கேரள சினிமாவின் முக்கியமான ஆளுமையான ஜான் ஆப்ரஹாமின் நண்பரும், அவர் குறித்து ‘தங்களது உண்மையுள்ள ஜான்’ எனும் ஆவணப்படத்தை உருவாக்கியவரும், தன்னளவிலேயே புகழ்வாய்ந்த பல ஆவணப்படங்களின் இயக்குனராக விளங்கியவருமான நண்பர் சரத் சந்திரன் கடந்த ஏப்ரல் 1 ஆம் திகதி, கேரள மாநிலும் திருச்சூரில் ரயிலிருந்து தவறி விழுந்து மரணமுற்றார்.
1958 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் திகதி கேரளத்தில் பிறந்த சரத் சந்திரன் தொழில்முறையில் கணக்காளர் என்றாலும் திரைப்படத்திலேயே அவரது ஆர்வம் இருந்தது. ஆறு ஆண்டுகள் கல்வி வளர்ச்சி அதிகாரியாக சவுதி அரேபியாவில் பிரிட்டிஸ் கவுன்சிலில் பணியாற்றிய அவர் எண்பதுகளின நக்ஸலைட் அரசியலில் ஆதர்ஷம் பெற்றவர். ஜான் ஆப்ரஹாமுடன் ‘ஒடஸா’ மக்கள் திரைப்பட இயக்கத்தில் இணைந்து செயல்பட்ட அவர், பிற்பாடு ‘விப்ஜியார்’ எனும் அமைப்பைத் துவங்கி ஆவணப்படங்களைத் தயாரிப்பதோடு, அவ்வமைப்பின் சார்பில் மாற்றுத் திரைப்பட விழாக்களையும் கேரளத்தில் நடத்தி வந்தார்.
கேரளத்தில் நடைபெற்ற மகத்தான மக்கள் போராட்டமான செங்காரா நிலப் போராட்டம் உள்பட பல மக்கள் போராட்டங்களில் முன்னணியில் நின்று செயல்பட்டவர். ஆதிவாசிக் குழந்தைகள் பற்றி இவர் உருவாக்கிய ‘கனவு’ எனும் ஆவணப்படமும், பிளாச்சிமடா மக்கள் இயக்கத்தை முன்வைத்து இவர் உருவாக்கிய ‘ஆயிரம் நாட்களும் ஒரு கனவும்’ எனும் ஆவணப்படமும், பத்துக்கும் மேற்பட்டு இவர் உருவாக்கிய ஆவணப்படங்களில் முக்கியமான இரு ஆவணப்படங்களாகும்.
அவரது நினைவைப் போற்றும் முகமாக அவரது நண்பர்களும் தோழர்களும் வரும் திங்கட்கிழமை 12 ஏப்ரல் 2010, ஒரு அஞ்சலி நிகழ்வை சென்னையில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். மாலை ஆறு மணிக்குத் துவங்கும் அந்நிகழ்வு சென்னையிலுள்ள நுங்கம்பாக்கம் லயோலா காலேஜ் அருகிலுள்ள AICUF மண்டபத்தில் நடைபெறும் எனவும் அவரது நண்பர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
மக்கள் சினிமாவை விளைந்த அமரன் தோழன் சரத் சந்திரனுக்கு எமது மனமார்ந்த அஞ்சலி.
அவருடைய சேவைகளுக்கு பாராட்டுவோம்,மறைவுக்கு அஞ்சலி செலுத்துவோம்!
நக்ஸல்பாரி இயக்கங்களுக்கும்,என்.ஜி.ஓக்களுக்கும்,”AICUF” க்கும் உள்ள தொடர்ப்புகளை யாராவது ஆராய்ந்து எழுதமுடியுமா?,அவ்வாறு செய்தால்,”மொட்டைத் தலைக்கும்,முழங்காலுக்கும் உள்ள முடிச்சுகள்” ஒருவேளை அவிழலாம்!.
/அவரது நினைவைப் போற்றும் முகமாக அவரது நண்பர்களும் தோழர்களும் வரும் திங்கட்கிழமை 12 ஏப்ரல் 2010, ஒரு அஞ்சலி நிகழ்வை சென்னையில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். மாலை ஆறு மணிக்குத் துவங்கும் அந்நிகழ்வு சென்னையிலுள்ள நுங்கம்பாக்கம் லயோலா காலேஜ் அருகிலுள்ள AICUF மண்டபத்தில் நடைபெறும் எனவும் அவரது நண்பர்கள் அறிவித்திருக்கிறார்கள்./
/லஞ்சத்தின் வீச்சு என்பது பெரு மளவில் கறுப்புப் பணம், மிகவும் ஆழ மான அளவில் பொருளாதாரக் குற் றங்கள் மற்றும் மோசடி நடைபெறு தல், இத்தகைய மோசமான மற்றும் இழிவான முறையில் வாழ்பவர்கள் அரசுக்கு எதிராகப் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி அளிக்கக் கூடிய அளவிற்குச் சென்றிருப்பதை யும் பார்க்க முடிகிறது. இவை நாட் டின் பாதுகாப்பிற்கே பெரும் அச் சுறுத்தலாக மாறிப் போயிருக்கிறது./– குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி.
இதற்கு காரணம் நடுத்தரவர்க கலாச்சாரம் அழிக்கப்படுவதுதான்!.”முள்ளியவாய்க்காலில்” இதைத்தான் புலன்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் செய்தார்கள்.தமிழ்நாட்டில்,பதினாலாயிரம் ரூபாய ஒவ்வொருவரும் கடனாளி,என்பது அமெரிக்காப்போல்,”டிரில்லியன்கள் டாலர்” கடனாளியாக மாற வேண்டுமா?,அப்போது சிலர் மட்டும் பில்லினீயர்களாக மாறவேண்டுமா?(அமெரிக்காவில் நடுத்தர வர்கம் இல்லை).ஏற்ப்படுத்துங்கள் “இரண்டாவது முள்ளியவாய்க்காலை” – “AICUF” மற்றும் நக்ஸல் பாரிகளின் தெலுங்கு உறுப்பினர்களுடன் சேர்ந்து!.
தோழர் சரத் சந்திரன் அவர்களூக்கு எமது வீர வண்க்கம்.