தமக்குக் கிடைக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்கள் தாம் ஒடுக்கப்படுகிறோம் என்று உரத்துக் கூறியிருக்கிறார்கள். மக்கள் விரோதிகள், இடதுசாரி சந்தர்ப்ப வாதிகள், சுய நலமிகள் என்று ஒவ்வொருவரது மனச் சாட்சியிலும் குருதியறைந்து தம்மை இனம் காட்டியிருக்கிறார்கள். இந்திய விஸ்தரிப்பு வாதிகள், சீன வியாபாரிகள், அமரிக்க ஏகபோகம், ஐரோப்பிய மிரட்டல்கள் என்ற எதனையும் அவர்கள் பொருட்டாகக் கொள்ளவில்லை. தேசிய இன ஒடுக்கு முறைக்கு எதிரான அரசியல் தளத்தில் அவர்கள் அறுபது ஆண்டுகள் குவித்துவைத்த சாம்பல் மேடுகளின் மேல் நின்று போர்கொடி உயர்த்திக் கூறியிருக்கிறார்கள்.
வன்னி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், அம்பாறை என்று பேரின வாதிகள் குறிவைத்த ஒவ்வொரு பகுதிகளிலுருந்தும் உள்ளூராட்சித் தேர்தலினூடாக மக்களின் குரல் ஓங்கி ஒலித்திருக்கின்றது.
புலம் பெயர் நாடுகளிலிருந்து விடுமுறை உழைப்பிற்காக சொந்த தேசத்திற்குச் சென்று சோறு போடுவதே இன்றைய தேவை என்று மார்தட்டித் திரிந்த வியாபாரிகளை நோக்கி மக்கள் கோருகிறார்கள்! தாம் சலுகைகளுக்காக அலையும் பச்சோந்திகள் என இனிமேலும் அவமானப்படுத்த வேண்டாம் என்று கோரியிருக்கிறார்கள்!! “இணக்க அரசியல்” என்று தலையங்கமிட்டு இனப்படுகொலையாளர்களோடு கைகோர்த்துக் கொள்வதை தம்மால் அனுமதிக்க முடியாது என ஆணிததரமாகக் கூறியிருக்கிறார்கள்.
தேர்தல் தோல்வியை ஒத்துக்கொண்ட அரச துணைக்கட்சியான ஈ.பி.டிபியின் செயலாளர் டக்ளஸ் தேவானனந்தா வெற்றிபெற்ரவர்கள் அபிவிருத்தியில் ஈடுபட மாட்டார்கள் என்றும் கிள்நொச்சியிலும் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளதால் தமது அபிவிருத்தி வேலைகள் தடைப்படும் என்று மிரட்டியிருக்கிறார். மக்கள், தேசியக் கூட்டமைப்பு யார் என்று மிகத் தெளிவான புரிதலுடனேயே வாக்களித்திருக்கிறார்கள். அரச செலவோடு, ஆடம்பரமாக, அனைத்து வசதிகளோடும் மேற்கொண்ட பிரச்சாரத்திலேயே டக்ளஸ் குழாம் அபிவிருத்தியே தமது ஒரே நோக்கம் என்று ஒவ்வொரு தடவையும் கூறியிருந்ததை எல்லாம் மக்கள் அவதானமாகச் கேட்ட பின்னரே அவர்களுக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள்.
பேரினவாத ஒடுக்கு முறையின் கோரப்பசி முழுமையான இராணுவ ஒடுக்கு முறையாக உருவாகியிருந்த 70 களின் இறுதிப்பகுதியில் டக்ளஸ் தேவானந்தா ஆயுதமேந்திய அரசியலில் தன்னை இணைத்துக்கொண்டார். 1977இல் அவர் ஆயுதமேந்திய அதே காலப்பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆளும்கட்சிக்கு அடுத்த இடத்தில் வெற்றி பெற்றிருந்தது. டக்ளஸைப் போன்றே ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒரு புறத்தில் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்ட அதே வேளை பேரினவாத அரசிற்கு எதிரான ஆயுத எழுச்சியின் தேவையையும் உணர்ந்திருந்தனர்.
அன்றைய பேரினவாத அரசோ அன்றி அதன் துணைக் கட்சிகளோ தேசிய இன ஒடுக்கு முறைக்கு எதிரான மக்களின் குரலைக் கேட்க மறுத்தன. மக்கள் போராட்டத்திற்கான அரசியல் தலைமை இன்னும் உருவாகியிருக்கவில்லை. தன்னெழுச்சியான இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் இந்தப் பின்னணியிலேயே உருவாக இளைஞனான டக்ளஸ் ஈரோஸ் இயக்கத்திலும் அது பிளவடைந்த வேளையில் ஈ.பி.ஆர்.எல்.எப் இலும் இணைந்து கொண்டார்.
அதே வரலாற்றின் மறு விம்பம் இன்று அழிவுகளின் விழிம்பிலிருந்து உருவாகியுள்ளது. இப்போது டக்ளஸ் அரச துணைக் கட்சி! உரிமைகளை விலைபேசிவிட்டு பதவிக்காக அபிவிருத்தி என்ற பெயரில் தேர்தல் சந்தையில்!!
ஒரு வேறுபாடு. 77இல் காணப்பட்டதை விடவும் பல மடங்கு அதிகமாக தேசிய இன ஒடுக்கு முறை இனப்படுகொலையாகவும், இனச் சுத்திகரிப்பாகவும் திட்டமிட்டு நிறுவனமயப்படுத்தப்பட்ட நிலையில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.
அன்றைப் போலவே இன்றும் மக்கள் தங்கள் உணர்வுகளைத் தேர்தல் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார்கள். அன்றைப் போலவே தேர்தல் என்பதும் பாராளுமன்றம் என்பதும் இறுதித் தீர்வல்ல என்பதும் மக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.
ஒரு வேறுபாடு. 77 ஐப் போலன்றி வன்னிமண்ணில் குண்டுத் துகள்களைத் தாங்கிய ஆயிரக்கணக்கான குழந்தைகளைப் பேரினவாதம் உற்பத்தி செய்து வைத்திருக்கின்றது. பேரினவாதத்திற்கு எதிரான போராட்ட உணர்வு அவர்களின் “இரத்தத்தில் கலந்திருக்கிறது”. 30 ஆண்டு போராட்ட வரலாற்றைக் கண்ட அனுபவத்தை அவர்கள் சுமந்திருக்கிறார்கள்.
மக்கள் தீர்ப்பு, பாராளுமன்றத்தை நிராகரித்தல், அபிவிருத்தி அரசியலின் தோல்வி, ஆயுத எழுச்சி என்ற நிகழ்ச்சிப் போக்கு மறுபடி உருவாகும் அத்தனை சாத்தியங்களும் அதற்கான புறச் சூழலும் 70களின் பிற்பகுதிகளை விட மிக அதிகமாகவே காணப்படுகின்றன.
இதனை பேரினவாதிகளும், ஈ.பிடி.பி போன்ற அதன் துணைக் குழுக்களும், ஏன் தேசியக் கூட்டமைப்பும் கூட, நன்கு அறிந்தே வைத்திருப்பார்கள். இவர்கள் அனைவருக்கும் மேலாக இதனை ஜனநாயக முற்போக்கு சக்திகள் உள்வாங்கிக் கொண்டால் ஆயுத எழுச்சியின் தோல்வி இன்னொரு முறை நிகழாமல் இருக்கும்.
உத்வேகம் மிக்க இளைஞர்களெல்லாம் இப்படி செயல் இழந்து அரசுக்கு பின்னால் ஒளிந்து கொள்ள வைத்த சக்தி எது என்ற வரலாற்றையும் நாம் புரிந்து கொண்டால் மீண்டும் இது போல நிகழாமல் செய்யலாம் .
எது தாங்களும் தங்களை போன்றவர்களும் சிங்களவனுக்கும் இந்தியனுக்கும் உத்வேகத்துடன் கூட்டிக்கொடுத்ததையும் காட்டிகொடுத்ததையும் சொல்கிறீர்களா! அது பரவணி புத்தி ஆயுளுக்கும் போகாது. நாயை நடுக்கடலில் விட்டாலும் நக்கிகுடிக்கும் குணம் மாறாது
நாம் கேட்பது அபிவிருத்தியல்ல எம் மண்ணின் நிம்மதியான வாழ்வே. அபிவிருத்தி என்ற போர்வையில் அந்நிய கழிசடைகளை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இனியாவது இந்த அடிவருடி அரசியல் அநாகரிகங்கள் புரிந்து கொள்ளும் என நம்புகின்றோம். பட்டுக் வேட்டி சால்வை குஞ்சங்களுக்கு நாம் ஆசைப்படவில்லை கூலிக் குழுவின் தலைவனே நாம் வேண்டுவதெல்லாம் எம் உழைப்பால் பெறப்பட்ட கோவணத்துண்டுடன் நிம்மதியான சுதந்திரமான வாழ்வே. இனத்தைக் காட்டிக் கொடுத்த துரோகிகள் இனியாவது புரிந்து கொள்ளட்டும்.
எம் உழைப்பால் பெறப்பட்ட கோவணத்துண்டுடன் நிம்மதியான சுதந்திரமான வாழ்வே…..
அதையும் உருவியவர்கள் புலிகளும் அவர்களின் அடிப்பொடிகளும் என்பதையும் இனிஒரு ஞாப்கத்தில் வைத்து செயலாற்றவும் .இதை விட துரோகம் யாரும் செய்ய முடியாது.
//புலிகள் ஒரு தடவை எனக்கு விதித்த மரணதண்டனையை வாபஸ்பெற்றால் அடுத்த நிமிடம் நான் இந்த அரசைவிட்டு வெளிவருவேன்//.
(இங்கே புலிகள் விதித்த மரணதண்டனையுடன் எனக்கு தனிப்பட்டவகையில் உடன்பாடு கிடையாது)
இப்படி புலம்பிய டக்ளஸ் இன்று புலிகளும் இல்லை எலிகளும் இல்லாத வேளையில் எந்தக்காரணத்தை வைத்து பேரினவாதிகளுடன் சோ்ந்து தமிழினத்தை விற்க முற்படுகின்றார் என்று யாராவது கூறமுடியுமா?
பிரித்தானிய பண்பாட்டை கற்றுணர்ந்த தமிழன் தான் ஈழத்தமிழனுக்கு வழிகாட்டிக் கொண்டிருந்தான். பேரினவாதிகள் என்று நீங்கள் விழும்புகிற சொல்கூடா இந்த பிரித்தானிய நாகரீக தமிழனிடம் இருந்து வந்தது தான். தற்போதைக்குள்ள சுயாதீனசிந்தனை என்பது எல்லாமே இறக்குமதி செய்யப்பட்டவை தான். கனடா அமெரிக்கா அவுஸ்ரோலியா ஐரோப்பா நாடுகளில் பரவியிருக்கும் தமிழன் ஏன் சிங்களயினத்தை-அரசியலை பகைமையாக கொண்டான்? எப்படி இவனால் கட்டுநாயக்காவில் இருந்து வெளியேற முடிந்தது. இது சிந்திக்க வேண்டிய விஷயம் அல்லவா?. தமிழன் தனதுசொந்தக்காணியை ஒரு அங்குலம் முந்திவேலி போட அனுமதிக்க மாட்டான். அப்படி நடந்தால் அந்த காணியை விற்று வழக்காடுவான். இவன் எப்படி இலங்கைதீவை தனது தாய் நாடாக அங்கீகரிப்பான்?. என்று தமிழன் இலங்கையை தனது தாய்நாடு என்று ஏற்றுக் கொள்ளுகிறானோ? அன்றே பிரச்சனைகளும் தீர்ந்தது.
இதுவே புரிந்துகொள்ளக்கூடியதும் புரிந்துகொள்ள விருப்பமில்லாத தமிழர்களின் நிலைமை.இந்த நிலைமை தொடர்ந்தால் திரும்பவும் நாய்கடி பூனைக்கடி. இறுதியில் ஈழத்தமிழர் ஒட்டுமொத்தமும் காலி.
புலிகள் தவறு செய்தமைக்காக அரசுடன் இவர்கள் இணையவேண்டுமென்பதில்லை. மக்களை உண்மையாக இவர்கள் நேசித்திருந்தால் அரசியலை விடுத்து சமுக பொதுத்தொண்டுகள் செய்திருக்கலாம். வெளிநாடு சென்றிருக்கலாம். அதை விடுத்து புலிகள் மீதுள்ள கோபத்திற்காக அப்பாவி மக்களை அரசுடன் சேர்ந்து அழிக்கவேண்டுமா? அரசியல் தெளிவில்லாத பரதேசிகள். (Sorry for offensive words)
கழுதைக்கு இருக்கும் சந்தேகமே பலதமிழருக்கு இருக்கிறது. வன்னியில் குண்டு வீசி அப்பாவிமக்களை அழித்தார் என்பது.
அப்பாவிமக்களுக்கு குண்டு அல்லது கொத்துகுண்டு வீசிக் கொல்வதை எந்த ஒரு மனிதமனம் உள்ளவனும் ஏற்றுக் கொள்ளமுடியாது. அதேபோலத்தான் நகரத்தில் குண்டுவைப்பதையும் எங்களை தோற்கடித்த நினைத்தால் தென்னிலங்கை தீப் பற்றி எரியும் என்பதையும் ஏற்றுகொள்ள முடியாது. இதை சொன்னவர்கள் புலிகள்.
இங்கு வாசகர்கள் கவனத்தில் எடுக்கவேண்டியது ஒருநிமிடநேரமாவது டக்கிளஸ் தேவானந்தாவையோ மகிந்த ராஜபக்சாவையோ மறந்துவிடுங்கள். இப்படியான பயங்கர
வழிமுறைகளை ஒருயினத்தின் விடுதலையொன்று சொல்லுகிற அமைப்பை
யாரால்தான் முடிவுக்கு கொண்டுவர முடியும்?.
விரும்பித்தான் வன்னிமக்கள் புலிகளுடன் போனார்கள் என்றால் மிகுதியாக இருந்த
இரண்டுலட்சத்தி என்பதியாயிரம் பேர் திரும்பவும் முள்கம்பிக்குள் உயிர்காக்க அடைக்கலம் தேடியது ஏனோ?.
அரசியலில் தெளிவுள்ள கழுதை பட்டினி நோய்காடு சாக்காடு மரணம் ஊனம் மொத்தமாக சொல்வதாக முக்கால்வாசி பைத்தியகாரநிலைமைக்கு தள்ளிவிட்ட வன்னிமக்களைஎப்படிதான் கையாண்டிருக்க வேண்டும் என்பதை தெளிவுள்ள கழுதை புரியவைக்க வேண்டும். அரசியல் தெளிவில்லாதவர்களுக்கு உதவியாக இருக்கும்.
ராசா! .நீங்கள் கிறுக்கிற களவாணி வரிகளையும்,உங்களுக்கு விளங்கிய கழுதை மொழியையும் வைத்து,தமிழ் மக்களின் சந்தேகங்களை போக்கி,மிஒரு நிமிடம் தவிர்ந்த மிச்சமிருக்கும் நேரத்தில்,பக்சாவையும்.னந்தாவையும் முதல்ல வழிக்கு கொண்டு வாருங்கள்
சரியான வழிகளில் தான் டக்கிளஸ்சும் மகிந்தாவும் நடைபோடுகிறார்கள்.
திருந்த வேண்டியவர்கள் தமியினத்திற்கு அவலச் சின்னமாக மாறிப்போன கழுதை நெருஞ்சி போன்றவர்களே! தமிழ்மொழியில் எவ்வளவோ வனப்பான வார்த்தைகள் இருக்க தேர்ந்த பெயர்களை பாருங்கள்….கழுதை நெருஞ்சி இதிலிருந்தே தெரியவில்லையா? நீ முன்னுக்கு போ! நான்…… வருவன்.. வரமாட்டான்.
வயிறு புடைக்க திண்டால் கம்மொண்டு படுக்க வேண்டியது தானே அதற்குள் சமூகத்தில் அக்கறையுள்ளவர்கள் மாதிரி ஒரு கொமண்டும் வேறையா? இதெல்லாம் கேவலவான வேலையாக
தெரியவில்லையா…?
இது தான் மன நோய் .நிர்மலன் போன்ற போன்ற கயவர்கள் எப்படி புலிகள் அழிந்தொழிந்த பின்னும் கேடுகெட்ட புலி அரசியலை காவித் திரிகிரார்களோ ,அது போலவே டக்கிளசும் மன நோயால் பாதிக்கபட்டுள்ளார்.
இது தான் கயமைக்கு[ வள்ளுவன் சொன்ன சொல் ] எடுத்துக் காட்டு. இதை தான் ஆயுதம் எடுத்த மன நோயாளிகள் மக்களுக்கு விட்டு சென்றது.
உனது பரம்பரை விட்டுச்சென்றதும் தாங்கள் விதைப்பதும் சிங்களவனுக்கும் இந்தியனுக்கும் “கூட்டிக்கொடுப்பதும் காட்டிகொடுப்பதும்” தான். தூ வெக்கம்கெட்ட பரம்பரைகுணம்!
சிங்களவரை விடுங்கள்.முதலில் தமிழன் தமிழனிற்கு என்ன செய்தான் செய்து கொண்டுஇருக்கின்றான் என்பதை பாருங்கள்.
உலகில் தன் இனத்தையே ஏமாற்ரி வாழும் ஒரே இனம் தமிழினம்தான். இந்த விட்யம் மெல்ல மெல்ல வெளியே வரத்தான் போகின்றது. அப்போ தமிழனின் மானத்தை காக்க்
ஆயத்தமாக் இருங்கள்.-துரை
மேலுள்ள கருத்து சிங்களவர் பற்றியல்ல. காக்கைவன்னியனின் வாரிசுகள் பற்றி. என்ன தொப்பி டக்ளசு “கோமாளி ” நவநீதன்
சந்திரன்ராசாவிற்கு மட்டுமல்ல தங்களிற்கும் அளவாயிருக்கு போலை !தொப்பியை வலியவந்து போட்டுக்கொள்கிறீர்கள் !
உங்கள் முகத்தை இப்போதுதான் கண்ணாடியில் பார்த்துள்ளீர்கள்போல் தெரிகிறது. தயவுசெய்து கண்ணாடியை உடைத்துவிடாதீர்கள்.
சந்திரன் ராசா! என்ன சிறிலங்கா ஊற்றும் ஓசிதண்ணியை போட்டிட்டு அலும்புகிறயா இங்கு! ஒரு மணித்தியாலத்திற்குள் அடிக்கும் குத்துக்கரண வசனங்களை பார்! chandran.raja
Posted on 07/25/2011 at 8:41 pm
வன்னியில் குண்டு வீசி அப்பாவிமக்களை அழித்தார் என்பது.
அப்பாவிமக்களுக்கு குண்டு அல்லது கொத்துகுண்டு வீசிக் கொல்வதை எந்த ஒரு மனிதமனம் உள்ளவனும் ஏற்றுக் கொள்ளமுடியாது.
chandran.raja
Posted on 07/25/2011 at 9:56 pm
சரியான வழிகளில் தான் டக்கிளஸ்சும் மகிந்தாவும் நடைபோடுகிறார்கள்.
அறணை கடித்துவிட்டு மறந்து விடுமாம். நகரத்தில் குண்டுவைப்பதையும் தென்னிலங்கை தீப்பற்றி எரியும் என்பதையும் சேர்க்க வேண்டியது தானே!.ஏன் புலி அறணையாக மாறியதில் வந்த வினையோ? இல்லை இருக்கிற புலம்பெயர் அப்பாவிகளுக்கு “கரடி” விடுகிற முயற்ச்சியோ?
சிங்களவரையும் இந்தியாவையும் பகைத்துக் கொள்ளுகிற உனது அரசியல் பார்வையில் ஏதாவது உப்பு சப்பு இருக்குமாக தெரியவில்லை. முடிந்தால் கனடாவுக்கோ சுவிஸ் லண்டனுக்கோ தமிழீழம் கேட்டு ஒரு விண்ணப்ப பத்திரத்தை அனுப்பி பார்க்க வேண்டியது தானே! திரு.நிர்மலன். முயற்ச்சி திருவினை அளிக்கும்.
ஈழத்தமிழனின் பூர்வீக மண் இலங்கைத்தீவிலேயே இருக்கிறதே தவிர கனடாவிலோ சுவிசிலோ இலண்டனிலோ அல்ல! ஈழத்தமிழினம் தமக்கு மறுக்கப்படும் உரிமையை கோருவது எப்படி சிறிலங்காவிற்கோ இந்தியாவிற்கோ பகையாகும்! ஓஓ நீங்கள் சிங்கள அடிமையல்லவா! உங்களிற்கெங்கே உரிமைபற்றி தெரியப் போகுது!
ஈழ்ததமிழனென்றால் இலங்கையில் வாழும் தமிழரெல்லாமா? அல்லது தேசியக் கூட்டணிக்கு
வாக்களித்த வட கிழக்கு தமிழர் மட்டுமா?துரை
சரி, இதை எல்லாம் விட்டுதள்ளுங்கள். நிர்மலன். நோர்வே கொலைகாரங்க்கும் உங்களுக்கும் ஆறு வித்யாசம் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்! நான் 6 ஒற்றுமை கண்டு பிடித்துள்ளேன்.
புலிகளை எதிர்ப்பது என்பது துரோகமல்ல. ஆனால் உனது இனத்தையே வேரறுக்க நினைக்கும் எதிரிக்கு சேவகம் செய்து அரசியல் நடத்துபவதென்பது மீழ்பரிசீலனை செய்யவேண்டிய ஒன்றுதான். விரைவில் அரசு இவர்களை கைவிடும் தமிழனென்பதால். மக்களும் கைவிடுவர் வலிதந்தவருடன் வால்பிடித்ததால். அதன்பின் இவர்கள் நிலமை என்னவாகுமோ தெரியாது……….
வனப்பான பேர் கொண்ட சந்திரன் ராசா!
உலகப் புரட்சி பேசி உருக்குலைந்த உருவமே!
சமூக அக்கறையின் மொத்தக் குத்தகையே!
கழுதை மொழி நீ அறிவாய்.
அறணை நினைவு அறிந்திருப்பாய்.
கரடி,சிங்கம்,புலி …………….
முதலில் மனித மொழி கற்றுக் கொள்.
தொடர்ந்து பேசலாம்.
கழுதை அழுக்கு மூட்டை சுமக்கும். மனிதக் கழுதை அசிங்கமான வார்த்தைகளை சுமக்கும். இப்ப நேரடியாகவே தெரியுதல்லவா?.
உலகப்புரட்சி என்பது உலகமுதாலித்துவத்துடன் பின்னிப்பிணைக்கப் பட்டது. கழுதையறியுமா கற்பூரவாசணை. மனம்யிருந்தால் வர்க்கயுணர்வு இருந்தால் மனிதக்கழுதை கூடாயறிய முடியும். இனவெறியுணர்வு தடுக்காமல் இருந்தால்..
“கோமாளி ” நவநீதன்
இது மாதிரி சொல்வதைநிருத்தி கொல்லவும்……….
உஙக்ள் பெய்ரை போன்ரே….