்பர பிரமாண்ட வீடு ஒன்றைக் கட்டிக் கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் இவ்வீவு கட்டி முடிக்கும் போது இதுதான் ஆஸ்திரேலியாவிலேயே பெரியதும் பிரமாண்டமானதுமான வீடாகவும் இருக்குமாம். இந்த வீடு கட்டுவதற்காக தொழிலாளர்கள் பல மாதங்களாக இரவு பகலாக உழைத்து வருகின்றனர். பங்கஜ் ஆஸ்வாலும் அவரது மனைவியும் பார்ப்பனர்கள். வருண தர்மத்தின் படி வாழ்பவர்கள். ஆகவே தங்கள் வீட்டில் கட்டிட வேலை செய்யும் தொழிலாளர்கள் எவரும் கட்டுட வேலை நடைபெறும் இடத்திற்குள் அசைவ உணவுவகைகளை எடுத்து வரவோ வேலை நேரத்தில் அருந்ததோ கூடாது என்று தடை விதித்தனர். தொழிலதிபர் ஆஸ்வாலும் அவரது மனைவியான ராதிகாவுமே இபப்டியான கட்டுப்பாட்டை கொண்டு வந்திருக்கிறார்கள்.
இத்தகைய காட்டுமிராண்டித்தனமான கட்டுப்பாட்டிற்கு மேற்கு ஆஸ்திரேலிய கட்டுமான சங்கத்தின் தலைவர் ஜோ மெக்டொனால்ட் கடும் கண்டம் தெரிவித்திருக்கிறார்.
. ‘’ ஏனைய மக்களின் மத உணர்வுகளையும் கலாசார பழக்கங்களையும் நாங்கள் மதிக்கிறோம். ஆனால் இவர்கள் முதலாளிகள் என்பதாலேயே உடலுழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்களின் சைவ உணவை அருந்த வேண்டும் என்று சொல்ல இவர்கள் யார்? தாங்கள் நம்பும் உணவை பழக்க்கமான உணவை இன்னொரு உணவுப் ப்ழக்கம் உள்ள மக்கள் மீது திணிக்கிற இந்த மனோநிலையை அவர் கண்டித்திருக்கிறார்.
ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து இந்தியார்கள் மீது தாக்குதல் நடப்பதாகவும்,
, இது இனவெறித் தாக்குதல் என்றும் தொடர்ந்து இந்திய உயர் மட்டங்களும் ஆங்கில ஊடகங்களும் தொடர்ந்து கதறி வந்தன. ஆனால் உள்ளூரில் மனிதனை மனிதனாக மதிக்காத வெள்ளைத் தோல் இந்தியர்கள். உள்ளூரில் இருக்கும் கருப்பு மக்களை விட தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் கொண்டிருந்தனர். ஆனால் இந்த வெள்ளைத் தோலர்கள் ஆஸ்திரேலியாவிற்குச் செல்லும் போது தன்னை விட வெள்ளையாக இருக்கிற இன்னொருவனைப் பார்த்து பொறாமைபப்ட்டு அந்த சமூகத்தில் இருந்து விலகி பழமைவாத, பிற்போக்கு இந்திய வர்ணாஸ்ரம வாழ்க்கை முறையை அங்கும் போய் கடைபிடிப்பதால்தான் இந்தியர்களை ஆஸ்திரேலியர்கள் தாக்குவதாகவும் சொல்லப்படுவது குறிப்பிடத் தக்கது. மேலே நாம் சுட்டிக் காட்டியுள்ள ஆஸ்வால் கட்டும் வீடும். அங்கே ஆஸ்திரேலியர்களிடம் அவர் காட்டிய உணவுத் தீண்டாமையும் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.
இந்த அணுகுமுறை ஆபத்தானது.
ஒரு ஒடுக்குமுறையை வைத்து இன்னொன்றை நாம் நியாயப்படுத்த முடியாது.
அவுஸ்திரேலியாவில் குடியேறிய தென்னாசியர்கள் பெரும்பாலும் வசதியானநடுத்தக் குடும்பங்களைச் சேர்ந்தோரே. சாதி வேறுபாடின்றி அவர்கள் பழங் குடியினரை கேவலமாகப் பார்க்கின்றனர். வியற்னாமிய, சீன இன்னும் பிற ஆசியர்களும் இதில் விலக்கல்ல.
இதை ஒப்பிடுவதானால் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்குள் இருந்து வரும் சாதியம் உட்பட்ட ஒடுக்குமுறைகளுடன் ஒப்பிடலாம்.
அவுஸ்திரேலிய வெள்ளை இனவெறிக்குப் பலியாவோர் பெருவசதிபடைத்த ஆசியர்களல்ல. அவர்களுக்குத் தங்களை காப்பாற்றிக் கொள்ளத் தெரியும்.
தங்கள் வீட்டுக்கட்டிடம் கட்டும் இடத்தில்தானே கட்டுப்பாடு விதித்தனர். அசைவ உணவு சாப்பிட வேண்டுமென்றால் வேறு பகுதிக்குச்சென்று சாப்பிடலாமே. இது எப்படி ஆணவமாகும்?
இதில் தேவையில்லாமல் பார்ப்பணர்களை ஏன் இழுக்க வேண்டும். நாம் பார்ப்பணர்களைப்பார்த்து பொறாடமப்படுகிறோம். பொறாமைப்பட்டவர்கள் உருப்பட்டதில்லை. நான் இந்திய அரசில் 40 ஆண்டுகள் பணிபுரிந்தவன். பார்ப்பணர்களிடம் காணப்படும் டெடிகேஷன் மற்றவர்களிடம் மிகக்குறைவு. அதனால்தான் அவர்கள் எல்லாத்துறைகளிலும் ஜொலிக்கிறார்கள். தமிழுக்குத்தொண்டு செய்த தமிழ்த்தாத்தா ஈவெரா கிடையாது. உ.வே.சாமிநாதய்யர் அவர்களே.
தமிழ் தமிழ் என்று பேசுபவர்கள் எல்லாம் தமிழ் வியாபாரிகளே.
இவ்வர்று நான் எழுதுவதால் என்னை ஐயர் என்று எண்ணவேண்டாம். நான் இந்து நாடார்.
ஏன் இந்த கட்டிடதத்ததை உனதுநாட்டில் கட்டலாமே
உங்கள் சாதியை யார் கேட்டது. உங்களை அப்படி அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. பிராமணர்களுக்காக கதைப்பவர்கள் பிராமணராக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. வேலை செய்யும் இடத்தில் ஒருவர் தான் விரும்பும் உணவை சாப்பிடுவது அவரது உரிமை. அதனை தடை செய்ய முடியாது. அவர் இதைத் தான் சாப்பிட வேண்டும் என கட்டாயப்படுத்துவது காட்டுமிராண்டித் தனம்.
சரியாகச் சொன்னீர்கள். நான் ஓர் ஈழத் தமிழன். இந்தியாவில் பார்ப்பன குடும்பம்களுடன் பழகியுள்ளேன். ஓர் காலத்தில் எமது நாட்டி சிங்கள பேரின வாதம் உள்ள மாதிரி பார்ப்பன வாதம், பார்ப்பனியம் இருந்ததுதான். ஆனால் இன்று நிலைமை மாறி வருகிறது. அத்துடன் இது பங்கஜ் ஆஸ்வாலின் தனிப்பட்ட பிரச்னை. ஓர் ஜனநாஜக நாட்டில் விரும்பியோர் அவரிடம் தொழில் செய்வார்கள்.அவர் அவர்களை கட்டாயப்படுத்தி வேலை செய்வித்தாலோ அல்லது கட்டாயப்படுத்தி சாப்பாட்டை திணித்தாலோ நாம் அடக்குமுறை என்று சொல்லலாம்.
இன்று எமது நாட்டில் மலையகத்து சிறார்களை “தோட்டக்காட்டான்” “வடக்கத்தையான்” என்று கூறி வீட்டில் வேலைக்கு வைத்தோம். “மட்டக்களப்பான்”, “வன்னியான்” என்று பிரித்து, பின் “வடமராச்சிக்காரன்”, தென்மராட்சிக்காரன்”, “வலிகாமக்காரன்” என்று மட்டுமல்லாமல் தீவான் என்று பிரித்து அதிலையும் எந்த தீவான் என்று பிரித்து, எம்முக்குள்ளேயே சாதிய முறைகளினால் எம் இனத்தையே ஆண்டு வந்ததோடல்லாமல் இன்றும் புலம் பெயர்ந்த நாட்டிலும் எமது தாயகத்திலும் இவை தொடர்ந்து கொண்டே இருக்கிற நிலையில் இது ஓர் தனிபட்ட பங்கஜ் ஆஸ்வாலின் விருப்பு வெறுப்பு. இவ் பங்கஜ் ஆஸ்வால் ஓர் ஏழைப் பிராமனாராக இருந்தால் இதைப் பெற்றி பேசுவோமா?
உதாரணத்திற்கு பார்ப்பனர் அல்லாத மேல்வருவத்தூர் பங்காரு அடிகளாரின் வளாகத்தில் இதே தொழிலாளர்கள் மாமிசம் சாப்பிடமுடியுமா?
கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பது பொய்; தீர விசாரித்து அறிவதே மெய்!
– அலெக்ஸ் இரவி.
அலெக்ஸ் உங்களுடன் பெரிதும் உடன்படுகிறேன்.
பார்ப்பனியம் என்பது பார்ப்பனர்களை விட விசாலமானது. அச் சிந்தனை தாழ்த்தப் பட்டோரிடையும் குடி கொள்ளலாம்.
அந்தோனியோ கிராம்சி மேலாண்மைத் தத்துவம் என்று சொல்வது அச் சிந்தனை ஆதிக்கத்தையே. இலங்கையில் உள்ள சாதியம் பார்ப்பனர் இல்லாத பார்ப்பனியம் என்று கூடச் சொல்லலாம். அதன் ஆதார நிலையாக உள்ளது பர்ப்பன இந்து தருமம்.
கட்டடச் சொந்த்தக்காரர் செய்தது தவறு. ஆனால் விமர்சித்த கோணமும் மிகத் தவறு.
//இவ்வர்று நான் எழுதுவதால் என்னை ஐயர் என்று எண்ணவேண்டாம். நான் இந்து நாடார்.//
வெட்கமாக இல்லை, இப்படி எழுதுவதற்கு!ஒரு காலத்தில் நாடார் பெண்களை மானத்தை மறைக்கவிடாமல் அரை நிர்வாணத்துடன் அலைய விட்ட பார்ப்பனர்களுக்கு கூஜா தூக்குகிறீரே. தன்மானம் உள்ளவன் செய்யும் செயலா இது.
/இந்தியாவில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மிகப் பெரிய கோடீஸ்வர சைவ முதலாளி பங்கஜ் ஆஸ்வால்/– முதலில் இந்தக் கட்டுரையை,இலங்கைத் தமிழர் எழுதினாராß,இந்தியத் தமிழர் எழுதினாரா?.”ஆஸ்திரேலியாவில் வசிக்கும் “இந்து முதலாளி”” என்று இருக்க வேண்டும்”!.வட இந்தியர்கள் “மாமிசமில்லாத உணவை” வற்புறுத்தினால் அதை பாராட்ட வேண்டும்.தமிழ் நாட்டு பிராமனர்களே மாமிசமற்ற உணவை வற்புறுத்துகிறவர்கள்?.”சைவர்கள்” என்று கூறப்படும் கிட்டத்தட்ட அனைத்து “இலங்கைத் தமிழரும்” “மாட்டிறைச்சி உண்பவர்கள்,பெண்கள் உட்பட”!.
நான் தனிப்பட முறையில் கருத்து எழுதுவதில்லை. ஆனால் தாங்கள் எந்த ஆதாரத்தை வைத்து, ”சைவர்கள்” என்று கூறப்படும் கிட்டத்தட்ட அனைத்து “இலங்கைத் தமிழரும்” “மாட்டிறைச்சி உண்பவர்கள்,பெண்கள் உட்பட”!.” என்று குறிப்பிடுகிறீர்கள்?
எழுத்திற்கு சுதந்திரம் இருப்பதற்காக நாம் விரும்பியதை எல்லாம் எழுதவோ, ஓர் இனத்தை, மதத்தை தழுவியவரை, சாதிய முறையையோ தவறாக சுட்டிக்காட்டப்படாது.
தாங்கள் இவ் இணையதளத்தில் தெரிவித்த “சைவர்கள்” என்று கூறப்படும் கிட்டத்தட்ட அனைத்து “இலங்கைத் தமிழரும்” “மாட்டிறைச்சி உண்பவர்கள்,பெண்கள் உட்பட”!. என்ற கருத்திற்கு தகுந்த ஆதாரம் வைப்பீர்கள் என எதிர்பார்கிறேன்.
இதை நான் சகல ஈழத்ததமிழர் சார்பாக வைக்கிறேன். என் கேள்வியில் தவறு இருந்தால் ஈழத்ததமிழர்கள் யாராவது சுட்டிக் காட்டடும்.
ஐரோப்பாவுக்கு புலம்பெயர்ந்தும் செவ்வாயும், வெள்ளீயும் அசைவம் சாப்பிடாமல் வாழ்கிறவரில் அடியேனும் ஒருவன்.முட்டை,பால் சாபிடா நல்லூர் முதலிகள் இங்கிலாந்திலும் கீரைதான் சாப்பிடுகிறார்கள்.இங்குள்ள கோயில்கள் சைவவாழ்வை பதிவு செய்கின்றன.
அலெக்ஸ் அண்ணா!
தாங்கள் மோதுவதற்கு இந்த அற்ப ஜந்துதான் கிடைத்ததோ?
எழுதிவிட்டு போகட்டும். பாவம் கணக்கிலை எடுக்கவேண்டாம் பிளீஸ்
ரோசா! ஜேம்ஸ் ஒரு ” புத்தக பூச்சி” இலங்கை வரலாற்றை அரைகுறையாக வாசித்து அறிந்தவராச்சே! தனது “இருப்பை தக்க” வைப்பதற்குத்தான் இந்த வாசிப்பே தவிர அக்கறையில் அல்ல.எதோ பிழைச்சு போகட்டும்.மேலும் விமர்சிப்பது அழகல்ல.
ஜெமிஸ் பண்டா முன்பு மாட்டிறைச்சி விற்ற அனுபவத்தில் எழுதுகிறார். இவர் எழுதுவது கருத்தல்ல, அப்படியே தூர வீசவேண்டிய குப்பை.
ஐயா ஜேம்ஸ்
வட இந்தியர்கள் “மாமிசமில்லாத உணவை” வற்புறுத்தினால் அதை ஏன் பாராட்ட வேண்டும்?
“கிட்டத்தட்ட அனைத்து “இலங்கைத் தமிழரும்” “மாட்டிறைச்சி உண்பவர்கள்,பெண்கள் உட்பட!”
இது வேடிக்கையானது. நம்பகமான ஆதாரங்களற்றது .
ஆண்கள் சாப்பிடலாம் பெண்கள் சாப்பிட்டால் தவறோ?
பொதுவாக இலங்கையில் நடுத்தர கீழ்நடுத்தர வர்க்க சைவரோ பெளத்தரோ மாட்டிறைச்சியைத் தவிர்க்கின்றனர்.
இன்னும் எத்தனை காலமோ? உணவு விலை உணவுப் பழக்கங்களை மாற்றும் என நினைகிறேன்.
புலம் பெயர்ந்த சைவர்கள் பலர் மாட்டிறைச்சியைத் தவிர்க்க முயல்வதை அறிவேன். அது எல்லாராலும் இயலுவதில்லை.
மாட்டிறைச்சி சாப்பிட்டால் என்ன தவறு? கோழியை விடத் துப்புரவான பிராணி என்று பெரியார் ஒரு இடத்தில் குறிப்பிட்டிருந்தார்.
/?.”சைவர்கள்” என்று கூறப்படும் கிட்டத்தட்ட அனைத்து “இலங்கைத் தமிழரும்” “மாட்டிறைச்சி உண்பவர்கள்,பெண்கள் உட்பட”!./
சார்! நீங்கள் இவ்வாறு எழுதுவது கொஞம் ரூமச்!! சந்திக்கும் போது விபரம் கேதிறேன்.
நல்ல வதம் மணி அவர்களே.நானும் உங்கள் உறவீண் முறை சேர் தவன் தான். நாடார் சங்கம் வெப் சைட் லும் தங்கள் கருத்துகளை பதிவு செயுகள்.www.nadarsangam.com
பங்ஜத் அஸ்வால் சைவர் அல்ல அவர் ஒரு வைணவர் ஆனால் இந்தியர் என்றூ வைத்துக் கொள்ளூவோம்.
எந்த இந்து நாடாரும் இப்படி சிந்திக்க மாட்டான்.
மதுவை நாடார், மாததை நாடார் காமராஜ நாடார் வம்சமோ மணீ, சிவா நாடார் இரண்டு பில்லியனுக்கு அதிபதி, சரத்குமார் நாடார் சினிமாவில் அதிபதி, எபினேசர் லண்டன் கிறீஸ்தவர்க்கு அதிபதி.திநத்தந்து,மாலைமலர் எல்லாம் நாடார் வீட்டிலிருந்து வரும் பத்திரிகைகள்.
அதே கட்டுரையில் பேரா. சிவத்தம்பி இலங்கைத் தமிழர்களின் உணவுமுறை தமிழக உணவுப் பழக்கங்களிலிருந்து வேறுப்பட்டிருப்பதை (எடுத்துக்காட்டாக தேங்காய், மிளகு அதிகமாகவும், தயிர், மோர் ஆகியவை குறைவாகவும் பயன்படுத்துதல்) சுட்டுகிறார். இது கேரள உணவுமுறையை ஒத்திருக்கிறது. மேலும் இந்தியாவிலேயே தலித் மக்கள் நீங்கலாக மாட்டிறைச்சி உண்ணுவதைக் குறித்து எவ்விதத் தயக்கமும் மனத்தடையும் இல்லாத ஒரே இந்து சமூகமென்றால் அது மலையாளிகள் தான் என்று நினைக்கிறேன். ஈழத்தமிழரிடையே – குறைந்தபட்சம் மட்டக்களப்புத் தமிழர்களிடையே – மாட்டிறைச்சி உண்ணுவதைக் குறித்தத் தயக்கங்கள் அறவே இல்லை என்று அப்பகுதியைச் சேர்ந்த நண்பர் ஒருவர் சொன்னார்.
FOR MORE INFO http://kaiman-alavu.blogspot.com/2007/09/2.html
ஆடுதான் யாழின் இறைச்சி. கந்தசட்டி முடிய வெட்டுவார்கள்.விருந்துகளில் ஆடும் கோழியுந்தான்.
கடையில் மாடுதான்.
இந்த விஷயத்தை பல தளங்களில் நோக்க வேண்டும். சாப்பிடும் இடத்தில் வரும் வற்புறுத்தல்கள் கூடாது என்றால் அங்கு வேலைக்கு போகாது இருப்பதே நலம்.
அதே தருணம் அசைவம் சாப்பிடும் ஒரு நல்ல தொழிலாளியையும் முதலாளி இழக்க வேண்டியிருக்கும்.
யாருக்கு எது தேவையோ அதற்கு ஏற்றபடி நடவடிக்கை இருக்கப் போகிறது.
இந்தியாவிலும் ஜெயின்கள் முதலாளிகளாக இருக்கும் நிறுவனங்களில் கேண்டீனிலும் சரி அங்கு வீட்டிலிருந்து எடுத்து வரும் உணவு வகைகளிலும் சரி அசைவம் அனுமதி இல்லை என்றுதான் அறிகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு றாகவன் சார் பார்த்தியளே, கடைசியில் சமணரை சைவராக்கி தமிழர் தம் மண்டையை குழப்பியதே மிச்சம்.