பிரித்தானியாவில் பயங்கரவாதத் தடைச்சட்டம் 2000 ஆம் ஆண்டு அட்டவணை 7 இன் அடிப்படையில் பயணி ஒருவரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதி என்ற சந்தேகத்தின் பெயரில் விசாரணைக்கு உட்படுத்தலாம். அவ்வாறு சந்தேகத்தின் பெயரில் விசாணை செய்யப்படுபவர்கள் 9 மணி நேரம் வெளியுலகத் தொடர்பின்றித் தடுத்துவைக்கப்படலாம். 2012 ஆம் ஆண்டிற்கும் 2013 ஆம் ஆண்டிற்கும் இடையே இவ்வாறு விசாரணை செய்யப்பட்டவர்க்களில் அதிகமானவர்கள் ஆசிய நாட்டவர்களே என்ற தகவல் Equality and Human Rights Commission (EHRC) என்ற அமைப்பு மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் வெளியாகியுள்ளது. விசாரிக்கப்பட்ட ஆசியர்களின் தொகை ஏனையோரை விட 11.3 அதிகமாகும் எனப் புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. குறிப்பாக விமானப் பயணங்களின் போது விசாரணைக்கு உட்படுத்தப்படுபவர்களே அதிகமானவர்கள் எனத் தெரியவருகிறது.
நிறவாதம் என்பது பிரித்தானிய அரசு தரப்பிலிருந்தே நிறுவனமயப்படுத்தப்படும் அதே வேளை பல்தேசியப் பெரு நிறுவனங்கள் அச்சத்தில் வாழும் மக்களைச் சுரண்டுவதற்கு அதனைப் பயன்படுத்திக்கொள்கின்றன.
குறிப்பாக பிரித்தானியாவில் வாழும் ஆசிய நாட்டவர்கள் மீதான் நிறவெறி நடவடிக்கைகள் முன்னெப்போதும் இல்லாதவாறு அதிகரித்து வருகின்றன.