தமிழ்நாட்டின் பிரபல எழுத்தாளரும், புதுவிசை என்ற இலக்கிய சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும், தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினருமான திரு ஆதவன் தீட்சன்யா அவர்கள் அரசின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இவர் இங்குள்ள எழுத்தாளாகள், கலைஞர்கள்,மற்றும் இலங்கைத் தமிழ் அமைச்சர்களை சந்தித்து உரையாடினார். கொழும்பிலும் மலையகத்திலும் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு உரையாற்றினார்.
குறிப்பாக October மாதம் 10, 11 ஆகிய தினங்களில் மாத்தளையில் மத்திய மாகாண அமைச்சர் தலைமையில் நடைபெற்ற மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவில் கலந்து கொண்டார்.
இவ்விழாவில் மத்திய மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். காலாச்சார ஊர்வலம் காட்சிக்கூடம் கலைநிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றன.
இம் முறை இவ் சாகித்திய விழாவில் மலையத் தமிழ் எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்காது அவர்கள் புறக்கணிக்கப்ட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
THANKS:மலைமகன்.
ஆதவன் ஒரு நச்சுவிதை, ” ஹிந்து ராம்,மற்றும் இந்த ஆதவன் தீசநியநேல்லாம் சிங்கள பௌத்த அரசபயங்கர வாதத்தின் தத்து பபிள்ளைகள்
ஆதவன் தீட்சன்யா “என் மொழி என்பது உன் மொழியான பின்” எனக்கு அங்கே என்ன உண்டு?. (எம்.ஜி.ஆரின் பாட்டு). மெளனத்தையே முழு இலங்கையும் மொழியாக உள்ளது. ஆதவா கேட்டுச் சொல் “உடலில் வாய் உண்பதற்கு மாத்திரமா? என.
அங்கே பணம் உண்டு பெற்றுச் செல்
சூப்பர்,
இவர் தான் சிறந்த கம்யூனிஸ்ட் !
என்ன சொல்றீங்க தமிழ்செல்வன் சார் ?
தோழர் தமிழ் செல்வன்! ஆதவன் தீட்சண்யா பற்றி இப்போது என்ன சொல்கிறீர்கள்?. இதுவும் தவறான குற்றச்சாட்டு என சொல்லப்போகிறீர்களா? தனிப்பட்ட உறவுகளுக்காக கொள்கைகளை கோட்பாடுகளை அடகு வைத்து மிக மோசமான ஆதவன் தீட்சண்யாவை காப்பாற்ற முயலாதீர்கள். விமர்சனமும் சுயவிமர்சனமும் கம்யூனிஸ்டுக்களின் ஆயுதம். அதனை நீங்களும் உங்கள் கட்சியும் முதலில் பயன்படுத்த பழகிக் கொள்ளுங்கள். ஆதவன் தீட்சண்யா உங்களுடைய தோழர் என்று கொள்வதில் நீங்கள் வெட்கமும் அவமானமும் கொள்ளவில்லையெனின் நீங்கள் ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் என்பது சந்தேகத்திற்குரியதே.
அவர் சென்றது தனிப்பட்ட முறையில், த.மு.எ.ச சார்பில் இல்லை என்று தமிழ்ச்செல்வன் பதில் சொல்வார். மேலும் ஒரு அரசே கூப்பிட்டு கெளரவிக்கும் போது அதை மறுக்காமல் ஏற்று, பிற எழுத்தாளர்களை சந்திக்க கிடைத்த வாய்ப்பாக அவர் அதை பயன்படுத்தினார் என்று சொல்வார். இலங்கை அரசுடன்நட்பு வைத்திருந்தால் அதை தமிழர்கள்நலனுக்கு பயன்படும் என்று சொல்வார்கள்.
வீழ்ச்சிகள் எதிர்பார்க்கப்பட்டவை, ஆனால் அவை இப்படி சீக்கிரமாகநடக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை. .
athavan thhedsanya is parayar and repesenting as a biramin which is make me very sad.once mr dominic jeva was told me that biramin not our enemy but who hide his cast and think and act as biramin is real enemy.so he is virus in our tamil community.shold parayar get rid of him?i think so.
இலங்கை அரசில் பங்கெடுத்துக் கொண்டிருக்கும் அமைச்சர்களாக பதவி வகித்துக்கொண.டிருக்கும் கம்யுனிஸ்ட் கட்சியுடனே ஆதவன் தீட்சனயாவின் கட்சி உறவு வைத்திருக்கிறது.இலங்கையில் இவர்களே உண்மையான கம்யுனிஸ்ட் கட்சி எனவும் அங்கீகரித்துள்ளது.எனவே ஆதவின் தீட்சனயாவின் கட்சியே இப்படி இருக்கும்போது ஆதவன் தீட்சனயா பங்கெடுத்ததில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?அடுத்த பொதுக்குழு கூட்டத்திற்கு மகிந்த ராஜபக்சவை அழைத்து இவரே இந்த நுhற்றாண்டின் சிறந்த தோழர் என்று பட்டம் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஆதவன் தீட்சண்யா போன்ற ‘அறிவுஜீவிகள்’ ண்.G.ஓ.க்களுடன் உறவு வைத்துக்கொள்வதும், அத்தகையவர்கள் நடத்தும் கூட்டங்களில் கலந்து கொள்வதையும் தாண்டி, தற்போது பாசிச அரசின் மேடைகளில் உரை’முழக்கம்’ இடும் நிலைக்கு கீழிறங்குவதையும் காண முடிகிறது. ஆதாயம் ஏதுமில்லாமல் இப்படி பகிரங்கமாக இவரால் இயங்க முடியாது. எல்லாவற்றையும் தான் சமாளிக்க ‘தலித் அரசியல்’ முகமூடி இருக்கிறதே!
சி.பி.எம். தமது தேசிய மாநாட்டுக்குப் பேரினவாத ஜே. வி. பியையும் சில ஆண்டுகள் முன்பு விருந்தினராக அழைத்த பெருமைக்குரியது.
இங்கே ஆதவன் தீட்சன்யாவுடன் ஒட்டிக் கொண்டு ஒருசில ‘இடதுசாரி’ புத்திஜீவிகளுமல்லவா ஊரெல்லாம் திரிகின்றன.
நல்லவேளை, ஹிட்லர் இப்போது இல்லை. இருந்திருந்தால் அவனது அரசு நடத்தும் விழாவில் கூட ஆதவன் கலந்து கொண்டிருந்திருப்பார். கேட்டால், ஹிட்லர் நாட்டில் தலித் வன்கொடுமை இல்லை என்று சொல்லியிருப்பார்.
Isn’t it sad the ‘great marxist intellectual’ has stooped to this level ,tthese people couidn’t wait to share their thoughts with the honourable man Rajapakse,
shame on you.,from now onwards stop talking about human rights ,democracy and equality.