வரலாற்றின் தேவைதான் பெரும அரசியல், சமூக, பெருளாதார, கலாசார நிறுவனங்களை தோற்றுவிக்கின்றது எனக் கொண்டால் மலையகத்தின் வரலாற்றுத் தேவைதான் மலையக ஆசிரியர் ஒன்றியத்தை தேற்றுவித்தது எனலாம். தொன்னூறுகளின் ஆரம்பத்தில் உழைக்கும் மக்கள் உலகலாவிய ரீதியில் அரசியலிலும் கலையிலும் தம் அடையாளங்களை இழந்து நின்ற நாளில், சமரசங்களை அடி நாதமாக கொண்டு முகிழ்ந்திருந்த அரசியல் சமூக பொருளாதார சூழலை ஆசிரியர்களும் சந்திக்க தவறவில்லை. இத்தகைய சிதைவுகளின் பின்னணியில் மனித ஆளுமைகளின் கம்பீரமும் பங்களிப்பும் காலத்திற்கு காலம் வேறுப்பட்டும் மாறுப்பட்டும் வந்துள்ளது. அதிகார பீடங்களை சேர்ந்தவர்களுக்கு சௌகாரியங்களை ஏற்படுத்தும் புனிதங்களிலிருந்து வழியும் சீழினை நக்கி பிழைப்போட்டும் கல்வியலாளர்கள் இங்கே குறைந்தபாடில்லை. இந்த பின்னணியில் ‘இனினொரு விதி செய்வோம் ‘ என்ற பாரதியின் நாகரிகத்தில்; கால் பதித்து – தம் கரங்களை உயர்த்தி கலகக் குரலை ஒலிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட ஆசிரியர்கள் ஒடுக்குமுறையைஇ ஆதிக்கத்தை எதிர்த்து அம்பலப்படுத்துகின்ற சமூக செயற்பாடுகளில் தம்மை அர்பணித்துக் கொண்டார்கள். இவர்கள் எண்ணிக்கையில் குறைவுற்றிருந்தாலும் சுதந்திர காற்றை சுவாசிக்க முற்பட்ட இவர்களின் தேற்றம்- இருப்பு உலகில் கம்பீரமாகவே இருந்துவந்துஇ இன்றும் தொடர்வதாக உள்ளது.
அந்தவகையில் போராடிக் கொண்டிருக்கும் உழைக்கும் மக்களின் உள்ளத்தை உணர்ந்து அவர்களின் துன்பத் துயரங்களை வௌ;வேறு வகைகளிலும் வடிவங்களிலும் எதிர்த்துக் குரல் எழுப்பிவந்துள்ள எதிர் மரபு ஒன்று உலகின் பல பாகங்களிலும் இருப்பதை போல மலையக பாரம்பரியத்திலும்;, அத்தகைய மரபு ஒன்று வளர்ந்து வந்துள்ளதை அவதானிக்கலாம். எதிர் – மரபு என்று நான் குறிப்பிடுவது மரபை எதிர்க்கும் ஒன்றையல்ல: மாறாக எதிர்த்து இயங்கும் மரபு ஒன்றினையேயாகும். இந்த போக்கினை வரிந்து நிற்கின்ற மலையக ஆசிரியர் ஒன்றியம் இரு நூற்றாண்டுக் காலமாக அடக்கியொடுக்கப்பட்டு அடிமை நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த மலையகத் தொழிலாளர்கள் அவ்வப்போது செய்த கலகங்கள், எழுச்சிகள் என்பவற்றுடன் இவ்வெதிர்புணர்வை இணைக்க முற்பட்டமை இவர்களின் தனித்துவமான பண்பாகும். ஆசிரியர்களின் போராட்டத்துடன் மட்டுமன்றி மலையக தொழிலாளர்கள் சார்ந்த சம்பள உயர்வு போராட்டமாயிருந்தாலும சரி, கல்வியற் கல்லூரி மாணவர்களின் போராட்டமாயிருந்தாலும் சரி அவற்றிலெல்லாம் இவ்வியக்கத்தினரின் பங்குபற்றல் இதனை சிறப்பாகவே எடுத்துக் காட்டுகின்றது. இப் பண்பை இலங்கையில் தோற்றம் பெற்ற வேறேந்த அசிரியர் இயங்க்கங்களிலும் காண முடியாமை துரதிஸ்டமானதொன்றே. அவ்வியக்கங்கள் தமது செயற்பாடுளை எத்தனங்களை ஆசிரியர்களின் பிரச்சனைகளுடனே மட்டுப்படுத்திக் கொண்டன.
அத்தகைய மலையக ஆசிரியர் இயக்கத்தின் பத்திரிக்கையாகவே ‘ஆசிரியன’; வெளி வந்துள்ளது. அதன் தாரக மந்திரம் இவ்வாறு பிவாகம் கொண்டிருக்கின்றது:
‘ஒரு பின்னடைந்த சமூகத்தின் கண்களை சிருஷ்டிக்கும் பிரமாக்களாக தோற்றம் கொண்டு பிரகாசிக்ககூடிய ஓர் ஆசிரிய சமூகம் இன்று தனது கண்களையும் சிருஷ்டி தன்மையையும் காத்துக் கொள்ளவே தன் கரங்களில் உள்ள வெண்கட்டிகளை கணநேரம் கீழே வைத்து கைகளை உயர்த்தவும் கலகக் குரலை ஒழிக்கவும் நிர்பந்திக்கப்பட்;ட சூழலே மலையகத்தில் இன்று முகம் கொள்ளக் கிடக்கின்றது. இந்த தளம், இவ்வுறுதி, இக்கம்பீரம் இதில் இருந்தே மலையக ஆசிரியரின் இன்றைய புறப்பாடு கிளம்பியாக வேண்டியுள்ளது.’
கலகக் குரலினூடாக இங்கு வெளிப்படும் மனிதாபிமானம் என்பது மனிதனுக்கு மதிப்பு தரும் மனிதாபிமானம். உழைக்கும் வர்க்கத்தை நேசிக்கும் மனிதாபிமானம்: அது முதலாளித்துவ மனிதாபிமானத்திற்கு எதிரானது. இதனால் தான் அந்த மனிதாபிமானத்தில் மனிதரது சுதந்திரம், நல்வாழ்வு, இன்பம், சர்வாம்ச வளர்ச்சி என்பன அதன் அடிநாதமாக விளங்குகின்றது.
இவ்விதழினுல் பார்வையை செலுத்துகின்ற போது, ஓவ்வொரு காலக்கட்டத்திலும் ஆசிரியர்கள் எதிர்நோக்கியுள்ள அரசியல்வாதிகளதும் அதிகார தரப்பினதும் அடக்குமுறைகள், கூடவே அதனை எதிர்த்து அவர்கள் செய்த ஆர்பாட்டங்கள் என்பனவற்றையும் இவ்விதழ் கவனத்தில் கௌ;ளத்தவறவில்லை. ‘ஒரே தினத்தில் ஒரே பாடசாலையில் 18 ஆசிரிய்கள் இடமாற்றம்: கல்விப் பணிப்பாளர் நீதிமன்றில்…,’ ‘ஆசிரியர் இடமாற்ற சபை’, ‘குற்றவாளி கூண்டில் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர்’;, ‘மலையக அரசியலும் ஆசிரியர்களும்’, ‘வழக்குத் தொடர்ந்தார் அதிபர்’;, ‘தாபன கோவைக்கு முரணான இடமாற்றம்’ முதலிய கட்டுரைகளை குறிப்பிடலாம். இவற்றில் திரு. வ. செல்வராஜாவின் ‘மலையக அரசியலும் ஆசிரியர்களும்’ என்ற கட்டுரை முக்கியமாக சுட்டிக்காட்டதக்கது. மலையக சமூகம் தொடர்பான வெளிவந்த ஆய்வுகளில் காணக்கிட்டும் நேர்மையை கல்வியல் ஆய்வுகளில் காணமுடியாமை துரதிஸ்டவசமானதொன்றே. முதலாளித்துவ ஏகாதிபத்திய ஆசிர்வாதத்துடன் இவ் அறிவ ஜீவிகள் தமது அறிவையும் ஆன்மாவையும் உலகவங்கியிடம் அடமானம் வைத்து விட்டார்கள். எனவே அவர்களின் பார்வையில் மலையகம் என்பது உலக வங்கியால் நடாத்தப்படுகின்ற செயலமர்வுகளினால் சமூமாற்றத்தை(மன்னிக்கவும் அவர்களின் செற்களில் சீர்த்தவேண்டியுள்ளது) காணவேண்டும் என்பதாக அமைந்துள்ளது. இவ்வாறு சிதைந்த சிதைவுறும் மனித நாகரிகத்தின் பின்னணியில் காலம் காலமாக மலையக அரசியலில் ஆசிரியரின் பங்களிப்பு குறித்தும், அவை எத்தகைய தளங்களில் இடம்பெற்று வந்துள்ளது என்பது பற்றியும,; இனிசெய்யக் கூடியது பற்றியும் விமர்சன அடிப்படையில் ஒரு கருத்தாடலை முன்வைக்கின்றது இக்கட்டுரை.கூடவே மலையக ஆசிரியர்கள் தங்களுக்கான அரசியலை தாபன ரீதியாக முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் இது உணர்த்துகின்றது. மலையக கல்வி தெடர்பில் வெளிவரக் கூடிய ஆய்வுகள் எத்தகைய தளம் நோக்கி செல்ல வேண்டும் என்பதற்காக அடித்தளத்கை இக்கட்டுரை இடுகின்றது எனக் கூறின் தவறாகாது.
இருப்பினும் இக்கட்டுரையில் காணக்கிட்டும் சில கோட்பாட்டு தெளிவின்னைக் குறித்தும் இவ்விடத்தில் சுட்டி காட்ட வேண்டியள்ளது. இலங்கை இடதுசாரி இயக்க வரலாற்றில் தொழிலாளி வர்க்க அரசியலை முன்னெடுத்த தோழர் சண்முகதாசன் வலதுசாரி சந்தர்ப்பவாத அரசியலுக்கு எதிராகவும், நவீன திரிவுவாதத்திற்கு எதிராகவும் காத்திரமானதோர் தத்துவ போராட்டத்தை முன்னெடுத்தவர். காலப்போக்கில் ஏற்பட்ட தோழர் சண்னின் அகச்சார்பான தவறுகளும் அவற்றின் விளைவுகளும் இடதுசாரி இயக்கத்தை பல பின்னடைவகளுக்கு இட்டு சென்றது என்ற போதினும், இந்தியாவில் தோன்றிய நக்சல்பாரி இயக்கம் பற்றியும் அதன் தாக்கம் காரணமாக இலங்கையில் தோன்றிய கீழைகாற்று இயக்கம் தொடர்பாகவும் மிகத் தெளிவான தீர்க்கமான விமர்சனத்தை அவர் முன் வைத்திருக்கின்றார். மேலும் மலையத்தின் அரசியல் எழுச்சியில் கல்வி வளர்ச்சியில் இடதுசாரி இயக்கமான செங்கொடி சங்கத்தினது பங்களிப்பு முக்கியமானது. இவ்வியக்கத்தில் அங்கம் வகித்த பல ஆசிரியர்கள் மலையக சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்காகவும் அரசியல் சித்தாந்த அமைப்பாக்க செயற்பாட்டிக்காகவும் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை வழங்கியுள்ளனர். அவ்வாறு செயற்பட்ட சில ஆசிரியர்கள் பின்னாட்களில் அவர்களது இடதுசாரி இயக்க பண்புகள் காணாமல் போய், அதி தீவிர இடதுசாரி திரிபோடு தங்களுக்கும் நட்டத்தை ஏற்படுத்தியதுடன் சமுதாயத்திற்கும் நட்டத்தை ஏற்படுத்தும் எதிர் புரட்சியாளர்களாக மாறிய கதையை வரலாற்றை இக்கட்டுரை ஆசிரியர் காணத் தவறிவிடுகின்றார்.
மேலும், இவ்விதழின் ஆசிரிய தலையங்கம் ஆசிரியர்களதும் மற்றும் ஜனநாயக முற்போக்கு சக்திகளினதும் கலகக் குரலை உயர்த்திக் காட்டுகின்றது. ஆனால் இப்பத்திரிக்கையின் பல செய்திகள் கல்வி அதிகாரிகளிடமிருந்தும் அரசியல் வாதிகளிடமிருந்தும் ஆசிரியர்களை காப்பாற்றி அப்புகாத்துகளிடமும்(வக்கில்கள்) நீதிபதிகளிடத்திலும் சரணடைய வைப்பதாக அமைந்திருக்கின்றது. தொழிற்சங்கம் என்ற வகையில் மனித உரிமைகள், வழக்கு என்பன தவிர்க்க முடியாத ஒன்றுதான் தான். ஆனால் அவ்வம்சம் ஒரு புள்ளியை தாண்டுகின்ற போது அபத்தமானதாக அமையும் என்பதை தேழமையுடன் சுட்டிக்காட்டினால் அதனை சுய விமர்சன அடிப்படையில் ஏற்கும் முதிர்ந்த பக்குவம் இவ்வியக்கத்தினருக்கு இருக்கும் என நம்பகின்றேன்.
இவ்விதழில் கையிலைநாதனின் ‘சிங்கமலை’ என்ற சிறுகதையும் இடம்பெறுகின்றது. மனித முன்னேற்றத்திற்காக ஆசிரியராக பணிப்புரிந்த கிறித்தவ பாதிரியார் ஒருவரின் சமூக பங்களிப்பை எடுத்துக் கூறுவதாக இக்கதை அமைந்துள்ளது. மார்க்சியத்தை வரட்டு தத்துவமாக நோக்கி முற்போக்குவாதத்தையும் மார்க்சியத்தையும் இன்றைய யதார்த்தச் சூழலுடன் பொருத்திப் பார்க்காது வெறுமே மூல நூலை ஒப்புவிப்போரும், பாராயணம் செய்வோரும் கருதுகோள்களை-முடிவுகளை மனப்பாடம் செய்து அவ்வப்போதுப் பல்வேறு வடிவங்களில் தொடர்கிறார்கள் என்ற உண்மையை மேற்கோள் காட்டி விட்டாலே எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த்துவிடலாம் என முடங்கிக் கொள்வோர் இத்தகைய யதார்த்த உண்மைகனை காணத்தவறிவிடுவர். மார்க்சியவாதி மதத்தை சமுதாய சூழலிலும் வரலாற்றுச் சூழலிலும் வைத்து நோக்கி சமூக மாற்றப் போராட்டத்தில் தமக்கு சாதமான உள்ளடக்க கூறுகளை பெற்றுக் கொள்வார். அதிகார தரப்பினரையும் மதப்பிடத்தலைமைகளையும் எதிர்த்து மக்களின் போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்ட பாதிரிமார், விடுதலை இறையியல் என்ற பேரில் கிறிஸ்த்தவ மதத்தில் உள்ள போர்க்குணமிக்க அம்சங்களை சமூக புரட்சியுடன் இணைத்துப் பார்த்த பாதிரிகள், அல்பேனிய விடுதலை போராட்டத்தில் கம்யூனிட் இயக்கத்தில் பங்பற்றி பர்தா அணிந்த பெண்கள், இத்தகைய நிகழ்வுகள் எதனைக் காட்டுகின்றன? மத பற்றுக் கொண்ட ஒருவராலும் சமூக பங்களிப்பினை வழங்க முடியும் என்பதையே எடுத்துக்காட்டுகின்றது. இவ்விடத்தை அழகுற எடுத்துக் காட்டுவதாக இக் கதை அமைந்துள்ளது.
கையிலைநாதன் வடிவப் பரிசோதனையில் அதிகம் அக்கறை காட்டுபவரல்ல. பாரம்பரியமான சிறுகதை வடிவத்தைக் கையாண்டு தன் கண் எதிரே உறுத்திக் கொண்டிருக்கும் வாழ்க்கையின் குரூரங்களையும் அவலங்களையும் மனசை பிழியும் துன்பக் காட்சிகளையும் படைப்பாக்கியிருக்கின்றார். இருப்பினும் அவரது ஏனைய கதைகளும் ஓப்பிடும் போது இக்கதை உள்ளடக்கத்திற்கு ஏற்ற வடிவத்தினை பெற வில்லை என்றே கூற வேண்டும். தான் எடுத்துக் கொண்ட விடயத்தினை வாசகனின் உணர்வில் உணர்த்தி வைப்பதற்கு பதிலாக அறித்து வைப்பதாகவே கதை அமைந்துள்ளது. இவ்வம்சம் இக்கதையில் மிக முக்கியமான குறைப்பாடாக தெரிகின்றது. ஆசிரியர் ஒருவரின் ஆளுமையை மக்கச் சார்பு பண்பை அழகுற சித்திரித்துக் காட்டுவதாக யோ. பேனடிக் பாலனின் ‘லூக்காஸ் மாஸ்டர்’ என்ற கதை அமைந்துள்ளது.
இவ்விடத்தில் பிறிதொரு விடயம் பற்றியும் சற்று அழுத்திக் கூற வேண்டியுள்ளது. அதாவது இலக்கியத்தில் உள்ளடக்கம் எவ்வாறு கால, தேச வர்த்தமாணங்களுக்குக் கட்டுப்பட்டும் அதனை மீறியும் இயங்குகின்றதோ அவ்வாறே அதன் வடிவமும் அத்தகைய தாக்கங்களுக்கு உட்பட்டே இயங்குகின்றது என்பதை இலக்கிய வரலாறு எண்பித்திருக்கின்றது. உள்ளடக்க ரீதியாக மட்டுமன்று வாசிக்கின்ற முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. முற்போக்கு இலக்கியத்திற்கும் அழகியல் பிரச்சனைகள் உண்டு. காலத்திற்கு ஏற்ற வடிவத்தை மக்களின் நலனிலிருந்து அந்நியமுறால் படைப்பாக்கித் தர வேண்டியது முற்போக்கு- மார்க்சியப் படைப்பாளியின் கடமையாகும். இன்றைய சிறுகதை வளர்ச்சியில் முக்கிய கணிப்பைப் பெற்றுள்ள ஆதவன் தீட்சண்யாவின் சிறுகதைகள் இந்த சீரிய பணியினை செய்திருக்கின்றது. இதற்கு ‘கதையின் தலைப்பு கடைசியாக இருக்கக் கூடும்’ என்ற கதை தக்க எடுத்துக்காட்டாகும். இந்திய அரசியல் பின்புலத்தில் நின்றுக் கொண்டு மெஜிக்கல் ரியலிச பாணியில் எழுதப்பட்ட கதையாகும். இந்திய சமூகத்தில் சுத்திகரிப்புத் தொழிலாளர்களின் வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுவதாக இக்கதை அமைந்துள்ளது. இக்கதை சொல்லும் பாணியில் பவனி வருகின்ற பாத்திரங்கள் யாவும் இன்றைய விடுதலையை நாடும் அதே நிலைக்குரிய பாத்திரங்களை மறுவாசிப்புச் செய்ய ஏதுவாக உள்ள புனைக்கதை ஏற்பும் சமூகமாற்றத்திற்கான உந்தலும் முற்போக்கு இலக்கியத்திற்கு மாத்திரமன்று முழுத் தமிழ் இலக்கியத்திற்கும் வழங்கிய மகத்தான பங்களிப்பாக அமைந்துள்ளது. ‘சிங்கமலை’ என்ற சிறுகதை வாசிக்கின்ற போது அக்கதையாசிரியர் வடிவ அமைப்பில்- கதை சொல்லுகின்ற முறையில் இத்தகைய உத்திகளை கையாண்டிருக்கலாமே என்று எனக்குத் தோன்றுவதுண்டு. எனினும் அவ்வகையான புதிய திசை வழியை கைக்கொள்ளாது பராம்பரிய முறையில் தமது கதைகளைப் படைத்திருப்பது அவரது கதை சொல்லும் பாணியின் ஓர் அம்சம் என்று நாம் அமைதி காணலாம்.
இவ்விதழில் ‘தட்டுப்படங்கு காரனும் கூட்டு ஒப்பந்தமம் என்ற கவிதை குறிப்பிட்டு சொல்லக் கூடியவையாக அமைந்துள்ளது. கூட்டு ஒப்பந்தத்தின் பின் மலைய தொழிலாளர்கள்- பெண்கள் மீதான உழைப்புச் சுரண்டலையும் துன்பம் தேய்ந்த வாழ்க்கையையும் எடுத்துக்காட்டுகின்றது. இவ்விடயத்தை அறிவிப்பதாக அல்லாமல் உணர்த்தி வைப்பதாக அமைந்துள்ளமை இக்கவிதையின் பலமான அம்சமாகும். இக்கவிதை சோகத்தை இசைத்தாலும் அவைக் கூட சமூக அசைவியக்கத்தை முன்னெடுப்பதாகவே அமைந்துள்ளது. அவ்வாறே ‘நீ உதிரும் தருணமல்ல..!’, ‘நம்பிக்கை விதைத்த நண்பனே’ ஆகிய கவிதைகள் மறைந்த ஆசிரியர் ஜீவராஜன்; பற்றியது. மலையகத்தில் கல்விக்கான- கணித பாடத்திற்கான வாய்ப்புகள் குறைவாக காணப்பட்ட சந்தர்ப்பத்தில் தன்னை அர்பனித்துக் கொண்டு செயற்பட்ட ஆசிரியர்களில் ஜீவராஜன் முக்கியமானவர். அவரால் உருவாக்கப்பட்ட மாணவர்கள் பலர் பொறியியலாளர்களாக மற்றும் கணிததுறை நிபுணர்களாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிறப்புடன் விளங்குகின்றார்கள். சமூகத்தின் ஒட்டுமொத்தமான வளர்ச்சியில் இப்பெயர்ச்சி முக்கியமான ஒன்றாகும். ஜீவராஜன் பற்றி சிந்திக்கின்ற போது தவிர்க்க முடியாத வகையில் மறைந்த கணித ஆசிரியர் கே. சிவலிங்கம் அவர்களும் நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாதது. மலையத்தில் பாரியளவிலான கணித அறிவு வளர்ச்சிக்கு வித்திட்டவர் அமரர் கே. சிவலிங்கம்;. இவருடைய மாணவர்களில் பெரும்பாலானோர் கணித ஆசிரியர்களாக வந்ததுடன் மலையக சமூகத்தின் முன்னேற்றத்திற்கு தமது காத்திரமான பங்களிப்பினை வழங்க கூடியவர்களாக செற்பட்டமை- செயற்படுகின்றமை குறித்துக் காட்ட வேண்டிய பங்களிப்பாகும்.
இறுதியாக ஒன்றை கூறி வைத்தல் அவசியமான ஒன்றாகும். மனித சமூகத்தின் வளர்ச்சியை தூண்டும் சக்தியாக அதிகாரத்திற்கு எதிராக போராடும் வர்க்கங்கள், வர்க்கப் போராட்டத்தின் மூலமாகவே சமூகத்தை மாற்றியமைக்க முடியும். தமது அடிமை முறையிலிருந்து விடுப்பட்டு பொருளாதார ரீதியாகவும் ஆத்மார்த்த ரீதியாகவும் சுதந்திர பிரஜையாக வாழ முடியும். இந்த விடுதலையை அடைவதற்கு பொது மக்கள் தங்கள் நலன்சார்ந்த கட்சியை அமைத்துக் கொள்ள வேண்டும். புரட்சிகர சிந்தாந்தம் இன்றி புரட்சிகர இயக்கம் இருக்க முடியாது. அவ்வகையில் மிகவும் முன்னேறிய சித்தாந்தத்தையும் அது பெற்றிருக்க வேண்டும்.
இத்தகையதோர் மானுட அணியில் கால் பதித்து புதியதோர் சமுதாயத்தை நோக்கி நகர்வதே இன்று ஆசிரியர்கள் சார்ந்து எழுகின்ற இயக்கங்களின் தேவையாகும். இவ்வாறானதோர் சூழலில், இன்னொரு விடியலுக்காய் மனித சமூகத்தின் சிகரத்தை எட்டிப் பிடிக்க கடின உழைப்பை மேற்கொள்ளும்; வரிசையில் மலையக ஆசிரியர் ஒன்றியத்தின் வெளியீடான ஆசிரியன் பத்திரிக்கையும் தன் வரவை பதிவ செய்துக் கொள்ளும் என நம்புகின்றேன். தொடர்ந்;து வெளிவர வாழ்த்துக்கள்.
Great illustration.
பாரதி தீட்சண்யா பரிந்துரைகளை மிகமிக நாசுக்காக வீசியிருக்கின்றார்.சம்பந்தப்பட்டோர் புரிந்துகொண்டால் சரி அரசியல் வாதிகளின் வலைகளிலிருந்து தப்பி வக்கீல்களின் வலைகளில் வீழாதிருந்தால் நலம்.ஏனென்றால் மறுபடியும் அரசியல்வாதிகளாவது இந்த வக்கீல்கள்தான். ஒரு பின்னடைந்த சமூகத்தின் கண்களைச் சிருஸ்டிப்பீர்களோ அல்லது சீராக்குவீர்களோ யானறியேன். ஆனால் காலம்காலமாக பெருமெடுப்போடு மலையகத்தில் எழுந்த கலகக்குரல்கள் யாவும் ஏதேச்சாதிகார ஆட்சியாளர்களின் மூடுமந்திரங்களில் காணாமற்போனதுதான் வரலாறாய் விரிகிறது.நாம்நம்பி வந்த மரபுகள் நமக்கே குழிதோண்டுமாயின் அத்தகு மரபுகளை மீறுவதும் புரட்சியே.ஆசிரியன் சமூகத்தைக் கட்டுகிற அச்சாணி. வாழ்த்துக்கள்
தங்களது கருத்துக்களுக்கு மிக்க நன்றி. தொடந்தும் வாசகர்களின் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.
மலையகத்தில் மிக முக்கியமான சீர்குழைப்பு வாதத்தை ஏற்புடுத்தி வருகின்ற நொந்தலாலாவையும் அவரகள் சார்ந்த இயக்கத்தையுமா இவ்வாறு புகழ்கின்றீர்கள். அவர்கள் எப்போதுமே சமூக சக்திககை தாக்கியே வந்துள்ளனர். அதனூடாக தங்களுக்கான புகழை நாடி நிற்கின்ற அற்பர்கள். ஜோதிகுமார் என்பவருடைய புகழே இங்கு முக்கியம். இதை எதிர்த்து மக்கள் சார்ந்த அரசியல் இயக்கங்கள் எப்போதும் கவலைத் தெரிவித்திருக்கின்றது. தீர்த்தகரை ஆசிரியர் என். ஜி. ஓக்களில் சரணடைந்து அறிக்கை எழுதுகின்றார் என்றால் ஜோதிகுமார் ”நொந்ந்தலாலா” சகல விதமான ஜனநாயக சக்திகளையும் தாக்கி அதனூடாக அங்காரத்திற்கு பிச்சை எடுக்கின்றார். இவர் ஆசிரியர் தொழிறசங்கத்தைதை பயன் படுத்தி பிழைப்பு நடத்துகின்றார் என்பதை ஆசிரியர்களே உணர்ந்து இப்போது இவருக்கு எதிரான குரல் எழுப்புகின்றனர். இந்த சூழலில் இதுப் பற்றி குறிப்புகள் ஏதுமின்றி இக் கட்டுரை ஆககியிருப்பது தவறான ஒன்றாகும். இது குறித்து பாரதி தீட்சண்யா அறிந்தும் அதனை மறைபது அபத்தமாகும்.