ஆயுதச் சட்டங்களினால் நாடுகள் ஒடுக்கப்படக் கூடாது என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சாவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சிறிய மற்றும் இலகு ரக ஆயுதப் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் சட்டமானது, நாடுகள் ஆயுதங்களை வைத்திருக்கும் உரிமையை பாதிக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
சிறிய மற்றும் இலகு ரக ஆயுதப் பயன்பாட்டை தடுப்பது தொடர்பான ஐக்கிய நாடுகள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தற்பாதுகாப்பு நோக்கில் சட்டரீதியாக சிறிய மற்றும் இலகு ரக ஆயுதங்களை பயன்படுத்தும் நாடுகளின் உரிமை ஒடுக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிய மற்றும் இலகு ரக ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நாடுகள் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் சட்டவிரோத பயன்பாட்டை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.உலகின் பல பாகங்களில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களுக்கு சிறிய மற்றும் இலகு ரக ஆயுதங்களே ஏதுவாக அமைந்துள்ளது என சவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்.
Major General Savendra Silva has said it right. This illegal arms dealing have caused a lot of damage to countries like Sri Lanka – Shri Lanka. They have given the leadership of the World Bank to also to a South Korean. Sri Lanka is in the fore front in the international arena