ஆப்கானிஸ்தானின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள தளம் ஒன்றின் மீது புதனன்று பிற்பகல் நடத்தப்பட்ட தற்கொலைத்தாக்குதலில், அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவு நிறுவனம் கடந்த 25 வருடங்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய இழப்பை எதிர்கொண்டதாக தெரியவந்துள்ளது.
கோஸ்ட் மாகாணத்தில் நடந்த இந்தத் தாக்குதலில் முழு நேரமாகவோ, அல்லது ஒப்பந்த அடிப்படையிலோ சி.ஐ.ஏவுக்காக பணியாற்றிய 8 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும் 6 அமெரிக்கர்கள் இதில் காயமடைந்தனர்.
ஆப்கானிய இராணுவ அதிகாரியாக பணியாற்றிய தமது ஆளே அந்த தாக்குதலை நடத்தியதாக தலிபான்கள் கூறியுள்ளனர்.
பல சோதனைச் சாவடிகளின் ஊடாக கடந்து சென்று, அந்த நபர் உடற்பயிற்சி நிலையத்தில் அந்த தாக்குதலை நடத்தியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.