இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்தை தடுக்க தமிழ் தலைவர்கள் முயற்சித்த போது அவர்களும் படுகொலை செய்யப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாடகை வேட்பாளர் குறிப்பிட்டுள்ளார். எனவே, வன்முறைகள் ஓயும் வரையில் தமிழ் அரசியல் தலைமைகள் காத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கணவன் மனைவியை கொடூரமாகத் தாக்கினால் அதனை வீட்டுப் பிரச்சினையாக கருத முடியாது, அயலவர்கள் அந்த விடயத்தில் தலையீடு செய்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதே நிலைமைதான் இலங்கைத் தமிழர் பிரச்சினையின் சர்வதேச தலையீடுகளுக்கும் உரித்தாகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போராட்டம் ஆயுதப் போராட்டமாக அமையவேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது மக்கள் அல்ல மக்களின் எதிரியே என்ற அரசியல் அரிவரிப்பாடத்தைக் கூடப் புரிந்துகொள்ளாத வாடகை விக்னேஸ்வரன் நீண்டகாலம் தனது எஜமானர்களுக்குச் சேவையாற்றக் காத்திருந்திருக்கிறார் என்பது வெளிப்படையாகிறது. மக்கள் எழுச்சி கொள்வதற்கான சூழல் ஏற்படும் போதெல்லாம் கதாநாயர்களை உருவாக்கி அவர்களை வீட்ட்டுக்குள் முடக்கிவிடும் அதிகாரவர்க்கம் இப்போது விக்னேஸ்வரனை வாடகைக்கு அமர்த்தியுள்ளது.
////மக்கள் எழுச்சி கொள்வதற்கான சூழல் ஏற்படும் போதெல்லாம் கதாநாயர்களை உருவாக்கி அவர்களை வீட்ட்டுக்குள் முடக்கிவிடும் அதிகாரவர்க்கம் இப்போது விக்னேஸ்வரனை வாடகைக்கு அமர்த்தியுள்ளது.////
சர்வதேச சமூகம் சிங்களம் அரசியல் தீர்வை வைக்கும் என இன்னமும் நம்பிக் கொண்டிருக்கின்றது . இது உணமை அல்ல என்பதையும் சரணடைந்தோரை சுட்டுக் கொன்ற இராணுவ பிடியில் இருக்கும் மக்களை எழுச்சி கொள்ளவைக்க ஒரு திருப்பு முனையாக மாற்றக் கூடிய விதத்தில் இந்த தேர்தலினை நாம் மாற்ற வேண்டும் . அதற்கு கண்ணியம் மிக்க மனிதன் விக்கினேஸ்வரன் போன்றவர்கள் இந்த சிங்கள அரச பயங்கரவாத.த் தையும் அதன் எடுபிடிகளையும் அம்பலப் படுத்துவார் என நான் உறுதியாக நம்புகின்றேன். டக்ளஸ் ஓட்டம் பிடித்தது முதல் படி . தமிழரசுக் கட்சி மத்திய குழு சுருண்டு விட்டது தெரியுமா ?
குணாநிதி ஐயா விக்கினேஸ்வரனின் அரசியல் பிரவேசம் கடவுள் தந்த பாக்கியம் .
தமிழீழமும் ஐயா விக்கினேஸ்வரனும் என்ற எனது பதிவை படியுங்கள் புரியும் .இன்னும் வரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு .
http://tmwtmw.blogspot.co.uk/2013/07/blog-post_7967.html
மெளலி,
சர்வதேச சமூகம் என்றால் என்ன? யாரெல்லாம் சர்வதேச சமூகம்?? அவர்கள் எப்படி கடந்த்த காலத்தில் தமிழர்களுக்கு உதவினார்கள்? உலகில் வேறு எந்த நாடுகளுகு எல்லாம் அவர்கள் உதவி செய்து முன்னேறியிருக்கிறார்கள்??? எனக்கு தெளிவிலை தயவுசெய்து சொல்வீர்களா?
ஐயா சுவாமி உங்களிற்கும் எனக்கும் இடையே இருக்கும் கருத்து முரண்களில் இந்த “சர்வதேசம்” என்பதன் புரிதல் முக்கியமானது . சரி சர்வதேச சமூகம் என்று அரசியல் சமூகவியல் நிபுணர்களும் , ஊடகங்களும் குறிப்பிடுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர்கள் குறிக்கும் அதே அர்த்தம் தான் நானும் சொல்வது . அந்த சொல்லை நான் உருவாக்கவில்லை .
அது போல நெம்பு கோல் தத்துவத்தை கண்டறிந்த விஞ் ஞானி உலகை உருட்ட ஆசைப் பட்டானாம். நாம் என்னதான் அரசியல் வித்தை தெரிந்தாலும் சர்வதேச
நியமங்களை மீறுமளவுக்கு சக்தி வாய்ந்தவர்களாக தெரியவில்லை.
சர்வதேச சமூகம் என்ற சொல் அரசியல் வாதிகளும் , ஊடகங்களும் , சமூகவியல் தளத்திலும் வாசிக்கும் பொழுதும் வானொலி தொலைக் காட்சிகளில் கேட்கும் பொழுதும் நீங்கள் எப்படி புரிந்து வைத்திருகின்றீர்கள் .
அதிகாரவர்க்கமும் அழிப்பவர்களும் சர்வதேசம் என்பதை ஒரு வகையாகவும் போராடுபவர்கள் மக்கள் பற்றி சிந்திப்பவர்கள் ஒரு வகையாகவும் தன்னார்வ நிறுவனங்கள் இன்னொரு வகையாகவும் சொல்கிறார்கள். குறைந்த பட்சம் நீங்கள் சர்வதேசம் என்று கருதுவதை சுருக்கமாகச் சொன்னால் நாங்கள் விவாதிக்கலாம். நான் என்ன இராணுவ ரகசியத்தையா கேட்டேன்?
அனேகமாக, IBRD,IMF,WTO போன்றவற்றை ஆழுபவா்கள் அல்லது கிழக்கு திமோர்,கோசவோ,தென் சூடான், எரித்திரேயா போன்ற நாடுகள் பிரிந்துபோக காரணமாக இருந்தவா்கள்,பலஸ்தீனியா்களை பிரிந்துபோக விடாது தடுப்பவா்கள்
ஆம் அவா்கள் பலமானவா்கள். மக்கள் போராட்டங்கள் இவா்களின் நலன்கழுக்கப்பாற்பட்டு இந்த உலகில் வெற்றிபெறவே முடியாது இதுவே யதார்த்தம்.
இந்தியாவின் தலைமை சட்டம் படித்த மகாத்மா காந்தியிடம் சென்றது, காங்கிரஸை உருவாக்கியவர்கள் வெள்ளைகாரர்கள், கட்டுப்படுத்தமுடியாத பெரும் தேசத்தை, ஏற்கனவே உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட “ஒழுங்கு முறையை” அதன் குறைகளை பூர்வீக ரீதியிலண்கியதால். ஆனால் அரசியல் தலைமைகள், பிராந்திய தலைமைகள் சட்டவல்லுனர்கள் கொண்டு உருவாகவில்லை.
இலங்கையும் அந்தப்பகுதியில் ஒரு பிராந்தியம் போன்றதே. இது சமூக விஞ்ஞானம். பிரிடிஷ் காரன் அதை பிரத்தியேகநாடாக ஆக்கினான் என்பதற்காக, அரசியல் தலைமைகள் இல்லாமல், சட்ட வல்லுனர்களைக் கொண்டு இலங்கைத் தமிழ்த் தலைமைகள் உருவானது அடிப்படைத் தவறு. மேலும் அதைநம்பி ஆயுத போராட்டம் சென்ரது அதை விட பெரிய சமூகத் தவறு. பிரச்சனை என்றால் இதனால் தெரியாமல், புரியாமல்போய்விட்டது. ஒழுங்கு முறை மாறியுள்ளது, மீண்டும் அதே தவறு, அதுத்த புதிய துவக்கத்திலேயேநடைப் பெறுகிறது.
எல்லோருக்கும் தெரியும் வட இந்தியாவை விட தென்னிந்தியாதான் இந்துத்துவம் என்ற ஒன்று உள்ளது என்று. பாரதிய ஜனதாவாக இருந்தாலும் அவர்கள் மேலோட்ட மதசார்பற்ற சமூக இயக்கம்தான், ஆனால் திராவிட இயக்கமாக இருந்தாலும் அடிப்படையில் சமூக இந்துக்கள்தான். இது அமெரிக்க ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களுக்கு தெரியும். இலங்கைக்கும் (பிரச்சனைக்கும்) இதற்கும் சம்பந்தமில்லை. இலங்கைத் தமிழர்கள் இந்துத்துவ வாதிகளாக அரிதாரம் பூசுவதால் எந்த சூழ்னிலையும் மாறிவிடாது. இது கறுப்பு வெள்ளை சமூக விளக்கம் அல்ல, சிக்கலானது. ஏதோ ஒரு காரணத்திற்க்காக, “சர்வதேச சமூகம்” படுகொலயை தெரிந்தேநிகழ்த்தியிருக்கிறது. இதை கொசு மூளையை வைத்து, கருப்பு வெள்ளை விளக்கமாக, சூழலுக்கான காரணத்தை சரி பிழை என்ற அடிப்படையில் தமிழ் சமூகத்தில் தேடுவதும், அதை சரி செய்ய ஒழுங்குப் பிள்ளையாக சட்ட மதிப்பாளர்களை அடையாளப்படுத்துவதும் கேலிக்குறியது. பழிக்காரர்களை தேடி தலையில் குட்டுவது மேலும் சிக்கலில் மாட்டவே உதவும். ஆசிய சமூகங்களில் “பொலிட்டிகலி கரெக்ட்” என்பது கிடையாது. ஆகையால் இலங்கையில் எது “கரெக்ட் பொலிட்டிக்ஸ்” என்பது சர்வதேச சமூகத்திற்கு புலபடாது. அவர்களொரு இயந்திரம் போல் இயங்கும் போது காம்பரமைஸ் செய்துக் கொள்பவர்களுக்கு “சுண்ணாம்பை” தடவிவிட்டுப் போய்விடுவார்கள். இந்துத்துவம்தான் அவர்களுக்கு பிரச்சனை என்றால், தற்போதையநகர்வு, மறுபடியும் பெரிய உருண்டை சுண்ணம்புக்கு காத்திருப்பதாகும். வட இந்திய இந்துத்துவ வாதிகள் காப்பாற்றுவார்கள் என்று நினைத்தால் அவர்கள் அணுகு முறையால் அவர்களுக்கு மாம்பழம் கிடைக்கும் நீங்கள் “கோவண்த்தோடு” மீண்டும் முள்ளியவாய்க்காலுக்கு…? ஏதேது .. வீரராக களத்தில் பட்டையை போட்டுக்கொண்டு மார்பை முன்னிறுத்துவது வேறு, பட்டையை போட்டு, கொட்டையை திருடலாம் என்று நினைத்து, திடீரென்று உதவுபவர்கள் என்று நினைத்தவர்கலேல்லாம் தர்ம அடி போடும் போது வெற்றி வேல் வீரவேல் என்பது வேறு. சர்வதேச சமூகத்தின் அணுகுமுறை வரைப்படம் சரியாக புலப்படவில்லை!
US government satellites had been monitoring the war zone secretly from later 2008 to earlier 2009 until even after war end, also the surrender of LTTE, up to the details of their finger nails. American Association for the Advancement of Science compared commercial high-resolution satellite images of the Safe Zone taken on 6 May 2009 and 10 May 2009 to evaluate the impact of heavy fighting on 9/10 May. In April 2009 the US State Department released two satellite images of the Safe Zone showing 100,000 – 300,000 civilians trapped in 8-square-mile (21 km2) area. The State Department report to Congress (above) included a number of images taken by US government satellites.
Most of the European union monitors were well informed well before 2008 about the conclusions.
GPS. Global Positioning Systems. Dr. Gopalan Venugopalan, Ball State University, Muncie, Indiana, USA. Remote Sensing. Geography from the Indiana State University, Terre Haute, Indiana, USA. 2007. Dr. Bill at 812-237-2418.
உலகம் என்றால் உருண்டையான பூமியை குறிக்கும் . அதில் உள்ள நாடுகள் அனைத்தையும் கொண்ட கட்டமைப்பு ஒன்று இருந்தால் அது சர்வதேச கட்டமைப்பு எனலாம் .
அத்தகைய கட்டமைப்பு உலக ஒழுங்கைத் தீர்மானிப்பது தவறில்லை என்பதை சீனா , ரஸ்சியா , கியூபா உட்பட அனைத்து நாடுகளும் உடன்பட்டுத் தான் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது.
எனவே ஐக்கிய நாடுகள் சபையில் விவாதித்து எடுக்கப்படும் தீர்மானத்துக்கு அனைத்து நாடுகளும் மக்களும் கட்டுப்படவேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபையில் விவாதம் நடை பெறும் பொழுது எல்லா நாடுகளுக்கும் மக்கள் பிரதினிதிகளுக்கும் தமது கருத்து தொடர்பாக பிரச்சாரம் செய்ய வசதி இருக்கின்றது .
தீர்மானதை ஆதரித்தாலும் எதிர்த்தாலும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இறுதியாக எடுக்கப்படும் தீர்மானம் சர்வதேச தீர்மானம் எனக் கொள்வதில் தவறில்லை .
இங்கே ஒரு முக்கியமான விடயத்தைக் குறிப்பிட வேண்டும் ஐக்கிய நாடுகள் சபை ஒழுங்குவிதிகள் மேலும் செப்பனிட வேண்டியுள்ளது . அதற்கான முயற்சிகளில் ஆர்வமுள்ளோர் ஈடுபட வேண்டும். அதுவரை ஐக்கியநாடுகள் சபைத் தீர்மானம் சர்வதேச ஒழுங்கின் அடிப்படை வழிகாட்டியாகும் .
எமது உரிமைப் போர் சர்வதேச தீர்மானங்களூக்கு அமையவே நகரவேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம் .
அந்த தீர்மானம் எமக்கு ஏற்றதாக்க நாம் உறுதியுடன் அரசியல் பிரச்சாரம் செய்து சிங்கள அரசு செய்யும் இனப்படுகொலையை சர்வதேச சமூகத்துக்கு நிரூபிக்க வேண்டிய காலம் இது .
ஒரு விடயத்தை பார்க்கும் பொழுது சப்ஜெடிவ் அனலிசிஸ் ஒப்ஜெக்டிவ் அனலிஸிஸ் என இரண்டு உண்டு ஒன்று எமது ஆசைகளுக்கு உட்பட்டு பார்ப்பது மற்றையது சாதாரண பொதுமகனாக பார்ப்பது . உலக ஒழுங்கு என்பது அப்படித்தான் புரிந்து கொள்ளப்பட வேண்டும் .
குணாநிதியான சுப்பிறீம் கோர்ட் நீதிபதியும் சர்வதேச அங்கீகாரம் பெற்றவருமான முன்ணாள் உயர் நீதிமன்ற நீதிபதி விக்கினேஸ்வரன் இதை நிச்சயம் செய்வார் அதற்கு நாம் துணை செய்வோம் . துணை புரிய முடியாவிட்டால் அவருக்கு வெறுப்பு ஏற்படுதாது இருப்போம் . இந்த கட்டுரை குறிப்பிடும் “கிண்டு” ஸ்தான் பத்திரிகையில் அவர் சொன்ன பின்வரும் வரிகள் தமிழ் சமூகத்துக்கு அவர் சொல்ல விரும்பும் முக்கிய செய்தி ஒன்றைக் குறித்து நிற்கின்றது.
Why this euphoria over me? So far it has been only about politicians. I suppose I bring a fresh air of perception. Politics has no meaning for me. I am also not interested in this post. I am just taking on a job. If it is possible to do it, I will, otherwise I’ll just turn back and go away.
Please this too தமிழீழமும் ஐயா விக்கினேஸ்வரனும் !!!
http://tmwtmw.blogspot.co.uk/2013/07/blog-post_7967.html
VIGNESH is another avathaar of SOORIYATHTHEVAN(ST)…arokara, vigneswarenitku arokaara. We had SOORIYATHTHEVAN,now we are having VIGNESHWAREN, if he fails, we will find another GOD avathaar of ST to pray..
“சர்வதேச சமூகம் சிங்களம் அரசியல் தீர்வை வைக்கும் என இன்னமும் நம்பிக் கொண்டிருக்கின்றது”
கண்ணியம் மிக்க மனிதன் விக்கினேஸ்வரன் போன்றவர்கள் இந்த சிங்கள அரச பயங்கரவாத.த் தையும் அதன் எடுபிடிகளையும் சர்வதேச சமூகம் முன் அம்பலப் படுத்துவார் என நான் உறுதியாக நம்புகின்றேன்
“”” arokara…vignesha please open the eyes of internationl community.because they don’t know anything about MAY2009 and Tamils in Sri lanka. arokara…. I ‘ll give you MILK and pure Honey
…… arokara.
கலங்கும் சிறிலங்கா – இவர்களின் பார்வையில் விக்னேஸ்வரன்விக்கினேஸ்வரனும் விமல் வீரவன்சாவும் குமாருகளும்
Must read the following fully
பிரபாகரனால் முடியாததை விக்னேஸ்வரன் மூலம் அடைய நினைக்கிறது கூட்டமைப்பு
[ செவ்வாய்க்கிழமை, 23 யூலை 2013, 06:35 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]
ஓய்வுபெற்ற பின்னர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அரசியலுக்கு வரவேண்டிய தேவை என்ன என்று சிந்திக்க வேண்டிய தேவை வந்து விட்டது என்று கூறியுள்ளார் சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச.
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராக சி.வி. விக்னேஸ்வரன் போட்டியிடவுள்ளது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை நிறுத்த கொழும்பிலுள்ள இரண்டு வெளிநாட்டுத் தூதரகங்கள் விரும்பின.
விக்னேஸ்வரன் அனைத்துலக ஆதரவு பெற்றவர் என்பதை இரா.சம்பந்தனே தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் மூலம் அடைய முடியாது போனதை, வடக்கு மாகாணசபைத் தேர்தலில் விக்னேஸ்வரனை முதன்மை வேட்பாளராக நிறுத்தி அடையப் பார்க்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர்களுக்கு ஏனைய அரச பணியாளர்களை விட அதிக சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஓய்வுபெற்ற பின்னர், அவர்கள் நடுநிலையாகவும், சுதந்திரமாகவும் செயற்படுவார்கள் என்று நாடு எதிர்பார்க்கிறது.
ஆனால் விக்னேஸ்வரன் ஓய்வுபெற்ற பின்னர், அரசியலுக்கு வருவது ஏன் என்ற ஆராயப்பட வேண்டியுள்ளது” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கலங்கும் சிறிலங்கா – இவர்களின் பார்வையில் விக்னேஸ்வரன்
[ வியாழக்கிழமை, 18 யூலை 2013, 01:43 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் முதல்வர் பதவிக்கான வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை நிறுத்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது சிறிலங்கா அரசாங்கத்துக்கும் சிங்களப் பேரினவாத தலைவர்களுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரன் நிறுத்தப்படவுள்ளது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள கருத்துகளின் தொகுப்பு-
சிறிலங்கா அமைச்சரும், மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவருமான தினேஸ் குணவர்த்தன –
அரசியல்வாதி அல்லாத ஒருவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட மாகாணசபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக நியமித்துள்ளது.
வடக்குத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளராக அரசியல்வாதி ஒருவரை நியமிக்க முடியாத அளவுக்கு கூட்டமைப்பு பலவீனடைந்துள்ளது.
அதனால் தான் அரசியல்வாதி அல்லாத ஒருவரை தேர்தலில் களமிறக்கி மக்களை கவர முயற்சிக்கின்றனர்.
விக்னேஸ்வரன் அரசியலுக்கு புதியவர். அரசியல் ரீதியில் அவரை எமக்குத் தெரியாது. எனினும் வடக்குத் தேர்தலில் ஆரோக்கியமான போட்டியை வழங்குவதற்கு ஆளும்கட்சி எதிர்பார்க்கிறது.
சிறிலங்கா அமைச்சர் பசில் ராஜபக்ச-
.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கூட்டமைப்பின் இந்தத் தெரிவை நாங்கள் வரவேற்பதுடன் மகிழ்ச்சியும் அடைகிறோம். விக்னேஸ்வரன் ஒருபோதும் வடக்கு மக்களை பிரதிநிதித்துவப்படுத்துபவராக இருக்கமாட்டார்.
இந்தத் தெரிவின் மூலம் வடக்கு மக்களுக்கு சேவையாற்றுவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்பார்ப்பு அல்ல என்பது தெளிவாகிறது.
அவர்கள் இந்த தேர்தலை வைத்து அனைத்துலக ரீதியில் வேறு ஒரு நோக்கத்தை அடைய முயற்சிக்கின்றனர்.
மாறாக மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று அவர்கள் எண்ணவில்லை.
முதலமைச்சர் வேட்பாளரும் தான் அனைத்துலக உதவியுடன் புரட்சி செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.
மாகாணசபைக்கு செல்வதன் மூலம் அனைத்துலக ரீதியில் புரட்சி செய்ய முடியாது.
அதற்கு நாடாளுமன்றம் வரவேண்டும். அவர் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு வந்து இதனை செய்ய முயற்சிக்கலாம்.
வடக்குத் தேர்தல் விடயத்தில் கூட்டமைப்பினால் எடுக்கப்படும் முடிவுகள் புலம்பெயர் மக்களினால் தீர்மானிக்கப்படுகின்றன.
வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் தெரிவின் ஊடாக இந்த விடயம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.
வடக்கு மக்களின் துன்பங்களை நீக்கவோ அவர்களின் துயர்துடைக்கவோ கூட்டமைப்பு முயற்சிக்கவில்லை.
இந்தத் தேர்தலை பயன்படுத்தி அவர்கள் வேறு ஒரு நோக்கத்தை அடைய முயற்சிக்கின்றனர்.
கூட்டமைப்பின் இந்தத் தெரிவானது வடக்கு மக்களுக்கோ நாட்டின் எதிர்காலத்துக்கோ ஆரோக்கியமாக அமையாது.”
தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர –
அனைத்துலகத்தால் அங்கீகரிக்கப்படக் கூடிய விக்னேஸ்வரனை நியமித்ததன் மூலம் கூட்டமைப்பு தனது விடுதலைப் புலி பிரதிநிதித்துவத்தை மறைக்க முனைந்துள்ளது.
மாவை சேனாதிராசா முழுக்க முழுக்க விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்.இதனை அனைவரும் அறிவார்கள்.
குறிப்பாக இந்தியாவுக்கு இது நன்றாகத் தெரியும். இலங்கைத் தீவில் தமிழீழம் உருவாவதை இந்தியா ஒருபோதும் விரும்பாது.
எனவே மாவை சேனாதிராசாவை வடமாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக மாவையை நிறுத்துவதை இந்தியா விரும்பாது.
அதேவேளை, விக்னேஸ்வரனின் இரண்டு மகன்மாரும் சிங்களப் பெண்களையே மணந்துள்ளனர்.
இது மட்டுமல்லாது உயர்பதவி வகித்தவர், படித்தவர், இதனை அனைத்துலக சமூகத்துக்கு கூட்டமைப்பு எடுத்துக் கூறும்.
விக்னேஸ்வரனால் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும், அனைத்துல சமூகசத்துடன் ஒத்துப் போகக் கூடியவர் என்பதையும் கூட்டமைப்பு எடுத்தியம்பும்.
இதுதான் சம்பந்தனின் தந்திரமான வியூகம்.
இந்தியாவின் உளவுப்பிரிவான ‘‘றோ’’ வின் ஆலோசனையும் சம்பந்தனின் தந்திரமான அரசியல் வியூகமுமே விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்படக் காரணம்.
இது பயங்கரமான – நாட்டுக்கு ஆரோக்கியமற்ற சூழ்நிலை.
இதனை தடுத்து நிறுத்த சிறிலங்கா அதிபர் அரசியல் காய்நகர்த்தல்களை மேற்கொள்ள வேண்டும்.
விக்னேஸ்வரனுக்கு அமைச்சர் பதவியையோ, வெளிநாட்டு தூதுவர் பதவியையோ வழங்கி முதலமைச்சர் வேட்பாளர் போட்டியிலிருந்து வெளியேற்ற வேண்டும்.
சிறிலங்கா அமைச்சரும், ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலருமான சம்பிக்க ரணவக்க-
வடமாகாண சபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக
நிறுத்தியுள்ளது.
இதனை விக்னேஸ்வரனும் ஏற்றுக்கொண்டு பிரிவினைவாதத்திற்கு துணைபோன கூட்டமைப்பினருடன் இணைந்து தமிழீழ போராட்டத்திற்கு தலைமை தாங்க முன்வந்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் ஆலோசகரான அன்ரன் பாலசிங்கத்தின் இழப்பை நிரப்புவதற்காக விக்னேஸ்வரனை கூட்டமைப்பு தெரிவு செய்துள்ளதாகவே தெரிகிறது.
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவர் இவ்வாறு பிரிவினைவாதிகளுடன் இணைந்துள்ளார் என்றால் அவரது முன்னைய காலப் பகுதி மற்றும் பணிகள் தொடர்பிலும் பல்வேறு சந்தேகங்கள் தோன்றுகின்றன.
எவ்வாறாயினும் வடக்கு மற்றும் கிழக்கையும் ஒன்றிணைத்து மாகாணத்தில் வரதராஜப்பெருமாள் செயற்பட்டதை விட மிகவும் ஆபத்தான சூழலே எதிர்வரும் நாட்களில் வட மாகாணத்திலும் ஏற்படப் போகின்றது.
சி.வி.விக்னேஸ்வரன் போன்ற சட்டம் நன்கு தெரிந்த ஒருவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வடக்கில் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டால், அன்று தொடக்கம் இலங்கைக்கு தலைவலி ஆரம்பித்து விடும்.
தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் தலைவர் சம்பந்தன் நன்கு ஆராய்ந்த பின்னரே மாவை சேனாதிராசாவை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தாது சி.வி.விக்னேஸ்வரனை நிறுத்தியுள்ளார்.
இவர்களின் நோக்கம் மத்திய அரசுடன் வடமாகாணம் மோத வேண்டும்.
13வது திருத்தச் சட்டத்தில் உள்ள அதிகாரங்களை முழு அளவில் சட்டரீதியாக பெற்றுக் கொண்டு, தனி தமிழீழ ஆட்சியை அமைப்பதற்கான அடித்தளமே இன்று இடப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் இந்தியா மற்றும் அனைத்துலக பிரிவினைவாத புலி ஆதரவாளர்களும் உள்ளார்கள்.
எனவே அரசாங்கம் உண்மையான சூழலைப் புரிந்து கொண்டு வட மாகாணசபை தேர்தலுக்கு முன்னர் 13வது திருத்தச்சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வந்து அதிகாரங்களை வலுவிழக்கச் செய்ய வேண்டும்.
இல்லையென்றால் ஏற்படும் ஆபத்துக்களுக்கு அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டும்.
வடமாகாண சபை தேர்தலின் ஊடாக தமிழீழம் உருவாவதை தடுக்க தேவையான அனைத்து போராட்டங்களையும் முன்னெடுப்போம்.
அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்கும் தமிழீழ போராட்டத்திற்கும் உயிர் கொடுப்பதாகவே கூட்டமைப்பின் செயற்பாடு அமைந்துள்ளது.
அன்ரன் பாலசிங்கத்தின் அவதாரத்தை இன்று சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துள்ளார். இதனையும் தோற்கடிக்க வேண்டும்.
This is what the late Kumar Ponnambalam thought that he was doing in Colombo. Using the established name and prestige in a careless and an irresponsible manner.
Call him anything but careless and irresponsible is the most ridiculous suggestion ever. Definitely he wasn’t a coward like you sir. He was a brave man but he was also aware of his limitations.
Sooran, please do not run into conclusions. My Gajendrakumar is in North Carolina, USA. I am a veteran that lost four finger tips in Canada. 1990. Batticaloa. Sri Lanka Police. Sri Lanka Army. Thank you.km
There is no Gajendrakumar Ponnambalam in NC. When you say you are a veteran you make it sound like you are an ex-serviceman. I am sorry you lost your fingers because you were exposed to the extreme cold of the Canadian winter. I have no intention of insulting, wish you all the best.
இலங்கையில் இடதுசாரியம் பேசியவர்கள்,தமிழர் தலைமைகளைச் சாடுகிறோமென்கிற சாக்கில்,சிஙகள பௌத்த பேரினவாத எடுபிடிகளாக மாறிப் போனார்கள்.
நாம் வாழ்ந்து அனுபவித்த வரலாற்றைக் கற்றுக் கொள்ளாமல்,’புதிய இடதுசாரியம்’ பேசுதல்,இனியொன்றாக மாறிவிடும்.
இடதுசாரியமும் கதாநாயகர்களை வைத்துக் காலம் தள்ளுகிறது என்பது சிதம்பர இரகசியமா? இடது சாரியம் பாடிய ரசியாவிற்கு ஸ்னோடனும்,சீனாவிற்கு தமிழினப்படுகொலையாளி மகிந்தவும் கதாநாயகர்கள் அல்லது வாடகை வேட்பாளர்கள்தான்.
பணையக் கைதிகளாகவிருக்கும் தமிழர்கள்,மக்கள் போராட்டம் நடத்த வேண்டுமென எழுதுதல்,சிங்கள பௌத்த பேரினவாதத்தை புகழ்பாடுதலும்,மற்றும் தமிழர் தேசிய எழுச்சி மீண்டும் எழுந்து விடக் கூடாது என்ற தொலைநோக்குமே காரணங்கள்.
அதிதீவிர இடதுசாரிகள் அதிதீவிர வலதுசாரிகளானதுதான்,உலகமே பறையறிவிக்கும் உண்மை.
துப்பாக்கி முனையில் வைக்கைப்பட்ட
குணாநிதி ஐயா விக்கினேஸ்வரன் !!!
சிங்கள இராணுவ
மிரட்டலுக்கு அஞ்சாத
குணாநிதி ஐயா
விக்கினேஸ்வரன் !!!!
மனித உரிமைக்காக
நீதிபதி பதவியினூடாக
அவர் சாதித்தவை பல
அவற்றில்
இரண்டு கீழே தரப்படுகின்றது
அதன் மூலப் பதிவையும் கீழே பதிவு செய்கின்றேன் . இது நடந்து 2004 இல் .
குணாநிதி ஐயா விக்கினேஸ்வரன் அரசியலில் பிரவேசிப்பார் என கனவிலும் நினைக்காத காலம் அது . விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலம் அது . அதாவது முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு ஐந்து வருடங்களுக்கு முன் கொடுக்கப்பட்ட பேட்டி அது . எடுக்கப்பட்ட திகதி 31st October, 2004
இது சண்டே லீடர் பேட்டியின்
பாகம் 1– PART 1
உங்கள் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் ஒன்று சொல்லுங்கள் என குணாநிதி ஐயா விக்கினேஸ்வரனிடம் சிங்களப் பத்திரிகையான Sunday Leader பத்திரிகையாளர் ஒருவர் கேட்டார் அந்த பதிலை தமிழில் தருகின்றேன்
கேள்வி:- நீங்கள் நீதிபதியாக இருந்த காலத்தில் சந்தித்த மிக கடினமான பிரச்சனை என்ன ?
There are two incidents that come to mind. The army had shot at a disabled driver and killed him at Atchuveli within my jurisdiction at Mallakam. The army pleaded self-defence but later evidence proved the army had concocted the defence.
பதில் :-இரண்டு சம்பவங்கள் என் நினைவுக்கு வருகின்றன . எனது பிரதேசத்தில் அங்கவீனமான சாரதி ஒருவரை இராணுவம் அச்சுவேலியில் சுட்டுக் கொன்று விட்டது . தமது பாதுகாப்புக்காகவே தாம் சுட்டதாக இராணுவத்தினர் முதலில் தெரிவித்தனர் ஆனால் பின்னர் சாட்சிகளின் படி அது உண்மை அல்ல என்பது தெரியவந்தது .
இறந்தவரின் சடலத்தையும் சூழ உள்ள பிரதேசத்தையும் பார்த்த பொழுது இராணுவம் சொல்வது உண்மை அல்ல என்பதை நான் உணர்ந்தேன் .
சுயபாதுகாப்புக்காக தமது துப்பாக்கியில் உள்ள சன்னங்களை பாவித்ததை இராணுவத்தினர் ஒப்புக் கொண்டிருந்தனர் . அந்த இராணுவத்தினரைக் கைது செய்து மல்லாகம் நீதிமன்றில் என் முன் நிறுத்துமாறு பொலிசாருக்குக் கட்டளையிட்டேன் .(குறிப்பு :- இது 80 களில் அவர் பதவியில் இருக்கும் பொழுது நடந்தது . இபொழுது சொல்லுங்கள் பதவிக்காக கூழைக் கும்பிடு போடும் மனிதனா குணாநிதி ஐயா விக்கினேஸ்வரன் என்று . சத்தியமாக சொல்கின்றேன் அவரை நான் தனிப்பட்ட அனுபவத்திலும் தெரிந்தவன் சொல்கின்றேன் . அவர் உரிமைகளை என்றுமே விட்டுக் கொடுக்க மாட்டார் . அவரது அரசியல் பிரவேசம் கடவுள் தந்த பாக்கியம் என ஆயர் ராயப்பு ஜோசப்பு சொன்னது முற்றிலும் சரி )
The next day when I came out of my official residence, which was just behind the courts, I found several armed soldiers all over. They were pointing their guns more or less towards me. Obviously the army was annoyed with me for arresting two of their soldiers.
அடுத்த நாள் நீதி மன்றத்தின் பின்னால் உள்ள எனது வீட்டில் இருந்து வெளியே வந்த பொழுது ஏராளமான இராணுவத்தினர் எல்லா இடங்களிலும் நின்றனர் . அவர்களது துப்பாக்கிகள் ஏறத்தாள என்னை நோக்கியே இருந்தது . இராணுவத்தினரைக் கைது செய்தது தொடர்பாக அவர்கள் எரிச்சல் அடைந்திருந்தனர் என்பது வெளிப்படையாக தெரிந்தது .
Fortunately, as a senior cadet at Royal College, Colombo, I had handled guns and I did not feel the slightest perturbance at the sight of guns or at the obvious show of strength and threat.
அதிர்ஷ்டவசமாக ரோயல் கல்லூரியின் சீனியர் கடேற்டாக இருந்த காலத்தில் துப்பாக்கிகளை நான் கையாண்டு இருக்கின்றேன் . துப்பாக்கிகளைக் கண்டோ அல்லது பலத்தைக் காட்டி ஏற்படுத்திய அச்சுறுத்தலுக்கோ நான் கொஞ்சமும் கலக்கம் அடையவில்லை .
அந்த காலத்தில் வட மாகாணத்தில் நிலவிய கொடிய இராணுவ சூழல் தொடர்பாக பல நீதிபதிகள் விசனம் தெரிவித்திருந்தனர் .
In any event we in Mallakam had faced unprovoked gunshots from helicopters, which landed right at the entrance to the court house while sittings were on.
அதேநேரம் மல்லாகம் பிரதேசத்தில் எந்த காரணமும் இன்றி விமானக் குண்டுத் தாக்குதல்களும் நடாத்தப்பட்டன . ஒரு தடவை நீதிமன்றம் நடந்து கொண்டிருக்கும் பொழுது நீதி மன்ற வாசலில் கூட விமானக் குண்டுத் தாக்குதல் நடாத்தப் பட்டது .
We had continued sittings thereafter within minutes of adjournment, thanks to the courageous lawyers and litigants.
அதன் பின்பும் குறுகிய நேர இடை நிறுத்தலின் பின் துணிச்சல் மிக்க சட்டத்தரணிகளினதும் பொதுமக்களினதும் உதவியுடன் நீதிமன்ற அமர்வுகள் தொடர்ந்தன .
I went into my chambers and sent word for the officer in charge of the soldiers. At least 25-30 soldiers were to be seen around.
எனது அலுவலகத்துக்கு சென்ற நான் இராணுவ பொறுப்பதிகாரிக்கு எனது கண்டனத்தை அறிவித்திருந்தேன் . 25 முதல் 30 வரையான இராணுவத்தினர் என்னைச் சூழ நின்றிருந்தனர் .
If I remember right, one Wijeratne, a short stocky officer, came in. I asked him why such a large contingent of soldiers was present within the court premises. He said they had come to give security to the two soldiers taken into custody. I told him that once the police took control of the soldiers, the security of the soldiers passed onto the police.
எனது ஞாபகம் சரியாக இருந்தால் , கட்டையான உடல் பருத்த விஜேரத்ன என்ற அதிகாரி வந்திருந்தார் . நீதிமன்ற வளாகத்துள் இத்தனை பெரிய இராணுவ குழு ஏன் வரவேண்டும் என நான் அவரிடம் கேட்டிருந்தேன் . கைது செய்யப்பட்ட இராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பளிக்க தாம் வந்திருப்பதாக விஜேரத்தின எனக்குத் தெரிவித்தார் . பொலிசாரால் கைது செய்யப்பட்ட தருணத்தில் இருந்து இராணுவ வீரர்களின் பாதுகாப்பு பொலிசாரிடம் இருப்பதாக நான் தெரிவித்தேன் .
There were an ample number of policemen under the command of A.S.P. Navaratnarajah and that the soldiers and their trucks and jeeps were unwanted in the court premises and must immediately leave the court compound. Wijeratne hesitated. I told him that I gave him just two minutes to leave the court premises with all his men and vehicles. That was an order. It was carried out.
உதவி சுப்ரிண்டன் நவரத்தினராஜா தலைமையில் போதுமான பொலிசார் இங்கு இருக்கின்றார்கள் . இராணுவத்தினரும் , அவர்களது ரக்குகளும் , ஜீப்புக்களும் இந்த நீதிமன்ற வளாகத்தில் அவசியமற்றவை . அவை உடனடியாக போய் விடவேண்டும் என்றேன் . இரானுவாதிகாரி தயக்கம் காட்டினார் . நான் அவரிடம் சொன்னேன் இங்கிருந்து விலக இரண்டு நிமிடங்கள் தருகின்றேன் அதற்குள் இங்கிருந்து போய் விடவேண்டும் இது கட்டளை என்றேன் . எனது கட்டளை அமுலாகியது .(குறிப்பு :- இது 80 களில் அவர் பதவியில் இருக்கும் பொழுது நடந்தது . இபொழுது சொல்லுங்கள் பதவிக்காக கூழைக் கும்பிடு போடும் மனிதனா குணாநிதி ஐயா விக்கினேஸ்வரன் என்று . சத்தியமாக சொல்கின்றேன் அவரை நான் தனிப்பட்ட அனுபவத்திலும் தெரிந்தவன் சொல்கின்றேன் . அவர் உரிமைகளை என்றுமே விட்டுக் கொடுக்க மாட்டார் . அவரது அரசியல் பிரவேசம் கடவுள் தந்த பாக்கியம் என ஆயர் ராயப்பு ஜோசப்பு சொன்னது முற்றிலும் சரி )
An officer called Rajudeen thereafter had come to see me but would not inform my staff what business he had with me. A visitors book that had to be signed by all who wished to see me, handed over to him to fill in his name and state the reason for seeing me, was thrown by him to the ground, allegedly. Hence he was not allowed to see me.
இதன் பின் ரஜுடீன் எனப்படும் இராணுவ அதிகாரி என்னைப் பார்க்க வந்திருந்தார் . என்ன காரணத்துக்காக வந்தார் என்பதை எனது உத்தியோகத்தர்களுக்கு தெரிவிக்க அவர் மறுத்தார் . என்னைப் பார்க்க விரும்புவர்கள் பதியும் பதிவேடு அவரிடம் கொடுக்கப்பட்டது . அவரது பெயரும் வந்த காரணமும் பதிவு செய்யுமாறு கோரப்பட்டது . அவர் அந்த பதிவேட்டை நிலத்தில் வீசி எறிந்தார் . அதன் பின் அவர் என்னை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை . (குறிப்பு :- இது 80 களில் அவர் பதவியில் இருக்கும் பொழுது நடந்தது . இபொழுது சொல்லுங்கள் பதவிக்காக கூழைக் கும்பிடு போடும் மனிதனா குணாநிதி ஐயா விக்கினேஸ்வரன் என்று . சத்தியமாக சொல்கின்றேன் அவரை நான் தனிப்பட்ட அனுபவத்திலும் தெரிந்தவன் சொல்கின்றேன் . அவர் உரிமைகளை என்றுமே விட்டுக் கொடுக்க மாட்டார் . அவரது அரசியல் பிரவேசம் கடவுள் தந்த பாக்கியம் என ஆயர் ராயப்பு ஜோசப்பு சொன்னது முற்றிலும் சரி )
Thereafter the case went on. Bunty Zoysa came over to look after the interests of the soldiers. But on the JMO’s evidence, the ballistic expert’s evidence and the basis of eyewitnesses evidence, the two soldiers were found to have been involved in cold-blooded murder.
அதன் பின் வழக்கு தொடர்ந்தது .. Bunty Zoysa இராணுவ வீரர்களுக்காக அஜாரானார் . மருத்துவ அறிக்கையும் , துப்பாக்கி சூட்டு தொடர்பான நிபுணரது அறிக்கையும் , நேரடி சாட்சியங்களின் அறிக்கையும் இராணுவ வீர்கள் கோரமான கொலையை செய்தமையை உறுதிப் படுத்தின . But soon the Attorney General entered a nolle prosequi and the soldiers were spared a trial in the High Court. They went scot-free.
அதன் பின் அந்த வழக்கு உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு அந்த இராணுவ வீர்கள் எந்த பாதிப்பும் இன்றி விடுதலையானார்கள் .
The next incident was during the 1983 July riots. The army had just shot down many persons on the road without any provocation whatsoever and their bodies were lying at various places within my jurisdiction.
(குறிப்பு :–23 யூலை 1983 அன்று நடந்த சம்பவம் இது . இன்று மனித உரிமை பேசும் அரசியல் பேசும் பலருக்கு அப்படி ஒரு விஷயம் இருப்பதே தெரியாத விரல் சூப்பிகளாக இருந்த காலம் . தொடர்ந்து படியுங்கள் . )
அடுத்த சம்பவம் 1983 ஜூலை கலவரத்தின் பொழுது நடை பெற்றது . எந்த காரணமும் இன்றி வீதியில் நின்ற பொதுமக்களை இராணுவம் சுட்டுக் கொன்றிருந்தது . கொல்லப்பட்டவர்களின் உடல்கள் தெருவெல்லாம் கிடந்தன .
Inquirers into sudden deaths suddenly disappeared. Relatives of deceased contacted me through lawyers. The police refused to come out of their police stations for fear that there might ensue clashes between the army and police.
திடீர் மரணவிசாரணைகள் நடை பெறவில்லை . கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் சட்டத் தரணிகளூடாக என்னைத் தொடர்பு கொண்டார்கள் . போலிஸ் நிலையத்துக்கு வெளியே பொலிசார் வர அஞ்சினார்கள் . பொலிசாருக்கும் இராணுவத்துக்கும் இடையே மோதல் வந்துவிடுமோ , தம்மை இராணுவம் சுட்டுவிடுமோ என அவர்கள் அஞ்சினார்கள் .
I spoke to the OIC, Chunnakam over the telephone and the conversation was as follows:
“Why aren’t you coming?”
“We fear the army.”
“But who told you that the army is responsible for the shootings?”
“Sir! They are responsible.”
“No. I say people dressed in army uniforms had committed these murders. So why don’t you come?”
They came.
சுன்னாகம் போலிஸ் அதிகாரியுடன் நான் தொலை பேசியில் பேசினேன் .
நான் கேட்டேன் “நீங்கள் ஏன் வரவில்லை ”
அவர் சொன்னார் “நாம் இராணுவத்துக்கு அஞ்சுகின்றோம் ”
நான் சொன்னேன் ” ஆனால் , யார் உங்களுக்கு சொன்னார்கள் இராணுவம் தான் சுட்டது என்று ”
அவர் சொன்னார் “ஐயா அவர்கள் தான் சுட்டார்கள் ”
நான் சொன்னேன் “இல்லை , நான் சொல்கின்றேன் இராணுவ சீருடையில் இருந்தவர்கள் தான் சுட்டார்கள் , நீங்கள் ஏன் வரக் கூடாது ”
I conducted the inquests personally on all the dead bodies and gave a verdict of homicide in each of them by persons dressed in army uniforms travelling in such and such vehicles, giving the vehicle numbers provided to me at the inquests. I directed the police to investigate as to whom those vehicles belonged to.
Later, human rights activists traced the numbers to genuine army vehicles and what happened in Mallakam was splashed across the globe in human rights journals!
நான் தனிமனிதனாக விசாரணைகளை மேற்கொண்டேன் . அத்தனை மரணங்களும் கொலைகள் என தீர்பளித்தேன். இராணுவ சீருடையில் வந்தவர்கள் இந்த கொலைகளைச் செய்தார்கள் எனத் தீர்ப்பளித்தேன். அத்துடன் சாட்சியங்களின் அடிப்படையில் இராணுவ சீருடையில் வந்தவர்கள் பயணித்த வாகன பதிவு இலக்கங்களையும் கொடுத்திருந்தேன் .
பொலிசார் மேல் விசாரணைகளை மேற்கொண்டு அந்த வாகனங்கள் யாருக்கு சொந்தமானவை என அறிக்கை சமர்பிக்குமாறு கட்டளை இட்டேன் .
பின்னர் , மனித உரிமையாளர் ஒருவர் அந்த வாகங்கள் இராணுவத்துக்கு சொந்தமான உண்மையான வாகனங்கள் என உறுதிப் படுத்தினார் .
மல்லாகம் கொலைகள் உலகமெல்லாம் வெளியான மனித உரிமை ஏடுகளில் அம்பலமாகியது .
.(குறிப்பு :- இது 80 களில் அவர் பதவியில் இருக்கும் பொழுது நடந்தது . இபொழுது சொல்லுங்கள் பதவிக்காக கூழைக் கும்பிடு போடும் மனிதனா குணாநிதி ஐயா விக்கினேஸ்வரன் என்று . சத்தியமாக சொல்கின்றேன் அவரை நான் தனிப்பட்ட அனுபவத்திலும் தெரிந்தவன் சொல்கின்றேன் . அவர் உரிமைகளை என்றுமே விட்டுக் கொடுக்க மாட்டார் . அவரது அரசியல் பிரவேசம் கடவுள் தந்த பாக்கியம் என ஆயர் ராயப்பு ஜோசப்பு சொன்னது முற்றிலும் சரி )
“கிண்டு” ஸ்தான் பேட்டியில் சொன்ன கீழே உள்ள வரிகளை எல்லோரும் மனதில் இருத்துவது நல்லது .
So far it has been only about politicians. I suppose I bring a fresh air of perception. Politics has no meaning for me. I am also not interested in this post. I am just taking on a job. If it is possible to do it, I will, otherwise I’ll just turn back and go away.
இதுவரை அரசியல் வாதிகள் இந்த விடயத்தைக் கையாண்டனர் . புதிய வலு ஒன்றைக் கொண்டு வர நான் விரும்புகின்றேன் . நான் ஒரு புதிய வேலையை கையில் எடுக்கின்றேன் . என்னால் முடிந்தால் செய்வேன் . முடியாவிட்டால் நான் போய் விடுவேன் .
1983 குணநிதி ஐயா விக்னேஸ்வரன் நீதிபதியாக செய்த கடமையை இனக்கலவரம் நடை பெற்று 30 ஆண்டுகளின் பின்பு இன்றும் தமிழ் மக்களின் உரிமைக் குரலாக மாறியிருக்கின்றார் என்றால் அது கடவுள் தந்த பாக்கியம் தான் . கதிர் வேலவனின் குரலாய் அவர் வந்திருக்கின்றார் என்று நான் உறுதியாக நம்புகின்றேன் .
குணாநிதி ஐயா விக்கினேஸ்வரன் பற்றி தெரியாது என்றால் அவையள் உணமைகளை அறியும் வரை மௌனமாக இருப்பது நல்லது .
ஆதாரம் இல்லாமல் அவரைக் குறை சொல்வதை தவிர்த்து கொள்ள வேண்டும் .
இது சண்டே லீடர் பேட்டியின்
பாகம் 2 PART 2 அடுத்தவாரம் வெளியாகும்
Please this too தமிழீழமும் ஐயா விக்கினேஸ்வரனும் !!!
http://tmwtmw.blogspot.co.uk/2013/07/blog-post_7967.html
முழுமையான பேட்டியை இங்கு அழுத்திப் பார்க்கலாம்
http://www.thesundayleader.lk/archive/20041031/interviews.htm
வட மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராக வந்திருப்பது காதலித்த பெண்ணை கைவிட்டது போல் இருப்பதாக கூட்டமைப்பின் வடமாகாண சபை முதன்மை வேட்பாளரும் ஓய்வு பெற்ற முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் கொழும்பில் இருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய விஷேட செவ்வியில் அவர் இதனை தெரிவித்தார்.
இயற்கை நிறைந்த அமைதியான வாழ்வை நேசிப்பதே எனது வாழ்க்கையாகவும் எனது காதலியாகவும் கொள்கின்றேன் தற்போது திடீரென வட மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுமாறு கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஏகமனதாக என்னை கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதனைக் ஏற்றுக்கொண்டு தமிழ் மக்களின் அரசியல் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும் மாகாண சபை ஊடாக தீர்த்து வைக்கும் பாரிய பொறுப்பு எனக்கு கையளிக்கப்பட்டுள்ளது. அதனை முழு மூச்சுடன் ஏற்றுக் கொண்ட போதிலும் உள் மனதில் காதலித்த பெண்ணை கைவிட்டது போல் ஒரு ஏக்க உணர்வு காணப்படுகின்றது. எவ்வாறாயினும் எனது பொறுப்பை முழு அளவில் ஏற்றுக்கொண்டு அதனை இறுதி வரையில் நேர்மையாக போராடி வெற்றி கொள்வேன் என குறிப்பிட்டார்.
வடமாணசபைத்தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் தயாமாஸ்டர் என உள்ளிட்ட யார் போட்டியிட்டாலும் தமிழர் என்ற வகையில் தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளை முதன்மையாக கொண்டு செயற்பட வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் எதிர்காலத்தில் தமிழர்களின் நிலைமை கேள்விக்குறியாகிவிடும் என குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபையில் உள்ள அதிகாரங்களை முழுமையாக பயன்படுத்தி மக்களுக்கு உரிய சேவையினை வழங்க கூடிய அதிகாரம் சட்டத்தில் மாகாண சபைக்கு வழங்கப்படவில்லை. மாறாக ஆளுநருக்கே கூடுதலாக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் வட மாகாண சபை தேர்தலில் வெற்றி பெற்றாலும் பாரிய நெருக்கடியினையே எமக்கு சந்திக்க நேரிடும்.
அதே போன்று அரசாங்கம் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அனைத்தையும் மட்டுப்படுத்தும் நோக்கிலான அதிகாரக் குறைப்பு நாடகத்தை ஆடுகின்றது என்று எண்ண தோன்றுகின்றது. ஆகவே பல சவால்கள் மாகாண சபையில் இருக்கின்றது என்பதை நான் அறிவேன். இது வட மாகாணத்தில் வலுவான நிலையில் காணப்படும் என்றும் எனக்கு தெரியும்.
எவ்வாறாயினும் அரசியல் என்பதை விட மக்கள் பணி தமிழர்களுக்கு சேவை செய்யும் சந்தர்ப்பமாக நினைக்கும் போது அதனை சட்ட ரீதியாக கையாண்டு நெறிப்படுத்த முயற்சிப்பேன்.
“எவ்வாறாயினும் அரசியல் என்பதை விட மக்கள் பணி தமிழர்களுக்கு சேவை செய்யும் சந்தர்ப்பமாக நினைக்கும் போது அதனை சட்ட ரீதியாக கையாண்டு நெறிப்படுத்த முயற்சிப்பேன்.”
விக்ஸ் என்ன சொல்ல வருகின்றார்? மக்கள் பணி என்று தமிழ் மக்களுக்கு திருநீறு பூசி விடப் போகிறாரோ?
அரசியல் சட்டத்தை கட்டுப்படுத்துமா? சட்டம் அரசியலை கட்டுப்படுத்துமா? சட்டத்திற்கும் அரசியலுக்கும் தொடர்பில்லையா? அவர் கையாள நினைக்கும் சட்டம் யார் கையில் இருக்கும்?
சந்திர மௌலீசன், குமார்,
சர்வதேசம் என்று நீங்கள் சொல்லவருவது அமரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இந்தியா வேண்டுமானால் பல்தேசிய நிறுவனங்களின் புதிய சொர்க்க புரியான சீனா போன்ற நாடுகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மில்லியன்களை அப்பாவிகளிடமிருந்தும் உங்களைப் போன்றவர்களிடமிருந்து சுரண்டிக்கொள்ளும் ஊடகங்கள் இதனைத் தான் உங்களுக்கு இதுவரை சொல்லித்தந்திருக்கின்றன.
உங்களை மட்டுமல்ல அப்பாவிகளையும் அழிப்பவர்களோடு சேர்த்துக்கொள்வதற்காக அவர்கள் செய்கின்ற சர்வதேசச் சதிகளில் இதுவும் ஒன்று. ஆப்கானிலும்,அரேபிய நாடுகளிலும் நேரடி இராணுவ யுத்தத்தையும் தெற்காசியாவில் இந்திய அரசின் துணையோடு மனிதப் படுகொலைகளையும் நடத்தும் இவர்களே உங்களது சர்வதேசியம்.
முப்பது வருடமாக நீங்கள் நம்பிய, நீங்கள் அடிமைகளாகச் சேவகம் செய்த இதே சர்வதேசம் வன்னிப் படுகொலைகளை நடத்தி ஒரு லட்சம் அப்பாவிகளைக் கொன்று குவித்து ஐந்து வருடங்களின் பின்னர் சாட்சியில்லாமல் இனச் சுத்திகரிப்பு செய்க்கின்ற போதும் நீங்கள் இன்னும் அவர்கள் தான் வேண்டும் என்கிறீர்கள். இன்னும் எத்தனை முள்ளிவாய்க்கால்களை காண்பதாக உத்தேசம்? அவர்கள் கொலைகாரர்கள் என்று தெரிந்துகொண்டும் நீங்கள் அவர்களை அழைத்துவந்து மக்களைக் கொலைசெய்யுங்கள் எனக் கூட்டிக் கொடுப்பதும் இலங்கை அரசுடன் இணைந்து வேலை செய்வதும் ஒன்றுதான். எல்லாமே கொலை தான்.
விலங்குகள் கூட தன்னைக் கொலை செய்யவருகின்றவர்களிடம் இறுதிவரை போராடித் தான் மடிந்து போகின்றன. நீங்களோ கொலைசெய்ய வருகின்றவர்களம் ஐந்தாம் படையாக அடிமையாக வாழ்ந்து மடிந்து போக முனைகிறீர்கள். முதலில் விலங்குகளுக்கு கீழான நிலையிலிருந்து விடுதலை பெறுங்கள்.
குமார், நீங்கள் சொல்கின்ற கிழக்குத் தீமோரை அழிப்பதற்காகவே பிரித்துவைத்தார்கள், இன்று அது ஒரு பிணக்காடு. இதே போல தென் சூடானின் இனக் குழுக்களின் மோதலால் இரத்தம் பாய்கின்றது. அழிவிலிருந்து தம்மைத் தக்கவைத்துக்கொண்ட போராட்டங்கள் நிறையவே இன்று உலகம் முழுவதும் நடைபெறுகின்றன. பல போராட்டங்கள் வெற்றியை நோக்கிச் செல்கின்றன. சர்வதேசம் என்றால் என்னவென்று அவர்கள் புரிந்துகொண்டதால் தான் அவர்களால் வெற்றிபெற முடிந்தது. சீனாவினதும் இந்தியாவினதும் நேரடியான கட்டுப்பாட்டுக்குள்ளிருந்த நேபாளத்தில் 13 வருடங்களுக்குள் ஆயுதம் தாங்கிய மக்கள் போராட்டம் வெற்றிபெற்றது அண்மையில் தான்.
உலகப்படத்தின் கணிசமான பகுதியை ஆக்கிரமித்துக்கொள்ளும் இந்தியாவில் பள்ளிக்கூடம் போகத பழங்குடி மக்களின் போராட்டத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல் இந்திய இராணுவம் திணறுகிறது. இப்படிப் பல உதாரணங்களைக் கூறலாம். நீங்களோ அழித்தவர்களிடம் இன்னும் அழிக்க வாருங்கள் என அழைப்பு விடுத்துவிட்டு மக்கள் மீது பற்று என்கிறீர்கள்.
ஐரோப்பா அமரிக்கா உட்பட உலகம் முழுவதும் போராடும் மக்களுக்கு நீங்கள் சொல்லும் செய்தி நாங்கள் உங்கள் பக்கம் அல்ல உங்கள் எதிரியின் பக்கம் என்று. 30 வருடப் போராட்டம் அழிந்ததற்கான அதே வழிகளை நீங்கள் மீண்டும் திறந்துவிட முனைகிறீர்கள்.
all four factors in our issue INDIA,MR(GOSL) ,West and Tamil polity meet at the same point: which is diluting THESIYAM/self determination of tamils. = VIGNESHWAREN.