இன்று நியு யோர்க் நகரில் மட்டும் 177 ஆர்ப்பாட்டக் காரர்களை அமரிக்கப் பொலீசார் கைது செய்துள்ளனர். முன்னதாக ஆர்ப்பாட்டக் காரர்கள் மீது தாக்குதல் நடத்திய பொலீசார் அவர்களைக் கைது செய்து வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.
அமரிக்கா முழுவதும் அமைதியாக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களைத் தடுத்து நிறுத்திய பொலீசார் கைதுகளையும் தாக்குதல்களையும் மேற்கொண்டனர்.
வோல் ஸ்ர்ரிட் ஆக்கிரமிப்பு இயக்கம் ஆரம்பித்து இரண்டு மாதங்கள் நிறைவடந்ததை ஒட்டி அமரிக்கா முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் லோஸ் ஏஞ்சலில் 23 பேர் கைதாகினர்.