குவைத்தில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள 22 நாடுகளைச் சேர்ந்த 17 ஆயிரம் பேரை அந்த நாட்டின் உள்துறை அமைச்சு நாடு கடத்த திட்டமிட்டுள்ளதாக குவைட் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறு நாடுகடத்தப்படவுள்ளவர்களுக்கான விமான சீட்டுக்களை நாடுகடத்தல் திணைக்களத்தின் கோரிக்கைக்கு அமைய மத்திய முகவர் சமூகம் கொள்வனவு செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைட் உள்துறை அமைச்சின் அறிக்கையின் படி சுமார் ஆயிரம் இலங்கையர்கள் இவ்வாறு நாடுகடத்தப்படவிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் சுமார் 4000 பங்களாதேஷியர்கள், 3500 இந்தியர்களும் நாடு கடத்தப்படவிருப்பதுடன் ஆப்கானிஸ்தான், எகிப்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்களையும் நாடுகடத்தவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குவைத்தின் வரலாற்றில் மேற்கொள்ளப்படும் பாரிய நாடுகடத்தல் சம்பவம் இது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே கடந்த 2006ஆம் ஆண்டு 16,000 பேர் நாடுகடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு நாடு கடத்தப்படுவதற்கான நடைமுறைகள் அனைத்தும் நிறைவடைந்தததும், அவர்கள் சாதாரண விமானங்கள் ஊடாக குறித்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது