உலகில் வெற்றியடைந்த ஒழுங்கமைக்கப்பட்ட ஆயுதம் தாங்கிய மக்கள் போராட்டங்களில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்கிய போராட்டம் பல படிப்பினைகளை விட்டுச் சென்றுள்ளது. மக்கள் இராணுவமான செஞ்சேனையின் உறுப்பினர்களுக்கு அடிப்படை விதிமுறைகள் காணப்பட்டன. செஞ்சேனை மக்கள் இராணுவமாகச் செயலாற்ற இவை இன்றியமையாதவையாகின, முதல் பத்து ஒழுங்கு விதிகள்:
1. கட்டளைக்கு உடனடியாகக் கீழ்ப்படிதல், ஏழை விவசாயிகளிடமிருந்து எவ்வித பொருளையும் பறிமுதல் செய்யக்கூடாது,
2. நிலப்பிரபுக்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை, அவற்றை விநியோகம் செய்வதற்காக அரசாங்கத்திடம் உடனடியாக, நேரடியாக ஒப்படைத்தல்
3. ஒரு வீட்டைவிட்டு வெளியேறும்போது அதன் கதவுகளை மீளவும் அங்கேயே வைத்துவிடுங்கள் (இந்த விதி வெளிப்படையாகத் தோற்றமளிக்குமளவுக்கு ஒரு சாதாரணமான விடயமல்ல@ ஒரு சீன வீட்டின் மரக்கதவுகளை இலகுவாக கழற்றி எடுக்கப்படக்கூடியவை. அவை பெரும்பாலும் இரவு வேளைகளில் கழற்றப்பட்டு மர அடிப்பாளங்களு மேல் வைக்கப்பட்டு தற்காலிகப்படுக்கைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன)
4. படுத்ததிருந்த வைக்கோல் பாயை சுற்றி மடித்து திருப்பவும் உரியாளர்களிடம் கையளியுங்கள்.
5. மக்களிடம் கௌரவமாகவும் அடக்கமாகவும் நடந்துகொள்ளுங்கள். உங்களால் முடிந்த நேரத்தில் அவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
6. கடடனாக வாங்கிய அனைத்துப் பொருட்களையும் மீளளியுங்கள்.
7. சேதமடைந்த பொருட்களுக்குப் பதிலாக மாற்றீடு செய்யுங்கள்.
8. விவசாயிகளுடனான அனைத்துக் கொடுக்கல் வாங்களிலும் நேர்மையைக் கடைப்பிடிங்கள்
9. கொள்முதல் செய்யப்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் விலையைப் பணமாகச் செலுத்துங்கள்.
10. சுகாதாரப் பேணுங்கள், பொதுமக்களின் வீடுகளிலிருந்து ஒரு பாதுகாப்பான தூரத்தில் மலகூடங்களைக் கட்டுங்கள்.
செஞ்சேனையில் தந்திரோபாயங்கள், அந்த இயக்கத்தின் அரசியல் அடிப்படைகளை விட, அதன் வெற்றிகரமான இராணுவ அபிவிருத்தியையும் விளக்குவதாக இருந்தன. சிங்காஞ்சானில் 4 சுலோகங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. செஞ்சேனையின் வளர்ச்சிப் பயணத்துக்கு ஊன்றுகோலாக அமைந்த போராளிகள் யுத்த முறைகளை விளக்குபவை இந்த சுலோகங்கள் அமைந்திருந்தன.
1. எதிரி முன்னேறும்போது நாங்கள் பின் வாங்குவோம்!
2. எதிரி தனது முன்னேற்றத்தை நிறுத்தி அவ்விடத்தே முகாமிடுகின்றபோது அவனுக்குத்
தொல்லை கொடுக்கின்றோம்.
3. எதிரி ஒரு சமரைத் தடுத்துக் கொள்ள முயன்றால் நாம் அவன் மீது தாக்குதலை
மேற்கொள்கிறோம்.
4. எதிரி பின்வாங்கத் தொடங்கினால் நாம் அவனைப் பின் தொடர்பின்றோம்.
இந்த சுலோகங்கள் ஆரம்பத்தில் பல அனுபவம் வாய்ந்த இராணுவத்தினால் எதிர்ப்புக்குள்ளானது. இவற்றில் முன்மொழியப்பட்டுள்ளன தத்திரோபாய முறைகளை இவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் பல அனுபவங்களை இந்தத் தந்திரோபாயங்களிலிருந்து பொதுவாக செஞ்சேனை மாறுபடும் போதெல்லாம் அது தோல்வியே தழுவியது
ஈழத்தில் 30 வருடங்கள் இயக்கங்களின் இராணுவம் போராட்டங்களை நடத்தியிருக்கின்றன. இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இராணுவத்தால் நடத்தப்பட்ட யுத்தத்தை ஏகாதிபத்திய நாடுகளும் இலங்கை அரசும் இணைந்து அழித்தன. போராட்டம் அழிக்கப்பட்டு அது நீண்டகாலத்திற்குப் பிந்தள்ளப்பட்டதற்கு எதிரியின் பலம் மட்டுமல்ல எமது பலவீனங்களும் காரணம். சீன மக்கள் யுத்தத்தின் மேற்குறித்த சில குறைந்தபட்ச முழக்கங்களை எமது போராட்டத்துடன் ஒப்பு நோக்குதல் இன்றைய காலத்தின் கட்டாய தேவை.
நேர்மை அற்றவர்கள் யாராய் இருந்தாலும் இறுக்கமான நடவடிக்கை எடுத்த பொழுது தான் எமது விடுதலை இயக்கம் பலம் பெற்றது .
மாத்தையாவை போட்டுத் தள்ள துணிந்த நாம் கருணா வகையறாக்களை சண்டையில் வீரன் என்பதற்காக போட்டுத் தள்ள தயங்கினோம் .
புலம் பெயர் தேசத்தில் அயோக்கியர்களை அரவணைத்தோம் . அவர்கள் பணம் ஈட்ட்டினார்கள் . ஒருபகுதியை கொடுத்தார்கள் .
விளைவு தான் ஏனைய அழிவுகளும் ….இன்றைய நிலையும்
இது எவரும் மறுக்க முடியாத உணமை .
அந்த தயக்க பாதையில் இருந்து மீண்டு இனிமேலாவது யாராய் இருந்தாலும் பிழை என்றால் பிழை என நாம் முடிவெடுக்க தயங்கினால் தமிழினம் முற்றாக அழியும் .
போட்டுத் தள்ளும் காலம் போய் விட்டதென்றால் விலக்கிவைப்போம் .
ஒரே வேலையை மீண்டும் மீண்டும் செய்து கொண்டு வேறான முடிவை எதிர் பார்ப்பது பைத்தியக் காரத்தனம் .
நாலு வருசமாய் ஒண்டும் புடுங்காதவை மௌனிப்பது அல்லது பாதையை மாற்றுவது அவசியம்
Insanity: doing the same thing over and over again and expecting different results. Albert EinsteinRead more at http://www.brainyquote.com/quotes/quotes/a/alberteins133991.html#4p16Rwl8JBBZ4PoG.99
கடந்த நான்கு வருடமாக இதை புரிய மறுத்து வரும் நாம் இப்படியே தொடர்ந்தால் அழிவு நிச்சயம்
“அயோக்கியர்கள்” என்றுமே ஆபத்தானவர்கள் . Now it is up to “Tamils”
those who understand the core meaning of the above 10 commands will understand the following “அயோக்கியர்கள் என்றுமே ஆபத்தானவர்கள் “.
Those who does not understand the basics of social policy will neither understand “அயோக்கியர்கள் என்றுமே ஆபத்தானவர்கள் ” or the above 10 commands .
You are always very smart. Well read. Very articulate in this forum.
KONDAIYARKAL என்றுமே ஆபத்தானவர்கள் . Now it is up to “Tamils. MOULI !!REMOVE YOUR PIRABAKARA KONDAI,
பிரபாகரனை பலர் சிறந்த இராணுவத் தளபதி அவருக்கு அரசியல் மட்டும் தெரியாது என்று சொல்லுவார்கள். அவர் சிறந்த இராணுவத் தளபதியும் கூட இல்லை. இராணுவ வெற்றிகள் எல்லாம் குழந்த்தைகளின் வீரம் பெற்றுக்கொடுத்த வெற்றி. செஞ்சேனையின் இந்த விதிகளை பின்பற்றியிருந்தால் கூட புலி அழிந்திருக்காது. இப்பவும் பிரபாகன் என்று வழிபாடு செய்பவர்களின் நோக்கம் இனிமேல் ஒருக்காலும் சரியான ஆயுதப் போராட்டம் வந்துவிடக் கூடாது என்பதே. மலையைக் குடைந்து எலியைப் பிடித்து மலையையே தரைமட்டமாக்கும் வீரம் மெச்சத்தக்கதல்ல.
I am everything now. I heard this over the radio. Exercise. Humanitarian Operation will continue.
Being wise after the event ?
கடவுள் மோசேஸுக்கு பத்து கட்டளையைக் கொடுத்ததாகச் சொல்லிய ‘சிவப்பு பைபிள் ‘ உலகைக் கலக்கியடிக்க,இந்த செஞ்சேனையின் பத்து விதிகள்தான்,இப்போது உலகை ஆட்டிப்படைக்கிறது.