நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலை ஹிவஸல்லம் அவர்களது பிறந்த தினத்தைக் குறிக்கும் வகையில் ‘மர்கஸூஸ் ஸலாமா’ அமைப்பு ஏற்பாடு செய்த விசேட கருத்தரங்கும் சொற்பொழிவும் ஞாயிற்றுக் கிழமை கொழும்பில் நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் விசேட அதிதியாக இந்தியாவின் பிரபல எழுத்தாளரும் விமர்சகருமான பேராசிரியர் அ. மார்க்ஸ் கலந்து கொண்டார்.
அத்தோடு ஞாயிற்றுக்கிழமை சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்கா நிலையத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பேராசிரியர் அ. மார்க்ஸ் ‘முஹம்மது நபி – சமூக அரசியல் ஆளுமை’ எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடனான போரில் இலங்கை அரசு வெற்றிகொண்ட பின் தமிழகத்து எழுத்தாளர்கள் இலங்கை அரச அமைப்புக்களின் அனுசரனையுடன் இலங்கைக்கு வருகை தருவது தற்போது அதிகரித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன் டக்கிளஸ் தேவானந்தாவின் ஆலோசகரும் இலங்கை ஜனநாயக ஒன்றியத்தின் (எஸ்.எல்.டி.எப்) முக்கிய பிரமுகருமான ரங்கன் தேவராஜனின் பயண ஏற்பாட்டில் தமிழ் நாட்டு எழுத்தாளர் ஆதவன் தீட்சனயா இலங்கை வந்து சென்றது குறிப்படத்தக்கது.
அ.மார்க்ஸின் பயணம் இலங்கை அராஜக அரசினை ஆதரிப்பதாகவே வெளிப்படுகின்றது.
“காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளவேண்டும்” என்பதற்கு நல்ல உதாரணம் அ.மார்க்ஸ். ரசியா உடைவுக்குப் பின் தன் மாக்ஸ்சிய வியாபாரம் சரிவராது தெரிந்து பின் நவீனத்துவ வியாபாரக் கடையை திறந்தார். அதில் நல்ல வசூல். பிழைக்கத் தெரிந்த எழுத்து வியாபாரி அ.மார்க்ஸ். இப்போது நபிகள் நாயகம் என்றும் காந்தியம் என்றும் இரண்டு கடைகளை திறந்துள்ளார். இங்கும் நல்ல வியாபாரம் நல்ல வசூல். கடல் கடந்து தன் வியாபாரத்தை விஸ்தரித்துள்ளார். புலிகள் தமிழ் மக்களை அறிவு சீவிகளை மாற்றுக் கருத்தாளர்களை கொன்றொழித்தபோதெல்லாம் கள்ள மெளனம் கொண்டிருந்த இந்த அ.மார்க்ஸ்க்கு புலிகளின் முள்ளிவாய்க்கால் தோல்விக்குப் பின்புதான் புலிகளின் அராஐகம் கண்ணுக்கு தெரிந்திருக்கிறது. அதற்கு முதல் புலிகளினுடைய கொலைகளை எங்கையாவது இவர் கண்டித்துள்ளாரா? துணிவிருந்தால் அ.மார்க்ஸ்க்சும் இவரின் அடிவருடி தொண்டர்களும் அதை வெளியிட்டு இக் கேள்விக்கு பதிலை தரலாம். அ.மார்க்ஸ்சுக்கும் புலிகளின் தமிழக பினானமிகளுக்கும் ஒரு காலகட்டத்தில் இருந்த நெருக்கமான உறவுகளை அறிய இங்குலாப் கலியாணி போன்றவர்களிடமும் புகலிடத்தில் திவாகரன் என்ற சிவா சின்னப்பொடியிடமும் ஈழமுரசு பத்திரிகை காறர்களிடம் கேட்டால் நிறைய கதை சொல்வார்கள்.
‘இனியொரு’ பொறுப்பாளர்களுக்கு, வணக்கம். இலங்கைக்கு என்னை அழைத்தவரும், அங்கு பயணத்தை ஒழுங்கு செய்தவரும் எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர்கள். எனது கைப்பணத்திலும் சுகன், நந்தன், லெனின் மதிவானம், ரவீந்திரன், ஜோதிகுமார், ஜேம்ஸ், மகேந்திரன் போன்ற தோழர்களின் உதவியிலுமே அங்கு சென்று திரும்பினேன். அங்கிருந்த 15 நாட்களும் தங்குமிடம், உணவு, வாகனம் போன்ற தேவைகள் அனைத்தையும் நண்பர்களே ஏற்பாடு செய்திருந்தனர்.
பாதுகாப்புத்துறையின் அனுமதியை பெற்றாக வேண்டுமென்றும், முதல்முறை என்பதால் விமானத்தில் மட்டுமே செல்லமுடியும் என்பதுமான நிபந்தனைகள் யாழ்ப்பாணத்திற்கு செல்லும் என் ஆர்வத்தை மறித்தன. தவிரவும் என் கைவசமிருந்ததில் அவ்வளவு பெரும்தொகையை விமானத்திற்கென்று செலவிட இயலாதவனாகவும் இருந்தேன். எனவே யாழ்ப்பாணம் வராமலே நாடு திரும்புவதாக தோழர் ரெங்கனிடம் தெரிவித்த போது, இவ்வளவு தூரம் வந்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பவேண்டாம் என்று அறிவுறுத்தினார். எனக்காகவே கொழும்பு வந்து அலைந்து பாதுகாப்புத்துறையின் அனுமதி பெற்றதுடன் அவர் தன் சொந்தப்பணத்தில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு டிக்கெட் எடுத்துக்கொடுத்தார். இந்த ஏற்பாடுகளை செய்வதில் ஏற்பட்ட காலதாமதம்/ இழுத்தடிப்பினால் அக்-17-21 வரை யாழ்ப்பாணத்தில் இருக்கலாம் என்ற விருப்பம் நிறைவேறாமல் போனது. 19 ம் தேதிதான் அங்கு போக முடிந்தது. அங்கிருந்த நாட்களில் மிகுந்த தோழமையுடன் கவனித்துக்கொண்டார். அங்கொரு கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தார்.
எனது பயணத்தில் தோழர் ரெங்கன் இந்தமட்டிலுமே தொடர்புபடுகிறார். ஆனால் நீங்களோ “சில மாதங்களுக்கு முன் டக்கிளஸ் தேவானந்தாவின் ஆலோசகரும் இலங்கை ஜனநாயக ஒன்றியத்தின் (எஸ்.எல்.டி.எப்) முக்கிய பிரமுகருமான ரங்கன் தேவராஜனின் பயண ஏற்பாட்டில் தமிழ் நாட்டு எழுத்தாளர் ஆதவன் தீட்சனயா இலங்கை வந்து சென்றது குறிப்படத்தக்கது” என்று எழுதியிருக்கிறீர்கள். இப்படியான பொய்களை பரப்பி அவதூறு செய்து திருப்தியடையும் மனநோயிலிருந்து எப்போது விடுபடப் போகிறிர்கள்? உங்களையொத்த ஒரு துப்பறியும் சங்கர்லால் ஆதவன் தீட்சண்யா ரா உளவாளியாக இலங்கை வந்திருக்கிறான் என்று அங்கே ஒரு புரளியை கிளப்பிவிட்ட நகைச்சுவையும் இருக்கிறது.
போதாக்குறைக்கு, கல்யாணம் ஒன்றுக்கு கொழும்பு சென்றுவிட்டு அப்படியே தமிழர் பகுதிக்கும் தலைகாட்டிவிட்டு வந்த ( இப்படியான வேலைகளை ‘ கண்ணாலத்துக்குப் போன மாதிரியும் ஆச்சு, சித்தப்பன் மகனுக்கு பொண்ணு பார்த்த மாதிரியும் ஆச்சு என்று வேடிக்கையாக சொல்வர்) பா.செயப்பிரகாசம் என்ற ரிடையர்டு புரட்சியாளர், தமிழர்களைப் பார்ப்பதற்காகவே ஏதோ ராவாராத்திரியில் இக்கரையிலிருந்து அக்கரைக்கு கடலுக்கடியில் நீந்தியே கரையேறிய சாகசத்தைப் போல தனது இலங்கைப் பயணத்தை வர்ணித்துக் கொண்டதோடு, ஆதவனது இலங்கைப் பயணத்தில் ஏதோ மர்மம் இருப்பதாக புளுகிக் கொண்டேயிருக்கிறார். ஒரு அரசு ஊழியர் வெளிநாடு போய்வர அழைப்பிதழ் ஒன்று தேவை என்ற அடிப்படையில் மத்திய மாகாண சாகித்திய விழாவின் அழைப்பிதழ் ஒன்றை அனுப்பியிருந்தார் அந்தனி ஜீவா. அவ்விழாவிற்கான அரசாங்க அழைப்பாளர்கள் பேரா.அப்துல் காதரும், இன்னொரு பேராசிரியையும்தான். இதில் மர்மம் என்னவென்று பா.செ தான் விம் பவுடர் போட்டு விளக்கவேண்டும். இந்த அழைப்பிதழை மனதில் வைத்துதான் “ அரசாங்க அழைப்பின் பேரில் ஆதவன்…” என்று நீங்களும்கூட முன்பொரு பதிவை வெளியிட்டீர்கள் போலும். (கொலைகார மண்ணை இந்த ரிடையர்டு புரட்சியாளர் மிதித்தாரா அல்லது ஜம்ப்லிங்கம் போல எம்பி எம்பி குதித்தே நடந்தாரா என்றெல்லாம் கேட்டு அவரை சங்கடப்படுத்த விரும்பவில்லை. வாழ்நாளில் ஒருபோதும் தன்னை இந்தியன் என்று சொல்லிக்கொண்டதேயில்லை என்று டமாரமடித்த இவர் எந்த நாட்டு பாஸ்போர்ட்டில் இலங்கை சென்றார் என்ற கேள்வியும் கூட இங்கு அவசியமற்றதுதான். எப்படியும் இதற்காக சிலபல கட்டுரைகளை பா.செ. எழுதாமல் ஓயமாட்டார். ஓரிரு வரிகள்/ வசைகளையாவது புதுசா எழுதுங்க பா.செ. அவதூறு செய்வது என்ற முடிவை முன்கூட்டியே எடுத்துவிட்டு சில பெயர்களையும் தேதிகளையும் பூர்த்தி செய்யும் வழக்கத்தை கைவிடுங்கள் )
இதையெல்லாம் சொன்னவுடனே, அரசாங்க ஏற்பாட்டில் நீங்கள் சென்றுவரவில்லை என்ற உண்மை புரிந்துவிட்டது ஆதவன் என்று தாங்கள் ஓய்ந்துவிடப்போவதில்லை என்பதை நானறிவேன். மேற்சொன்ன ஆட்களெல்லாம் ஏன் ஆதவனுக்கு உதவினார்கள் தெரியுமா என்று அடுத்ததாக அவர்கள்மீது சேறடிக்க கிளம்புவீர்கள் என்பதும் அறிந்த விசயம்தான். எனக்காக செலவளிக்கும் பொருட்டு இவர்கள் எல்லோரிடமும் இலங்கை அரசாங்கம் முன்கூட்டியே ரகசியமாக பணம் கொடுத்து வைத்திருந்தது என்று நீங்கள் இன்னும் குற்றம் சாட்டாமல் இருப்பது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. வசைபாடுவது கொண்டாடுவது என்ற எதிரெதிர் புள்ளிகளுக்கு இடையே ஆற்றலின் பெரும்பகுதியை செலவிட்டுக் கொண்டிருக்கும் உங்களைப் போன்றவர்களின் மனநிலையை எவரொருவரின் வெளிப்படைத்தன்மையும் மாற்றிவிடப்போவதில்லை.
மாற்றுக் கருத்துள்ளவர்களை- அவர்கள் எவ்வளவு எளியவர்களேயாயினும் அரசாங்கத்தின் கைக்கூலிகள் என்றும் துரோகிகள் என்றும் சிறுமைப்படுத்தி அவர்களை தமது கருத்தியல் நிலையிலிருந்து பின்வாங்கச் செய்வது – சோர்வடைய வைப்பது என்ற மலிவான உத்தி தற்காலிக பலன்களையும் குரூரமான திருப்தியையும் தரலாம். ஆனால் அதன்பொருட்டு அடையும் வெற்றியென்று எதுவுமில்லை என்பதை ரகசியமாகவேனும் உணராமலா இருப்பீர்கள்?
எந்த அதிகாரமுமில்லாத ஷோபாசக்தி, சுகன் போன்ற எளியவர்களையும் அவர்களது சில கருத்துகளுடன் உடன்பாடு தெரிவித்தமைக்காக என்னைப் போன்றவர்களையும் எதிரிகளாக பாவித்து தாக்குமளவிற்கு கருத்தியல் பலமற்றவர்களாகவே, உலகின் அதிநவீன ஆயுதங்களைக் கொண்ட முப்படைகளையும் மட்டற்ற சொத்துகளையும் மூலதனங்களையும் கொண்ட ஒரு அமைப்பின் ஆதரவாளர்கள் இருப்பதை என்னவென்று சொல்வது?
கடைசியாக ஒன்று, அரசாங்கத்தின் கைக்கூலியாகித்தான் பிழைப்பதென்றால் அதற்காக ஒருவர் தம்மாத்துண்டு இலங்கைக்கு சேவகம் செய்து அல்லாட வேண்டிய அவசியமில்லை நண்பர்களே. உங்களது தலைவர்கள் பலரும் விலகிக் கொண்ட பிறகு இந்திய அரசாங்கத்திடமே ஏராளமான காலியிடங்கள் இருப்பதாக தகவல்.
இனி நீங்கள் என்னமும் எழுதிக்கொள்ளுங்கள். உண்மையற்ற அந்த பொய்களுக்காக உங்களது மனசாட்சி எப்போதும் உறுத்தவே போவதில்லை. அவற்றுக்கு பதிலெழுதுவதில் எனக்கு பெரிதாக ஆர்வமுமில்லை. எனவே, களத்திலே நின்றேன் எதிரியைக் காணவில்லை என்று உங்களை நீங்களே பாராட்டிக்கொண்டு அட்டைக்கத்தியை சுழற்றிக்கொண்டேயிருங்கள். தவிரவும், உங்களது அவதூறுகளுக்கெல்லாம் உளைச்சலுற்று பதில் சொல்லக் கிளம்பினால் ஆயுசுக்கும் வேறு வேலை பார்க்கமுடியாது. ஒருவேளை நீங்கள் எதிர்பார்ப்பதும்கூட அதுதானோ?
யார் இந்த “கோவை” நந்தன்! இவர் ஒன்று கோயம்புத்தூரை சேர்ந்தவர் அல்ல.
யாழ்ப்பாணத்தின் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த “கோவை” நந்தன் இனவெறியின் பாசிசத் தாக்குதல்களால் பிறந்தகத்தைப் பிரிந்த அகதி மட்டுமல்ல ஈழப்போராட்ட வரலாற்றில் தவிர்க்கவியலாத ஆளுமையாகவும் தொழிற்பட்டவர். சிங்கள அடக்குமுறைக்கு எதிராக கொதித்தெழுந்த ஆரம்ப காலகட்டங்களில் குட்டிமணி தங்கத்துரை ஜெகன் பிரபாகரன் உள்ளிட்டவர்களோடு இணைந்து செயல்பட்டவர். 1970களில் தமிழ் இளைஞர் பேரவையினூடாக சிங்கள அதிகாரத்தை நோக்கி குரலுயர்த்தியதன் விளைவாய் 1976 ஆம் ஆண்டு ஒன்றரைவருட சிறைவாசம் அனுபவித்தவர். 1981 இல் பிரான்சுக்கு புலம் பெயர்ந்த பின்னர் இயக்கச் செயல்பாடுகளின்றி தமது அரசியற்பணிகளை தொடர்ந்து வருகிற நந்தன் ஐரோப்பாவில் தமிழ் ஊடகத்துறையை வளர்த்தெடுத்த முன்னோடிகளில் குறிப்பிடத்தக்கவர்.
தற்போது…….நிங்களே தொடருங்கள்.
ஈழப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவர் தோழியர் புஸ்பராணி அவர்கள் நேர்காணல் பாரிஸில் 20.06.2009ல் ஷோபாசக்தியின் நேர்காணலில் பதிவு செய்யப்பட்டது. ஆதாரம்: http://www.plote.org/othersites.php?sscate_id=௧௦௨௪
புலோலி வங்கிக் கொள்ளையில் உங்கள் பங்கு என்ன? இயக்கம் வங்கிக் கொள்ளைகளில் ஈடுபடுவதை நீங்கள் ஏற்றுக்கொண்டிருந்தீர்களா?
இயக்கத்தை வளர்ப்பதற்கான நிதியாதாரங்களைப் பெற்றுக்கொள்வதற்காக இவ்வாறான கொள்ளைகள் அவசியம் என்றுதான் நான் கருதினேன். தங்கமகேந்திரன், சந்திரமோகன், வே. பாலகுமாரன் (முன்னைய ஈரோஸ் தலைவர்), கோவை நந்தன் போன்றவர்களின் திட்டமிடலிற்தான் புலோலி வங்கி கொள்ளையிடப்பட்டது.
“ஆறுமாதச் சிறைவாசத்திற்குப் பின்பு நான் விடுதலையானேன். வழக்குத் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. 1980ல் தீர்ப்பு வழங்கப்பட்டபோது தங்கமகேந்திரன், ஜெயக்கொடி, கோவை நந்தன், நல்லையா ஆகியோருக்குச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. நான் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டேன். வழக்கு நடந்துகொண்டிருந்தபோதே நந்தனும் நல்லையாவும் இலங்கையிலிருந்து தப்பிச் சென்றுவிட்டார்கள். தண்டனையை அனுபவித்துக்கொண்டிருந்த தங்கமகேந்திரனும் ஜெயக்கொடியும் மட்டக்களப்புச் சிறையுடைப்பில் தப்பிச் சென்றார்கள்.”
மேலும் இந்தியாவிலிருந்து பொருட்கள் வாங்கி அனுப்பிக் கொண்டிருக்கும் இவர் ஒன்றும் டக்கிளசுவின் சமூக சேவையில் இல்லை….டக்கிளசுவின் வியாபாரம் அத்துடன், கொமிஷன்.
தற்போதைய “கோவை” நந்தனின் நிலையை, இருப்பிடத்தை வாசகர்களே தொடருங்கள்…..
அன்புள்ள ஆதவன்,
இலங்கை அரசியல் மீதான உங்களது திடீர் அக்கரை குறித்து நான் வியந்து போகிறேன். ஆனால் சுகனையும், ஷோபா சக்தியையும் மஹ்டிப்பிட்டு எழுதியிருப்பதைப் பார்க்கும் போது கண்ணைக் கட்டுது ‘’ எந்த அதிகாரமுமில்லாத ஷோபாசக்தி, சுகன் போன்ற எளியவர்களையும் அவர்களது சில கருத்துகளுடன் உடன்பாடு தெரிவித்தமைக்காக என்னைப் போன்றவர்களையும் எதிரிகளாக பாவித்து தாக்குமளவிற்கு கருத்தியல் பலமற்றவர்களாகவே, உலகின் அதிநவீன ஆயுதங்களைக் கொண்ட முப்படைகளையும் மட்டற்ற சொத்துகளையும் மூலதனங்களையும் கொண்ட ஒரு அமைப்பின் ஆதரவாளர்கள் இருப்பதை என்னவென்று சொல்வது? ”” சுகனும் ஷோபா சக்தியுமா அதிகாரம் இல்லாதவர்கள். ராமேஸ்வரத்தில் பேட்டா கேட்ட உதவி கேமிராமேனைத் தாக்கி விட்டு மேலிடத் தொடர்புகளைப் பயன்படுத்தி தப்பிவருகிற ஷோபா சக்திக்கா எவ்வித அதிகாரமும் இல்லை. அல்லது டகள்ஸ் தேவான்ந்தாவ்வோடு தோழோடு தோழ் நின்று உழைத்துக் கொண்டிருக்கும் சுகனுக்காக அதிகாம் இல்லை. இல்லை தோழரே பௌத்த பேரினவாத பாசிச அரசொன்றின் அதிகார பீடங்களோடு தொடர்பில் இருக்கும் சுகனும் ஷோபாசக்தியும் டகளச் தேவானந்தாவின் புனர்வாழ்வுத்துறைக்கு சென்னையில் இருந்து மிகப் பெரிய அளவில் பொருட்கள் வாங்கி அனுப்பிக் கொண்டிருக்கும் கோவை நந்தனையும் பற்ரிய உங்கள் மதிப்பீடு தவறு. ஆமாம் பா.செயப்பிரகாசத்தை ரிடையர்டு புரட்சியாளர் என்கிறீர்கள்…. அப்படி என்றால் அ.மார்க்சை என்ன சொல்லி அழைக்கலாம் தோழர்…………… கிடக்கட்டும் உங்களை அமபலப்படுத்தி நண்பர் அருள் எழிலன் எழுதினாரே பில்டிங் ஸ்டிராங்கு பேஸ்மெட்டு வீக்கு….என்று. அதற்காவது உங்களால் நேர்மையாக பதில் சொல்ல முடிந்ததா? கோபப்படாதீங்க தோழர்.
வசந்தன்.
வரதராஜனை டீல் செய்த மாதிரியே எல்லாரையும் டீல் பண்ணாதீங்க தோழர். நாங்க போறதுக்கு போரூர் ஏரி எதுவும் இங்கு இல்லை. தேம்ஸ் நதிதான் இருக்கு., ஆனால் ரொம்பவே குளிரும்…
//எனவே யாழ்ப்பாணம் வராமலே நாடு திரும்புவதாக தோழர் ரெங்கனிடம் தெரிவித்த போதுஇ இவ்வளவு தூரம் வந்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பவேண்டாம் என்று அறிவுறுத்தினார். எனக்காகவே கொழும்பு வந்து அலைந்து பாதுகாப்புத்துறையின் அனுமதி பெற்றதுடன் அவர் தன் சொந்தப்பணத்தில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு டிக்கெட் எடுத்துக்கொடுத்தார். இந்த ஏற்பாடுகளை செய்வதில் ஏற்பட்ட காலதாமதம்/ இழுத்தடிப்பினால் அக்-17-21 வரை யாழ்ப்பாணத்தில் இருக்கலாம் என்ற விருப்பம் நிறைவேறாமல் போனது. 19 ம் தேதிதான் அங்கு போக முடிந்தது. அங்கிருந்த நாட்களில் மிகுந்த தோழமையுடன் கவனித்துக்கொண்டார். அங்கொரு கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தார்//ஆதவன் தீட்சண்யா
தோழர் ஆதவன் தீட்சணயா நீங்கள் அழகாக பொய் சொல்லுகிறீர்கள் ஆனால் பொய்யை பொருந்தச் சொல்ல தெரியவில்லை. லண்டனைச் சோந்த ரங்கன் டக்கிளஸ் தேவானந்தாவின் கட்சியின் அதகாரம்மிக்க நபராக இலங்கையில் டக்கிளசின் நிழலாக வலம்வருபவர். இம் முறை டக்கிளஸ் தேவானந்தாவின் கட்சி வேட்பாளர்களை தெரிவு செய்தபோது தனது அதிகார வல்லமையினால் தனது நட்பு வட்டங்களை களத்தில் இறக்கியவர். இன்று யாழ்ப்பாணத்தில் டக்கிளஸை விட மிக மோசமான அதிகார நபராக உங்கள் தோழர் ரங்கன் வலம்வருகிறார்.அவரைப்போய் சிறு பிள்ளைத்தனமாக எழுதுகிறீர்கள். உண்மையில் நீங்கள் பாவமா? அல்லது நடிக்கிறீர்களா?
சும்மா இருக்க முடியாம எருமை மாட்ட செரச்ச கதையா இருக்கு அப்படீனு எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க உங்களுக்கு எரும மாடு கெடைக்கலனா மார்க்ஸ்தான் கிடச்சாரா
மார்க்ஸு பாரீஸ் போயி இலங்கையிலே இல்லாத தலித்தியதே உண்டு பண்ணறதா இலங்கையிலே சாதிய எதிர்ப்புப் போராட்டம் நடத்தினவுங்களேல்லாம் கொச்சை பண்ணப்போ தூங்கிக்கிட்டா இருந்தீங்க?
இப்பக் கூட இலங்கையிலேநடந்த சாதிய எதிர்ப்புப் போராட்டத்தே செட்டியார் வூட்டுப் பத்திரிகையிலே இருட்டடிப்பு பண்ணிக் கிட்டுத் தானே இருக்காரு.
அவரோட பாரீஸ் கூட்டாளிங்களெல்லாம் யாருன்னு பாருங்க. சுகன், ஷோபா சக்தின்னு கொலைகார ராஜபக்ஸ ஆட்சிக்கு குடை புடிக்கற பயலுகளாத் தானே இருக்காங்க.
அதுக்கு என்னா சொல்லறீங்க?
சும்மா இருக்க முடியாமே அவுருக்கு அவரோட எரும மாடு, இவுருக்கு இவுரோட எரும மாடு,
அதுக்கு கோச்சுக்காமெ இதுக்கு ஏங்க கோவப்படுறீங்க?
தோழர் ஆதவன் தீடசணயா நான் உங்களுடைய எழுத்துக்களை விரும்பி வாசிப்பவன் அத்தோடு உங்கள் மீது மரியாதை கொண்டிருந்தவன்.ஆனால் இவற்றையெல்லாம் உங்களுடைய செயல்பாடுகள் இல்லாமல் செய்துவிட்டது. உங்களுடைய சமீபகால உறவுகள் ஆபத்தானவைகளாக இருக்கின்றன. நீங்கள் தனிநபர் அல்ல. உங்களுடைய பிழையான உறவுகள் நீங்கள் இருக்கும் உங்கள் கட்சியையும் நல்ல எழுத்தாளர் தோழர்களை கொண்டியங்கும் தமிழநாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞாகளையும் பாதிக்கும் என்பதை நீங்கள் உணரவேண்டும். இலங்கை அரசு கைக்கூலிகளோடும் கடத்தல் வியாபாரிகளோடும் உங்கள் உறவு உள்ளது. நீங்கள் உங்கள் தோழா என குறிப்பிடும் கோவை நந்தன் மாபெரும் கடத்தில மன்னன் என்பதை தாங்கள் அறியவில்லைப்போலும். தோழர் புஸ்பராசா எழுதிய “ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்” என்ற நுhலில் கோவை நந்தனைப் பற்றி சொல்லியுள்ளதை படித்துப்பாருங்கள். ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் ஆதரவாளராக இருந்துகொண்டு அமைப்பின் பெயரை பயன்படுத்தி பிரான்ஸசில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தல் செய்த திருவிளையாடலையும் ஒரு தடவை சென்னை விமான நிலையத்தில் கடத்தல் தங்கத்தோடு கோவை நந்தன் கைது செய்யப்பட்டதையும் விலாவாரியாக தோழர் புஸ்பராசா எழுதியுள்ளார். இன்று அதே தொழிலை டக்கிளஸ் தேவானந்தாவோடு இணைந்து கொண்டு மிகவும் சிறப்பாக செய்கின்றார். இவரை உங்கள் புதுவிசையில் பேடடி கண்டு சிறப்பிக்கின்றீர்கள். என்னே உங்கள் அரசியல்! பணத்திற்காக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கு மாசு கற்பிக்காதீர்கள். உங்களைப்போன்ற பணத்திற்கு விலைபோகும் மனிதர்களால்தான் மாபெரும் மக்கள் இயக்கமான தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட் சீரழிகின்றது. கெட்டபெயரை எதிர்கொள்கின்றது. தயவு செய்து திருந்தப்பாருங்கள். பரமன்