தயா மாஸ்டர் என்ற புலிகள் இயக்கத்தின் முன்னை நாள் முக்கிய பிரமுகர் தனது சகாக்களுடன் கோத்தாபய ராஜபக்சகவைச் சந்தித்துள்ளார். இராணுவ முகாம் ஒன்றில் இச்சந்திப்பு நடைபெற்றறுள்ளதாகத் தெரியவருகிறது. புது மத்தளான் பகுதியில் போர் இறுதி நாட்களில் சரணடைந்தவர்களுள் தயா மாஸ்டரும் ஒருவர். இதே வேளை தான் ஆளும் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறியுள்ளார். புலம்பெயர் நாடுகளிலிருந்து தோன்றிய சாதிக் கட்சிகள் உட்பட பல்வேறு குழுக்களைக் களத்தில் மோதவிடும் ராஜபக்ச கும்பல் தேர்தலில் வெற்றிபெறுவதற்கான கீழ்த்தரமான தந்திரோபாயங்களைக் கையாள்கின்றது. மற்றொரு இராணுவத் துணைக்குழுவான ஈ.பி.டி.பி இற்கும் மகிந்த அரசிற்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரித்திருப்ப்தாகத் தெரியவருகிறது.