தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து மகிந்த ராஜபக்ச எனும் சர்வாதிகாரியை வீழ்த்தி இருக்கிறார்கள், இலங்கையின் ஜனநாயகத்தை பாதுகாத்திருக்கிறார்கள்.
சிங்கள மக்களின் பெரும்பான்மையான வாக்குகள் மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டிருந்த போதும் வடகிழக்கு, கொழும்பு, மலையக தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகள் மைத்திரிபால சிறிசேனவை காப்பாற்றி இருக்கின்றன.
சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற தேர்தல் மாவட்டங்களில் மகிந்த ராஜபக்ஷவே அதிகப்படியான வாக்குகளை பெற்றிருக்கிறார். இந்த பகுதிகளில் மைத்திரிபால சிறிசேனவை விட மகிந்த பெற்ற மேலதிக வாக்குகளை பாருங்கள்-
களுத்துறையில் 46,486, காலியில் 83,132, மாத்தறையில் 85,388, அனுராதபுரத்தில் 42,754, கேகாலையில் 25,597, இரத்தினபுரியில் 86,539, ஹம்பாந்தோட்டையில் 1,04,587, மொனராகலையில் 67,469, குருணாகலையில் 80,266, மாத்தளையில் 12,952. மேற்குறிப்பிட்ட சிங்கள பிரதேசங்களில் மைத்திரியை விட மகிந்த 6,35,170 வாக்குகள் மேலதிகமாக பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.
மைத்திரிபாலாவுக்கு வாக்களித்த சிங்கள பிரதேசங்கள் என்று பார்த்தால் பொலநறுவை, மகாநுவர(கண்டி), கம்பஹா என்பன மட்டுமே இருக்கின்றன. இதில் பொலநறுவை மைத்திரிபாலவின் சொந்த மாவட்டம். அங்கு அவருக்கு 42,334 மேலதிக வாக்குகளும், தமிழ் முஸ்லிம் மக்களும் செறிவாக வாழும் மகாநுவரவில் 88,409 மேலதிக வாக்குகளும், கம்பஹாவில் வெறுமனே 4 660 வாக்குகளும் என மொத்தமாக 1,35,403 வாக்குகளே மேலதிகமாக கிடைத்திருக்கின்றன.
இவை தவிர்த்து கொழும்பு என்பது ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டை. தமிழ் முஸ்லிம் மக்கள் மிக செறிவாக வாழும் தேர்தல் மாவட்டம். இங்கு எல்லோரும் எதிர்பார்த்தபடி மைத்திரிபால 1,62,459 வாக்குகள் மேலதிகமாக பெற்றிருக்கிறார். கொழும்பையும் தனி சிங்கள மக்களின் பிரதேசமாக கொண்டு பொலநறுவை, மகாநுவர(கண்டி), கம்பஹா மாவட்டங்களுடன் சேர்த்தாலும் கூட மொத்தமாக மைத்திரிபாலவிற்கு சிங்கள மக்களால் கிடைத்த மேலதிக வாக்குகள் 2,97,862 மட்டுமே.
ஆனால் தமிழ் முஸ்லிம் பிரதேசங்களான யாழ்ப்பாணத்தில் 1,79,120, மட்டக்களப்பில் 1,67,791, வன்னியில் 1,07,040, நுவரெலியாவில் 1,27,266, திகாமடுல்லவில் (அம்பாறை) 1,12,333, திருகோணமலையில் 88,227 வாக்குகள் என மகிந்தவை விட மைத்திரிபால சிறிசேனவுக்கு மொத்தமாக 7,81,777 மேலதிக வாக்குகள் கிடைத்துள்ளன.
கொழும்பை தவிர்த்துவிட்டு பார்த்தால்-
சிங்கள பிரதேசங்கள் மகிந்தவிற்கு வழங்கிய மொத்த வாக்குகள் 31,40,971.
சிங்கள பிரதேசங்கள் மைத்திரிபாலவுக்கு வழங்கிய மொத்த வாக்குகள் 25,05,801.
அதாவது சிங்கள மக்கள் மகிந்த ராஜபக்ஷவை 6,35,170 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற வைத்துள்ளனர்.
இப்படி மகிந்தவின் வெற்றியை சிங்கள மக்கள் உறுதி செய்திருந்த நிலையில் தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து மகிந்த எனும் இனவாத சர்வாதிகாரியை வீழ்த்தியுள்ளனர். இதன் மூலம் எதிர்வரும் காலங்களில் தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குப்பலமானது முன்னெப்போதும் இல்லாத அளவில் இலங்கை அரசியலில் செல்வாக்கு செலுத்தப்போகிறது என்பதை தெளிவாக காண முடிகிறது.
இதேவேளை சுமார் 10 வருடங்களுக்கு முன்பே இப்படி மகிந்த தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்டிருக்கவேண்டியவர். ஆனால் விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் 2005 நவம்பர் 17 இல் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலை தமிழர்கள் வாக்களிக்காமல் புறக்கணிக்க வேண்டும் என்று முடிவெடுத்தமை மாபெரும் அழிவு சரித்திரத்தை உருவாக்கியது. வட மாகாண தமிழ் மக்கள் வாக்களிக்காத நிலையில் வெறும் 1,90,000 மேலதிக வாக்குகளால் மகிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றார். ரணில் விக்கிரமசிங்க எதிர்பாராத தோல்வியை தழுவினார்.
நல்லவேளையாக இம்முறை தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்காது தமது வாக்குகளின் மூலம் மகிந்த ராஜபக்சவிற்கு தண்டனை வழங்கி இருக்கிறார்கள். நவீன துட்டுகெமுனு அரசனாக தன்னை நிலை நிறுத்தி, தமிழர்களுக்கு எதிராக போரிட்டு வெற்றி பெற்ற அரசனாக மகாவம்சத்தில் இடம்பெற துடித்த இனவாதிக்கு தக்க பாடம் புகட்டி இருக்கிறார்கள். வெல்ல முடியாத போர் என்று சர்வதேசத்தாலும் வர்ணிக்கப்பட்ட போரை வென்று காட்டிய மாவீரனாக, சாகும் வரை ஜனாதிபதியாக அதிகாரத்துடன் வாழ ஆசைப்பட்ட மகிந்தவின் பேராசைக்கு தமிழ் முஸ்லிம் மக்கள் சாவு மணியடித்திருக்கிரார்கள்.
அசைக்க முடியாத மகிந்தவுக்கு சரியான போட்டியாளரை மகிந்தவின் மடியிலிருந்தே பிரித்தெடுத்து சாணக்கியமாக சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து சாதித்த சந்திரிகா குமாரதுங்கவும் இங்கு குறிப்பிடப்படவேண்டியவர்.
இலங்கை ஜனாதிபதியாக ஒருவர் இரு தடவைகளே பதவி வகிக்க முடியும் என்ற சட்டத்தை மீறி, அரசியலமைப்பை மாற்றி, நீதிமன்றத்தை விலைக்கு வாங்கி மூன்றாவது முறையாகவும் அதிகாரத்தை சுகிக்க பேராசைப்பட்ட மகிந்த தனது பதவிக்காலம் முடிய இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கும்போதே வீடு செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளது. செல்வாக்கு முற்றாக சரியும் முன்னரே ஜனாதிபதி தேர்தலை நடத்தி வென்றுவிட வேண்டும் என்ற அல்லக்கைகளின் ஆலோசனையை கேட்டு ஆஸ்தான ஜோதிடரின் ஆலோசனைப்படி தேர்தலை மகிந்த சந்தித்தார். மகிந்தவின் ஆஸ்தான ஜோதிடரான சுமணதாச அபேகுணவர்த்தன இன்னும் 20 வருடங்களுக்கு மகிந்தவை அதிகாரத்திலிருந்து அசைக்கமுடியாது என்று சாத்திரம் கூறியிருந்தார். திருப்பதிக்கு சென்று மகிந்த ஆசியும் வாங்கி இருந்தார். ஆனால் தமிழ் முஸ்லிம் மக்கள் மகிந்தவின் ஆட்டத்தை முடித்துவைத்துவிட்டனர்.
குற்றவாளி மகிந்தவை வீழ்த்துவது என்ற நோக்கம் நிறைவேறிவிட்டது. ஆனால் தமிழர்களுக்கான சம உரிமை என்ற நோக்கம் நிறைவேறும் காலம் அருகில் இருப்பதாக தெரியவில்லை.
என். ஜீவேந்திரன்.
நான் தோல்வியடையவில்லை – மகிந்த:
எம்மை அழித்த எதிரிக்கு நல்ல ஒரு செருப்படியை வாக்குகளால் கொடுத்துள்ளோம் என்ற நிறைவும் மகிழ்வும் எழுவதும் நியாயமானதே.
புலிகள் தேர்தல் புறக்கணிப்பு முடிவை எடுத்திருந்தாலும் வன்னியிலும் வாகைரையிலும் உள்ள மக்களுக்கு மட்டும் தேர்தலில் பங்கு கொள்ளாமல் இருந்திருக்க முடியும் . ஏனனில் அந்தப்பகுதிகள் மட்டுமே புலிகளின் ஆளுகையில் இருந்தது.
அப்படியானால் அரச கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்த தமிழ் மக்கள் ஏன் வாக்களிக்கவில்லை ?
1970 இல் ஜேவிபி என் கிற இயக்கம் சிறி மாவோ தலமையிலான அரசை வீழ்த்தி தமது இடது சாரி அரசை அமைப்பதற்காக அரச படைகளை எதிர்த்து போராடினார்கள் ,
சிறுபானமை மக்களயோ , தமிழ் மக்களையோ தாக்கவில்லை . தமிழ் பிரதேசங்களும் அமைதியாவே இருந்தது.
இன்னொறு நாட்டில்நடந்த விடயங்களை, வராலாறுகளை நன் கு தெரிந்து கொண்டு கட்டுரை எழுத வேண்டும் .
ஆனால் மைத்திரியை பொறுத்தவரை அவர் இனவாதிதான்..
2005 இல் தேர்தலை புறக்கணிக்கச் சொன்னதற்கான காரணங்களை தௌிவுபடுத்த முடியுமா…?
அதன் பின்னணி என்ன…?
தேர்தலை புறக்கணிக்க சொல்லவில்லை . ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளிலில் தேர்தல் சாவடிகளை அமைப்பதற்கும் தேர்தல் ஒழுங்குகளை செய்வதற்கும் இலங்கை அரச அதிகாரிகளையும் உத்தியோகஸ்தர்களையும் புலிகள் அனுமதிக்கவில்லை .புலிகள் பகுதியில் தேர்தலே நடைபெறவில்லை . பின்பு எங் கிருந்து வருகிறது தேர்தலை புறக்கனிக்க சொன்னார்கள் எனும் கருத்தும் , அத்ற்கான காரணங்கள் என்ன என் கிற கேள்வியும் ??
ஈழத் தமிழர்கள் எல்லாம் முட்டாள்கள், அவர்களுகு இந்தியாவிலிருந்த்து கட்டளை போடும் திருமுருகன் காந்த்தி என்ற தமிழீழ பிசினஸ் பிரியர் சொல்றார், தமிழர்களின் வாக்கு திர்மானிக்கும் சக்தி இல்லை என்று… என்னா கேவ்லம்யா?
இந்தியாவில் இருந்து ஈழ அரசியலைத் தவிர வேறு எதையும் பேசாதவர்கள் கடையை மூடிக் கொண்டால் ஈழ மக்கள் அவர்களுக்கு நன்றி உடையவர்களாக இருப்பார்கள். அங்கே இருந்து ராஜபக்சவுக்கு (அவர்களுக்கு ராஜபக்சே என்று சொன்னால் தான் விளங்கும்) தீனி போட்டார்கள். இப்ப ராஜபக்ச கடையை மூடி குடும்பங்கள் எல்லாம் போய்விட்டன. இனி தமிழர்களை நிம்மதியாக வாழ விடுங்கள். இலங்கைக்கு ஏற்ற வகையில் நாங்கள் போராட்டம் தேவைப்படும் போது முன்னெடுக்கிறோம். நீங்கள் கமாண்ட் பண்ண தேவையில்லை. வேண்டுமென்றால், ரஜனியா கமலா, ஜேவா, கருணாநிதியா என்று ஏதாவது ஒன்றை வைத்து பிழைத்துக்கொள்ளுங்கள். ஈழத் தமிழர்களை விட்டுவிடுங்கள்.
உண்மை!! இவா்களை யாா் கேட்டாா்கள், அவனவன் பிரபல்யமாகவேண்டும் என்றால் இருக்கவே இருக்கிறது ஒரு இலங்கை தமிழன் பிரச்சனை 30 வருடங்களாக இப்படி எத்தனை பேரை பாா்த்துவிட்டோம்.
இவர்கள் இபோதுதானே கருத்து கூறுகிறார்கள் . இத்தனை ஆண்டுகளாக இலங்கையில் தமிழ்கர் பிரச்சனை என்றால் என்ன வென்றே அறியாமல் இருந்தபோது சிங்கள தலைவர்களுடன் பேசி ஏன் பிரச்சனையை தீர்க்க முடியாமல் போனது . அப்போதெல்லாம் யார் தலையிட்டார்கள் ?
யார் மூக்கை நுழைத்தார்கள் ??
பிழைப்பு வாத அரசியல் பிரசங்கம் ! இது போன்ற கருத்துக்கள் இலங்கை வாள்தமிழ்மக்களின் யதார்த்த அரசியல் வாழ்விற்கு எந்த வகையிலும் பயன்படாது .
நாம் ஒரு கொடுங்கோலனை வீழ்த்தி விட்டோம் உண்மை தான். ஆனால் உண்மையான உணர்வாளர்களை கொச்சைப்படுத்துவது அழகல்ல. இதே காந்தி தான் டெல்லியில் ராஜீவ் கொலையாளிகள் சார்பாக வாதாடியவர். அவர்கள் யதார்த்தத்தை பேசுகிறார். நம் மக்களுக்கே தெரியும் சிங்கள அரசாங்கம் நமக்கு ஒன்றும் பெரிதாக செய்யப்போவதில்லை என்பது. தமிழ் மக்களின் நிலை எப்படி என்றால், “பிச்சை வேணாம் நாயை பிடி” என்பது தான். அதாவது தீர்வு வேண்டாம் இந்த அநியாயக்காரனை வீழ்த்தினால் அதுவே போதும் என்ற மனநிலையில் தான் வாக்களித்து வீழ்த்தியிருக்கிரார்கள். இனிமேல் தமிழனுக்கு எதாவது நல்லது நடந்தால் அது அற்புதங்களில் ஒன்றாகத் தான் இருக்கும்.
அந்த அழவிற்கு தமிழா்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல ஆனால் இலங்கைத்தமிழா்கள் தமது தலைவிதியை தாமே நிா்ணயிக்க விரும்புகிறாா்கள் அதற்கு ஆதரவாக எவா் வாினும் சந்தோசமாக வரவேற்போம் ஆனால் தமிழா் தலைவிதியை தம் கையில் எடுக்காது வரவேண்டும்.
சிங்கள அரசுகள் நமக்கு எதையும் தரப்போவதில்லை என்றுதான் நாங்களும் இவா்களை நம்பி உத்தரப்பிரதேசம் வரை சென்றோம் இப்போது புதிதாக சொல்வதற்கு எதுவும் இல்லை என்றே எண்ணுகிறோம், தற்சமயம் எப்படி அணுகமுடியுமோ அதைத்தான் செய்கிறாா்கள்.
எல்லாம் நமக்கு கிட்டி விட்டதாக எண்ணி நமக்காக குரல் கொடுப்பவர்களையும் அவர்களின் ஆதங்கத்தையும் புறந் தள்ளி பேசுவது ஏணியை எட்டி உதைப்பதற்கு சமன்.
இன்னுமா புரியவில்ல ? ஈழத்தமிழர்களுக்காக வெளியிலிருந்து குறிப்பாக தமிழகத்திலிருந்து குரல் கொடுப்பவர்களை புறம் சொல்லி ஒதுங்க வைப்பதற்குத்தான் இந்தப்பாடுபடுகிறார்கள் .
இவர்களின் பேரினவாதிகளின் கைப்பொம்மை . அதனால் அவர்களின் குராலாகவே ஒலிக்கிறார்கள் .
ஆனால் மேலோட்டமாக பார்த்தால் ஏதோ தமிழர்களுக்காக பேசுவது போல் இருக்கும்..
ஆகா! லாலா இனி புலிப்பாணியில் எல்லோரையும் துரோகிகள் என்று சொல்லப்போகின்றாா். ஈழத்தமிழா்களுக்காக அங்கு ஒருவரும் குரல் கொடுக்கவில்லை புலிகளிடம் வாங்கிய பணத்திற்காக புலி இயக்கத்திற்கு மட்டுமே குரல் கொடுத்தாா்கள் அத்தோடு இவா்களுக்கு பின்னால் தமிழக மக்கள் ஆயிரம்போ்கூட கிடையாது.
தமிழகத்திலிருந்து ஈழத்தமிழர்க்கு ஆதராவாக யாரும் குரல் கொடுத்து விடக்கூடாதென்பதுதான் சிங்கள பேரினவாதத்தின் அவா . உங்களைப்போன்றவர்களும் அதே குரலில்தான் பேசுகிறீர்கள் . அப்பன் குதிருக்குள் இல்லையென்பது போல் நீங்கள் தான் துரோகி பட்டத்தை உங்களுக்கு நீங்களே கொடுக்க முனைந்துள்ளிர்கள் .
தொப்பி பொருத்தமாக இருந்தால் தாரளமாக அணிந்து கொள்ளுங்கள்.
ஆம் குரல் கொடுப்பதை அதிகம் கேட்டதால்தான் முள்ளிவாய்க்கால் அவலம் நிகழ்ந்ததாக அறியப்படுகிறது
முள்ளிவாய்க்கால் அவலத்தை நிகழ்த்தியவர்களுக்கு வக்காலத்து வாங்குவதற்கு ஒரு சப்பை கட்டு கட்டியாயிற்று
இப்படித்தான் 83 ஆம் ஆண்டு ஈழத்திற்கு ஆதரவு தருவதாக இந்திய அரசு ஆயுதங்களையும் பயிற்சியையும் பணத்தையும் வழங்கி கடைசியில் அழித்தது. இப்போது நபர்களை வழங்கி அவர்கள் ஊடாக இனவெறியை வளர்க்கின்றது. நண்பருக்கு எல்லாத்தையும் விட தமிழ் என்பது மட்டும் தான் உயிர், தமிழ் ரத்தம் ஓடுகிறது என்றெல்லாம் வைத்துக்கொள்வோமே; தமிழ் நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கிழே உள்ளவர்களின் சராசரி வாழ்வுக்காலம் 45 வருசங்கள் மட்டுமே. அப்படிப் பார்த்தால் அங்கே தான் உண்மையான இனப்படுகொலை நடக்கிறது. அவர்கள் முதலில் அதற்காகப் போராடட்டும், நாங்கள் அவர்களுக்கும் அவர்கள் எங்களுக்கும் ஆதரவு வழங்கினால் அது போராட்டம். ஆடர் போடுவது பித்தலாட்டம். சரி, ஆடர் கூட அண்ணன் இதய சுத்தியோடு தான் போடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். முதலில் தமிழ் நாட்டில் பிச்சைக்காரர்களை விடக் கேவலமாக நடத்தப்படும் ஈழ அகதிகளுக்காக சாலைகளை மறியுங்கள், ஐ,நாவுக்குக் கொண்டு போய் பேசுங்கள், தேர்தலை புறக்கணியுங்கள், சாகும்வரை உண்ணாவிரதம் போடுங்கள்.. 30 வருசமா ரெண்டாவது தலை முறை அகதிகளையும் உரிமையற்ற கைதிகள் போல வைத்திருக்கும் இவர்கள் நடத்துவது வியாபாரமா போராட்டமா பதில் சொல்லுங்கள்..
ஆடி அடங்கும் வாழ்க்கையடா இது,ஆறடி நிலமே சொந்தமடா!
மனித நேயத்தை மறந்தவர்கள், மரணமுறச் செய்யப்பட்டுள்ளார்கள்.
கல்லை கல்லாக பார்ப்பதும் கல்லை கடவுளாகப் பார்ப்பதும் பார்ப்பவரின் கண்களை பொறுத்தது. ஈழ ஆதரவாளர்களை சிலர் முரணாகப் பார்ப்பதும் அவர் தம் மனத்தை பொறுத்ததே. மேலும் ஈழம் பேசியதால் அவர்கள் அடைந்த நன்மை என்று எதுவும் இல்லை. யாரும் மந்திரி சீட் கொடுத்து விடவும் இல்லை. வைகோ பலகாலமாக ஆசனம் பற்றி எண்ணாது ஈழத் தமிழர்களை பற்றி மட்டும் எண்ணியே போராடிக் கொண்டிருக்கிறார். சிலர் வெறுமனே சொல்லி விடலாம் புலிகளின் பணத்தை கொண்டு இவ்வாறு செய்கிறார்கள் என்று. ஆனால் சிந்தித்துப் பார்த்தால் இதில் எந்த வித நம்பகத் தன்மையும் இல்லை. முதலில் நமக்காக குரல் கொடுப்பவர்களை ஆதரிக்க கற்றுக் கொள்ள வேண்டும். இலங்கையில் டக்லஸ் கருணா செய்யாததை அவர்கள் செய்கிறார்கள். நம் நாட்டில் உள்ள களைகளையே அகற்ற முடியாமல் துன்புற்றோம். இதில் மற்றவர்களை குறை சொல்ல என்ன இருக்கிறது?
உண்மை . வைகோ திமுகவிலிருந்து வெளியேறியதும் ஆட்சியை பிடிப்பதற்காக மதிமுகவை ஆரம்பித்தார் . ஆனால் கடைசி வரை முடியாமல் போனதற்கு காரணம் அவரது ஈழ , புலி ஆதரவு கொள்கைதான் என்பது தமிழக , இந்திய அரசியலை நன் கு அறிந்தவர்களுக்கு புரியும்.
ஆட்சியை பிடிப்பதென்றால் தேர்தல் காலங்களில் கூட்டணி சரியாக மைய வேண்டும் . ஆனால் வைகோவின் வெளிப்படையான ஈழ ஆதரவு கொள்கையால் வெற்றி வாய்ப்புள்ள கட்சிகளூடன் கூட்டணி அமைக்க முடியாமலே போனது .
உதாரணம் மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ்..