பர்மாவின் ஜனநாயக ஆதரவுத் தலைவி ஆங் சாங் சூச்சி தனது வீட்டுக்காவல் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை பர்மிய உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
நிராகரிப்புக்கான காரணத்தை நீதிமன்றம் வெளியிடவில்லையென்றும் பர்மாவின் தலைமை நீதிபதிக்கு தாம் விசேட மேன்முறையீட்டை சமர்ப்பிக்க இருப்பதாகவும் ஆங்சாங் சூச்சியின் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
1990ம் ஆண்டில் பர்மாவில் கடைசியாக நடத்தப்பட்ட பொதுத் தேர்தலில் ஆங்சாங் சூச்சியின் கட்சி அமோக வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து கடந்த 20 வருடங்களில் பெரும்பகுதிக்காலத்தை ஆங்சாங் சூச்சி, இராணுவ ஆட்சியின் தடுப்புக்காவலில் கழித்து வருகின்றார்.
அப்போது தேர்தல் முடிவுளை அலட்சியம் செய்த இராணுவ ஆட்சியாளர்கள், இவ்வாண்டின் பிற்பகுதியில் புதிய தேர்தல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். ஆனால் இந்தத் தேர்தலில் ஆங்சாங் சூச்சி போட்டியிடக்கூடாது என்றும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
BBC.
ஆயுதத்தை மௌனித்து சனநாயகம்,மக்கள் ஆதரவுப் போராட்டம்,நியாயம் தீர்க்க மற்றைய நாடுகளிடம் அல்லது ஐ.நா சபையிடம் முறையிடலாம் என்ற மாற்றுக் கருத்தாளர்களுக்கு இந்தச் செய்தி நல்ல மண்டையடி.