ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் நூறு பேர் பலியானதுடன் 20 க்கும் அதிகமான வீடுகள் மண்ணுள் புதையுண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.ஆப்கானிஸ்தானின் வட பகுதியிலுள்ள மலைப் பிரதேசத்திலேயே இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன் 5.4 மற்றும் 5.7 மக்னிரியூட் அளவில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. நில நடுக்கத்தினைத் தொடர்ந்து ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஏராளமான மக்கள் பலியானதாக ஆப்கானின் பக்லான் மாகாண ஆளுநர் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
நிலச்சரிவில் 20 க்கும் அதிகமான வீடுகள் மண்ணுள் புதையுண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மலைப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதால் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் பாரிய சிரமங்களை மீட்பு பணியாளர்கள் எதிர்கொள்கின்றனர்.
வாகனங்கள் மற்றும் நவீன இயந்திரங்கள் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதுவரை இரு பெண்கள் உட்பட 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. சிறிய கிராமம் ஒன்றே மண்சரிவில் சிக்கியதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.
காயமடைந்த 22 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்புப் பணியாளர்களிடம் ஒரேயொரு கனரக வாகனங்கள் மட்டுமே உள்ளதால் மீட்புப் பணிகளை மேற்கொள்வது மிகவும் கடினமானதாக இருப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். அதேவேளை இந்த மண் சரிவில் சிக்கி பலியானவர்களுக்காக ஆத்ம சாந்திப் பிரார்த்தனை இடம்பெறவுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
Earth quake in Kashmir. Tsunami in Sri Lanka – Shri Lanka in 2004. Now, Afghanistan, and I think it is the nature’s response to their exit strategy – Burn the Quran.