இளைஞர்களை உசுப்பி விட்டு இன்னொரு விடுதலைப் போராட்டத்துக்கான இளைஞர் படையை உருவாக்க தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்த சங்கரி முயற்சிப்பதாக பிரதியமைச்சர் முரளிதரன் குற்றம் சாட்டுகின்றார்.அக்கரைப்பற்றின் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ளூராட்சி மன்றத் தோ்தல்களில் போட்டியிடும் ஆளுங்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த எட்டு வருடங்களாக விடுதலைப் புலிகளையும், தமிழரசுக் கட்சியையும் தாறுமாறாக விமர்சித்து வந்தவர்தான் ஆனந்த சங்கரி ஐயா. இன்று அவர் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் சுதந்திரமாக உலாவித் திரிந்து கொண்டு வீரவசனம் பேசித் திரிகின்றார்.
அவரது செயற்பாடுகளை பார்க்கும் போது இன்னொரு விடுதலைப் பேராட்டத்துக்கான இன்னொரு இளைஞர் படையை உருவாக்க முயற்சிக்கின்றாரோ என்று தான் எண்ணத் தோன்றுகின்றது. அவ்வாறு ஆனந்தசங்கரி இன்று வடக்கிலும் கிழக்கிலும் சுதந்திரமாகத் திரிவதற்குக் காரணம் இன்றைய சமாதானமே. அதனை இன்றைய அரசாங்கமே ஏற்படுத்தியது என்பதை மறந்துவிடக் கூடாது.
நானும் கடந்த 30 வருட காலமாக உலகில் தலைசிறந்த அணியில் அங்கம் வகித்து ஆயுதம் தூக்கிப் போராடியவன்தான். மிகவும் விசுவாசமாக தாய் மண்ணிற்காக அனைத்தையும் துறந்து தீவிரமாகப் போராடினேன்.தலைமைக்கும் இயக்கத்திற்கும் விசுவாசமாக பல்வேறு போர்க்களத்தில் தலைமை தாங்கி நடாத்தினேன். ஆனால், இறுதி நேரத்தில் பிரபாகரனது நிலைப்பாடு தமிழ் மக்களுக்கு விடிவையோ தீர்வையோ தராது என்று நம்பினேன்.
அவரிடம் சொல்லிப் பார்த்தேன். அவர் விடாப்பிடியாக அடம் பிடித்தார். நடந்ததை அறிவீர்கள். அப்போது அவரை விட்டு விலகுவதைத் தவிர வேறு வழி எனக்குத் தெரியவில்லை. விலகினேன். அன்று பலர் என்னைத் துரோகி என்றனர். ஆனால், இறுதி நேரத்தில் நான் எடுத்த தீர்க்க தரிசனமான முடிவால் சமார் 20 ஆயிரம் கிழக்குப் புலிகள் காப்பாற்றப்பட்டனர். அவர்களது குடும்பங்கள் இன்றும் என்னைத் தெய்வமாக வணங்குகின்றனர். அந்த யுத்தத்தில் எனது ஒரே அண்ணனை இழந்தேன்.
சும்மா வெறுமனே அரசுக்கு ஏசிக்கொண்டிருப்பதால், அரசாங்கத்தை குறை கூறிக் கொண்டிருப்பதால் ஆகப் போவது ஒன்றுமில்லை. உண்மை நிலையை அறியாது தமிழர் கூட்டமைப்பினர் புலிகளின் வாலைப் பிடித்துக் கொண்டு நாடகமாடினர். அவர்களால் அக்காலகட்டத்தில் கூட வட கிழக்குப் பகுதிகளுக்கு வர முடியாமல் போய்விட்டதை மறந்திருக்க முடியாது.
ஆனால் இன்றைய சூழலில் அவர்கள் வருகிறார்கள். பேசுகிறார்கள். இக்கூட்டமைப்பினரால் இதுவரை தமிழ் மக்களுக்குக் கிடைத்த நன்மைகள் என்ன? இது பற்றி தமிழ் புத்திஜீவிகள் நன்கு சிந்திக்க வேண்டும்.
அரசு போரில் வெற்றிபெற்று சமாதான சூழ்நிலையைக் கொண்டு வந்ததும் இன்று தமிழ் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டு வாழ்கிறார்கள். வெளிநாட்டில் பல்லாண்டுகாலம் வாழ்ந்த தமிழ் மக்கள் கூட இன்று இலங்கைக்கு வருகிறார்கள். யழ்ப்பாணத்தில் இராணுவம் வைத்திருந்த பல இடங்களை தமிழ் மக்களிடம் வழங்கி வருகிறது என்றார்.
கருத்துச் சொல்லும் கருணா உன் காதைப் பொத்தி தருவேன் ஆனால் தூரமாய் போட்டுது.நாய் மாதிரி குலைக்காத, நாசமாய்ப் போனவனே நீ விட்டு வாங்கித் தின்னுறது காணாமல் கிடக்குதே.
அப்படி போடுங்கள் தமிழ்மாறன்.
தேசத்துரோகி கருணா,நீ பேசுவதைக்கேட்டால் எனக்கு இப்படி ஒரு கற்பனை வருகிறது. கடந்த சுமார் 500 வருடங்களில் தமிழர் போராட்டங்களை எல்லாம் காட்டிக்கொடுத்து , சீரளித்து சின்னாபின்னம் ஆக்கிவிட்டு, உன்னைப்போன்ற வெட் கம்கெட்டநக்கிப் பிழைப்புகள் எல்லாம் இப்படித்தான் உதார் விட்டுருப்பார்கள்>> நாங்கள் ( காக்கைவன்னியன், எட்டப்பன்,) இவெர்களை எல்லாம் (மாவீரர்கள் சங்கிலியன், பண்டாரவன்னியன், கட்டப்பொம்மன்) காட்டிக்கொடுத்து கொல்லாவிட்டால் இவெர்கள் எல்லாம் தமிழரை, போராட்டம் -, தாய்மண்-, தன்மானம் என்று கொன்று இருப்பார்கள்.நவீன எட்டப்பனே உயிர்வாழ்தலுக்கு அவசியமானது போராட்டமே. எமது தேகத்தினுள் லட்சக்கணக்கானநல்ல கிருமிகள் கெட்டகிருமிகளை எதிர்த்து போராடி வெற்றி பெறுவதனாலேயே இன்று நீ ,நான் , எல்லாருமுயிரோடு இருக்கிறோம் . எமது தேகத்தில் தொடங்கி அண்டவெளி வரைக்கும்போராட்டமே எல்லவற்ரையும் உசிரோடு வைத்திருக்கிறது. ஓசியில் தின்று புரளும் உணக்கு இது எப்படி புரியும் துரோகியே. – தமிழன் போராடினாலும் அழிவான் , போராடாட்டியும் அழிவான் . ஆனால் போராடினால் உயிர்பிழத்து இருக்க நிட்சயம் வாய்ப்பு இருக்கிறது.
புத்திபேதலித்தவர்களிடம் இருந்து சுயநினைவு பெற்று உயிருடன் வாழ்பவர்களில் கருணாவும் ஒருவர். கருணாவின் துணிவுயில்லாதிருந்தால் தமிழ்மக்களின் சனத்தொகை பதினெட்டு வீதத்தில் இருந்து பத்துவீதமாக குறைந்திருக்கும் என்பதே எனது கணிப்பீடு.இதில் தங்களுக்கு ஏதாவது முரண்பாடு உண்டா வன்னியான் ?. கொலைபித்தம் தெளிந்த முதல்மனிதர் கருணாவே அவரால் இருபதுயாயிரம் உயிர்கள் பாதுகாக்கப்பட்டது என்பதும் மறைக்க-மறுக்கபடமுடியாது உண்மையே!. கிழக்குமகாணத்தில் அமைதிநிலவுகிறது என்றால் கருணாவின் காலத்திற்கேற்ப புத்திசாதுரியமான முடிவே காரணமாகும்.சிலவேளைகளில் இனியென்னால் மனிதஉயிர்களை கொல்லமுடியாது என்கிற மனிதத்தன்மை காரணமாக இருக்காலம்.இப்படியான எண்ணங்கள் எல்லோருக்கும் வருவதில்லை. நான்கு இனக்கலக்கலவரங்களை நடத்தில் பிரபாகரன்யுட்பட தமிழ்தலைவர்களுக்கு சரிபாதி பங்குண்டுஎன்பதை காலங்கடந்தாவது முதல்உணர்ந்த மனிதன் கிராண் பெற்றெடுத்த´புதல்வன் கருணாவே!. அவருக்கு எனது வாழ்த்துக்கள். புலம்பெயர்ந்த புண்ணாக்குகளே! உங்களுக்கு அரசியல்கதைப்பதற்கு எந்தநீதியும் இல்லை முடிந்தால் ஐந்தோபத்தோ அங்குள்ளமக்களுக்கு வயிறுப்பாட்டுக்கு அனுப்பிவிட்டு கம்மென்று இருப்பதுதான் நியாமானது. இல்லையேல் வேலுப்பிள்ளை பார்வதிக்கு வல்வெட்டித்துறை இல்லாதுபோனமாதிரி தமிழ்மக்களுக்கு இலங்கையும் இல்லாது போகும்.உங்கள் மண்டையில் அரசியல் முதிர்ச்சியடைய குறைந்தது இன்னும் 100 ஆண்டுகளாவது தேவைப்படும்.
ஐயாவின் உடல் உள நிலைகளை கருத்தில் கொண்டு அவருக்கு ஆறுதலாய் இருக்கும்படி நல் உள்ளம் கொண்ட அனைவரையும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன். இதுக்கு மேல் ஐயாவுடன் கருத்து ரீதியாகவும் மோதுவதாய் இல்லை அனுபவம் மிக்க உங்களை போன்றவர்கள் நம் இனத்துக்கு தேவை..போதிய ஓய்வு இல்லாமை உங்களை பாதிப்பதாக உணர்கிறேன்.
கருத்துரீதியாகவா? மோதுகிறீர்கள். உங்கள் கருத்தென்னவோ?.
விசருகளை பாத்து விசர் எண்டு சொல்லுறது ஒரு மனிதத்தன்மை உள்ள நாகரீகமான செயல் இல்லை…. அவர்கள் மீது வாஞ்சையுடன் ஆதரவாக இருக்க வேண்டும். ஆம் இனி உங்கள் கருத்துகள் மீது தொற்றிக்கொள்வதாகவே உத்தேசம்
சரி; உங்கள் கருத்தை உங்களால்கூட சொல்லமுடியாது. என்கருத்தையாவது சொல்லுங்கள் கிறுக்கன். அதை எப்படி புரிந்துவைத்திருக்கிறீர்கள்? அதில் இருந்தாவது ஆரம்பிப்போம். கிறுக்கன்போக்கில் அலட்டாதீர்கள்.
கருணாவுடன் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் ஆனந்தசங்கரியை நம்புவதற்கில்லை.
chandran.raja ஐயா நீங்களும் கருணாவும் பாலசிங்கத்துக்கு பதிலாக பிரபாகரனுக்கு ஆலோசகராக இருந்திருந்தால் எப்பவோ தமிழன்கு விடிவு கிடைத் திருக்கு மென்கிறீர்களா