Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

அ.தி,மு.க குண்டர்படையை எதிர்த்து சுவரொட்டிப் போராட்டம் நடத்தியவர்கள் கைது!

இனியொரு... by இனியொரு...
10/07/2014
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

ம.க.இ.க-சுவரொட்டிமக்கள் சொத்தைச் சூறையாடிய ஜெயலலிதா சிறைப் பிடிக்கப்பட்டது தவறு என்றும் கொள்ளையடிப்பது சரியானது என்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் குண்டர்படை தமிழகம் முழுவதும் மக்கள் சொத்தைச் சூறையாடி வருகிறது. போராட்டம் என்ற தலையங்கத்தில் நடக்கும் இச்சூறையாடலைக் கண்டித்து சுவரொட்டு ஒட்டிய மக்கள் கலை இலக்கியக் கழகத்தினரை தமிழ் நாடு போலிஸ் கது செய்து சிறைப்பிடித்துள்ளது. இது தொடர்பாக கழகத்தின் இணைப் பொதுச் செயலாளர் விடுத்துள்ள அறிக்க்கை:

கண்டன அறிக்கை:

  • பாசிச ஜெயாவின் கூலிப்படையாகச் செயல்படும் தமிழக போலீசு !

  • சுவரொட்டி ஒட்டியதற்காகத் தோழர்கள் கைது !

  • தோழர்களை விடுதலை செய் ! வழக்கைத் திரும்பப் பெறு !

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அதிகார முறைகேடு, ஊழல், சொத்துக் குவிப்பு ஆகிய கிரிமினல் குற்றங்களை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் குற்றங்கள் ஐயத்திற்கிடமின்றி மெய்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஜெயலலிதா, அவரது கூட்டாளிகள் சசிகலா, இளவரசன், சுதாகரன் ஆகிய நால்வருக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்துச் சிறையிலடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பிழைப்புவாத அதிமுக பொறுக்கிக் கும்பல் பெரும் வன்முறையில் இறங்கியுள்ளது. மூன்று அரசுப் பேருந்துகள் எரிக்கப்பட்டு, பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அரசு அதிகாரத்தையும், போலீசையும் பயன்படுத்தி வணிகர்கள், தொழிலாளிகள், மீனவர்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரையும் மிரட்டி வேலை நிறுத்தம், கடையடைப்பு, உண்ணாவிரதம், மனித சங்கிலி என கட்டாயமாகப் போராட்டத்தில் ஈடுபட வைத்து இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்கிறது.

ஜெயலலிதா குற்றவாளி என்பது மட்டுமல்ல, அவரால் தலைமை தாங்கப்படும் அதிமுக என்ற கட்சியே ஒரு சமூக விரோத கிரிமினல் கும்பல் என்பது தற்போது பளிச்சென்று நிரூபணமாகி வருகிறது.

அதிமுக கும்பலின் அராஜகச் செயல்பாடுகளைக் கண்டித்தும், அதனை எதிர்த்து நிற்குமாறு மக்களை அறைகூவியும்,  மக்கள் கலை இலக்கியக் கழகம், வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகம் முழுவதும் சுவரொட்டி இயக்கம் மேற்கொண்டன. அதிமுக கும்பலின் அராஜகத்தைத் துணிவுடன் அம்பலப்படுத்திய எமது சுவரொட்டிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

ஆனால் தமிழகம் முழுவதும் கடந்த பத்து நாட்களாக அதிமுகவினர் நடத்தி வரும் சட்டவிரோத, ஜனநாயக விரோத கிரிமினல் நடவடிக்கைகளுக்கு உடனிருந்து ஒத்துழைப்பும் பாதுகாப்பும் கொடுத்து வரும் காவல்துறை,

இச்சுவரொட்டிகளை ஒட்டியதற்காக உசிலையிலும், மதுரையிலும் வழக்கு போட்டதோடல்லாமல் சிவகங்கையிலும், பரமக்குடியிலும் எமது தோழர்களைக் கைதும் செய்துள்ளது. இந்த கைது நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கிறோம்.

சிவகங்கையில் கைது செய்யப்பட்டுள்ள பு.ஜ.தொ.மு மாவட்ட அமைப்பாளர் தோழர் நாகராஜன், குருசாமி மயில்வாகனன், கணேசன், சுரேஷ் கண்ணன், பரமக்குடியில் கைது செய்யப்பட்டுள்ள தோழர் ஆனந்தன் ஆகியோரை உடனே விடுதலை செய்ய வேண்டும், எல்லா ஊர்களிலும் இது தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

அச்சத்தைக் கைவிட்டு அதிமுக கும்பலின் அராஜகத்தை எதிர்த்து நிற்குமாறு மக்களை அறைகூவி அழைக்கிறோம்.

இவண்,
காளியப்பன்,
மாநில இணைப் பொதுச் செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு

மக்கள் கலை இலக்கியக் கழகம்

16, முல்லை நகர் வணிக வளாகம், இரண்டாவது நிழற் சாலை, அசோக் நகர், சென்னை – 600 083
தொலைபேசி 99411 75876
மின்னஞ்சல் – vinavu@gmail.com    pukatn@gmail.com

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
ஈஸ்ட்ஹாமில் பிரார்த்தனை நடத்தியும் விடுதலயாகாத ஜெயலலிதா!

ஈஸ்ட்ஹாமில் பிரார்த்தனை நடத்தியும் விடுதலயாகாத ஜெயலலிதா!

Comments 1

  1. sivagami says:
    11 years ago

    Is it rule of law?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...