அமரிக்க உதவி ராஜாங்க செயலர் ரொபேர் ஒ பிளேக் தமிழர்களுக்கு ஆதரவாக செயற்படுவதாக தமிழ் இனவாதிகளும் அவர்கள் சார்ந்த ஊடகங்களும் பரப்புரை செய்துவந்தமை தெரிந்ததே.
இனப்படுகொலையைத் தலைமை தாங்கியவர்களில் முதனமையானவரானக் கருதப்படும் கோதாபய ராஜபக்சவிற்கும் ரொபேர் ஓ பிளேக்கிற்கும் இடையேயான சந்திப்பில் பிளேக் ஆப்கானிஸ்தான் யுத்ததிற்கு இலங்கையை உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஆப்கனிஸ்தான் இராணுவ அணிக்கு அடியாட்களையும் இராணுவத்தையும் வழங்குமாறே இக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்தலில் முஸ்லீம்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும் என்ற காரணத்திற்காக கோதாபய உடனடியாக ஆட்களை வழங்க மறுப்புத் தெரிவித்துள்ளார்.
விக்கிலீக்ஸ் இன் இரகசியக் கேபிள் ஒன்றில் இத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் யுத்ததிற்கு மட்டுமன்றி உலகில் நடைபெறும் யுத்தங்களுக்கு தனியார் இராணுவ நிறுவனங்கள் கொலைகாரர்களை வழங்கிவருவது அறியப்பட்டதே.
கோதாபயா தனியார் இராணுவ நிறுவனம் ஒன்றின் உரிமையாளார் என்பது குறிப்பிடத் தக்கது.
ஆங்கிலத்தில் MERCENARIES என்று சொல்வார்கள். உள்நாட்டில் மேர்வின் சில்வாவும் வெளிநாட்டில் கொத்தபாயாவும்
இயங்குவார்கள்
இதே கோத்தபாய கும்பல்களின் தமிழினவழிப்பிற்கு ஆதரவு நல்குபவர்கள்தான் பலஸ்தீன பயங்கரவாதிகளும் அதன் ஆதரவு சக்திகளான இஸ்லாமிய தேசங்களும் என்ற உண்மையையும் ஞாகபத்தில் கொள்ளல் வேண்டும்.