அவுஸ்திரேலிய பிரதமர் தனக்கிருக்கும் அதிகாரத்தை கூட்டுவதற்காக “அகதிகளினால் தீவிரவாதம் அவுஸ்திரேலியாவிற்குள் காலூன்றும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது” என்கிற ஒரு பீதியை அவுஸ்திரேலிய மக்களிடத்தில் ஏற்படுத்த முயல்கிறார்! அவுஸ்திரேலியாவில் வேலையற்றோர் தொகை கடந்த 12 வருடங்களில் முதல் தடவையாக 6.4 வீதமாக அதிகரித்துள்ளது. சமூக உதவித்திட்டங்கள் படிப்படியாக அழிக்கப்பட்டு வறிய மக்களின் தொகை அதிகரித்துச் செல்கிறது. இவற்றை எதிர்கொள்வதற்காக தீவிரவாதப் பூச்சாண்டி காட்டவேண்டிய தேவை ஆளும் தீவிர வலதுசாரி அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. உயிரைப் பாதுகாத்துக்கொள்வதற்காக அவுஸ்திரேலியாவை நோக்கி வரும் அப்பாவி அகதிகளை தீவிரவாதிகளாக்கி மக்களை மாயைக்குள் வைத்திருக்க அவுஸ்திரேலிய அரசு முனைகிறது. அவுஸ்திரேலிய அரசின் இந்த அருவருப்பான செயலின் பலி கடாக்கள் அப்பாவி அகதிகள்.
அவுஸ்திரேலியாவில் வாழும் மக்கள் தீவிரவாத நடவடிக்கையால் இறக்கும் சந்தர்ப்பங்களை விட இயற்கை அனர்த்தங்களாலும், அரச அதிகாரங்களால் விடப்படும் தவறுகளால் பாதிக்கப்பட்டு இறக்கும் சந்தர்ப்பங்களே அதிகம். அவுஸ்திரேலிய மண்ணில் அமெரிக்காவில் நடைபெற்ற 9/11 தாக்குதலுக்கு பின்னர் எந்த விதமான ஒரு தீவிரவாத தாக்குதல்களும் நடைபெறவில்லை. இறுதியாக 12 வருடங்களிற்கு முன்னர் பாலி தீவில் களியாட்ட விடுதியில் நடைபெற்ற குண்டு தாக்குதலிலேயே 88 அவுஸ்திரேலிய பிரஜைகள் பலியாகியிருந்தனர்.
இதுபோக அண்மைகாலமாக அவுஸ்திரேலிய அரச அதிகாரத்தில் உள்ளவர்கள் “இல்லாத” தீவிரவாத பயத்தை உருவாக்குவதை அவதானிக்க கூடியதாக உள்ளது. இதற்கு பின்னால் 15 ISIS ( தீவிரவாத பயத்தினை உலக அளவில் உருவாக்குவதற்கு மேற்குலக புலனாய்வு அமைப்புகளினால் உருவாக்கப்பட்ட அமைப்பு. விடுதலைப்புலிகள் அமெரிக்க இந்திய அரசுகளுடன் முழுமையான இசைவாக்கத்துடன் செயற்பட்டிருந்தால் இன்னும் சிலவேளைகளில் அழிக்கப்படாமல் இருந்திருக்கும்.
பயங்கரவாதத்தையும் தீவிரவாதத்தையும் தோற்றுவிப்பதும், அவற்றை அழிப்பது என்ற பெயரில் உலகை ஆயுதமயமாக்குவதும் பின்னர் அப்பாவிகளையும் உருவாக்கியவர்களையும் அழித்துப் போடுவதும் மேற்கு ஏகாதிபத்தியங்களின் இயல்பு. ஒசாமாவை உருவாக்கி அழித்தவர்கள், கடாபியை இணைத்து அழித்தார்கள், இன்று ஐ,எஸ்.ஐ.எஸ் ஐ அழிப்பதாக அழிப்பைத் தொடங்கியிருக்கிறார்கள்.
இந்தவகையில் ஆயுதங்களை மௌனிப்பதாக விடுதலைப் புலிகள் அறிவித்தமை அழிவுகளை இடை நிறுத்த உதவியது எனலாம்.
இதனை பொறுக்காத இந்திய உளவுத்துறை இந்திய பாகிஸ்தானிய உளவுதுறையுடன் இணைந்து இலங்கை தமிழ்/முஸ்லிம் இளைஞர்களை வலையில் வீழ்த்தி ( இதற்கு பொதுபலசேனாவில் உள்ள வெறுப்பும், முஸ்லிம் அரசியலும் துணைபோகிறது ) மீண்டும் விடுதலைப்புலிகள் ISIS உடன் இணைந்து தீவிரவாத்த்தினை வளர்க்கிறார்கள் என்ற மாய தோற்றத்தை ஏற்படுத்தி தமிழர்களின் விடுதலை போராட்டத்தை நசுக்கும் முயற்சிகளை மேற்கொள்கிறது.
இந்த சதித்திட்டங்களில் தமிழ் இளைஞர்கள் விழாமல் அவதானமாக செயற்படவேண்டும். ஒரு கட்டமைக்கப்பட்ட ஆயுத அமைப்பையே தீவிரவாதமென தடை செய்து அஅழித்த இந்த அரசாங்கங்கள் நம்மவர்களில் சிலரை பயன்படுத்தி ஆயுதகுழுக்களை உருவாக்கி மிச்சம் சொச்சம் இருக்கும் மக்களையும் கொல்வதற்கு துணிவார்கள்!!) தீவிரவாதிகள் யாரோ ஒருவருடைய தலையை துண்டிக்க சதித்திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்டதையும் அவுஸ்திரேலிய ISIS பிரிவு நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதும் காரணமாக காட்டுகிறது. ( இவர்கள் இந்த தந்திரத்தை ராஜபக்சவிடம் இருந்து நன்றாகவே கற்றுள்ளார்கள். 800 பொலிசார், புலனாய்வு பிரிவினரை கொண்டு நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையில் இவர்களில் ஒருவரே தீவிரவாதம் சம்பந்தமான தகவல்களை ( சம்பந்தமே இல்லாத)வைத்திருந்தார் என குற்றஞ்சாட்டப்பட மீதம் அனைவரும் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். )
அத்துடன் அவுஸ்திரேலியாவில் இஸ்லாமிய தீவிரவாதம் தலைதூக்குவதாக தெரிவித்து அதனை தடுக்க தமக்கு இன்னமும் பாதுகாப்பு அதிகாரம் வேண்டும் என்று அபொட் நாடாளுமன்றில் கோரியுள்ளார். 9/11 தாக்குதலின் பின்னர் மேற்குலகில் கொண்டுவரப்பட்ட சட்டங்களை விட, “அவுஸ்திரேலிய பிரஜைகள் யுத்தம் நடைபெறும் நாடுகளிற்கு செல்லவதற்கு தடைவிதிக்கவேண்டும், அவுஸ்திரேலிய புலனாய்வுத்துறை மற்றைய நாடுகளில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை வெளியிடும் நபர்களிற்கு ஐந்து வருட சிறை தண்டனை” என்பதுபோன்ற பல கடுமையான சட்டங்களை இது கோரிநிற்கிறது. ஆக அவுஸ்திரேலிய அரசின் இந்த பிரேரணை உண்மையில் சுனொடன், விக்கிலீக்ஸ் வகை ஊடகவியலை சட்டத்தின் முன் குற்றமாக்குவதற்கும், ஒடுக்கப்பட்டவர்களிற்கு, அகதிகளிற்கு உதவும் மனித உரிமை செயற்பாட்டாளர்களை அடக்குவதற்கும் கொண்டுவரப்பட்டது என்பதை உறுதியாக கூறலாம்.
நேற்றுகாலை அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போது 9/11க்கு பின்னர் மேற்குலக நாடுகள் தீவிரவாதத்தை எதிர்கொள்ள எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளன என்பது பற்றி பேசினார். அது அரசியல்வாதிகள் வெட்கமின்றி அதிகார பலத்தை கூட்டுவதற்காக தீவிரவாத பயத்தை பரப்புகிறார்கள் என்பதை காட்டி நிற்கிறது. இப்படியான சந்தர்பங்களில் இந்த அரசியல்’வியாதிகள்’ தம்மை நவீன வின்ஸ்டன் சேர்ச்சில்லாகவே கருதி செயற்படுகின்றனர். தமது இந்த முட்டாள்தனமான அப்பாவிகள் மீது நடத்தப்படும் யுத்தத்தை அரக்கர்களிற்கும் இறைவனிற்கும் இடையே நடக்கும் யுத்தமாக காட்ட முயல்கின்றனர். ஆனால் தாம் கடந்த பத்து வருடமாக ஈராக்கில் தலையீடு செய்து அந்த நாட்டையும் நாட்டு மக்களையும், ஸ்திரதன்மையையும் அழித்த வெளிநாட்டு கொள்கை தவறென ஏற்றுகொள்ள மறுக்கின்றனர். ஆனால் தமது அதிகாரத்தை கூட்டுவதற்காக தமது சட்டதிட்டங்களை ஏற்றுகொள்ளாவிட்டால் அப்பாவி மக்கள் இறக்கவேண்டி ஏற்படும் என்று கதை அளக்கின்றனர்.
அவுஸ்திரேலிய பிரதமர் நேற்று கோரிய புதிய அதிகாரங்கள் தனி மனித சுதந்திரத்தை கட்டுபடுத்துவதற்கே உதவும் என்பதில் சந்தேகமே இல்லை. அதில் “சட்டத்தால் காப்பாற்ற முடியாத புதிய குற்ற பிரிவுகள், புதிய குற்றங்கள், புதிய வகையான தடுப்பு முறைகள், புதிய தீவிரவாத தடுப்பு முறைகள், கண்காணிப்பு முறைகள் என்பனவும் உள்ளடங்குகுன்றன. அபொட் இவற்றை நாம் உயிர்களை காப்பாற்றுவதற்காக நாம் கொடுக்க வேண்டிய விலை என்று நியாயப்படுத்தவும் முயல்கிறார்.
இவற்றிற்கும் இன்னமும் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடிகளிற்காகவும் அவரது பட்ஜெட்டில் 630$ பணம் செலவிடப்பட இருக்கிறது. இதில் பாதுகாப்பிற்கு எவ்வளவு செலவிடப்படுகிறது, அதிகாரிகளின் பைக்குள் எவ்வளவு சுருட்டி வைக்கப்படுகின்றது என்பது இயற்கைக்கே வெளிச்சம். இந்த பிரேரணை அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்யும் அரசியல்வாதிகளை தட்டிகேட்கும் தனிநபர்களையும் அமைப்புக்களையும் அடக்குவதற்கே பயன்படும் என்பதில் எந்த மாற்றுகருத்தும் இல்லை. அரசியல்வாதிகள் தமது மக்களை வெளி சக்தி ஒன்றின் பயத்துற்கு உட்பட்டிருப்பதையே விரும்புகிறார்கள். அதனை கருத்தில் எடுத்தால் இந்த மேற்கத்தையை அரசியல் தலைவர்களிற்கும் அதிகாரத்திற்காக மக்களை தமது கொடூரமான அதிகாரத்தின் மூலம் கட்டுபடுத்தி ஆள நினைக்கும் ISIS தலைவர்களிற்கும் வேறுபாடுகள் இல்லையெனலாம்.