நேறைய தினம் (29.05.2011) பெண்கள் குழந்தைகள் உட்பட 14 அப்பாவிகள் ஆப்கானிஸ்தானில் பலியாகியுள்ளனர். அமரிக்கப் படைகளின் தாக்குதல்களிலேயே இவ்வாறு அப்பாவிகள் பலியெடுக்கப்பட்டனர். 10 குழந்தைகள், இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் இத்தாக்குதலில் பலியாகினர். அமரிக்கப்படைகள் நடத்திய விமானத் தாக்குதல்களிலேயே இப்படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. இதனைத் தொடர்ந்து செல்வாக்கிழந்து வரும் ஆப்கானிஸ்தானிய ஜனாதிபதி அமரிக்கப்படைகளுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Comments 1