உலகெங்கிலும் எழுதுள்ள பொருளாதார நெருக்கடியை ஏகாதிபத்திய நாடுகள் வெறி கொண்ட வர்த்தகம் மூலம் சீர்படுத்தவும், ஏழை நாட்களைச் சுரண்டி தங்களை மீளமைத்துக் கொள்வதிலுமே உறுதியாக உள்ளனர். மேலும் ஆயுத வர்த்தகத்தை மிக அதிகமாக விரிவு படுத்த வேண்டிய தேவையும் அமெரிக்காவுக்கு எழுதுள்ள நிலையில் உலகெங்கும் தன் ஆயுத வர்த்தகத்தை விரிவு படுத்துவது போல ஆசியாவிலும் அத்தகைய மிகப்பெரிய அளவிலான யுத்தம் ஒன்றை உருவாக்கி ஆயுத வணிகத்தை ஊக்குவிக்க நினைக்கிறது அமெரிக்கா. தென்கொரியாவுடன் சேர்ந்து கொண்டு வடகொரியாவுக்கு எதிரான மிகப்பெரிய அளவிலான இராணுவப் பயிற்சியை நடத்தி வருகிறது அமெரிக்கா. இதனால் வட கொரியாவில் பதட்டம் நிலவுகிறது. இந்நிலையில் வட கொரியா மீதான பொருளாதாரத் தடையை தீவிரமாக அமல்படுத்த உள்ள நிலையில் அதற்கு சீனா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வட கொரியா அணுஆயுத தயாரிப்பில் ஈடுபடக்கூடாது என வற்புறுத்தி வந்தபோதிலும் அந்த நாடு அதை கைவிடவில்லை. இந்நிலையில் தென் கொரியாவுக்குச் சொந்தமான போர்க்கப்பல் ஒன்றை வடகொரியா தாக்கி அழித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா வடகொரியா மீது புதிதாக பொருளாதார தடையை அமல்படுத்த நடவடிக்க எடுத்துவருகிறது. இந்த தடையை அமெரிக்கா மட்டும் அமல்படுத்தினால்போதாது வடகொரியாவுடன் உறவு வைத்துள்ள பிற நாடுகளும் அதை தனிமைப்படுத்தவேண்டும் என அமெரிக்கா எதிர்பார்ப்பதாக வாஷிங்டனைச் சேர்ந்த தூதரக வட்டாரங்கள் தெரிவித்த தகவலை சுட்டிக்காட்டி சியோல் டெய்லி பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது. வடகொரியாவின் அணு ஆயுதப் பெருக்க நடவடிக்கைகளில் தொடர்புடைய அமைப்புகள் மற்றும் வங்கிகள், நிறுவனங்களை அணுகி பொருளாதாரத்தடை அமல்படுத்த உள்ளதை எடுத்துச் சொல்லி வடகொரியாவுக்கு எதிராக திருப்புவது அமெரிக்காவின் யோசனை என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதனிடையே, வடகொரியாவுக்கு எதிரான பொருளாதாரத்தடை தொடர்பான வரைவு உத்தரவு தயாராகிவருகிறது. வழக்கறிஞர்கள் நிலையில் இதுபற்றி விவாதம் நடத்தப்பட்டுவருகிறது என்று தெரியவருகிறது.