சண்டையின்போது பிடிபட்ட பலரை மனிதத் தன்மையற்ற முறையில் அமெரிக்க ராணுவத்தினர் நடத்தியுள்ளனர் என்று ஆப்கானிஸ்தானின் சுயேச் சையான மனித உரிமை ஆணையமும், அமெரிக்கா விலிருந்து இயங்கும் ஓபன் சொசைட்டி தொண்டு நிறு வனமும் குற்றம் சாட்டியுள் ளன.
ஆப்கானிஸ்தானில் அமைக்கப்பட்டுள்ள பல் வேறு சிறைகளில் கைதிகள் மிகவும் மோசமான முறை யில் சித்ரவதை செய்யப் பட்டு கொடுமைப்படுத்தப் பட்டுள்ளனர் என்று “சித்ர வதை, மாற்றங்கள் மற்றும் நீதி மறுப்பு” என்ற தலைப் பில் இந்த அமைப்புகள் ஒரு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. ஏற் கெனவே பல மையங்களில் சித்ரவதைகள் நடத்தப்படு கின்றன என்று ஐக்கிய நாடுகள் சபையின் குழு ஒன்று உறுதிப்படுத்தி யிருந்தது.
இந்த கண்டுபிடிப்புக் குப் பிறகு, இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டுள்ள 16 சிறைகளுக்கு யாரையும் அனுப்பப் போவதில்லை என்று அமெரிக்கா தலை மையிலான ராணுவக்கூட் டான நேட்டோ அறிவித் தது. ஆனால், இவ்வாறு அறிவிக்கப்பட்ட பிறகும், சிறைக்கு அனுப்பப்பட்ட கைதிகள் கடும் சித்ரவதைக்கு ஆளாக் கப்பட்டுள்ளனர்.கைதிகள் இந்த சிறைக்கு அழைத்து வரப்படுவதற் கும், அவர்கள் சித்ரவதைக்கு ஆளாக்கப்படுவதற்கும் ஆதாரங்கள் உள்ளன என்று இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
அடித்து உதைப்பது, மின் அதிர்ச்சி தருவது, பாலி யல் ரீதியாகத் சித்ரவதை செய்வது உள்ளிட்ட பல் வேறு வகையான சித்ரவதை கள் இருந்தன என்பதைப் பல்வேறு கைதிகள் மூல மாக ஆய்வாளர்கள் உறு திப்படுத்தியிருக்கிறார்கள்.
இதையெல்லாம் நிறுத்திவிட்டோம் என்று வெளிப்படையாக அறி வித்தபிறகும், சித்ரவதைகள் தொடர்ந்துள்ளன என்று இந்த அமைப்புகளின் ஆய்வு அம்பலப்படுத்தி யுள்ளது