உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் சாதிவாரி மக் கள்தொகைக் கணக்கெடுப்பு நடத் தப்பட்டு, சமூக நீதி நிலைநாட்டப்படும்” என்று அக்கட்சியின் தலைவர் அகி லேஷ் கூறியுள்ளார். உத்தரப் பிரதேச மாநில உணவுத் துறை அமைச்சரான தாரா சிங் சவுகான், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜக-விலிருந்து வில கினார். ஞாயிறன்று அகிலேஷ் முன்னி லையில் சமாஜ்வாதி கட்சியிலும் அவர் இணைந்தார். இதர பிற்படுத்தப்பட்ட மக்களிடம் செல்வாக்குப் பெற்ற தலை வரான தாரா சிங் சவுகானை வர வேற்று, அகிலேஷ் உரையாற்றினார். அப்போது, ‘‘உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியில் உள்ள ஆதித்யநாத் அரசு மரங்களை எண்ணுகிறது, விலங்கு களை எண்ணுகிறது. ஆனால், ஏன் பிற் படுத்தப்பட்ட மக்கள் தொகை எவ்வ ளவு என்பதை தெரிந்து கொள்ள விரும்பவில்லை?” என்று கேள்வி எழுப் பினார். “மக்கள்தொகையில் பிற்படுத்தப் பட்டோர் எவ்வளவு என்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதன் மூலமே மொத்த மக்கள் தொகை யில் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக் கைக்கு ஏற்ப பயன்களை பெற முடி யும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கட்டா யம் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்து வோம்’’ என்றும் அவர் உறுதியளித் தார். மகர சங்கராந்தியன்று கோரக் பூரில் உள்ள ஒரு தலித் தொண்டரின் வீட்டில் பாஜக முதல்வர் ஆதித்யநாத் மதிய உணவு உண்டதைக் குறிப் பிட்டு, “இது வாக்குகளைப் பெறுவ தற்காக மட்டுமே!” என்றும் கூறிய அகி லேஷ், ‘‘ஆதித்யநாத் கொஞ்சமும் ஆர் வமில்லாமல் ‘கிச்சடி’ சாப்பிட்டதை மக்கள் அனைவருமே பார்த்தார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.