ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா தங்கக் கவசம் அணிவித்தார். 13 கிலோ எடையுள்ள தங்கக் கவசத்தை அணிவித்து மரியாதை செய்த அவர், முத்துராமலிங்கத் தேவரின் கொள்கைகளை பாராட்டிப் பேசினார். முத்துராமலிங்கத்தால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட இமானுவெல் சேகரனின் 54வது நினைவு குருபூஜை நாளை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு வருகை வந்த மக்கள் மீது காவல் துறை 11.09.2011 அன்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஏழு அப்பாவிகள் பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே இக் கோரசம்பவம் நடைபெற்றது. இதனூடாக ஆதிக்க சாதியினரின் அடியாளாக ஜெயலலிதா தன்னை வெளிப்படுத்திக்கொண்டார்.
இன்று நாட்டின் விடுதலைக்காகவும், மக்களின் நலனுக்காவும் முத்துராமலிங்கத் தேவர் பாடுபட்டதாக ஜெயலலிதா புகழாரம் சூட்டினார். அவரது வழியில், அதிமுக தொடர்ந்து செயலாற்றும் என்றும் ஜெயலலிதா குறிப்பிட்டார்.
தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாகக் கொண்டு செயல்பட்ட தேவர் திருமகனார் இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர். அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவராக இருந்தவர், மக்கள் நலனுக்காகவும், தொழிலாளர் நலனுக்காகவும் அயராது பாடுபட்டவர் என்று ஜெயலலிதா கூறுகிறார். இனவாதிகளுக்குத் தமிழ்த் தேசியவாதியாகவும், சட்டத்திற்கு இந்திய தேசியவாதியாகவும் தன்னை வெளிப்படுத்தும் ஜெயலலிதா, முத்துராமலிங்கத்தின் தேவர் சாதி வெறியின் முன்னர் இந்தியத் தேசியவாதியானார்.
தொடர்புடைய பதிவுகள்:
சாதிவெறியனுக்குத் தங்கக்கவசம் அணிவிக்கும் ஜெயலலிதா
முத்துராமலிங்கம் என்பவர் தமிழகத்தின் ஆதிக்க சாதிகளில் ஒன்றான தேவர் சாதியைச் சேர்ந்தவர் என்பதால் முத்துராமலிங்கத் தேவர் என்று அழைக்கப்படுகிறார். 1957- இல் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் தலைவரான இமானுவேல் சேகரனை தனக்கு சமமாக நாற்காலியில் அமர வைத்து பேச வைத்த காரணத்தாலும், வழக்குரைஞரான சேகரனின் வாதத்திறமையால் மிரண்டு போனதாலும் முத்துராமலிங்கம் செகரனை தனது அடியாட்களை வைத்து வெட்டிக் கொலைசெய்தார்.
முத்துராமலிங்கத்தால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட இமானுவெல் சேகரனின் 54வது நினைவு குருபூஜை நாளை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு வருகை வந்த மக்கள் மீது காவல் துறை 11.09.2011 அன்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஏழு அப்பாவிகள் பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே இக் கோரசம்பவம் நடைபெற்றது. இதனூடாக ஆதிக்க சாதியினரின் அடியாளாக ஜெயலலிதா தன்னை வெளிப்படுத்திக்கொண்டார்.
தலித் தலைவர் தியாகி இமானுவேல் சேகரன் தேவேந்திரர் என்று அழைக்கப்படும் பள்ளர் வகுப்பைச் சார்ந்தவர்.
This is something that we have to grapple with here too. Sangilyan is Vellalar and so the ruling caste in the Jaffna Peninsula. In the Batticaloa District the Mukkuvars are the majority caste. They want to erect a statue for S.P. Thamil Selvan in France. Let us wait and see.
சாதிப்பாகுபாடுகழும் சாதியரீதியாக உருமைகள் மறுக்கப்படுதலும்
தமிழர் மத்தியிலேயே தமிழரால் மீறப்படும் மனித உருமை மீறல்கள். இவற்ரிற்கு எதிராக குரல் கொடுக்காத குரல் கொடுக்க
துணிவற்ர தமிழ் அரசியல்வாதிகள் யாவரும் தமிழர்
பெயரால் தமிழரையே ஏமாற்ரி தமது சுய்நலங்களைக்
காப்பவர்கள்தான். இதற்கு பலியாகுவோரும் தாழ்த்தப்பட்ட
உருமைகள் மறுக்கப்படும் தமிழர்கள்தான்.-மன்னன்
நாளை இம்மானுவேல் செகரனுக்கு வெள்ளிகவசம்?
ஆதி திராவிடமே
ஒன்றினைந்து அம்மாவை புகழும்….நல்ல நாடு இது?