மல்டி பில்லியன் டாலர் ஆயுத வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் ஐ.நா. பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தது. மாறாக, ஐ.நா. மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடர்வது என்ற முடிவிற்கு வந்த்து சேர்ந்தது. நான்கு வாரங்களுக்கு பிறகு ஒரு பொதுவான முடிவிற்கு வர முடியாது என்றும் மேலும் கால அவகாசம் தேவை என்றும் அமரிக்கா பேச்சுவார்த்தையை இடை நிறுத்திக்கொண்டது. அமெரிக்கா தலைமையிலான பிரதான ஆயுத ஏற்றுமதியாளர்கள் இந்த முடிவிற்கு வந்தனர்.
ஒக்ஸ்பாம் அமெரிக்கா, ஆயுத கட்டுப்பாட்டு கழகம் மற்றும் சர்வதேச பொதுமன்னிப்பு சபை போன்ற குழுக்கள் ஆயுத கட்டுப்பாட்டு ஆர்வலர்கள் அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து எதிர்ப்பை வெளியிட்டனர்.
அமரிக்காவின் ஆயுத விற்பனை உலகம் முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ள நிலையில் அதன் எதிர்ப்பு நடவடிக்கைகளை அமரிக்க சார்பு தன்னார்வ நிறுவனங்களே மேற்கொள்கின்றன. அழிப்பு நடவடிக்கைகளையும் அதற்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளையும் தனது கட்டுப்பாட்டு எல்லைக்குள்ளேயே வைத்திருக்க முற்படும் அமரிக்காவும் அதன் நேச நாடுகளும் ஆயுத விற்பனையையும் போர் நடவடிக்கைகளையும் தமது பொருளாதாரச் சிக்கல்களுக்கான தீர்வாக முன்வைக்கின்றன.
UN should hire K.P. like Dr. Radhika Cumarasamy. Only Pillayan was a Child Soldier.