இந்தியாவில் பல்லாயிரக்கண்கான இந்தியர்களைப் படுகொலை செய்துவிட்டு தனது நாடான அமெரிக்கா சென்று அமைதியாகவாழ்ந்து கடந்த மாதம் 26 ஆம் திகதி மருத்துவ மனையில் செத்துப்போனார்.
அவரது குடும்பத்தார் ஆண்டர்சன் மரணம் குறித்து அறிவிப்பு எதும் வெளியிடவில்லை. பொது ஆவணங்களின் அடிப்படையில் அவரது மரணம் உறுதி செய்யபப்ட்டுள்ளதாக அமெரிக்க நாளிதழ்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க முதலாளி வாரன் ஆண்டர்சனை சேர்மனாகக் கொண்டியங்கும் யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் இ
ருந்து 1984- டிசம்பர் மூன்றாம் தியதி மீதைல் ஐசோசயனைட் (toxic mathyl isocyanate ) என்னும் வாய்வு கசிய பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டனர். அப்போது மட்டும் 15,000 பேர் பலியாகினர். நீண்ட காலப் பாதிப்பின் அடுப்படையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 20,000- க்கும் அதிகம். உடல் ஊனமுற்றோர் ஐந்து லடம் பேர். விபத்தின் பெயரால் இப்படுகொலை நடந்த சமகாலத்தில் பாதிக்கபப்ட்டவர்களோடு இந்தக் கொடுமை நின்று விடவில்லை. அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. மரணம். போபால் மக்களின் வாழ்வின் நீண்ட கால சாபக் கேடாய் ஆண்டர்சனால் வழங்கப்பட்ட பரிசுதான் இந்த விபத்து.
ஆண்டசனின் யூனியன் கார்பைட் நிறுவனத்தில் வேலை பார்த்த மேல் மட்ட ஆளும் வர்க்க முதலாளிகளான எட்டு பேரை இந்த விபத்து வழக்கில் எதிரிகளாக சி.பி.ஐ. சேர்த்திருந்தது. வாரன் ஆண்டர்சனை தப்பிச் சென்ற குற்றவாளி என்று மட்டும் குறிப்பிட்டு விட்டு இறுதித் தீர்ப்பு வரை அவர் குறித்து எதையும் குறிப்பிடமால தீர்ப்பை வழங்கியது. “இந்தத் தீர்ப்பு வெளிவந்த சில மணி நேரங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள யூனியன் கார்பைட் நிறுவனம் எங்களை குற்றவாளியாக விசாரிக்க இந்திய அரசுக்கு அதிகார வரம்பு இல்லை.” என்று அறிவிதது.
இவ்வாறு சில தலைமுறையின் ஒரு பகுதியையே அழித்த கொடூரமான மனிதனை அமெரிக்க அரசும் இந்திய அரசும் இணைது .பாதுகாத்துப் பாராமரித்தன.
கொலைகார ஆண்டர்சனை வெளிநாட்டுக்கு தப்பி ஒடவைத்து பெரும் புண்ணியம் கட்டிக்கொண்டவற் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி….