ஆயுதப் போராட்டம் என்பது ஒரு வன்முறை என்று கூறுதலே ஒரு சமூக இயக்கத் தந்திரமாகவும் அதை ஒரு நாடு இராணுவத்தின் பெயரால் செயல்படுத்தும் போது அதுவே ஒரு ராஜதந்திரமாகவும் அர்த்தம் பெறுகிறது. ஆயுதம் என்றால் என்னவோ உலோகங்களாலும் இன்ன பிற ஆக்கங்களாலும் ஆக்கப்பட்டதாகவும் கருதப்படுகிறது. இது ஓர் ஒற்றைப் பரிமாணச் சிந்தனையே. ஒடுக்குமுறையைச் செயல்படுத்துபவர்கள் தங்களால் இயன்ற எல்லாவற்றையும் ஆயுதமாகப் பயன்படுத்துகையில் நாம் ஆயுதத்தையே ஆயுதமாகப் பயன்படுத்துவது அறம் பிழைத்ததாகாது.
ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஆயுத இயக்கமும் ஆயுதப் போராட்ட வடிவங்களும் முன்னிலை வகுத்ததாலேயே அதை ஒரு வன்முறை இயக்கம் என்று கூறுதலும் அதன் அடிப்படைக் கோரிக்கைகளை ஒட்டுமொத்தமாக மறுத்தலும் எந்த விதத்திலும் நியாயமாகாது. இதன் பின்னணி ராஜ தந்திரங்கள் நமது மூளைக்குப் புரியாமல் இல்லை. கம்யூனிஸ இயக்கங்கள் நாடு என்ற சிந்தனையைத் தான் முதன்மையானதாக வலியுறுத்துகின்றன. நாடு என்ற பூகோள வரையறைக்குட்பட்ட நிலம் என்பதன் நலத்துக்காக ஒரு நாட்டின் தலைமை என்ன வகையான நடவடிக்கையையும் எடுக்கலாம். ஆனால், மக்களின் நலம், அடிப்படைத் தேவைகள் குறித்த ஆழமான பார்வையற்ற ஒரு தலைமை, அதன் சிந்தனை அப்படியான நடவடிக்கைகளின் பின்னால் இயங்கும் போது மேற்கண்ட சிந்தனை ஒரு பொழுதும் மக்களுக்கு உதவுவதில்லை.
மக்களின் நலன் பாராட்டவும் பேணவுமே நாடு இருக்கிறது என்ற அடிப்படையான நியாயம் மறுக்கப்பட்ட நிலத்தில் இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் உள்ள நாட்டில் மக்களே அரசுக்கு எதிராகத் திரும்பியாகத் தான் வேண்டும். நாட்டின் இறையாண்மை என்பதே கூட சில பல வகைகளின் மேலாதிக்கத்திற்கு, மேல் சாதிக்கு, ஆதிக்க வர்க்கத்திற்கு சாதகமான கோடுகளால் வரையப் பட்டது தான். துருவித் துருவிப் பார்த்தால் சமூக வேறுபாடுகளை இன்னும் அதிகப்படுத்தும் ஆயுதங்களாக சாதி, மதம், வர்க்கம், பாலியல் வன்முறை, பால் வேறுபாடு என்று நிறைந்திருப்பவை தாம் ஒடுக்குமுறை வெப்பத்தைத் தணிக்கும் உத்தியாக ஆயுதங்களைப் பயன்படுத்தும் சிந்தனக்குத் தள்ளுகிறது.
சமீபத்தில் ஈழத்தில் நிகழ்ந்து முடிந்துள்ள இனப்படுகொலையில் முக்கியமான ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது, ஏவப்பட்டிருப்பது தமிழ்ப் பெண்களின் மீதான பாலியல் வன்முறை. பெண்கள் எந்த வகையிலும் தம் எதிர்ப்பைக் காட்ட முடியாத வகையில் இராணுவ பலத்துடன் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இங்கு இன மேலாதிக்கம் மற்றும் இராணுவ ஆயுதம் கூடிய பாலியல் வன்முறை தமது அதிகாரத்தைக் காட்ட வசதியாகவும் வாய்ப்பாகவும் இருந்துள்ளதைக் காணலாம். இப்பொழுது எதை ஆயுதம் என்பீர்கள்? பலவீனமான பெண்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மீது பாலியல் வன்முறையை நிகழ்த்துவதுடன் ஒப்பிடும்போது கொடூரமான ஆயுதம் என்று ஏதுமில்லை.
இன்னும் நுணுகிப்பார்த்தால் இந்திய நிலத்திலிருந்து ஆயுதப்போராட்டம் என்பதை எதிர்ப்பதற்கான காரணம் என்பது அஹிம்சை என்ற காந்திய சித்தாந்தத்தில் ஊறிப்போன ஆதிக்கசாதி மனோநிலை தான். காலங்காலமாய் ஆயுதங்களுக்கான உரிமையும் சலுகையும் அரசுப்பூர்வமான அதிகாரமும் ஆதிக்கசாதியினருக்குத் தான் வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் எதிர்நிலை ஒடுக்கப்பட்டோர் தங்கள் மீது செலுத்தப்படும் வன்முறைக்கு, ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதங்களைப் பறித்தோ, ஆயுதங்களை தயாரித்தோ, ஆயுத வடிவங்களை உருவாக்கியோ பயன்படுத்தும் போது உடனே, ‘அய்யகோ!’ ஆயுதத்தைப் பயன்படுத்துவது வன்முறை என்று கூவுதல் ஆதிக்க மனோபாவத்தை நிறுவுவதற்கான குரலே அன்றி மண்ணில் அதர்மத்தை அழித்து தர்மத்தைப் பேணும் குரலோ, அல்லது மானுடம் பேண வன்முறை ஒழிப்போம் என்ற கோரிக்கை முழக்கமோ அல்ல. இந்நிலையில் ஈழவிடுதலைப் போராட்டத்தையும் மறுப்பதற்கு மிக முக்கியமான வாய்ப்பாக ஆதிக்க சாதியினருக்கும் அதிகாரத்திலிருப்போருக்கும் இருப்பது ஆயுதப்போராட்டம் தான். அதே ஆயுதம் அவர்கள் கையில் இருக்கும் போது அது அடிப்படை முறையாகவும் தர்மப் போராட்டவும் மகாபாரதக் கிருஷ்ணன் சொல்லும் ஆயுத, யுத்த தர்மங்களும் கூட கடைபிடிக்கப்படும் என்பதில் எந்த ஐயமுமில்லை.
மேலும் ஈழ விடுதலைப் போராட்ட்த்தை ஓர் ஆயுதப் போராட்டமாக மட்டும் நோக்கியதே அல்லது அவ்வாறு ஊடகங்களாலும் அதிகார ஆதாயம் தேடும் அரசியல் தலைவர்களாலும் நம்பவைக்கப் பட்டதே இன்று தமிழகத் தமிழர்கள், புலம் பெயர்ந்த தமிழர்கள் என தமிழ் மக்கள் எல்லோரும் ஒருங்கிணையாது பிளவுபட்ட ஒரு சக்தியாக இருப்பதற்கு காரணம். இவ்வாறு அவ்விடுதலைப் போராட்டத்தை ஓர் ஆயுதப் போராட்டம் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தியே எழுச்சியின் நெடுஞ்சாலையிலிருந்து விலக்கி வைத்தனர். இவ்விடுதலைப் போராட்டம் பெரிய அளவில் வெற்றியைப் பெறாததற்கு முக்கியமான இன்னுமொரு காரணம் இதை ஓர் அரசியல் போராட்டமாக மட்டுமே நோக்கியதோடு நிறுத்திக் கொண்டதும் தான். இப்போராட்டத்தில் பங்கெடுக்க வழியில்லாத மற்ற புலத்திலிருந்தோர் இப்போராட்டத்தின் மற்ற வடிவங்களை உருவாக்கிக் கொள்ளாததும் அதற்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்ளாததும் அப்போராட்ட வளையத்திற்கு வெளியே தங்களை இருத்திக் கொண்டதும் தாம். இதை ஒரு சமூக, பண்பாட்டு, வரலாற்றுப் போராட்டமாக மாற்றுவதற்கான சக்தியை ஆயுதப் போராட்டத்தில் பங்கெடுக்காத மற்ற மக்கள் குழுமம் திரண்டு அளிக்காததும் தான். கொழும்புவில் சில வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு பெண்ணியக் கருத்தரங்கில் இதே கருத்தை நான் முன் வைத்த போதும் இதை ஓர் ஆயுதப் போராட்டத்திற்கு எதிரான கருத்தாகவே உள்வாங்கும் குறுகிய மனோபாவம் அல்லது எச்சரிக்கை உணர்வு எதிரில் இருந்த எல்லோரையும் பேசா மடந்தையராக்கியிருந்தது.
ஈழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்கப் போய் எல்லா தேசிய இனப் பிரச்சனைக்கான முன்மாதிரியாக அது இருந்து விடக்கூடாது என்ற சர்வதேச அரசியல் பேசுவோரின் போலியான அக்கறையும் முக்கியமான காரணம். சிங்கள அரசே கூட இதற்கு முன்பு உலக அளவில் அரங்கேறிய பல இனப்படுகொலைகளை தனது இராணுவச்செயல்பாட்டுக்கு முன்மாதிரியாக எடுத்துக் கொண்டுள்ளது எனலாம். இராணுவ நிரல்களில் பிரயோகிக்கப்படும் எல்லா சொற்களும் செயல்களும் மக்களை சடப்பொருள்களாக, வெறுமனே டார்கெட்டாக, மக்களை அம்பு வழி நோக்கிய குறிகளாகப் பார்க்கின்றன. ஆயுதங்களைக் கைவிடுதல், இராணுவ வலையம், மக்களை வேறு இடத்தில் குடியமர்த்துதல், போர் நிறுத்தம் என்ற வார்த்தைகள் மட்டுமே அமைதிக்கான வழிகள் என்று எண்ணலாகாது. இவை எல்லாம் மக்களின் உரிமைகளை முன்வைக்கும் செயல்பாடாக இல்லாமல் இராணுவ நடவடிக்கைகளில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. வாழ்வை நிலத்தோடும் தட்பவெப்ப நிலையோடும் பண்பாட்டோடும் சூழலோடும் நடத்தி வந்த ’மக்களை வெளியேற்றல்’ என்பதும் இராணுவ செயல்பாடுகளில் ஒன்றாகும். இந்நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழின மக்களுக்கு உரிமைகளே அற்ற இடத்தில் ஆயுதங்களையே உரிமைகளாகத் தந்துள்ளது. ஆயுதங்கள் ஏதுமற்ற சூழ்நிலையில் கைக்கு எட்டிய எதையும் ஆயுதமாகப் பயன்படுத்துவோம் என்றார் சே குவேரா எனபது இவ்விடம் என் நினைவில் புரள்கிறது.
தமிழ் மக்களின் இன விடுதலைக்கான போராட்டத்தை வெறும் ஆயுதப் போராட்டமாகவும் ஆகவே பயங்கரவாதமாகவும் காட்டுவது அரசுக்கும் பலவேறு பகை நோக்கம் கொண்டோருக்கும் வசதியாகவே இருந்தது என்று குட்டி ரேவதி செல்வது மிகவும் சரி.
அவர் சொல்வது இந்தியாவின் மாஓவாதிகளதும் பழங்குடியினரதும் காஷ்மீர கிழக்கு இந்திய மக்களதும் எழுச்சிகட்கும் பொருத்திப் பார்க்கப்பட வேண்டும்.
அதே வேளை ; விடுதலைப் புலிகள் மட்டுமன்றி ; எந்தத் தமிழர் போராளி இயக்கமும் ஆயுதங்களை முதன்மைப்படுத்திய அளவுக்கு மக்களிடையே அரசியல் வேலைகட்கு முக்கியத்துவம் கொடுத்தனவா?
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் எனப்படுவோர் விடுதலைப் புலிகளின் அரசியல் தவறுகளை விமர்சித்திருக்கிறார்களா? மக்கள் அரசியல் என்ற ஒரு கோட்பாட்டையே கருத்திற் கெண்டிருப்பார்களா?
தமிழ் மக்களின் பேரழிவுக்கு இலங்கை அரசும் அந்நிய ஆதரவும் மட்டுமே காரணமல்ல. தவிர்த்திருக்கக் கூடிய பல மாபெரும் இழப்புக்கட்கு விடுதலைப் புலிகள் உட்படப் பலரும் பதில் கூறியே ஆக வேண்டும்.
உனர்வுடன் எழுதப்பட்ட கட்டுரை. படிக்கப்படிக்க சொகம்தான். கவலை கவிழ்ந்து கொல்கிற்துநன்ற் குட்டி ரெவதி க்கு.
//தமிழ் மக்களின் பேரழிவுக்கு இலங்கை அரசும் அந்நிய ஆதரவும் மட்டுமே காரணமல்ல. தவிர்த்திருக்கக் கூடிய பல மாபெரும் இழப்புக்கட்கு விடுதலைப் புலிகள் உட்படப் பலரும் பதில் கூறியே ஆக வேண்டும்.//
விடுதலைப் புலிகள் மட்டுமல்ல மதில் மேல் பூனைகளாயிருந்த இடது(?)சாரிகள் முதற் கொண்டு அனைவருக்கும் பங்கிருக்கிறது என்பேன்.
அவரவர் தத்தம் தவறுகளைத் திரும்பிப் பார்ப்பதை விடுத்து மற்றவர்களுடைய தவறுகளைச் சுட்டுவதிலேயே அதிக கவனம் செலுத்தி வரும் இன்றைய சூழல் நம்பிக்கை தருவதாக இல்லை
பல மதில்களிலும் அமர்ந்த பல பூனைகளையும் அறிவோம். எனவே எந்த மதில் மேல் எந்தப் பூனை இருந்தது என்று சிந்தித்துப் பேசுவது நல்லது.
எல்லா இடதுசாரிகளையும் திட்டுவது தேசியவாதிகளின் வழமையும் வசதியுமாகவே இருந்து வந்துள்ளது.
சந்தர்ப்பவாத பாராளுமன்ற இடதுசாரிகள் போக மற்றோரது நிலைப்பாடு அன்று போல் இன்றும் உறுதியாகவும் தெளிவாகவுமே இருந்து வந்தது.
ஏப்போதாவது தடுமாற்றம் இருந்திருந்தால் அதை விமர்சிப்பதில் நியாயமுண்டு.
நேர்மையான இடதுசாரிகள் சுயவிமர்கன அடிப்படையிலேயே செயற்பட்டுவந்துள்ளனர்.
விடுதலையின் பேரால் இது வரை லட்சம் பேரைக் காவுகொடுத்த ஓரு காரியத்தை ; 3 லட்சம் பேரைத் திறந்த வெளிச்சிறைக்குள் தள்ளிய காரியத்தைப் பற்றிப் பேசாமலிருப்பது எளிதல்ல.
அதே பிழைகளை மீள மீளச் செய்யத் து|ண்டுகிற முயற்சிகளின் நடுவே யாரை எதை விமர்சிப்பது அவசியமாகிறது என்பது கவனிப்புக்குரியது.
நான் மணி
ஆயுதப் போராட்டத்தை புலிகள் நடத்த மற்ற இயக்கங்கள் அவற்றை அரசியல் போராட்டமாக ஆக்கி இருக்க வேண்டுமா… இது என்ன என்.ஜி.ஓ வேலை மாதிரி தெரியுதா.. நீங்க சொல்லி அந்த கருத்தரங்கில சும்மா இருந்தவர்களைச் சொல்ல வேண்டும்…
அபத்தமான கட்டுரை. குட்டிரேவதியின் பல கட்டுரைகளில் தென்படுவதைப் போலவே இங்கும் மிகச் சாதாரணமான கருத்துக்கள் கூட மிரட்டும் வார்த்தைகளைப் போட்டு உருவேற்றப்பட்டிருக்கின்றன. இலங்கை அரசின் இனப்படுகொலை என்பது நியாயப்படுத்தப்பட முடியாத ஒன்று. ஆனால் புலிகள் மட்டுமில்லாது உலகமெங்கும் நடைபெறும் ஆயுதப்போராட்டங்களை விமர்சிப்பவர்களாக ஆளும்வர்க்கம் மட்டுமில்லாது இடதுசாரிக் கருத்தியலை உள்வாங்கிக்கொண்டவர்களாகவும் உள்ளனர் என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். ஆயுதம் எப்போதும் அபரிதமான அதிகாரத்தை வழங்குகிறது. அந்த அதிகாரம் யாருக்கு எதிராகப் பிரயோகப்படுத்தப்படுகிற என்கிற கேள்வி மிக முக்கியமான ஒன்று. எவ்வளவு லட்சியத் தூய்மை கொண்ட இயக்கங்களும் ஆயுதம் ஏந்தும்போது அதன் வன்முறை, எந்த மக்களுக்கு ஆதரவாகப் போராடினார்களோ அந்த மக்களின் மீதே பிரயோகிக்கப்படுவதாக மாறிவிடுவது வரலாற்றுச் சோகம்தான். அது இந்திய மாவோயிஸ்ட்கள் வரை பொருந்திப் போகிறது. மேலும் ஆயுதப்போராட்டத்தின் ஒருபகுதியாக ‘மாற்றுக் கருத்துள்ளவர்களை/சகோதர இயக்கங்களை அழிப்பது’ என்பதும் ஒரு நிகழ்ச்சிநிரலாக மாறிப்போய்விடுகிறது. இதில் உச்சத்தைத் தொட்டது புலிகள் இயக்கம் என்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே ஆயுதப்போராட்டத்தின்மீதோ அல்லது ஆயுதக்குழுக்களின் வன்முறை குறித்தோ கேள்வி எழுப்புபவர்கள் எல்லோரையும் ஒரே வகையினராக முத்திரை குத்துவது நீதியாகாது. இங்கே குட்டிரேவதி சாதியமைப்பையும் புலிகளின் போராட்டத்தையும் சம்பந்தமில்லாமல் போட்டுக்குழப்புகிறார். ஆளும் வர்க்கம் ஒடுக்கப்பட்ட சாதிகள் மட்டுமில்லை, ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் மற்றும் அரசமைப்பிற்கு எதிரானவர்கள் யாரும் ஆயுதம் ஏந்துவதை அனுமதில்லை. மாறாக விடுதலையை முன்வைக்கும் ஆயுதக்குழுக்கள் இதே நடைமுறையைச் சக குழுக்களிடம் கடைப்பிடித்து தன்னை அரசின் இடத்திற்குப் பதிலீடு செய்கின்றன.
/கம்யூனிஸ இயக்கங்கள் நாடு என்ற சிந்தனையைத் தான் முதன்மையானதாக வலியுறுத்துகின்றன. /
போகிற போக்கில் உதிர்க்கப்படும் இத்தகைய அபத்தமான கருத்துக்கள் சொல்ல வந்த விஷயத்தை மேலும் நீர்த்துப் போக வைத்து விடுகிறது.
/இவ்விடுதலைப் போராட்டம் பெரிய அளவில் வெற்றியைப் பெறாததற்கு முக்கியமான இன்னுமொரு காரணம் இதை ஓர் அரசியல் போராட்டமாக மட்டுமே நோக்கியதோடு நிறுத்திக் கொண்டதும் தான். இப்போராட்டத்தில் பங்கெடுக்க வழியில்லாத மற்ற புலத்திலிருந்தோர் இப்போராட்டத்தின் மற்ற வடிவங்களை உருவாக்கிக் கொள்ளாததும் அதற்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்ளாததும் அப்போராட்ட வளையத்திற்கு வெளியே தங்களை இருத்திக் கொண்டதும் தாம். இதை ஒரு சமூக, பண்பாட்டு, வரலாற்றுப் போராட்டமாக மாற்றுவதற்கான சக்தியை ஆயுதப் போராட்டத்தில் பங்கெடுக்காத மற்ற மக்கள் குழுமம் திரண்டு அளிக்காததும் தான்/
என்ன செய்ய வேண்டும் என்கிறார் குட்டிரேவதி? அவர்களும் ஆயுதம் ஏந்தியிருக்க வேண்டும் என்கிறாரா? புலிகளுக்குப் பொருளாதார ரீதியான பங்களிப்புகளைப் பெரிதும் வழங்கியவர்கள் புலம்பெயர்ந்த தமிழர்கள்தான் என்பது யாவரும் அறிந்ததுதான். கருத்தியல்ரீதியாகப் புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகத்தின் பெரும்பான்மை புலிகளைத்தான் ஆதரித்தது. ஆனால் மாறாக அந்த மக்கள் மத்தியில் என்ன விதமான அரசியலைப் புலிகள் இயக்கம் வளர்த்தெடுத்தது? வெறுமனே பணம் வழங்கும் எந்திரங்களாகப் பயன்படுத்திக் கொண்டதைத் தவிர.
/விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழின மக்களுக்கு உரிமைகளே அற்ற இடத்தில் ஆயுதங்களையே உரிமைகளாகத் தந்துள்ளது. /
எது கட்டாயமாக இயக்கத்தில் சேர்த்துக் கைகளில் துப்பாக்கி திணித்ததா?
குட்டி ரேவதியின் சிறந்த கட்டுரை. வழக்கம் போல சுகுணா அ.மார்க்ஸ் குரலில் பேசுகிறார். குட்டி ரேவதி இப்படி ஒரு கட்டுரையை எழுதிய உடன் பதறியடித்து வரும் சுகுணா எங்காவது பேரினவாத இலங்கை அரசின் இனப்படுகொலையை கண்டித்திருப்பாரா? ஆயுத இயக்கங்கள், அதன் வன்முறை, இடது சாரி ஆயுதப் போராட்டம், அல்லது வலதுசாரி ஆயுதப் போராட்டம் அது எதுவாகவும் இருக்கட்டும் எதிர்பியக்கங்களை கட்டுடைக்கிறோம். கபாலத்தை உடைக்கிறோம் என்று கிளம்பி எத்ரிப்பியங்களை எதிர் சிந்தனைகளை மட்டும் குறி வைத்துத் தாக்கும் நோக்கம் என்னவோ?
தமிழ் நாட்டில் கூட பெரும்பான்மை கோடிக் காண்க்கான மக்களின் ஆதரவைப் பெற்ற தலைவராக நீங்கள் இருக்கிறீர்கள். இந்த மக்களை அரசியல் மயபடுத்த நீங்கள் மட்டும் இயக்கம் கட்டுகிறாரா? என்ன?
கருணாநிதி தொடங்கி சுகுணாதிவாகா; வரைக்கும் ஈழப்போராட்டம் பற்றி கருத்து உதிர்க்கையில் மக்கள் அழிவில் ‘ரா’வின் பங்களிப்பையும் கைங்காpயத்தையும் வசதியாக விட்டுவிடுவது ஏனோ? ‘ரா’ தமிழ் விடுதலை இயங்கங்களை வளர்த்து அவர்களைப் பயன்படுத்தியதே சகோதரப்படுகொலைகளின் மூலவேர் என்பதை போராட்டத்தை ஆய்வு செய்வோரும் – மற்றோரும் என எல்லோரும் வாய்பொத்தி – கைபொத்தி எழுதுவுதன் நோக்கம் என்ன? தற்பாதுகாப்பா? அல்லது மூடிமறைப்பா? தேவையானவற்றை மூடிமறைத்துக்கொண்டு நீங்கள் நியாயம் பேசுவீர்களாம் நாங்கள் கேட்போமாம்.
நடந்த எல்லா விஷயங்களுக்கும் ரா மீது பழி போடுவது பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள உதவும் எளிய வழிதான். நான் இங்கு பேசுவது ஆயுதப்போராட்டத்தில் உள்ள சிக்கல்கள் குறித்து. அதை ரொமாண்டிசைஸ் செய்யும் குட்டிரேவதியின் கருத்துகள் எவ்வளவு ஒற்றைத்தன்மை உள்ளவையாக மாறிவிடுகின்றன என்பது குறித்து…
உலகின் பல குழப்பங்களுக்கு எப்படி சிஐஏ, கேஜிபி போன்றவை காரணமாக இருந்தனவோ, அப்படியே தெற்காசிய , குறிப்பாக ஈழச் சிக்கலில் ராவின் பங்கு மறுக்க முடியாதது. ராவின் பங்கை குறைத்து அதைத் தாண்டிச் செல்வது சுகுணா போன்றோரின் அரசியலுக்கு மிக மிக வசதியானது. அ.மா தவிர்த்து அனைவரும் கருத்துக்களும் ஒன்றைத்தனமானவை. அ.மார்க்ஸ் வாழ்க! சோபா சக்தி வாழ்க! சுகன் வாழ்க! அவர்கள் அதி உன்னத அரசியல் வாழ்க!
அதானே ரா, இந்தியா, இலங்கை அரசு, பௌத்தம் இதன் மீதெல்லாம் எல்லா ப்ழிகளையும் போட்டு விட முடியாது. ஒரே பழி தமிழ் பாசிசம், புலிப்பாசிச, ஆமாம் எல்லா பழிகளுக்கும் அதுதான் காரணம்.
சுகுணா,அ.மார்க்ஸ், ,ஜெயமோகன் என ஒரு பட்டாளமே தமிழரகளை முட்டாள்களாக்க கிளம்பியிருக்கிறது.இவர்கள் தீடிரென்று அகிம்சா வாதிகள் ஆவார்கள் இல்லாவிட்டால் ஆயுதமே துணை என்பார்கள்.அ.,மார்க்ஸ் நக்சல்களை புகழ்ந்து விகடனுக்கு பேட்டி தந்த போது நக்சல்கள் என்ன காந்தியவாதிகளாகவ இருந்தார்கள். Hஅமாஸ், Hஇச்போலா என்று வரும் போது சுகுணா,அ.மார்க்ஸ் இதே வாதங்களை முன்வைப்பார்களா?. இப்போது அ.மார்க்ஸ், சாரு, ஜெமோ என ஏராளமான ‘அகிம்சாவாதிகள்’ தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். போட்டி போட்டுக் கொண்டு வன்முறை ஒழிக என்று எழுதுகிறார்கள்.அ.மார்க்ஸ் அடுத்த வருடம் சில சமயங்களில் வன்முறை சரி, எல்லாச் சமயங்களிலும் அல்ல என்பதுதான் இடதுசாரிகள் உலகெங்கும் இன்று சொல்கிறார்கள் என்று ஒருநாள் ராத்திரியில் படித்த 2.5 கட்டுரைகள், 1.5நூற்களை ஆதாரம் காட்டி எழுதுவார் என்றுநாம் எதிர்பார்க்கலாம். அப்போது ஆமாம் சாமி என்று சுகுணா பக்கவாத்தியம் வாசிப்பார்.
நான் காந்தியவாதி அல்ல. ஆனால் ‘லட்சியங்களின் பேராலும் விடுதலையின் பேராலும்’ பிரயோகிக்கப்படுகிற ஆயுத பாவிப்பு மக்கள் விரோதமாகவும் மாறி விடுவது குறித்து சொன்னேன். அ.மார்க்ஸ் ‘காஷ்மீர் : என்ன நடக்குது அங்கே’ நூலில் காஷ்மீர்க்குழுக்கள் குறித்தும் விமர்சனம் வைத்துள்ளார். ‘லால்கர் : மூன்றாவது பார்வை’ நூலில் மாவோயிஸ்ட்கள் மீதும் விமர்சனம் வைத்துள்ளார். ஜெயமோகனின் நிலைப்பாடு குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது.
சுகுணா திவாகர் நீங்கள் இப்ப என்ன தான் சொல்ல வாரிங்க?
அ.மார்க்ஸ் கொம்பனி எல்லாம் இந்த சமூகத்தை மாற்றியமைக்கும் வழிகளைச் சொல்கிறார்கள் என்றா?
இப்படியே போனால், ரவிக்குமா, திருமா, எல்லாருமே சமூகத்தை மாற்றப் புறப்பட்டு விடுவார்கள். மாவொயிஸ்டுகள் மீது ஆயிரம் பேர் விமர்சனம் வைத்துள்ளாஎகள். எங்களுக்குத் தேவை எல்லாம் அவர்கள் அடிப்படையில் என்ன சொல்ல்கிறார்கள் என்பதே. எல்லாருக்குமே கொஞ்சம் கொஞ்சம் நல்லவர் போல நடிப்பதெல்லாம் இன்னொரு வியாபரம் தான்.
சுகுணா நீங்கள் உங்களை காந்தீயவாதியாக சித்தரித்துக் கொண்டதும் உண்டு அது எப்போதெல்லாம் அ.மார்க்சுகு அந்த பீவர் வருகிறதோ அப்போதெல்லாம் உங்களுக்கும் காந்தி பீவர் வந்து விடும்.
I REMEMBER THIS PERSON WENT TO FRANCE ENJOYED WHISKY WITH FRANCE TAMILS EXPENCES THAN AFTER MADE A JOKE ON THEM.JEYAMOHAN NO LONGER USE AS WELL.MARX KNOW THE GAME AND PLAYING WELL.I THINK WE GOT TO CAREFUL I MEAN VERY CAREFUL WITH THESE GUYS OTHERWISE THEY WILL CONTINUE TO DO THE SAME THING TO US.
REVATHI AND SUGUNA HAVE SAID ENOUGH IN THIS PAGE TO SHOW THAT THERE IS MISSING POINT ON US WHICH IS WRIGHT.
TIGERS WASNT LET US TO THINK OUR OWN WAY THEIR ONLY CONCERN WAS MONEY THATS IT.THEIR REPLY ALWAYS LIKE BUGGER OFF.SO SUGUNA IS MAKING A POINT WHETHER YOU LIKE IT OR NOT.
REVATHI VIEW POINT IS GREAT.GOOD ARTICAL. AND WHOLE BOATS WIN OR LOSE RACES.
“அபத்தமான கட்டுரை. குட்டிரேவதியின் பல கட்டுரைகளில் தென்படுவதைப் போலவே இங்கும் மிகச் சாதாரணமான கருத்துக்கள் கூட மிரட்டும் வார்த்தைகளைப் போட்டு உருவேற்றப்பட்டிருக்கின்றன. இலங்கை அரசின் இனப்படுகொலை என்பது நியாயப்படுத்தப்பட முடியாத ஒன்று. ஆனால் புலிகள் மட்டுமில்லாது உலகமெங்கும் நடைபெறும் ஆயுதப்போராட்டங்களை விமர்சிப்பவர்களாக ஆளும்வர்க்கம் மட்டுமில்லாது இடதுசாரிக் கருத்தியலை உள்வாங்கிக்கொண்டவர்களாகவும் உள்ளனர் ”
சுகுணாதிவாகர் நீங்கள் கடந்த எட்டு மாதங்களில் ஈழ போராட்டம் குறித்து புலி எதிர்ப்பைத் தவிர்த்து உருப்படியாக வேறு எதையாவது பேசியிருக்கிறீர்களா? அ.மார்க்ஸ் ——நினைபப்தை ஷோபாசக்தி ——–வழியே— எடுக்கும் நீங்கள். இந்த உலகில் எந்த போராட்டத்தைத்தான் ஆதரித்திருக்கிறீர்கள். மார்க்சியம் பெருங்கதையாடல், தமிழ் தேசீயம் பெருங்கதையாடல், மாவோயிஸ்டுகளின் போராட்டம் அபத்தம். புலிகள் பாசிஸ்டுகள். புலிகளின் பாசிச போக்கு, புலம்ப்யர் மக்களின் அரசியலற்ற போக்கு, அவர்களை சந்தா தாரர்களாக மாற்றிய புலி மனோபாவம் எல்லாம் சரிதான். ஆனால் எதிர்ப்பியங்கங்கள் இனி சாத்தியமில்லை என்று சொல்கிற ஷோபாசக்தி, மார்க்ஸ் கும்பலின் கட்டுடைப்பு, மனித உரிமை முகமூடி கலைந்து கொண்டிருக்கிறது. நீங்கள் அதை ஒட்டி சரி செய்து விடலாம் என நினைக்காதீர்கள்.
இனப்படுகொலை செய்த பயங்கரவாத இலங்கை அரசையும், அக்கொலையை வன்னியில் நடத்திய பாசிச இந்தியா குறீத்தும் மௌனம் காக்கும் மார்க்ஸ், புலிகள் பற்றி பேசும் போது மட்டும் சவுண்டைத் தூக்கிப் பேசுவது ஏன்? அவர் வழி வந்த நீங்கள் இலங்கை அரசை ஒருவரியில் கடந்து செல்கிறீர்கள். புலத்தில் இருந்து இந்தியாவுக்கு வர நினைக்கும் எந்த ஈழத் தமிழரின் விசாவையும் முடிவு செய்வது இந்திய புலனாய்வுத்துறை, விசா விண்ணப்பித்ததும் அங்கிருந்து கொழும்ப் தூதர் அலேக் பிரசாத் மூலம் இந்திய புலனாய்வுத்துறை விசா கொடுக்க வேண்டுமா? வேண்டாமா? என்று முடிவு செய்கிறது. இன்றைவரை பலரின் விசாவையும் மறுத்து வருகிறது இந்தியா. அது தவிற விசா வழங்கிய பிறகு அதை இரத்து செய்த சம்பவங்களும் நடந்திருக்கிறது நிலமை இப்படி இருக்கும் போது ஷோபாசக்தி மட்டும் விரும்பும் போது இந்தியாவிற்கு வந்து செல்ல விசா கிடைக்கிறதே? அது எப்படி? செலவு யாருடையது? இந்தியா மட்டுமல்ல தாய்லாந்திற்கும் அடிக்கடி சென்றூ வருகிறார் அதெல்லாம் எப்ப்டி? நாங்கள் சொல்லவருவது என்னவென்றசல் நீங்களும் மார்க்ஸ், ஷோபா சக்தியும் மனித உரிமை பேசும் ஆளும் வர்க்கத்துக்காரர்களா? இடது கருத்தியல் வாதிகலா? புலிகள் அழிவுக்குப் பிறகு உங்களின் கட்டுடைப்பு குழு மொத்தமாக அம்பலப்பட்டு நிற்கிறது. ஏற்கனவே தோழர்கள் எழுதிய மார்க்ஸ் மீதான உங்கள் மீதான விமர்சனங்களுக்கு நீங்கள் இன்னும் பதில் எழுதவில்லை.
விடுதலைப் புலிகளின் தோல்வியை அடுத்து ஏற்பட்ட நிலைமை குறித்து பல்வேறு தரப்புக்களும் வெளிப்படுத்தி வரும் விமர்சனங்கள் எவற்றிலும் தமது கடந்த கால வழிமுறையில் ஏற்பட்ட பின்னடைவுகள் தவறுகள் குறித்தான சுயவிமர்சனம் எதனையும் என்னால் காண முடியவில்லை. ஒவ்வொரு வரும் மறு தரப்பார் தான் தவறுக்குக் காரணம் என விரல் நீட்டிக் கொண்டிருப்பதனைத் தான் காண முடிகிறது. புலிகளிலிருந்து புதிய ஜனநாயகம் வரை அது தான் நிலைமை.
கே.பி. தன்னளவில் சில தவறுகளை ஒப்புக் கொள்ள ஆரம்பித்திருந்தார். பெரியளவில் இல்லையாயினும் கூட அது ஒரு சிறிய ஆரம்பமாக இருந்தது. ஆனால் வேறெந்தத் தமிழ்க்குழுவினரிடமும் அதனைக் காண முடியவில்லை.
கணணிப்புரட்சி நடாத்தும் சிலர் இப்படித் தான் ஆகுமென்று தமக்கு எப்போதோ – அதாவது போராட்டம் தொடங்கும் போதே தெரியும் என்றும் அப்படித்தான் இப்போது ஆகியிருக்கிறது என்றும் முக்காலமும் உணர்ந்த குடுகுடுப்பைக்காரனாக மாறியிருக்கிறார்கள்.
உண்மையில் எங்களுக்குத் தேவை குடுகுடுப்பைக்ககாரர்களல்ல. இவ்வாறான நிலைமைகள் பேரழிவுகள் மக்களுக்கு ஏற்படாமல் அவர்களை வழி நடாத்தக் கூடிய தலைமைகளே.
இதற்கு இவர்கள் எல்லோரும் சொல்லும் ஒரே காரணம் புலிகள் தங்களை விடவில்லை என்பது தான். இதைப் போன்ற நகைச்சுவையை எந்தப் போராட்டத்திலும் காண முடியாது. ஒடுக்குமுறையாளர்கள் போராட அனுமதி கொடுத்து உலகில் எங்கேனும் வி டுதலைப் போராட்டம் நடந்ததாக நான் அறியவில்லை.
ஏற்கெனவே விடுதலைப் புலிகள் இடம் கொடுக்காததால் போராடாமல் ஐரோப்பாவுக்குப் புலம் பெயர்ந்தவர்கள் இனி இலங்கை அரசாங்கம் அனுமதி கொடுக்காததால் தொடர்ந்து இலங்கை அரசாங்கத்தை திட்டிக் கொண்டே காலத்தை ஓட்டிக் கொண்டிருப்பார்கள்.
எல்லாத் தத்துவங்களும் உலகை வியாக்கியானம் செய்ய மார்க்சியம் மட்டும் தான் உலகத்தை வியாக்கியானம் செய்வது மட்டுமல்ல மாற்றுவது பற்றியும் பேசுகிறது என்று தான் நான் படித்திருக்கிறேன்.
ஆனால் இந்தக் கணணிப் புரட்சியாளர்களுடைய கையிலோ செயற்படாமல் இருப்பதற்கான காரணத்தைக் கற்பிப்பதற்கான ஒரு சொல்லாக மார்க்சியம் ஆகிவிட்டது.
இவர்களுடைய மார்க்சியத்திற்கும் ‘சும்மா இரு”த்தலுக்கும் அதிகம் வேறுபாடில்லை.
இவர்களோடு ஒப்பிடுகையில் புதிய ஜனநாயகக் கட்சியினர் குறைந்த பட்சம் இலங்கையில் இருந்தாவது தம்மளவில் சில முயற்சிகளைச் செய்தனர் எனலாம்.
ஆனால் அவர்களும் கூட கடந்த 25 வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தை தலைமையேற்க முடியாவிட்டாலும் குறைந்த பட்சமான வினையாற்றாமைக்கான காரணமமாக விடுதலைப் புலிகளை மட்டும் குறை சொல்லியிருப்பது தான் நெருடுகிறது.
இந்த 25 வருட காலத்திலும் அக்கட்சி கொண்டிருந்த அரசியல் வேலைத்திட்டமும் போராட்டத் தந்திரோபாயங்களும் முற்றுமுழுதாகச் சரியாகத் தான் இருந்து வந்தனவா? அவ்வாறு மிகச் சரியானதும் துல்லியமானதுமான அரசியல் நிலைப்பாடுகள் இருந்தும் அவை மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்லப்படாததற்கு வெ றுமனே விடுதலைப் புலிகள் அனுமதிக்காமை தான் காரணமா?
ஒரு இடதுசாரி மார்க்சிய அமைப்பு என்ற வகையில் விடுதலைப் புலிகள் அனுமதிக்க மாட்டார்கள் என்று உணர்ந்திருப்பின் அதனை மீறி முன்னெடுத்துச் செல்ல ஏன் வழிமுறைகள் இனம் காணப்படவில்லை. ஏன் புதிய தந்திரோபாயங்கள் வகுக்கப்படவில்லை. அல்லது அவ்வாறு வகுக்கப்பட்டு அவையும் தோல்வியடைந்தனவா?
அவ்வாறு தோல்வியடைந்திருந்தால் அவை பற்றிய மதிப்பீடுகள் மறுபார்வைகள் எங்கே? இந்த இடத்தில் தான் மற்றவர்களை விமர்சிப்பதை விட நமது சுயவிமர்சனங்கள் தான் அதிகம் பயனுள்ளது என்பேன். அத்தகைய ஆரம்பம் தான் மக்களுக்கு போராட்டத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் என்பேன்.
இ டதுசாரிகள் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்பார்கள். ஆனால் இடதுசாரிகள் என்று தம்மைத் தாமே சொல்லிக் கொள்ளும் இந்தக் கணணிப் புரட்சியாளர்களோ யாராவது எதையாவது சொல்லிவிட்டால் ஹிட்லர் பாணியில் உடனடியாகவே சுயவிமர்சனம் செய் என்று உத்தரவிட்டுவிடுவார்கள். அவ்வாறு உத்தரவிடும் எவரும் தம்மைச் சுயவிமர்சனம் செய்து கொண்டதாக நான் இதுவரை அறியவில்லை. அறிந்தால் யாராவது அறியத் தாருங்கள்.
அதேபோன்று புதிய ஜனநாயகக் கட்சியும் தமது கடந்த கால வழிமுறைகள் குறித்த ஒரு மீள்பார்வையிலிருந்து ஆரம்பித்திருக்குமாயின் நம்பிக்கை தரும் ஒன்றாக இருந்திருக்கும்.
அவ்வாறு இல்லை என்பது தான் எனது ஆதங்கம்.
சர்வதேச ரீதியாக இடதுசாரி அரசுகள் எடுத்துவரும் சர்வதேச நிலைப்பாடுகள் இடதுசாரிச் சர்வதேசியம் பற்றி அவநம்பிக்கையை ஏற்படுத்தி வரும் இச்சூழலில் நம்மிடையேயிருந்தாவது சரியான பார்வைகள் உருவாகாவிடில் இடதுசாரிகள் மீது அவநம்பிக்கை தான் எஞ்சும்.
அதனையா நாம் சாதிக்கப் போகிறோம்.?
இலங்கை
.பௌத்த மேலாதிக்க பயங்கரவாத இலங்கை அரசு. ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்களைக் கொன்று குவித்துள்ளது. இக்கொலைகளை கண்டிக்க துப்பில்லாத மூளை வீங்கிப் பேர்வழிகள் பௌத்தம், தம்மம், பின் நவீனத்துவம், என்று வித விதமான முறையில் இலங்கை அரசுக்கு ஆதரவானப் போக்கை முன்னெடுக்கிறார்கள். எதிர்ப்பு நடவடிக்கைகளை பலவீனப்படுத்தும் முனைப்போடு செயல் படும் இவர்கள். எப்போதுமே விஸ்தரிப்பு எண்ணம் கொண்ட இந்திய அரசை விமர்சிக்க மாட்டார்கள். மிகவும் தந்திரமாகப் பேசி கடைசியில் போராடும் சக்திகள் மீதே பழி போட்டு ஊத்தி மூடுவார்கள். 90- களில் மார்க்சிய இயக்ங்களுக்கு எதிராக கட்டுடைத்தல் என்று மூக்குடைபட்ட இவர்கள் இப்போது தண்டகாரண்யாவில் போராடும் மாவோயிஸ்டுகளையும்.
பெருந்திரள் மக்கள் வன்முறைகளையும் கூட காயடிக்கத் துவங்கியுள்ளதோடு, ஈழத்தில் நடந்த கொலைகளில் இருந்து இலங்கை அரசை காப்பாற்றும் நோக்கோரு பல வீனமான புலிகளின் வலதுசாரி போராட்டத்தை முரணாக முன் நிறுத்துகிறார்கள். அதை வைத்தே பாசிச இலங்கையை அரசை ஆதரிக்கிறார்கள். மிக மிக ஆபத்தானவர்கள் இவர்கள்தான்./
இடதுசாரிகள் மீது அவநம்பிக்கை பற்றிய விஸ்வனின் கவலைக்கு நன்றி.
ஆனால் உடனடியான கேள்விகள் நம்முன் உள்ளன.
தமிழ்த் தேசியவாதம் முன்னெடுத்த 30 ஆண்டுக் காலப் போராட்ட்ம தமிழர்களை எங்கே கொண்டுவந்து விட்டிருக்கிறது?
அழிவுகள் எவ்வளவு?
அழிவுகள் எத்தகையன?
இவைக்குப் பதில் சொல்ல வேண்டியவர்கள் யார்?
பதில் சொல்லட்டும்.
சொல்லாத பட்சத்தில் பதில்கள் குற்றச்சாட்டுக்களின் வடிவிவேயே தான் வரும்.
உரிய பதில்களின் மீதே ஆக்கமான முறையில் எதிர்காலத்தைப் பற்றிப் பேசலாம்.
அதைத் தவிர்ப்பதற்காக எல்லாரையும் சுயவிமர்சனக் கியூ வரிசையில் வரச் சொல்வது பரிதாப மான தப்பியோடும் முயற்சி.
தமிழ் மக்கள் நடுவே அரசியலை முன்னெடுக்க இருந்து வந்த தடைகளை மறந்து யரையும் விமர்சிப்பது நேர்மையற்றது.
இத்தனைக்கும் புதிய ஜனநாயகக் கடசி மற்ற எவரையும் விட ஆக்கமான முறையில் தமிழ்த்தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் ஒவ்வோரு தவறான திருப்பு முனையையும் விமர்சித்து வந்தது. மிகுந்த இடர்ப்பாடுகளிடையே மக்கள் நடுவே விளக்கி வந்துள்ளது.
என்.ஜி.ஓ. தரகர்களையும் பலவேறு அரசங்கங்களுடனும் சுயலாபத்துக்கான நாடகமாடியோரையும் போலன்றி; 1987 இந்திய-இலங்கை உடன்படிக்கையை விமர்சித்தது தொட்டு விடுதலைப் புலிகள் 3 லட்சம் பேலைப் பலிக்கடாக்களாக்கியது வரை ; ஒவ்வொரு பேரினவாத ஆட்சியும் ஆடிய நாடகங்கள் முதல் இன்றைய அவலம் வரை எதையுமே மூடிமறைக்காமலே விமர்சித்து வந்துள்ளது. புதிதாக முளைத்த புலி எதிர்ப்புக்கான நோக்கங்கள் போலவே புதிதாக முளைத்த புலி ஆதரவாளர் அனுதாபிகள் கூட்டங்களும் பதில் கூற நிறைய உண்டு.
குறிப்பான விமர்கனங்கட்குப் பதில் கூறலாமே ஒழிய விதண்டாவாதமான் வற்புறுத்தலுக்காக யாரும் சுயவிமர்சனம் செய்ய வேண்டியதில்லை.
புதிய ஜனநாயகக் கடசி தனது ஒவ்வொரு சொல்லையும் செயலையும் மறுமதிப்பீடு செய்து கொண்டே இயங்கி வந்துள்ளது.
முதலில் கணணிப் பரட்சியாளர்கள் யாவரும் பதுங்கிக் கொள்ள சிகரம் விவாதத்தில் பங்கேற்பதற்காக நான் அவரை மதிக்கிறேன்.
விடுதலைப் புலிகள் இந்தப் போராட்டத்தில் மாபெரும் தவறுகளை இழைத்து வந்தள்ளார்கள் என்பதில் எவ்விதமான வேறுபட்ட கருத்துக்கும் இடமில்லை. அதனை மறைப்பதோ மறப்பதோ மறுப்பதோ எனது நோக்கமுமில்லை.அவர்கள் தமது தவறுகளைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்றும் தமது தவறான பார்வைகள் மக்களை அழிவில் கொண்டு போய் தள்ளியது குறித்தும் அவர்கள் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் என்றும் நான் பல இடங்களில் வலியுறுத்தியிருக்கிறேன்.
எ திர்க்கருத்துக்களை இலங்கை அரசாங்கம் ஒடுக்குவதற்கு புலி ஆதரவு தேசத்துரோகம் அந்நிய நாட்டு அரசசார்பு நிறுவனங்கள் என்று முத்திரை குத்துவது போலவோ அல்லது புலிகள் தேசத்துரோகிகள் காட்டிக் கொடுப்பாளர்கள் என்று முத்திரை குத்துவது போலவோ முத்திரை குத்தல் வேலைகளை சிகரம் செய்யக் கூடாது என்பது எனது எதிர்பார்ப்பு.
அரசசார்பற்ற நிறுவனங்கள் என்பது புரட்சியை ஒடுக்க உருவாக்கப்பட்ட அமைப்புக்கள் என்பதில் 1982இல் இருந்து இன்று வரை எனக்கு மாறுபட்ட அபிப்பிராயங்கள் இருந்ததில்லை.
புலிகளே இலங்கைஇந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட ஆரம்ப நாட்களில் மெளனமாக இருந்த போது அதனை எதிர்த்து அது ஒரு ஆக்கிரமிப்பு ஒப்பந்தம் எனக் கூறி வந்தவன் நான்.
அதேபோல் புதிதாக முளைத்த புலி எதிர்ப்பிலும் நான் இல்லை. புதிதாகமுளைத்த புலி ஆதரவிலும் நான் இல்லை.
புலிகளுடைய மக்கள் விரோதப் போக்குகள் குறித்து எனக்கு எப்போதுமே உடன்பாடு இருந்ததில்லை.
நான் கே.பியை உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டதற்கு ஒரேயோரு காரணம் இந்த 25அல்ல து 30 வருட போராட்ட வரலாறில் தமது தவறுகளை திரும்பிப் பார்த்த ஒரேயொருவர் என்பதே தவிர வேறொன்றுமில்லை. எனினும் அவர் திரும்பிப் பார்த்தாரே தவிர முழுமையான சரியான வடிவத்தை நோக்கி அவர் நகரவில்லை. நகர்ந்து விட்டார் என்றும் நான் சொல்லவுமில்லை.
புறவயமாக நின்று பார்க்கிற பார்வையை மார்க்ஸிஸ்ட்டுகள் வலியுறுத்துவார்கள் என்று நினைக்கிறேன் . அவ்வாறக புறவயமாக நின்று பார்க்கையில் அவர் மட்டுமே திரும்பிப் பார்க்கும் முயற்சியையாவது செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.
மற்றவர்கள் எவரும் அந்த முயற்சியைச் செய்யவில்லை என்பதல்ல அதற்காக முயற்சிக்கக்கூடவில்லை என்பதே எனது ஆதங்கம்.
உதாரணமாக புதிய ஜனநாயகக் கட்சியின் பண்பாட்டு இதழான தாயகத்தின் ஆசிரியர்களுள் ஒருவராக இருந்த கவிஞர் முருகையன் எழுதிய கீழ்க் கண்ட கவிதையைப் பாருங்கள்:
//தற்கொடை என்ப தமிழீழமைந்தர்கள்நிற்கும் புதிய நிலை.தன்னுயிரை தான் ஈயும்சான்றாண்மை தற்கொடையாம்ஏன்ன நிகர் ஆகும் இதற்கு?ஓர்ம உரமும் துறவும்உறுதியுமேகூர்மதியோர் ஆவிக் கொடைகற்கண் டினிது பழங் கள் இனிதேஎன்பார்கள்தற்கொடையின் தன்மை தெரியார்.ஆவி கொடுக்கும் அசையாத்திடம் கொண்டவாலிபர்கள் வாழ்வதிந்த மண்.சொந்த மண் மீளச் சுடுகலன்கள்ஏந்திடுவோர்தந்திடுவார் தங்களுயிர் தாம்.நஞ்சைக் கழுத்தில் நகையாய்அணிவோரின்நெஞ்சம் நிரம்ப நெருப்பு.வெங்கொடுமைச் சாவும் விளையாட்டுக்கூடமாம்பொங்கு சினம் கொண்ட புலிக்கு.அச்சம் அறியார்: அடங்கார்:அவர்க்குயிரோதுச்சம்: எதிரி வெறுந்தூள்.கொல்வோரை மோதிக் கொடுபட்டஇன்னுயிரைஏல்லா உலகும் தொழும்.//
இதை விடப் புலிக்காகப் பிரச்சாரம் செய்ய வேறு யாரால் இயலும்.
ஆனால் முருகையன் மறைந்த போது புதிய ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளரான சிவசேகரம் எழுதிய குறிப்புக்களிலோ அல்லது அதற்கு முன்னர் – முருகையன் வெறியாட்டு எழுதிய காலத்திலிருந்து அது 1985 அல்லது 1986 ஆக இருக்கலாம் சிவசேகரம் எழுதிய குறிப்புக்களிலோ கவிஞர் முரைுகையனின் இந்தப் போக்கு தொடர்பான விமர்சனம் ஒரு போதும் வந்ததாக நான் அறியவில்லை.
அது மட்டுமல்ல தனது ஒவ்வொரு சொல்லையும் செயலையும் மறுமதிப்பீடு செய்து வந்ததாகச் சொல்லும் புதிய ஜனநாயகக்கட்சி இது தொடர்பான எந்த விமர்சனத்தையும் வைத்ததாக நான் அறியவில்லை. மறுமதிப்பீடு செய்ததாகவும் தெரியவரவில்லை.
ஆனால் இவை எதுவுமேயறியாது தான் நேரடியாகப் பாதிக்கப்பட்டதால் ஆயுதம் ஏந்தியவர்கள் பற்றி அவர்களிகளின் தவறுகள் பற்றி குற்றச்சாட்டுக்களை அடுக்கி இதனால் //அழிவுகள் எவ்வளவு?அழிவுகள் எத்தகையன?இவைக்குப் பதில் சொல்ல வேண்டியவர்கள் யார்?// என்று கேள்வியெழுப்ப முடிகிறது.
உண்மையில் பதில் சொல்ல வேண்டியவர்கள் யார் ?
முருகையனும் அவரைப் போன்றவர்களைப் போஷித்தவர்களுமா?
நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு அளவில் இந்த நிலைமைக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றளவிலேயே இவற்றை எடுத்துக்காட்டினேனே தவிர மறைந்த கவிஞர் முருகையன் பெயருக்கு களங்கம் கற்பிப்பதற்காக அல்ல.
சுயவிமர்சனக் கியூவரிசையில் வரச் சொல்வது நானல்ல. இன்னமும் கள்ள மெளனம் சாதிக்கும் ரயாகரன். சிறிரங்கன் போன்ற கணணிப் புரட்சியாளர்கள் தான் அவ்வாறு கூவி நமது நாவை அடைப்பார்கள். யாராவது ஏதாவது சொல்லி விட்டால் போதும் சுயவிமர்சனம் செய் என்று ஹிட்லர் பாணியில் சொல்லும் அவர்கள் எப்போதாவது தாம் சுயவிமர்சனம் செய்து கொண்டார்களா என்றால் இல்லை என்பது தான் பதில்.
எனவே இது அவர்களைக் கேட்க வேண்டிய கேள்வி.
நான் சொல்ல வருவது ஒரு விரல் எதிரே நீளும் போது நான்கு விரல்கள் நம்மையும் சுட்டுகின்றன. நான்கில் ஒன்றிற்கான காரணத்தையாவது நாம் ஒத்துக் கொள்வது ஒரு நம்பிக்கை தரும் முயற்சி அல்லவா?
அவ்வளவு தான்.
“நான் சொல்ல வருவது ஒரு விரல் எதிரே நீளும் போது நான்கு விரல்கள் நம்மையும் சுட்டுகின்றன”.
உண்மையில் நான்கல்ல மூன்று.
மற்றது ஆகாயத்தைச் சுட்டுகிறது. கடவுளையா மூன்றாம் தரப்பையா என நிச்சயமில்லை.
விஸ்வனின் விரல் தான் எத்தனையோ தனிமனிதர்களைச் சுட்டுகிறது.
தன் முதுகு ஓரு போதும் தனக்குத் தெரியாது என்பார்கள்.
நான் சொல்ல வந்தது இன்றைய அவலத்துக்குக் காரணமானவர்கள் பலர். தமிழரிடையே முக்கியமாக விடுதலைப் புலிகள்; அடுத்ததாகத் தமிழ்த் தேசியவாதிகள்;
புலம்பெயர்ந்த தமிழ்த் தேசியவாதிகள் முக்கியமாக விடுதலைப் புலி ஆதரவாளர்கள் முன்னவர்களது தவறுகளை மூடிக்கட்டுவதில் மும்முரமாக உள்ளனர். அது ஏன்?
இலங்கையில் உள்ள தமிழ்த் தேசியவாதிகள் ஏறத்தாழ ஒட்டு மொத்தமாக விடுதலைப் புலிகள் மீது பழியைப் போட்டுத் தப்பி ஓட முயலுகிறார்கள்.
எனவே தான் பல கேள்விகளும் விளக்கங்களும் முக்கியமானவை.
நான் எழுப்பிய வினாக்கள் எவரும் எழுப்பக் கூடியவை.
அவை எழுப்பப்படாமல் மறிப்பதும் திசை திருப்புவதும் வருந்தத் தக்கது.
இங்கே பேர் குறிப்பிடப்பட்டு (விரல் நீட்டப்பட்டு?)க் குற்றஞ் சாட்டப் பட்டோர் அவரரவரரது இயங்கு தளங்களில் உரிய இடங்களில் விடைகளைக் கூறிக் கொள்வார்களென நம்புகிறேன்.
எனக்கு இணையத் தளப் புரட்சியும் தெரியாது.
இணையத் தள எதிர்ப் புரட்சியும் தெரியாது — அது விஸ்வனுடைய பேட்டையாக இருக்கட்டும்.
கே.பி. மெய்யாகவே தனது இயக்கத்தின் தவறுகளைத் திரும்பிப் பார்த்த ஒரேயொருவரா? சிரிப்பு மூட்டாதீர்கள்.
சிகரம் வந்தடைந்திருக்கிற இடத்தில் தான் நான் எற்கெனவே நிற்கிறேன். ஒரு சிறிய திருத்தம். //இலங்கையில் உள்ள தமிழ்த் தேசியவாதிகள் ஏறத்தாழ ஒட்டு மொத்தமாக விடுதலைப் புலிகள் மீது பழியைப் போட்டுத் தப்பி ஓட முயலுகிறார்கள்// என்கிறார் சிகரம். உண்மை இலங்கையில் மட்டுமல்ல புலம் பெயர்ந்த நாடுகளிலும் உள்ள தமிழ் தேசியவாதிகளும் கூட அவ்வாறு தான் செய்ய முயற்சிக்கிறார்கள்.
அதுவும் விடுதலைப் புலிகள்இ புலிகளிலும் பிரபாகரன் மீது எல்லாத் தவறுகளையும் சுமத்திவிட்டுத் தப்பிவிடுகிற போக்குத் தான் காணப்படுகிறது.
அந்த இடத்தில் தான் கே.பி. கடந்தகாலத்தில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தவறுகள் பற்றியும் அவை திருத்திக் கொள்ளப்பட வேண்டும் என்று பேசியதாக அறிந்தேன்.
அப்படி அவர் முனைவாராயின் அப்போக்கு சரியான வழியில் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என முனைவது சரியா அல்லது அவர்கள் ஒரு போதுமே திருந்த மாட்டார்கள் என்று முடிவெடுப்பது சரியா என்பதனை சிகரம் தான் விளக்க வேண்டும்.
இரண்டாவதுஇ தமிழ்த் தேசிய வாதிகளும் புலிகளும் மட்டுமல்லஇ இடதுசாரிகளாகச் சொல்லப்பட்டவர்களுக்கும் வீதாசாரம் வேறென்றாலும் பங்கிருக்கிறது என்பேன். அதற்குத் தான் முருகையனின் உதாரணத்தைக் குறிப்பிட்டேன்.
ஆனால்இ சிகரம் முருகையனைப் பற்றி நான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கவேயில்லை.
இடதுசாரிகள் கொண்ட இரட்டை நிலைப்பாட்டுக்கு முருகையனும் புதியஜனநாயகக்கட்சியும் நல்ல உதாரணம்.
நமக்கு வேண்டியவர்கள் எனின் தேசியவாதிகள் அல்ல பாஸிஸ்ட்டுக்கள் என்றாலும் கண்டும் காணாமல் இருப்பது. நமக்கு வேண்டப்படாதவர் என்றால் போட்டுத் தாக்குவது.
இதனை இடதுசாரியம் என்று எவ்வாறு சொல்லுதல் இயலும்?
முருகையனின் வெறியாட்டு நாடகத்தை விடுதலைப் புலிகள் மேடையேற்றியபோது பார்த்தவன் நான். அதனை இடதுசாரிகள் எவ்வாறு கொண்டாட இயலும் என சிகரம் விளக்குவாரா?
அல்லது முன்னர் நான் சுட்டிக்காட்டிய கவிதையை இடதுசாரிகள் எவ்வாறு நயப்பது என்று தான் சொல்ல முடியுமா?
ஆனால் இவை குறித்து புதிய ஜனநாயகக்கட்சி எந்த விமர்சனத்தையும் முன்வைத்ததாக இல்லை.
ஆகஇ புலிகளின் வெறியாட்டத்திற்கு முருகையனின் வெறியாட்டும் காரணமாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
இதனால் தான் இன்றைய நிலைமைக்கு தேசியவாதிகள் மட்டுமல்ல இடதுசாரிகளும் காரணம் என்று சொன்னேன்.
விடுதலைப் புலிகள் மீது பழியைப் போட்டவிட்டுத் தப்பியோடுவது தேசிய வாதிகள் மட்டுமல்லஇ இடதுசாரிகளும் தான்.
ஆனால்இ வீதாசாரம் வேறாக இருக்கலாம் அவ்வளவு தான்.
அவ்வடிப்படையில் தான் இடதுசாரிகள் முதலில் தமது சுயவிமர்சனத்தூடாக சரியான பாதையையும் நம்பிக்கையையும் வளர்க்கலாம் என்று நான் சொல்கிறேன்.
ஆனால் இடதுசாரியான சிகரத்துக்கு அது சிரிப்பு மூட்டுகிறது.
இந்தச் சிரிப்புத் தான் எமது அவலம்.அது சிகரத்திற்கு சிரிப்பு
“இடதுசாரிகள் கொண்ட இரட்டை நிலைப்பாட்டுக்கு முருகையனும் புதியஜனநாயகக்கட்சியும் நல்ல உதாரணம். ”
சபாஸ்… சரியான கருத்து!
முருகையன் தொர்பாகவும் தாயகம் தொடர்பாகவும் புதிய ஜனநாயகக் கட்சியினரிடம் விசாரித்தே எழுத முடிந்துள்ளது.
முருகையன் கடசி ஊறுப்பினரல்ல எனவும் தாயகம் கட்சி ஏடல்ல எனவும் அதன் ஆசிரியர் குழுவில் கட்சி சார்ந்த இருவருக்கு மேல் என்றும் இருந்ததில்லை என்றும் உறுதிப்படுத்தினர்.
கட்சிக்கு அனுதாபமான ஒருவரது தவறுகள் கட்சி ஓழுங்கு நடவடிக்கைகட்கு உட்படா எனவும் முருகையனது தவறுகள் எனக் கருதப்பட்டவை எப்போதுமே அவரிடம் சுட்டிக்காட்டப் பட்டுள்ளதாகவும் தவறுகள் விளக்கப்பட்ட போது அவர் அவற்றை ஏற்றுத் திருத்தப்படக் கூடிய போது அவை திருத்தப்பட்டும் உள்ளன எனவும கூறினர்.
குடா நாடு ஒரு அடக்குமுறைச் சர்வாதிகாரத்திற்குட்பட்ட சூழலில் நிகழ்ந்த தவறுகட்கும் சந்தர்ப்பவாதத் தவறுகட்கும் உள்ள வேறுபாடு கணிப்பில் எடுக்கப்பட வேண்டியது.
முருகையன் பற்றிய மதிப்பீடுகள் முருகையன் என்கிற முழுமையின் மீதானவை. விமர்சனங்கள் செய்யப்ப்பட வேண்டிய போது தவறாமற் கடசியால் மடடுமன்றித் தனி மனிதர்களாலும் செய்யப்பட்டுள்ளன.
முருகையனின் வெறியாட்டு எதைப் பற்றியது என விஸ்வனுக்கு விளங்காவிட்டல் அது அவரது நாடக அறிவாக இருக்கட்டும். அந்த நாடகம் விடுதலைப் புலிகளின் தடைக்கு உட்பட்ட கதையை அவரது தகவல் முகவர்களாவது சொல்லியிருப்பார்களா?
“நான் கே.பியை உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டதற்கு ஒரேயோரு காரணம் இந்த 25அல்ல து 30 வருட போராட்ட வரலாறில் தமது தவறுகளை திரும்பிப் பார்த்த ஒரேயொருவர் என்பதே தவிர வேறொன்றுமில்லை. எனினும் அவர் திரும்பிப் பார்த்தாரே தவிர முழுமையான சரியான வடிவத்தை நோக்கி அவர் நகரவில்லை. நகர்ந்து விட்டார் என்றும் நான் சொல்லவுமில்லை. ”
கே.பி. மெய்யாகவே தனது இயக்கத்தின் தவறுகளைத் திரும்பிப் பார்த்த ஒரேயொருவரா என்பதே என் கேள்வி.
இப் போது மிகச் சிறப்பாகவே திரும்பிப்பார்த்து வருகிறதாகத் தெரிகிறது. விஸ்வனுடைய நகைச்சுவை உணர்வு மேலும் வளர்க.
இதற்கு மேல் ஏ.ஜே. கனகரத்னா 30 வருடம் முந்தி லங்கா காடியனில் ஒருவரது நீண்ட விதண்டாவாதத்துக்கு வைத்த முற்றுப்புள்ளி வாக்கியம் நினைவுக்கு வருகிறது:
“திருப்தியளிக்குமானால் டார்ஸன் மாதிரி வெற்றி எனதே என் மார்பில் அறைந்து கூவிக் கொள்ளுங்கள்.”
“முருகையன் கடசி ஊறுப்பினரல்ல எனவும் தாயகம் கட்சி ஏடல்ல எனவும் அதன் ஆசிரியர் குழுவில் கட்சி சார்ந்த இருவருக்கு மேல் என்றும் இருந்ததில்லை என்றும் உறுதிப்படுத்தினர்.”
மு ன்பு இலங்கையில் சிவசேகரத்தின் கருத்துகள் தொடர்பாக சிலர் எழுதியபோதும்
இவ்வாறான பதில் சொல்லப்பட்டது நினைவுக்கு வருகிறது!
if am wright murugaijan is very fair and very slim and he was with domic jeva and sort of writers group.we were midleclas our thinking is based on survival.our parents work for goverment and receving benson from goverment.so we can only think for next day or day after day.we in the middle always.maxisim or lenisim we not familiar with thats why when was these guys called themself comerade we looked funy on them but we loved to be love.we are lovely people.
we had a temple days fridays was wonderful nallur and surrounded are always colour full.
இந்தப் பதிலைத் தான் நான் எதிர்பார்த்திருந்தேன். இவ்வாறான பதிலை தமிழ் தேசிய(இன)வாதிகள் கடந்த இரண்டு தசாப்தத்துக்கு மேலாகச் சொல்லி வந்ததைக் கேட்டு வந்துள்ளோம். அவை எமக்கு சலிப்பு மூட்டின.
அதையே இடதுசாரியான சிகரமும் இப்போது சொல்கிறார். அவ்வளவு தான்.
இதனால் தான் நான் பலதடவை வலியுறுத்தி வந்திருக்கிறேன். இடதோ வலதோ பார்வையும் அணுகுமுறையும் எங்களில் பலருக்கு ஒரே மாதிரியாகவே இருந்து வருகிறது என்று.
தமிழ் மிதவாதத் தலைமைகளும் தமிழ் இயக்கங்களும் இதே பாணியில் தான் பலவிடயங்களுக்குப் பதிலளித்து வந்துள்ளார்கள்.
1. தடுத்து வைத்திருந்த ஈபிஆர்எல்எப் போராளிகளை யாழ்ப்பாணத்தில் கந்தர்மடத்தில் வைத்துப் புலிகள் சுட்டுக் கொன்றனர்.
அதுகுறித்து முதலில் கேட்டபோது தப்பியோட முனைந்தார்கள் அதனால் சுட வேண்டியதாயிற்று என்றார்கள். பிறகு அவர்கள் தப்பியோடவில்லையாமே என்று ஆதாரங்களுடன் கேட்ட போது ஒரு சிறிய பிரச்சினை நடந்து விட்டது. அதற்குக் காரணமான அருணா மீது நடவடிக்கை எடுத்து விட்டோம் என்றார்கள்.
அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று யாருக்கும் தெரியாது. வெளிப்படையாக அந்தத் தவறை அவர்கள் ஒருபோதும் ஒத்துக் கொண்டதேயில்லை.
2. இந்தியப்படைக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் இயங்கிய மண்டையன் குழு பற்றி அன்று சுரேஸ்பிரேமச்சந்திரனிடம் கேட்ட போது அவர்கள் எங்களது உறுப்பினர்கள் இல்லை. அவர்களுடைய செயல்களுக்கு நாங்கள் பொறுப்பேற்க இயலாது என்றார்.
மட்டக்களப்பு ராஸிக் பற்றிக் கேட்டால் அவர் எங்களுடைய உறுப்பினரே அல்ல என்பார்.
ஆனால் ராஸிக்கும் மண்டையன் குழுவினரும் தாங்கள் ஈபிஆர்எல்எப் தான் என்பார்கள். ஈபிஆர்எல்எப்பில் தான் அவர்கள் இருந்தார்கள்.
இப்படி நிறைய உதாரணங்கள் சொல்லலாம்.
அவர்கள் வெளிப்படையாக இவ்வாறான தவறுகளை எப்போதும் ஏற்றுக் கொண்டதில்லை. அவை தவறு என்றால் பொதுவெளியில் ஒத்துக் கொள்ளவும் பேசவும் வேண்டும் அல்லவா? ஆனால் அதனையும் அவர்கள் செய்யவில்லை.
அவர்களைப் பொறுத்தளவில் நம்மாட்கள் அவர்கள். எனவே பொதுவெளியில் அவற்றைப் பேசவே மாட்டார்கள்.
இப்படி ஆயிரம் உதாரணங்கள் சொல்லலாம். ‘முருகையனது தவறுகள் எனக்கருதப்பட்டவை எப்போதுமே அவரிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும், தவறுகள் விளக்கப்படட போது அவர் அவற்றை ஏற்றுத் திருத்தப்படக் கூடிய போது அவை திருத்தப்பட்டும் உள்ளன எனவும் கூறினர்” என்கிறார் சிகரம்.
எங்கே கூட்டிக் காட்டப்பட்டிருக்கின்றன என்று சிகரம் சொல்வாரா?
முருகையனின் இந்தப் போக்கு குறித்து புதிய ஜனநாயகக் கட்சியினரால் வைக்கப்பட்ட விமர்சனங்கள் ஏதாவது எழுத்தில் உள்ளனவா?
இதுவரை நான் அறிந்ததாக இல்லை.
இங்கேயும் முருகையன் இவர்களது ஆள். ஆகவே பொதுவெளியில் விமர்சனம் ஒருபோதும் வராது.
ஆனால் அதேநேரம் வேறொரு கவிஞர் என்றால் விமர்சன அம்புகளாலேயே அவரது பேனாவை உடைத்திருப்பார்கள்.
அது தான் புதிய பூமியில் பார்க்கிறோம் அல்லவா?
புதிய பூமியில் மற்றைய கவிஞர்கள் பற்றி எழுதப்பட்டளவிற்கு ஒரு சிறு குறிப்புத் தானும் எழுதப்பட்டிருக்கிறதா?
‘குடாநாடு ஒரு அடக்குமுறைச் சர்வாதிகாரத்திற்குட்பட்ட சூழலில் நிகழ்ந்த தவறுகட்கும் சந்தர்ப்பவாதத் தவறுகட்கும் உள்ள வேறுபாடு கணிபபில் எடுக்கப்பட வேண்டியது”
இந்த அளவீட்டைக்கொண்டு முருகையன் மட்டுமல்ல மற்றும் பலரும் பார்க்கப்பட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. ஆனால் புதிய பூமியில் அவற்றைக் காண முடியாது.
முருகையன் கட்சி உறுப்பினரா இல்லலையா என்பதல்ல எனது பிரச்சினை. அல்லது தாயகம் கட்சி ஏடா அல்லவா என்பதும் எனது பிரச்சினை அல்ல.
சிகரம் சொல்கிறபடி புதிய ஜனநாயகக் கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் அதன் ஆசிரியர் குழுவில் இருந்து வந்திருக்கிறார்கள்.
அதில் முருகையன் அனுதாபியாக அல்ல ஆசிரியராக இருந்திருக்கிறார்.
தேவையானால் பார்க்க: http://noolaham.net/project/07/690/690.pdf
அவர் மீது கட்சி என்ன நடவடிக்கை எடுத்தது என நான் கேட்கவில்லை. அது எனக்குத் தேவையும் அற்றது.
இன்றைய தமிழ் தேசியவாதத்தின் போக்குகளுக்கு வலதுசாரிகள் மட்டுமல்ல முருகையன் போன்ற ‘இடது அனுதாபிகளுக்கும்” பங்குண்டு. தவறு என்று தெரிந்த பின்னரும் பொதுவெளியில் அவற்றை உரையாடாத புதிய ஜனநாயகக் கட்சி போன்ற இடதுசாரிகளும் அதற்குக் காரணமாக இருந்திருக்கிறார்கள் என்பது தான் எனது அபிப்பிராயம். இதில் சிகரம் என்ன விதண்டாவாதத்தைக் கண்டாரோ தெரியவில்லை.
தவறைத் தவறு என்று சொல்வது விதண்டா வாதமா? தவறைத் தவறென ஒத்துக் கொள்ளாமல் கட்சி உறுப்பினரல்ல என்பதும், கட்சிப் பத்திரிகை அல்ல என்பதும், ஆதாரம் எதுவுமே இல்லாமல் ‘தவறுகள் விளக்கப்பட்ட போது அவர் அவற்றை ஏற்றுத் திருத்தப்படக் கூடிய போது அவை திருத்தப்பட்டும் உள்ளன’ என்பதும் விதண்டாவாதமா?
தவறுகள் சுட்டிக்காட்டப்படுகிற போது அவற்றை மீளாய்வு செய்வதும் தவறெனப்படும் போது அவற்றைத் திருத்திக் கொள்வதும் தான் இடதுசாரிகளின் பண்பென நான் அறிவேன்.
இங்கே இடதுசாரிகள் எனச் சொல்லப்படுபவர்களோ, அதற்குப் பதிலாக தம்மையும் தம்மாட்களையும் தவிர அனைவரையுமே விமர்சிப்பார்கள். அதனை மார்க்ஸிய விமர்சனமென்பார்கள்.
அதனை நாமெல்லோரும் கேள்வி எதுவுமின்றிக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். இதற்கும் புலிகள் இதுகாலவரை செய்ததற்கும் எந்த வேறுபாட்டையும் என்னால் காணமுடியவில்லை.
இதனால் தான் வலதுக்கும் இடதுக்கும் இங்கு வேறுபாடே இல்லை என்கிறேன்.
‘கே.பி கடந்தகாலத்தில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தவறுகள் பற்றியும் அவை திருத்திக் கொள்ளப்பட வேண்டும் என்றும் பேசியதாக அறிந்தேன். அப்படி அவர் முனைவாராயின் அப்போக்கு சரியான வழியில் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என முனைவது சரியா அல்லது அவர்கள் ஒரு போதுமே திருந்த மாட்டார்கள் என்று முடிவெடுப்பது சரியா என்பதனை சிகரம் தான் விளக்க வேண்டும்.”
என்று தான் நான் குறிப்பிட்டிருந்தேன். ‘முனைவாராயின்” என்று தான் நான் குறிப்பிட்டிருந்தேன். அவ்வாறு அவர் இல்லாவிட்டால் அவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நான் ஒரு போதும் சொல்லப் போவதில்லை.
நான் ஒன்றும் கே.பியின் ஆளோ அவரது அனுதாபியோ அல்ல. இந்தக்கணத்திலாவது மீள்பார்வை அவசியம் என்று கருதுபவன். அது எங்கிருந்து ஆரம்பிக்கப்பட்டாலும் வரவேற்கப்பட வேண்டும் என்று நினைப்பவன்.
அதனை புதிய ஜனநாயகக்கட்சி செய்ய முயற்சித்தாலும் வரவேற்பேன். சிகரம் போன்றவர்களுக்கு உள்ள நம்மாட்கள் என்ற மனத்தடை எனக்கு இல்லை.
அதனால் தான் ‘புதியஜனநாயகக் கட்சியினர் குறைந்த பட்சம் இலங்கையில் இருந்தாவது தம்மளவில் சில முயற்சிகளைச் செய்தனர் எனலாம்’ என்று எந்த மனத்தடையுமின்றி வெளிப்படையாகப் பாராட்ட முடிந்தது.
உண்மையில் தம்மையும் தம்மாட்களையும் தவிர்ந்த எந்த விடயத்தையாவது புதியபூமி ஆதரித்தும் பாராட்டியும் எழுதியிருக்கிறதா என்பதைத் தேடித் தான் பார்க்க வேண்டும்.
மீண்டும் நான் வலியுறுத்த விரும்புவது
1. இப்பேரிழிவுக்கும் இன்றைய பின்னடைவுக்கும் விடுதலைப் புலிகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. மீள் பார்வை ஒன்றில்லாமல் முன்னே ஓரடி கூட வைப்பது மீளவும் ஒரு பேரழிவுக்கே இட்டுச் செல்லும்.
2. புலிகள் மட்டுமன்றி இதனை முன்னெடுத்த மிதவாதத் தலைமைகளும் தமது வழிமுறைகள் குறித்து மிள்பார்வை செய்வது அவசியம்.
3. புலிகளுக்கெதிராகச் செயற்பட்ட ஏனைய தமிழ்க்குழுக்களும் மாற்றுக்கருத்து என்ற பெயரில் இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வலியுறுத்திச் செயற்பட்டவர்களும் கூட தமது வழிமுறை குறித்துச் சிந்தித்தாக வேண்டும்.
4. இடதுசாரிகள் வகித்த பாத்திரம் குறித்தும் அவர்கள் மறுமதிப்பீடு செய்து கொள்வது அவசியம்.
இது தவிர கவிஞர் முருகையன் மீது எனக்கு தனிப்பட்ட வெறுப்பெதுவுமில்லை. ஒரு உதாரணத்திற்குத் தான் சுட்டினேனே தவிர நான் அவரை என்றும் மதிப்பவன்.
இறுதியாக சிகரம் என்னை விதண்டாவாதக்காரனெனச் சுட்டியிருக்கிறார். அவருக்கு நான் மதிக்கும் கவிஞர் சிவசேகரத்தின் விமர்சகனுக்கான பத்துக் கட்டளைகள் கவிதையிலிருந்து ஒரு சிறிய பகுதி:
‘பிடிவாதக்காரனென்றும்
பிறரை மதியாதவனென்றும் தன்னடக்கமற்றவனென்றும்
கர்வி என்றும் கடுமொழி பேசுவோனெனவும்
பொறாமை மிக்கவனென்றும் வீண்
சர்ச்சைக்காரனென்றும் ஒரு பக்கச்
சார்பானவனென்றும் மூடனென்றும் இன்னும்
பலவாறும் எவரும் உன்னை அழைப்பதையிட்டு
வருந்துமியல்புடையவனாக நீ இருந்தால்
என்றும்
எதையும்
எவரையும்
எங்கும்
எக்காரணங் கொண்டும்
விமர்சியாதிருப்பாயாக.’
நல்ல கவிதைவரிகள் : கவிஞர் சிவசேகரத்திற்கு எனது பாராட்டுகள்.
ஆயுதப் போராட்டம் தொடர்பாக நான் வாசித்த மிக அருமையான கட்டுரைகளுள் ஒன்று. இக் கருத்துக்கள் இன்னும் பல ஆண்டுகளுக்கு வாழ வேண்டும்.
//அடக்குமுறைக்கு எதிராக ஆயுதம் ஏந்தினோம் பின்பு நமது இயலாமையால் அதைக்கொண்டே நம்மவரை அடக்கி ஒடுக்கினோம்// இப்படிப்பட்ட நிலைமைகளை போராட்ட சக்திகளுக்குள் உருவாக்குவதும் எதிர்பார்த்து காத்திருப்பதும் ஆழும் வல்லமைகளின் இயல்பு, அதற்கு நாம் இடம் கொடுப்பது நமது அறியாமை அதை விடுத்து ரோ, கே.யி.பி, சி.ஐ.ஏ என்று புலம்புவது சிறுபிள்ளைத்தனம்.