ஆந்திரபிரதேசம் விசாகபட்டினத்தை சேர்ந்த சாரே கிராமத்தில் முட்சிகா பூதேவி நிறுவனம் கனிமச்சுரங்கம் அமைக்க அரசிடம் அனுமதி கோரியிருந்தது . இந்த கிராமத்தில் பழகுடியான மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் கனிமசுரங்கம் வந்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அக்கனிமச்சுரங்கம் அமைப்பதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். பல போராட்ட ங்களையும் நடத்திவந்தனர்.
இந்நிலையில் அக்கனிமநிறுவனம் , அரகு வல்லே தொகுதி தெலுங்கு தேச எம்எல்ஏவான சிவேரு சோமாவின் உதவியை நாடியுள்ளது. பொதுவாக சாதாரண உ ழைக்கும் மக்களால் தேர்தெடுக்கப்படும் எம்எல்ஏக்கள் தொகுதி மக்களின் வாழ்வாதரா பிரச்னைகளை குறித்தோ , தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதோ கிடையாது, பெரிய நிறுவனகளுக்கு அனுமதி வாங்கி தருவது, அவர்கள் காலால் இட்ட பணியை தலையால் முடித்து கொடுத்து அதற்கு பணம் பெறுவது, வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்ற கோரப்படும் ஒப்பந்ததிற்கு கமிசன் பெறுவது, புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பது ,கட்டப்பஞ்சாயத்து செய்வது என்பது தான் அவர்களின் முழு நேர வேலை . அதனால் தான் நிறுவனம் உதவி கேட்ட உடன் ஓடோடி வந்து விட்டார் அந்த எம்எல்ஏ பழங்குடிகள் வாழும் அந்த கிராமத்திற்கு, அவரோடு டம்பிரிகுடா மண்டல் தலைவர் கோரா தன ராவ் மற்றும் சில அடி பொடிகளும் சென்றுள்ளார். கூடியிருந்த அந்த கிராம மக்கள் முன்பு அந்த நிறுவனம் இந்த பகுதியில் அமைய வேண்டுமென நிறுவனத்திற்கு ஆதரவாக பேசியுள்ளார் அந்த எம்எல்ஏ.
இயல்பிலையே வீரம் சொரிந்த அந்த மக்கள் கோபம் கொண்ட னர் குறிப்பாக பெண்கள், கைகளில் கிடைத்த பொருள்களை கொண்டும், கம்பாலும் ,கைகளாலும் அந்த எம்எல்ஏ மற்றும் மண்டல் தலைவர் ஆகியோரை ஓட ,ஓட விரட்டி தாக்கினர், அவர் வந்த காரையும் தீவைத்து கொளுத்தினர்.
இப்போது அந்த பழகுடியின மக்களுக்கு ஆதரவாக ஊடகங்களும், முதலாளித்துவ அரசியல் வாதிகளும் பேச துவங்கி உள்ளனர். அரசும் அந்த திட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளது . இவை அந்த பழகுடியான மக்களுக்கு தையிரத்திற்கும், ஒற்றுமைக்கும் கிடைத்த வெற்றி ஆகும்.
உழைக்கும் வர்க்கம் ஓன்று படாமல் சிதறி கிடக்கும் வரை தான் இந்த துருபிடித்து எந்த நேராமும் விழ தயாராக இருக்கும் அரசு பெரிய பலசாலியாக காட்சி தரும். ஒடுக்கப்பட்ட மக்களும் உழைக்கும் மக்களும் ஓரணியில் திரளும் போது, இவ்வரசுகள் சரிந்து விழுவது உறுதி. இந்தியா மட்டுமல்ல உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் வெற்றிகொள்வது உறுதி.!
ஆந்திர மக்கள் காரமானவர்கள் தான் என்பதை இது நிருபித்துள்ளது
மக்கள் எப்போதும் போராட்ட குணத்தோடு இருக்க வேண்டும் என்று இந்த நிகழ்வு நமக்கு சுட்டி காட்டுகிறது