கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் நீண்டதொரு சாட்சித்தை வழங்கிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, வன்னி யுத்தத்தின் பின்னரான நிலைமைகள் தொடர்பாக தன் கவலைகள் பலவற்றை வெளியிட்டிருக்கிறார்.
பத்தாயிரம் தொடக்கம் பதினோராயிரம் பேரைப் போராளிகளாக முத்திரை குத்தி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை பாரதூரமான குற்றமாகும் என வலியுறுத்துவதாகக் ஆனந்தசங்கரி கூறியிருக்கிறார். 20, 30 ஆண்டுகளுக்கு முன் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஜே.வி.பி போராளிகள் அக்கராயனில் அமைக்கப்பட்ட புனருத்தாரன முகாமில் வைத்து ஆறுமாத காலத்தில் புணர்வாழ்வளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். தடுப்புக் காவலிலுள்ள தமிழர்கள் ஜே. வி. பி. காலத்தில் மேற்கொள்ளப்பட்டது போன்று கன்னியமான நபர்கள் கொண்ட குழுக்களால் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் ஆலோசனை தெரிவித்திருக்கிறார்.
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட போது மக்கள் கொண்டிருந்த மகிழ்ச்சி படிப்படியாக குறைந்து வருகின்றது. இப்போதுள்ள பிரச்சினை தத்தமது வீடுகளிலிருந்து வெளியே வர மக்கள் பயப்படுகிறார்கள். பேச்சு சுதந்திரமின்மையால் பேசப் பயப்படுகின்றார்கள். அவர்கள் விரும்பிய இடங்களுக்கு போக முடியாததால் சுதந்திரமாக நடமாடும் உரிமையை இழந்து நிற்கின்றார்கள் எனவும் தெரிவித்திருக்கிறார்.
எமது பிரச்சினை என்னவென்று அனைவருக்கும் தெரியும். எத்தகைய தீர்வு ஏற்புடையதாக இருக்குமென அனைவரும் அறிவர். ஏற்புடைய தீர்வு முன்வைக்கப்பட்டால் இராணுவ முகாம்களுக்கு தொடர்ந்து வேலை இருக்காது. ஏற்புடைய தீர்வு முன்வைக்கப்படாவிட்டால் இராணுவ முகாம்களுக்கு நிறைய வேலை இருக்கும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
நிர்வாகத்தை இராணுவ அதிகாரிகளிடமிருந்து மீளப்பெற்று சிவில் சிவில் நிர்வாகமாக மாற்ற வேண்டுமெனக் கேட்டிருக்கிற ஆனந்தசங்கரி, சிவில் நிர்வாக அதிகாரிகள் குறித்தும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார். விடுதலைப் புலிகள் காலத்தில் அவர்கள் சில முட்டாள்தனமான முடிவுகளை மேற்கொள்வதற்கு உடந்தையாக இருந்தவர்கள் இன்றும் மீண்டும் அதிகார பீடத்திற்கு அமர்த்தப்பட்டள்ளனர். 2004 ஆம் ஆண்டுத் தேர்தலில் புலிகளுக்கச் சாதகமாக 95 சதவீதமான வாக்குகள் கிடைத்தமைக்குப் பொறுப்பாக இருந்த முன்னாள் கிளிநொச்சி அரசாங்க அதிபர் தற்போது அரசுக்கு ஆலோசனை வழங்கிவருகின்றார் எனவும் விமர்சித்துள்ளார்.
இடம்பெயர்ந்தோரை சரியாக கவனிக்கவில்லை, புனருத்தாரன முகாமிலுள்ளவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொழிற் பயிற்சிகள் காலத்திற்கு உதவாதவை எனத்தெரிவித்த ஆனந்த சங்ககரி, ‘எனக்கு இப்போது வயது 78. இன்னும் எவ்வளவு காலம் நீடிப்பேன் எனக்கூறமுடியாது. ஆனால் இராணுவததுக்கு பயந்த மக்கள் அவர்களால் எதிர்காலத்தில் இடைஞ்சல்கள் ஏற்படக்கூடும் என்ற பயம் இருக்கும் வரை இன ஒற்றுமை சாத்தியமற்றதாகும்” எனவும் தெரிவித்திரக்கிறார்.
இதே வேளை இராணுவதத்pனர் மிகவும் நல்லவர்கள் எனவும், புலிகள் பயங்கரவாதிகள் எனவும் அவர் குறிப்பிடத்ததவறவில்லை.
-விஜய்
அடே கொம்மைக்கோழி ஆனந்தசங்கரி ……….. உனக்கு என்ன சனநாயகம். கிளிநொச்சியில் தாழ்த்தப்பட்ட மக்கள் மலையக மக்கள் என வேறுபாடு காட்டி காணி பத்திரம் வழங்கல் உட்பட பல்வேறு விடயங்களில் அநீதி இழைத்த நீயா அந்த்த புனிதன். அரசாங்க வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி இளம் பெண்களை கொழும்புக்கு கூட்டிச்சென்று நீ பண்ணின அட்டகாசம் ஊருக்கு தெரியுமாடா சாமி.
ராகவன் அதிகம் பேசுவதில்லை பேசினால் அதில் அர்த்தம் இருக்கும்,உண்மை இருக்கும், இருந்தாலும் தமிழரில் சிலர் மாறூவதில்லையா அவ்வாறே ஆனந்த சங்கரியையும் எடுத்துக் கொள்ளலாம்.கிராமத்து மனிதர்.நம்மிடம் அப்பாவித்தனமாக சாதியுணர்வு இருந்தது உண்மை அதுவெல்லாம் தவறூ என உணர்ந்து கொண்டொம் ஆக வயதானவரை பொருட்படுததாதீர்கள்.
ஆனந்த சங்கரி போன்றவர்களே இலங்கை அரசிற்கு ஆரோக்கியமான அறீவுரை வழங்க சதாம் குசைனிற்காக அழுத ஜெயபாலன் போன்றவர்கள் மண்மூட்டையை மறூபடி அடுக்கும் ஆலோசனையையே அள்ளீ வழங்குகிறார்கள் நமது தலைவிதியை நாமே நொந்து கொள்ள வேண்டி இருக்கிறது.தேசம் என்ற பேரை வைத்து குரங்குகள் கையில் பூமாலை கொடுத்திருக்கிறார்கள்.நல்லா இருந்த ஜெயபாலன் இப்போ நல்லாவே இல்லை.அவரை பல்லி பிடித்தாட்டுவதாக இணயத்தில் சிலர் எழுதுகிறார்கள்.என்னைப் பற்றீய ஆராய்ச்சியில் இறங்காது அவர் தன்னைப் பற்றீய ஆராய்வில் இறங்குவது அவரது துப்பறீயும் திறனுக்கு நல்லது செய்வாரா ஜெயபாலன்.
புலிகள் தோற்கடிக்கப்பட்ட போது மக்கள்……! அட வக்கரித்துப் பொன சங்கரியே எந்த மக்களை சொல்லுகின்றாய்? உன்னைப்போல எலும்புத துண்டங்களுக்கு அலைந்த ஒரு சிலரை கூறுகிறாயா? இன்றைய தமிழனின் அவலத்திற்கும் அழிவிற்கும் உனது பங்கும் பெருமளவில் உள்ளதை உன்னால் மறுக்க முடியுமா? சிங்களத்தின் கால் பிடித்து வாழ நீ விரும்புவாய் ஆனால் மான முள்ள தமிழரல்ல. அதை மறக்காதே. என்றாவது ஒரு நாளாவது மனப்பூர்வமாய் நீ தமிழருக்குக் குரல் கொடுததுள்ளாயா? உன் எஜமானர்களுக்காவே நீ வக்காலத்து வாங்கிப் பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தாய். உனக்கு தமிழரைப்பற்றி பேச என்ன அறுகதையுள்ளது?